இரணைமடுவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க தீர்மானம்.

Iranaimadu_LTTE_Runwayகிளிநொச்சி இரணைமடுவில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமான ஓடுதளம் அமைந்துள்ள பகுதியில் 70 மில்லியன் ரூபா செலவில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Iranaimadu_LTTE_Runwayகுறித்த பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் பத்தாயிரம் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரணைமடுப் பகுதியில் தற்போதுள்ள விமான ஓடுபாதை 1.6 கிலோ மிற்றர் நீளமுடையது எனவும், இதனை 3கிலோ மீற்றராக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்படவுள்ள இப்புதிய விமான நிலையத்திற்கு அருகில் சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகளும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • கந்தையா
    கந்தையா

    பிரபாவின்ஆசை உயிரோடை இருக்கேக்கை நிறைவேறாவிட்டாலும் இப்பவாவது நிறைவேறப்போகுது போலும்…………..

    Reply
  • BC
    BC

    தம்பியின் ஆசையை அண்ணன் பயனுள்ளதாக நிறைவேற்றுகிறார்.

    Reply
  • மாயா
    மாயா

    தம்பி அடிக்கல் நாட்டி : கொசுவை பறக்க விட்டு கை தட்டினார். அண்ணன் (யதார்த்தவாதி) விமான நிலையம் அமைத்து அன்னப் பறவைகளை இறக்கப் போறார்.

    இனி புலத்து தமிழர்கள் தாயகத்தில் நேரடியாக இறங்கலாம்.

    Reply