யாழ் ரயில் நிலையக் கட்டடத்தில் தங்கியுள்ள சிங்களவர்கள் யாழ்குடா நாட்டில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வசித்ததாகவும், அதனால் அங்கு தம்மை மீளக்குடியமர்த்த வேண்டுமெனவும் கோரி யாழ் ரயில் நிலையக் கட்டடத்தில் தங்கியிருக்கும் சிங்கள மக்கள் உரிய ஆவணங்களை உறுதிப்படுத்தினால், மூன்றுமாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கியபின், அவர்களுடன் கலந்துரையாடிய போதே அமைச்சர் மில்ரோய் ஃபெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இங்குள்ள குடும்பமொன்றுக்கு வழங்கப்பட்டு வந்த 200 ரூபா பெறுமதியான நிவாரண உதவிப் பொருட்களை 1000 ரூபாவாக உயர்த்தியிருப்பதாகவும் அமைச்சர் தமிழோசையிடம் கூறினார்.
1970களில் தாம் யாழ்ப்பாணத்தில் வசித்ததாகவும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அங்கு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்ததாகவும் இந்த மக்கள் தன்னிடம் கூறியதாக மில்ரோய் ஃபெர்ணாண்டோ தெரிவித்தார். இவர்களின் கோரிக்கை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக சுமுகமான முறையில் இவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
யாழ் குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படாதுள்ள நிலையில் 30 வருடங்களுக்கு முன்னர் வெளியேறியதாகக்கூறும் சிங்கள மக்களை குடியேற்ற முனைவது தொடர்பில் சிலர் விசனம் தெரிவிக்கிறார்களே என்ற கேள்விக்கு, ‘ யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இனமத வேறுபாடின்றி மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார் மில்ரோய் ஃபெர்ணாண்டோ. அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போதுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றி வேறு இடங்களில் நிலைநிறுத்திவிட்டு, அந்தக்காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கமெனவும் அமைச்சர் கூறினார்.
நன்றி BBC.
._._._._._.
”சிங்களக் குடியேற்றங்களை விமர்சிப்பதாலேயே அபிவிருத்திக் கூட்டங்களுக்குகூட்டமைப்பை அரசாங்கம் அழைப்பதில்லை” கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றதாலேயே வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு கூட்டமைப்பை அரசாங்கம் அழைப்பதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்துவிட்டு தற்போது வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தை அரசாங்கம் நடத்துகின்றது. கூட்டமைப்பின் ஆதரவின்றி அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவிதமான அபிவிருத்தியும் வெற்றியளிக்கப் போவதில்லை என்பதை ஜனாதிபதி உணரும் காலம் விரைவில் வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்தாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எதனையும் அது முன்வைக்காமல் காலத்தைக் கடத்தி வருகின்றது. எனவும் அவர் தெரிவித்தார்.
._._._._._.
October 15 2010
”யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீள்குடியமர்த்தப்படுவது போல தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களும் தெற்கில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்” தமிழர் விடுதலைக் கூட்டணி
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்வதென்பது நியாயமானதே. அதே போல் இனக்கலவரங்களினால் தென்னிலங்கையிலிருந்து வந்த தமிழ் மக்களும் மீண்டும் அங்கு குடியேறி வாழ வழிவகை செய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா இவ்விடயம் தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அரசியல் நோக்கம். சரி பிழைகளுக்கு அப்பால் தென்னிலங்கை சிங்கள மக்கள் யாழப்பாணத்தில் குடியிருந்திருந்தால் அவர்கள் தங்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிப்பதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் யாழப்பாணத்தில் வாடகைக்கு குடியிருந்தவர்கள் தங்களுக்கு சொந்தக் காணிகள் வேண்டும் என்று கேட்பதில் எவ்வித நியாயமம் இல்லை.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தென்னிலங்கை மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்வதற்கு எந்தளவு உரிமை இருக்கின்றதோ அதேயளவு உரிமை 1956, 1958, 1977, 1983 ஆகிய வருடங்களில் நடந்தேறிய இனக்கலவரங்களின் போது தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஓடிவந்த தமிழ் மக்களுக்கும் உள்ளது. குறிப்பாக அனுராதபுரம், கெக்கிராவ, தம்புள்ள, கலேவெல, திஸ்ஸமகராம போன்ற பகுதிகளிலில் தங்களுக்குச் சொந்தமான காணிகளில் குடியேறவோ, அல்லது தங்களது சொத்துக்களை விற்பனை செய்யவோ வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். இதில் தொடர்புடைய அனைத்துத தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கி தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக வடக்கு கிழக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் அம்மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். தென்னிலங்கை சிங்கள மக்கள் யாழப்பாணத்தில் மீள்குடியேற வேண்டும் என அக்கறைக்காட்டும் தரப்பினர் தமிழ் மக்களின் விடயத்திலும் அக்கறை காட்டவேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் தமிழர் விடுதலைக்கூட்டணி பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
._._._._._.
11 Oct 2010
”யாழ். வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளை ஆராய மூன்று மாதகால அவகாசம் தேவை” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற வந்துள்ள சிங்கள மக்களின் ஆவணங்களை ஆராய்ந்து தீர்வொன்றை முன்வைக்க மூன்று மாதகால அவகாசம் தேவை என பாரம்பரிய கைத்தொழில் மற்றும், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வந்து, யாழ்.புகையிரத நிலையக் கட்டடத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்த போதே அவர் இவ்வாறு அவர்களிடம் தெரிவித்தார்.
“நீங்கள் மீண்டும் அனுராதபுரத்திற்குச் செல்லப் போகின்றீர்களா?” என அமைச்சர் அவர்களிடம் கேட்டபோது முடிவு தெரியாமல் போக மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.
அம்மக்களுக்கான குடிநீர்ப்பிரச்சினை, சுகாதார வசதிகளை மாநகரசபை கவனிக்கும் எனவும், அரிசி மற்றும் சமையல் பொருட்களைத் தமது கட்சி நிதியிலிருந்து வழங்க முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்மக்களிடம் தெரிவித்தார்.
தினசரி இரண்டு மூன்று குடும்பங்கள் என மீள்குடியேற்றத்திற்காக தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருப்பதாகவும், முன்னர் வந்தவர்களில் பாட்சாலை மாணவர்களைக் கொண்ட குடும்பங்கள் சில மீண்டும் தாங்கள் இருந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை, யாழ். குடாநாட்டில் முன்னர் வசித்து வந்த சிங்கள மக்கள் மீள்குடியமர அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும என ஐக்கியதேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
._._._._._.
10 Oct 2010
மீளக்குடியேற யாழ் வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசஅதிபர் பசில் ராஜபக்சவிற்கு கடிதம்.
![]()
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான பசில் ராஜபக்சவிற்கு யாழ். அரச அதிபர் அவசர கடிதம் ஒன்றை நேற்று சனிக்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
எவ்வித முன்னறிவித்தலுமின்றி யாழ்ப்பாணத்தில் தங்களை மீள்குடியமர்த்துமாறு கோரி யாழ். புகையிரத நிலையத்தில் இவர்கள் தங்கியுள்ளனர் இவர்களில் சிலர் முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்கு சொந்தக் காணிகளோ சொந்த வீடுகளோ இருக்கவில்லை. இந்நிலையில், எவ்வித முன்னறிவித்தலுமின்றி யாழ்ப்பாணத்தில் தங்களை மீள்குடியமர்த்துமாறு வந்திருக்கும் இம்மக்களால் யாழ். மாவட்ட அரச நிர்வாகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரும் இவர்களுக்கு உதவிகளைச் செய்யும் அரசாங்க திட்டங்கள் எதுவுமில்லை. எனவே, இங்கு வந்துள்ள சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் உடனடியாக சாத்தியமில்லை. அத்துடன் இவர்கள் தொடர்ந்து புகையிரத நிலையத்தில் தங்கியிருப்பது அவர்களுக்கு ஆரோக்கியமானதல்ல என அரச அதிபர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே போன்ற கடிதமொன்றை நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்திற்கும் யாழ். அரச அதிபர் அனுப்பிவைத்துள்ளார்.
._._._._._.
Oct 09 2010
யாழ். வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகளை ஆராய கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழு வருகை.
தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சமுக்தி அதிகார சபையின் தலமையக அதிகாரிகள் குழுவொன்று நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சமுக்தி அதிகார சபையின் பணிப்பிற்கு இணங்க அதிகாரசபையின் அதிகாரியான கே.ஜி.குணதிலக்க தலைமையில் இக்குழுவினர் வருகை தந்தனர். யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள குறிப்பிட்ட சிங்களக் குடும்பங்களிடம் சில படிவங்களை வழங்கி விபரங்களைச் சேகரித்தனர்.
இதே வேளை, இம்மக்களுக்கு யாழ்.மாநகர சபையினால் குடிநீர், கழிப்பறை வசதிகள், மின்சாரம் என்பன எற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் 500 குடும்பங்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் நேற்று வெள்ளிக்கிழமை 10 குடும்பங்கள் மட்டும் வந்ததாகவும், அடுத்த சில நாட்களில் மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
._._._._._.
Oct 08 2010
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாக தகவல்: விஸ்வா
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் குடியேறுவதற்காக மேலும் பல சிங்களக் குடும்பங்கள் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 180 சிங்களக் குடும்பங்கள் யாழப்பாணத்திற்கு வந்துள்ள நிலையில் (Oct 08 2010) 500 குடும்பங்களைச் சொந்த 1500 பேர் வரவுள்ளதாக யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர். அனுதாரபுரம், மிகிந்தலை, பிரதேசங்களிலிருந்து இவர்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.பகையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் விபரங்கள் படையினரால் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களைப் பார்வையிடச் செல்லும் செய்தியாளர்கள் கூட படையினரின் அனுமதியினைப் பெற்றே செல்ல வேண்டியுள்ளது.
இதேவேளை, இவ்வாறு மீள்குடியேறும் நோக்கத்துடன் வந்திருக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு யாழ்.செயலக அதிகாரிகளுக்கு உயர்மட்டத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
._._._._._.
Oct 07 2010
1980ல் யாழில் இருந்து வெளியேறிய 180 சிங்களக் குடும்பங்கள் யாழில் மீளக் குடியிருக்க வந்துள்ளனர்!
1980ஆம் அண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்த வந்ததாகக் கூறப்படும் 180 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளனர். 180 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் இதிலடங்குகின்றனர். சிறுவர்கள் குழந்தைகளோடு வந்துள்ள இவர்கள் யாழ்ப்பணத்தில் குடியேறி நிரந்தரமாக வசிக்க விரும்புவதாகவும், தங்களுக்கான காணிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் யாழ். அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இவர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த போதும், இவர்களுக்கு சொந்தமான காணிகள் எதுவும் இருக்கவில்லை. வாடகை வீடுகளிலேயே வசித்து வந்துள்ளனர். இவர்களில் பலருக்கு தமிழர்களோடு திருமண பந்தம் உள்ளது. தமிழிலும் பேசக் கூடிவர்களாகவுள்ளனர்.
நேற்று புதன்கிழமை அரசாங்க அதிபரைச் சந்தித்த இவர்கள் தங்களை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.
இது குறித்து அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், இவர்களின் பிரச்சினை தொடர்பாக உடனடி தீர்வு காணும் திட்டம் எதுவும் இல்லை எனத் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இவர்களின் வருகை குறித்து தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது இச்சிங்களக் குடும்பங்கள் யாழ். புகையிரத நிலையக் கட்டடத்திலும், விடுதிகளிலும் தங்கியுள்ளனர். தங்களை மீள்குடியமர்த்துவது தொடர்பாக தீர்க்கமான முடிவு கிடைக்கும் வரை யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கப் போவதாக யாழ். புகையிரத நிலையக்கட்டத்தில் தங்கியிருப்பவர்கள் கூறுகின்றனர்.
1980க்களில் யாழ்பாணத்தில் இருந்து வெளியேறிய இவர்கள் அனுராதபுரம், மிகிந்தலை, மாத்தளை, குருநாகல், ஆகிய இடங்களில் இவர்கள் வருகின்றனர். இனி நிரந்தரமாக யாழ்ப்பாணத்தில் வசிக்க விரும்பவதாக தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் வசிப்பதற்கு தங்களுக்கு காணிகளை வழங்க வேண்டும் என கோருகின்றனர். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி காலத்தில் திருநெல்வேலி, நாவற்குழி, ஆகிய இடங்களில் தங்களுக்கு காணிகள் ஒதுக்கப்பட்டதெனவும். அதற்கான கடிதங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அக்காணிகளைத் திரும்பத்தரத் தேவையில்லை வேறு இடங்களிலாவது காணிகள் ஒதுக்கித்தர வேண்டும் எனக் கூறுகின்றனர்.
தெற்கின் பல பகுதிகளில் வசித்து வந்த இவர்கள் திடீரென ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருப்பதற்கு தெற்கில் சிங்கள கட்சிகள் அல்லது அமைப்புகளின் பின்னணிகள், தூண்டுதல்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
T Sothilingam
//1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இவர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த போதும்இ இவர்களுக்கு சொந்தமான காணிகள் எதுவும் இருக்கிவில்லை. வாடகை வீடுகளிலேயே வசித்து வந்துள்ளனர். இவர்களில் பலருக்கு தமிழர்களோடு திருமண பந்தம் உள்ளது. தமிழிலும் பேசக் கூடியவர்களாகவுள்ளனர்// இவர்கள் மீது சந்தேகம் கொள்வதைவிடுத்து இவர்களும் இலங்கையர்கள் எமது மக்கள் இரண்டு மொழியிலும் பேசுபவர்கள், இலங்கையர்களாக வாழமுற்படுபவர்கள், இதைவிட தமிழர்களுடன் பந்தம் கொண்டவர்கள் இவர்களே சரியான இலங்கையர்களாக நாம் மதிப்பிட வேண்டும். அதைவிட சிங்களவர்களாக இருந்தாலும் வரவேற்று உதவிகள் செய்ய முயற்ச்சிக்க வேண்டும்.
இனவாதம் தவறானது இது கடந்தகாலம் எமக்கு படிப்பித்த பாடம் நாம் முன்மாதிரியாக கலாச்சார உறவுகளில் சிங்கள பெளத்தர்களிடமும் மொழிவாரியாக பிரதேசவாரியாக முஸ்லீம்களடனும் உறவுப்பாலம் அமைக்க வேண்டும் இதன் மூலமே இலங்கையில் தமிழ் சிங்கள முஸ்லீம் இனங்கள் சமாதானமாக வாழமுடியும்.
மாயா
தமிழ் பகுதிகளில் வாழ்வோர் ஏனைய பகுதிகளில் தாராளமாக வாழலாம் என்றால் : ஏனைய பகுதிகளில் வாழ்வோர் ஏன் தமிழ் பகுதிகளில் வாழ முடியாது? நல்ல கதை. இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் எவனும் வாழலாம்.
சாந்தன்
//…அதைவிட சிங்களவர்களாக இருந்தாலும் வரவேற்று உதவிகள் செய்ய முயற்ச்சிக்க வேண்டும்….//
sothilingam உங்கட காணி உறுதியை தேடி எடுத்து தாங்கோ அரச அதிபரிடம் கொடுத்து முறையாக வரவேற்று கையில குடுப்பம்! வசனம் எல்லாம் நல்லாத்தான் இருக்கும் கேடக. அலுவல் நடக்க முன்மாதிரியாக இருங்கோ!
//….தமிழ் பகுதிகளில் வாழ்வோர் ஏனைய பகுதிகளில் தாராளமாக வாழலாம் என்றால் : ஏனைய பகுதிகளில் வாழ்வோர் ஏன் தமிழ் பகுதிகளில் வாழ முடியாது?….//maya
நண்றாக வாழலாம், ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களின் காணியாக இருக்க வேண்டும். மற்றவனின் காணியைப் பறித்து வாழக்கூடாது. மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் செய்வதுபோல் பாலஸ்தீனர்களின் காணிகளைப் பறித்து இருப்பது மட்டுமல்லாது மிக அதிக விலை கொடுத்து அல்லது ராணுவ நெருக்கடி கொடுத்து ஏழை பாலஸ்தீனர்களின் காணிகளை ‘வாங்கி’ பாலஸ்தீனர்களை அவர்களின் நிலத்திலேயே சிறுபான்மைகளாக்கி அவர்களின் உரிமைகளை வழங்குவட்தை ‘புத்திசாலித்தனமாக’ தடை செய்வது போலும் இருக்ககூடாது!
அதுசரி, கொழும்பில் வேலை இல்லாமல் இருக்கும் யாழ்வாசிகளை பஸ்பிடித்து ‘நாடுகடத்திய’ அரசல்லவா ஸ்ரீலங்கா அரசு. இவர்கள் ரயில்வே ஸ்ரேசனில் இருக்கினமாம் என்ன செய்யப்போயினம்.
aras
தமிழ் பகுதிகளுக்கு சிங்கள மக்களை வெற்றிலை வைத்து சிங்கள அரசு அழைத்து வருவது ஆரோக்கியமற்றது. விஸத்தன்மை கொண்டது. சிங்கள பகுதிகளில் எந்த தமிழ் மகன் இலவசமாக குடியேறியுள்ளான்?
Ajith
What a pity. These poor Sinhalese who were living as refugees In Sinhala areas are coming back to Jaffna and we should welcome them and give all athe facilities. These Sinhalese do not have a land or house in Sri lanka and tamils should provide house, land and money free of charge.
BC
சோதிலிங்கம்,மாயா கருத்துக்கள் சரியானவை. சேனாதி அண்ணை சொல்கிறார் இவர்கள் பாரம்பரியமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களா என்பதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று.
Nackeera
யாழ்நோக்கி வரும் இரத்த உறவுகளை வரவேற்போம். தமிழர்களாக பெருந்தன்மையுடன் அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது அவசியம். பொலிஸ்பாதுகாப்புக்கள் இன்றி சுதந்திரமாக வாழவேண்டும். எம்மவர்கள் இலங்கையின் எல்லாப்பகுதியிலும் வாழலாம் ஏன் சிங்களவர்கள் யாழ்பாணத்தில் வாழக்கூடாது. சண்டைக்கு முன் பண்டத்தரிப்புப் போன்ற இடங்களில் போறணை போட்டு பாண் வித்து வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தார்கள் சிங்களவர்கள். நிலம் புலமோ சொத்துப்பத்தோ அவர்கள் சேர்த்து கிடையாது. ஆனால் எம்மவர் அப்படியா? கிழக்கில் இருந்து தெற்குவரை சுரண்டியே வாழ்ந்தார்கள். சிங்களவர்கள் தாராளமாக யாழ்வரட்டும். அரசியல்வாதிகளில் இருந்து அன்றாடம் உழைத்து வயிறுகறுவும் மக்கள் வரை துவேசம் பேசுபவர்களுக்கு கடூழிய தண்டனை வளங்கப்படவேண்டும்.
chandran .raja
இலங்கையின் எப்பகுதிலும் வாழ்வதற்கும் விரும்பிய தொழிலைச் செய்வதற்கும் ஒவ்வொரு இலங்கையனுக்கும் உரிமையுண்டு. இதற்கு முடிந்த வரை உதவிசெய்வதுதே அரசின் கடமை.
யுத்தத்தில் மீண்டுவந்தவர்கள் தமக்குரிய இடத்தை இன்னமும் முழுமையைத் தேடிக்கொள்ள முடியாத நிலையிருக்கிறது போல் இருக்கிறது.அது தான் பிரச்சனையே ஒழிய வேறு எதுவும் இருக்க முடியாது. இதற்கான முழு பொறுப்பையும் அரசும் அரசகாரியாளர்களுமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நந்தா
நக்கீராவின் ஆவேசம் புரிந்து கொள்ளக் கூடியதே! “சமத்துவம்” கேட்பவர்கள் முதலில் அதனை மதிக்க வேண்டும்!
மாயா
//சிங்கள பகுதிகளில் எந்த தமிழ் மகன் இலவசமாக குடியேறியுள்ளான்?//
நீங்க எல்லாம்; புலத்தில காணி வாங்கித்தானே குடியேறினீங்க? வாயை கிளராதீங்க. இதுபோலத்தான் ஏகப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழர்கள் தென் பகுதிகளுக்கு வந்தார்கள். குடியேறினார்கள். உங்க பகுதியில தொழில் செய்ய வேண்டியதுதானே? எதுக்கு கொழும்புக்கு வாறீங்க. உங்க பகுதியில படிக்க வேண்டியதுதானே? கொழும்பு பகுதிக்கு ஏன் படிக்க வாறீங்க? யுத்தம் நடக்கும் போது ஏன் கொழும்பு பகுதிக்கு ஓடி வந்தீங்க? அங்கேயே போராடி தமிலீழம் பெற வேண்டியதுதானே? முள்ளிவாய்க்கால்தான் கிடைத்திருக்கும்.
யாழ்பாணத்தில் சிங்களவர்கள் இருந்தார்கள் என்பது சான்று. யாழ்பாணத்தவங்க எல்லாம் வன்னிக்கு போனாங்களே: என்ன காணி வாங்கிக் கொண்டா போனாங்க?
Ajith
Nakeera,
You are right. Those who speak racism should be punished. Racism should not only applicable to tamils but also to Sinhala as well. If you all can remember hundreds of tamils were chased away from up country in 1983 and billions worth of properties were destroyed by Sinhala racism since 1958. Who will speak for them. Hundreds of tamils and muslims were chased away by Sinhala governments and unlawful government sponsored settlements were established. The first man should get that punishment is Rajapakse and his government.
aras
புலிச் சிந்தனை தனது வயிற்றை வளர்ப்பதற்காக இந்த சிங்கள மக்கள் வருகையை எதிர்க்கும். உண.மையான பேரினவாதத்தின் முகத்தை கண்டு கொள்ள மறுப்பவர்களும் இந்த சிங்களவரை வரவேற்பார்கள்.தமிழர்கள் தமது இனம் பற்றி சிந்திக்க கூடாது. சிங்கள மக்களோ தமது விகாரைகளை கட்டி தமது வழமையான வாழ்வை அமைதியாக வாழலாம். தமிழர் தமது நிலம் பாரம்பரியம் பொருளாதாரம் எதைப் பற்றியும் கவலைப்படவோ அக்கறைப்படவோ கூடாது. இலங்கையில் எங்கும் தமிழர் வாழலாம் எனச் சொல்வோர் ஏன் இலங்கைக்கு போகக் கூடாது. (வந்திருப்பவர்கள் ஏழைகளாம். யாழ்ப்பாணத்தில் ஏழைகளே இல்லையா?)
gopal
இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்தச்சொல்லி குரல் கொடுப்பவர்கள் இவர்கள் மீள்குடியேற வந்ததும் துடிக்கிறார்கள். இனவாதம் கதைக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் சிங்கள மகாவித்தியாலயத்தில் படித்த சிங்கள பிள்ளைகள் (இங்கு தமிழ்பிள்ளைகளும் படித்தார்கள்) அவர்களின் குடும்பங்கள் பற்றிய ஆய்வுகளை முதலில் நடத்துங்கள். இவர்கள் அவர்கள்தானா என உறுதிப்படுத்துங்கள். யாழுடன் வாழ்க்கையில் சம்பந்தப்படாதவன் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அரசினால் திட்டமிட்டு அனுப்பப்பட்டிருந்தால் அதை உறுதிப்படுத்திக்கொண்டு எதிர்ப்பைக் காட்டுங்கள்.
aras
மாயா வாயைக் கிளறாதீங்க! நாம் புலம்பெயர்ந்த தேசங்களில் எல்லாம் அரசியல் தஞ்சம் அகதிநிலை என்பனவற்றிற்கு பரந்தளவு சட்டப்படியான ஆதரவுகளும் வரவேற்பும் உண்டு. பல்லாண்டுகள் முன்னோக்கி வளர்ந்துள்ள இந்த நாடுகளில் நாம் குடியேற அகதி என்ற ஒரு காரணம் இருக்கிறது.இந்த நாடுகள் அகதிகள் என குடியேற வைக்கின்ற நிலமைக்கும் இலங்கை அரசு செய்விக்கின்ற குடியேற்றத்திற்கும் துரதிஸ்டவசமாக உங்களால் வித்தியாசங்களை சாதக பாகங்களை புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது தயாரில்லை. இலங்கையில் நாம் சிறுபான்மையினர். நாம் அச்சப்படுவதற்கு போதிளவு காரணங்களை இனவாத அரசு வைத்திருக்கிறது. இனம் மொழி குறித்து உங்களுக்கு அக்கறையில்லாமல் இருக்கட்டும். அதற்காக பரந்து பட்ட மக்களும் அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கலாமா?
BC
நக்கீரா உண்மையில் நக்கீரன் தான்.
//அரஸ் – சிங்கள மக்களோ தமது விகாரைகளை கட்டி தமது வழமையான வாழ்வை அமைதியாக வாழலாம். தமிழர் தமது நிலம் பாரம்பரியம் பொருளாதாரம் எதைப் பற்றியும் கவலைப்படவோ அக்கறைப்படவோ கூடாது.//
அமைதியாக வாழவே இலங்கை தமிழர்கள் விரும்புகிறார்கள். ஒரு இந்தியர் யாழ்பாணத்தில் பேட்டி கண்ட போது இனி புலி வந்தால் நாங்கள் பிடித்து கொடுப்போம் என்று ஒரு தமிழர் கூறுகிறார். யாழ் போய்வந்தவர்களை கேட்டால் தெரியும் கோவிலுக்கு என்று அளவிற்க்கு அதிகமாக எவ்வளவு தேவையில்லாமல் செய்கிறார்கள் என்பது. யாழ்பாணத்தில் சிங்கள வித்தியாலயம் இருந்தது தெரியுமா? ரத்மலாணை கல்லூரி இருப்பதும் தெரியுமா?தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி நடந்துவிடக் கூடாது தமிழன் துன்பபடுகிறான் ஆகவே தமிழீத்துக்காக போராட வேண்டும் என்று உண்டியல் குலுக்கும் முயற்ச்சியும் எங்களுக்கு தெரியும்.
BC
Gopal, இனவாதம் கக்குவது ஒரு லாபகரமான விடயம்.
aras
யாழ்பாணத்தவங்க எல்லாம் வன்னிக்கு போனாங்களே: என்ன காணி வாங்கிக் கொண்டா போனாங்க?
இது என்ன அறியாமை? வன்னி தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம். யாழ்ப்பாணத்தவங்க போனால் என்ன மட்டக்களப்பினர் போனால் என்ன? உங்க பகுதியில தொழில் செய்ய வேண்டியதுதானே? எதுக்கு கொழும்புக்கு வாறீங்க. உங்க பகுதியில படிக்க வேண்டியதுதானே? கொழும்பு பகுதிக்கு ஏன் படிக்க வாறீங்க? யுத்தம் நடக்கும் போது ஏன் கொழும்பு பகுதிக்கு ஓடி வந்தீங்க?
எங்க பகுதி மிக வரண்ட வளமற்ற பூமி. சிங்களப் பிரதேநம் போல் குளிர்ச்சியான தண்ணீர் வசதி வளம் நிறைந்த பகுதியல்ல. முக்கிதக்கி விவசாயம் பண்ணினாலும் வாழ்க்கை வளமடைவதில்லை. ஒரே வழி படிப்பதும் உத்தியோகம் எடுப்பதும் தான். அதனால் தான் யாழ்ப்பாணம் படிப்பதில் கரிசனை கொண்டது. எப்படியும் வாழ வேண்டுமே! யாழ்ப்பாணத்தவரே வாழத் தவிக்கின்ற வரண்ட பிரதேசத்தில் ஏன் குடியேற்றம் என்ற போர்வையில் அரசு சிங்கள மக்களை அனுப்ப வேண்டும்.? நீங்களே வாழ முடியாத பிரதேசத்திற்கு சிங்கள மக்கள் வாழ்ந்து விட்டுப் போகட்டுமே என நீங்கள் கேட்க்க கூடும். நாங்கள் எமது இருப்புக் குறித்து அச்சமடைகின்றோம்.
aras
யுத்தம் நடக்கும் போது ஏன் கொழும்பு பகுதிக்கு ஓடி வந்தீங்க? அங்கேயே போராடி தமிழீழம் பெற வேண்டியதுதானே?
புலியால் ஓடி வந்தோம். சற்று வயதாகி விட்டாலும் இந்த இனவாதத்திற்கெதிரான எமது உணர்வு தூர்ந்து விடாமல் சிங்களம் அப்படியே வைத்திருக்கின்றது. யாரோடும் கூழைக் கும்பிடு போட்டு நீதி மறந்து தனமானம் இழந்து வாழ முடியவே இல்லை.
maheshan
நாங்கள் எமது இருப்புக் குறித்து அச்சமடைகின்றோம்…..
அரஸ் உங்கள் இருப்பு உதவிப்பணத்துடன் வெளிநாட்டில் இறுக்கமாய் இருக்கின்றது அச்சமடையத் தேவையில்லை
T Sothilingam
சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்தால் மட்டுமே தெற்கில் உள்ள தமிழ்மக்களும் நிம்மதியாக வாழமுடியும் வடக்கில் சிங்கள் பாவனை உருவாக தெற்கிலும் தமிழ்பாவனையை உருவாக முடியும்
யாழ்ப்பாணத்தில் விவசாயம் விருத்தியடையாமைகான காரணங்களில் ஒன்ற யாழ்விவசாயிகளுக்கு நிலப்பிரதேசத்திற்கேற்ற விவசாயமுறையில் ஈடுபடாமையேயாகும் எமது விவசாயத்திற்க்க நாம் இறைக்கும் நீர் அளவுக்கு மிக அதிகமானதும் விஞ்ஞானபூர்வமற்றதுமாகும் இவைபற்றிய ஆய்வும் கல்வியும் அவசியமானது
கடல்வள(மீன் மட்டுமல்ல) சூரிய மின்சாரம் சொட்டுநீர்பாசன முறையும் நீர்வளம் பற்றிய ஆய்வுகள் பலமேற்கொள்ளப்படல் மூலமே யாழ்ப்பாணத்தின் எதிர்கால சந்ததிகளுக்கு நிம்மதியான வாழ்வை ஏற்ப்படுத்த முடியும்.
Ajith
யாழ்பாணத்தில் சிங்கள வித்தியாலயம் இருந்தது தெரியுமா? ரத்மலாணை கல்லூரி இருப்பதும் தெரியுமா?
Can you make Jaffna as the capital of Sri Lanka and Douglas a the President of Jaffna?
aras
அரஸ் உங்கள் இருப்பு உதவிப்பணத்துடன் வெளிநாட்டில் இறுக்கமாய் இருக்கின்றது அச்சமடையத் தேவையில்லை”/ maheshan
ஓகோ! நீங்கள் “இருப்பு” என கருதுவது இதைத்தானா!?
aras
யாழ்ப்பாணத்தில் விவசாயம் விருத்தியடையாமைகான காரணங்களில் ஒன்ற யாழ்விவசாயிகளுக்கு நிலப்பிரதேசத்திற்கேற்ற விவசாயமுறையில் ஈடுபடாமையேயாகும் எமது விவசாயத்திற்க்க நாம் இறைக்கும் நீர் அளவுக்கு மிக அதிகமானதும் விஞ்ஞானபூர்வமற்றதுமாகும் இவைபற்றிய ஆய்வும் கல்வியும் அவசியமானது
கடல்வள(மீன் மட்டுமல்ல) சூரிய மின்சாரம் சொட்டுநீர்பாசன முறையும் நீர்வளம் பற்றிய ஆய்வுகள் பலமேற்கொள்ளப்படல் மூலமே யாழ்ப்பாணத்தின் எதிர்கால சந்ததிகளுக்கு நிம்மதியான வாழ்வை ஏற்ப்படுத்த முடியும்.”/ sothilingam
யார் செய்யப் போகின்றார்கள்? புலம்பெயர்ந்தவர்களா? அரசாங்கமா?
சாந்தன்
//…சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்தால் மட்டுமே தெற்கில் உள்ள தமிழ்மக்களும் நிம்மதியாக வாழமுடியும் வடக்கில் சிங்கள் பாவனை உருவாக தெற்கிலும் தமிழ்பாவனையை உருவாக முடியும் …//
அப்போ தமிழர்கள் “நிம்மதியாக” வாழ சிங்களவர்கள் விடமாட்டார்கள் என்கின்ற உண்மையை ஒத்துக்கொள்கிறீர்கள்!
இதேபோலத்தான் இஸ்ரேல் அரசும் சொல்கிறது. பாலஸ்தீன நிலங்களில் இருந்து கொண்டு ‘புரட்சி செய்தால்’ உள்ளேவந்து உங்கள் காணிகளை அபகரிப்போம் என. இவர்களிடம் பயிற்சி பெறத்தான் டக்ளஸ் கூடச் சென்றார். பயிற்சியால் ‘மீண்டு வந்து’ இவற்ரை எமக்குச் சொல்லி பாலஸ்தீனர்களின் புரட்சி செய்ய்யும் உரிமை, இஸ்ரேலியர்களைக் குடியேற மறுக்கும் உரிமை போன்றனவற்றைச் சொன்னார். நாமுன் ஆதரவளித்தோம்!
எல்லாம் சரி நான் கேட்ட காணி உறுதி விடயம் என்ன நிலையில் இருக்கிறது?
ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினரான எம்.சந்திரகுமார் தெரிவித்தவை வருமாறு:
எந்த இன மக்களும் இந்த நாட்டில் எந்தப் பகுதியிலும் வாழலாம். ஆனால் அதற்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆனால் இன்றைய யாழ்ப்பாண சூழ்நிலையில் காணிகளைப் பகிர்ந்தளிக்கின்ற அளவுக்கு அரச காணிகள் எதுவுமில்லை.
சிங்கள மக்கள் மீண்டும் தங்களை மீளக் குடியமர்த்துமாறு அரச அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.
சிங்கள மக்களின் மீள் குடியேற்றம் எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்று என்னால் உடனடியாகக் கூறமுடியாது. இது தொடர்பாக பரிசீலனை செய்யவேண்டும் என்றார் அவர்.
மாயா
//aras – மாயா வாயைக் கிளறாதீங்க! நாம் புலம்பெயர்ந்த தேசங்களில் எல்லாம் அரசியல் தஞ்சம் அகதிநிலை என்பனவற்றிற்கு பரந்தளவு சட்டப்படியான ஆதரவுகளும் வரவேற்பும் உண்டு.//
இலங்கையில் பிறந்த அனைவருக்கும் : இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் போக வர : இருக்க ; வாழ உரிமையுண்டு. எல்லோருக்கும் இலங்கை பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்தான். அடையாள அட்டைதான். எமக்கு புலத்தில் வாழ அகதிக்கான சட்டம் வழி செய்கிறது. அவர்களுக்கு தாய் நாடு எனும் உரிமை இருக்கிறது. இது உங்களுக்கு உள்ளதை விட பலமான சட்டம்.
மலையக தமிழனின் வாக்குரிமையை அழித்தீர்கள்? அவர்களை நாட்டை விட்டே துரத்தினீர்கள்? யாழில் காலா காலமாக வாழ்ந்த இசுலாமியரை துரத்தினீர்கள்? அங்கு பேக்கரிகளை நடத்தி உங்களுக்கு உணவளித்த சிங்களவரை துரத்தினீர்கள்? இன்னொரு நாட்டில் அகதியாக வந்து வதிவிட ; குடியுரிமை பெற்று இன்னமும் கதையளக்கிறீர்கள். வெள்ளையன் உங்களை முறைத்தால் அது இனத்துவேசம். அதையே நீங்கள் செய்தால் தேசியம்.
மாயா
யாழ்ப்பாணத்தில் மீளக் குடியமர சிங்களக் குடும்பங்கள் வருகை
—————————————
யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறு வதற்காக மேலும் 300 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் இன்றும் நாளையும் யாழ் நகருக்கு வருகை தரவுள்ளதாக யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.அத்துடன் கடந்த 1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த 6 ஆயிரத்து 500இற் கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னிலங்கையின் பல பகுதியிலும் வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பலாலியில் உள்ள இராணுவ முகாமொன்றில் கோப்ரல் தர பதவி யில் கடமையாற்றுவதாக தன்னை அறிமுகப்படுத்திய லதித் பிரியந்த விக்கிரமசிங்க என்ற குடும்பஸ்தரே மேற் கண்டவாறு தகவல் வழங் கினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
1983 ஆம் ஆண்டிற்கு முன் னர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் பேக்கரி, மேசன், வியாபாரம் உள்ளிட்ட தொழில்களில் நாங்கள் ஈடுபட்டு வந்தோம்.1983 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வாக்களித்தோம் அத்துடன் யாழ்.சிங்கள மகாவித்தியாலயம் மற்றும் தமிழ்ப் பாடசாலைகளில் கல்விகற்றோம். எனினும் 1983 ஆம்ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து சென்ற நாம் அனுராதபுரம் சேனபுர முகாமில் தங்கியிருந்தோம்.
இதன்போது கூலித்தொழில், வியாபாரம் உள்ளிட்ட தொழில்களுக்காக குருநாகல், மாத்தளை, மாத்தறை, காலி உட்பட பல மாவட்டங்களுக்குச் சென்றோம். கடந்த 27 வருடங்களாக படையினரும் பொலிசாரும் எங்களை யாழ்ப்பாணத்தவர் (தேசிய அடையாள அட் டையிலுள்ளவாறு ) எனக் குறிப்பிட்டு தமிழ் மக்களைப் போன்றே சந்தேகத் துடன் பார்த்தனர்.
குறிப்பாக அனுராதபுரம் விமானப் படைத்தளத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தாக்கியளித்த போது படையினர் எம்மை துருவித்துருவி விசாரணை செய்தனர்.தினமும் மூன்றுவேளை எமது வீடுகளுக்கு வந்து விசாரணை நடத் தினர். விடுதலைப்புலி தற்கொலைப் படையினருக்கு நாங்கள் தான் சகல வசதியும் செய்து கொடுத்த தாக படையினர் குற்றஞ்சாட்டினர்.
கடந்த 21 வருடங்களாக இராணு வத்தில் கடமையாற்றும் என்னை இராணுவ உயர்மட்டம் சந்தேகத்துடனேயே பார்த்தது.இவ்வாறான பிரச்சினைகள் காரணமாகவே தமிழ் மக்களுடன் ஒற்றுமையாக எமது சொந்த மாவட்டத்தில் வாழ்வதற்காக நாம் இங்கு வருவதற்கு முடி வெடுத்தோம் என்றார்.
எனது பேரனார் பேக்கரி நடத்தினார்
எனது தந்தையின் தகப்பனார் ஏ.எம்.அபயசேகர மாட்டீன் யாழ். புகையிரத நிலையத்திற்கு முன்பாக பேக்கரி நடத்தினார் என்கிறார் எச்.கே.செளந்தலா என்ற குடும்பப் பெண். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஏ.எம். அபயசேகர மாட்டீனுக்கு 18 பிள்ளைகள் அதில் ஒருவர் எனது தந்தையார்.
நான் பிறந்தது யாழ்ப்பாணத் தில். கல்விகற்றது யாழ்.சிங்கள மகா வித்தியாலயத்தில் நாங்கள் தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்து சென்று பல கஷ்டங் களை அனுபவித்தோம். எனவே தான் தமிழ் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக எமது சொந்த ஊரில் குடியமர்வதற்கு வந்துள்ளோம் என்றார்.
தமிழ் மக்களுக்கு முதலில் தீர்வு:
யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள டபிள்யூ.ஏ.மல்காந்தி தெரிவிக்கையில் நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு கடந்த திங்கட்கிழமை வந்தோம். மூன்று தினங்களாகியும் இதுவரை ஒரு அரச அதிகாரியும் எமக்கு உதவி செய்யவில்லை.ஆனால் எமக்குத் தெரிந்தவர்கள் மற்றும் அருகிலுள்ள தமிழ் மக்களே மூன்று தினங்களும் சாப்பாடு தந்து உதவினார்கள்.
எனவேதான் நாம் அரசாங்கத்தைக் கேட்கிறோம் தமிழ் மக்கள் படும் கஷ்டங்களுக்கு முதலில் நிரந்தரத் தீர்வை வழங்குங்கள். அத்துடன் எங்களையும் யாழ்ப்பாணத்தில் எந்த இடத்திலாவது வாழ்வதற்கு இடம் தாருங்கள்.எங்களுக்கு கே.கே.எஸ் வீதி நாச்சிமார் கோவிலடியில் சொந்த வீடு உள்ளது. எனினும் அங்கு தமிழ் குடும்பங்கள் உள்ளன. எனவே அவர்களை இனி அங்கிருந்து அகற்ற வேண்டாம். எங்களுக்கு அரசகாணியை ஒதுக்கித் தாருங்கள் என அரசாங் கத்தை கேட்கிறோம் என்றார்.
-News
murugas
I can remember immediately after July 83 riots almost all the jaffna Tamils who had come to jaffna by ship during the riot went back to Colombo and other places and resumed their livlihhods there.If our Sinhalese brothers prove their credentials they should be provided with all necessary support.
Ajith
If our Sinhalese brothers prove their credentials they should be provided with all necessary support.
Who should provide this support? Is it Jaffna people or Sri Lanka Government?
What support Sinhala people and Sinhala state gave to those tamils who returned to Colombo. Why tamils went Colombo? It is because they didn’t have the power to rule their land? Let the tamils to make their government in Jaffna and then if the lawful Sinhalese are not allowed then that is racisim. Why should we have a Sinhala only military and police in all parts of country.
Tamils were burnt to death in front of Sri Lanka Sinhala military? Was any Sinhala people burnt to death by Tamils in Jaffna?
சாந்தன்
//….இலங்கையில் பிறந்த அனைவருக்கும் : இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் போக வர : இருக்க ; வாழ உரிமையுண்டு…//maya
ஒருவரும் இல்லை என்று சொல்லவில்லையே? ஆனால் இலவசமாகக் காணிக்கு எங்கே போவது? ஆனானப்பட்ட ஈ.பி.டி.பி எம்பியே கையை விரிக்கிறார்?
//…நீங்க எல்லாம்; புலத்தில காணி வாங்கித்தானே குடியேறினீங்க? வாயை கிளராதீங்க….//
எங்கே புலத்தில் ‘ஓசியில்’ காணி கொடுக்கிறார்கள்? ஒருக்கா கேட்டுச் சொல்லுங்கோ நானும் அங்கே வரலாம் என இருக்கிறேன். இல்லாவிட்டால் அந்த ’ஓசி புலத்துக்கு’ போக மனிதாபிமானியான நீங்கள் பாவப்பட்ட ‘ரயில்வே ஸ்ரேசன்’ சிங்கள ஏழைக்கு வழி காட்டுங்கள். புண்ணியமாகப் போகும்!
aras
மலையக தமிழனின் வாக்குரிமையை அழித்தீர்கள்? அவர்களை நாட்டை விட்டே துரத்தினீர்கள்? யாழில் காலா காலமாக வாழ்ந்த இசுலாமியரை துரத்தினீர்கள்? அங்கு பேக்கரிகளை நடத்தி உங்களுக்கு உணவளித்த சிங்களவரை துரத்தினீர்கள்? மலையக தமிழனின் வாக்குரிமையை அழித்தீர்கள்”/ maya
எப்படி லடசக்கணக்கில் தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு துரத்தப்பட்டார்கள். அரசுக்கு ஒரு பங்கும் இல்லையா?
யுத்தத்தில் இன்னல்பட்டு இடம்பெயர்ந்த மக்களையே மீள்குடியேற்ற வக்கில்லை. எதற்கு சிங்கள மக்களின் குடியேற்நத்திற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்?
aras
இலங்கையில் பிறந்த அனைவருக்கும் : இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் போக வர : இருக்க ; வாழ உரிமையுண்டு.” /maya
அப்ப ஏன் வன்னிச் சனத்தின் தலையில் குண்டுகளைப் போட்டார்கள்? ஏனைய தமிழ் பகுதி மக்களை கொஞ்சம் கொஞசமாய் அழித்தார்கள். தமிழரை அழிக்கவும் உரிமை உண்டாக்கும்!!
மாயா
புலத்து புலிகளது பேச்சுகள் அங்கு எடுபடாது. அங்க நடக்கிறது நடந்தே தீரும்.
T Sothilingam
aras மக்களின் பிரச்சினைகளை ஒருசிலர் முன்னெடுத்து அது இயக்கமாக உருவெடுத்து அதற்கு தேவையான உதவிகள் கிடைத்தன. இது வரலாறு என்பதை மறந்துவிட்டா குழந்தைப்பிள்ளைத்தனமான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.
chandran .raja
அரஸ்! பாக்குநீரிணையால் வந்தீர்களா?கட்டுநாயக்காவால் வந்தீர்களா??கட்டுநாயக்காவால் வந்திருந்தால் எப்படி உங்களை துரத்திவிட்டதாக
கொள்ள முடியும்?.
Thalaphathy
தமிழ்மக்களை ஒருகாலத்தில் ஆட்டிப்படைத்த PLOTE மாணிக்கதாசனின் தாய் ஒரு சிங்களவர் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த மாணிக்கதாசன் ஏன் PLOTE இல் சேர்ந்தான், அவன் எந்த மக்களின் வாழ்விற்கும் உரிமைக்குமாக தனது வாழ்வை அர்ப்பணித்தான் என்பதை ஓருகணம் மீழ்லாய்வு செய்யுங்கள்! – அப்போது உங்கள் குருதிக்கொதிப்பிளுள்ள இனவாதம் விடைதரும். நான் பாடசாலைமாணவனாய் இருக்கும்போது எனக்குப் பாடசாலை யுனிபோர்ம் தைத்துத்தந்தவன், ஆஸ்பத்திரி வீதி + முதலாம் குறுக்குத்தெருச்சந்தியில் இரண்டு அறைகளில் காலம் காலமாய் 7 பேர்களுடன் வாடகைக்கு இருந்த சிங்களவன்! இந்த சிங்களவன் தான் சிறுவயதில் நான் இன்றும் மறக்காமலிருக்கும் ஒரு வசனத்தை சொல்லித்தந்தான்- “ஒக்கம வரல மேக்கட்ட றீபல”- இந்த வசனத்தின் அர்த்தம் இன்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு புரியுமா?
சாந்தன்
//…..புலத்து புலிகளது பேச்சுகள் அங்கு எடுபடாது. அங்க நடக்கிறது நடந்தே தீரும்..//
அப்போ ஏன் தேசத்தில் வந்து பந்தி பந்தியாக எழுதி நேரத்தை வீணாக்குகிறீர்கள். இப்ப சொன்னது போல் ஒரு வரியில் சொல்லியிருக்கலாமே. இப்போதாவது சொல்லி விட்டீர்கள் நன்றி!
Ajith
Mr Chandran,
Yes. Do you know how 100,000 Sri lankan tamils who went to India Since 1983. Did you get the approval of Sri Lankan government before coming to the place you live now? Do you how the Vinagamoorthy Murleetharan was sent to UK and how he returned back to Sri Lanka after 9 months in Jail in UK/ Who organised that trip? Why didn’t tamils leave Sri Lanka before 1983 as they did after 1983? Can you explain the reasons for that? What was the role of Sinhalese in that part? Why cannot those Sinhalese who came to resettlement to Jaffna did not ask military for settling instead of GA?
aras
கட்டுநாயக்காவால் வந்திருந்தால் எப்படி உங்களை துரத்திவிட்டதாக கொள்ள முடியும்?.”
chandran.raja கட்டுநாயக்காவால் கள்ளப் பாஸ்போட்டில் வர முடியும்.
மாயா
//அப்போ ஏன் தேசத்தில் வந்து பந்தி பந்தியாக எழுதி நேரத்தை வீணாக்குகிறீர்கள். இப்ப சொன்னது போல் ஒரு வரியில் சொல்லியிருக்கலாமே. இப்போதாவது சொல்லி விட்டீர்கள் நன்றி!//
உங்களுக்கும் அது பொருந்தும்.
மாயா
//கட்டுநாயக்காவால் கள்ளப் பாஸ்போட்டில் வர முடியும்.//
எல்லாமே கள்ளத்தனமா எடுத்ததுதானா? சுப்பர்.
thurai
சிங்களவர் தமிழ் பகுதிகளில் குடியேறுவதும், தமிழர் சிங்களப் பகுதிகளில் குடியேறுவதும் இன ஒற்ருமைக்கு வழிவகுக்கும்.
தமிழர் மட்டும் சிங்களப் பகுதிகளில் குடியயேறுவதும் அரசாங்க தொழில்பார்ப்பதும், காணிகள் வாங்குவதும், முதலீடுகழும் தொழில் வழங்கழுமே 30 ஆண்டுகளிற்குமுன்பு இருந்தது.
இதேவேளை பொலிசாராகவும், கரையோரப்பகுதிகளில் கள்ளக்கடத்தலைத் தடுக்க ராணுவமும் (பெரும்பாலும் சிங்களவ்ர்கள்) குடியேறினர். அப்போ யாராவது ஒரு தமிழ் அரசியல் வாதியோ தனிப்பட்டவரோ கள்ளக்கடத்தல் காரர்களிற்கு எதிராக் குரல்கொடுத்து இராணுவத்தை தமிழ்பகுதிகளில் இருந்து அகற்ர நடவடிக்கை எடுத்தார்களா?
கள்ளக்கடத்தலைத் தடுக்க வந்த இராணுவத்தை தமிழர்களிற்கு எதிராக மாற்றியது யார்? தமிழ் அரசியல்வாதிகளையே சேரும். இதேபோல்தான் சிங்களவர்களை தமிழர்களிற்கு எதிராக மாற்ரியவர்கழும் சுயநலமிக்க தமிழ் அரசியல் வாதிகளேயாகும்.
இவர்களின் வழிவந்தவர்கள்தான் இன்று புலம்பெயர்நாடுகளில் தமிழீழ அரசியல் செய்கின்றார்கள். வடபகுதியில் சிங்களவர் குடியேறுவது யாழ்ப்பாணத்தில் உள்ளவ்ர்களை விட புலம்பெயர்நாடுகளில் வாழும் தமிழ் உணர்வாளர்களிற்கே பெரும் கவலையாக உள்ளது.
வடக்கில் குடியேறும் சிங்கள்வர்கள் நகரசுத்தியாளர்களாகவும், மரமேறியாகவும் தொழில் செய்வதைத்தடுத்து அந்தத்தொழில்களை தாமே ஏற்பதற்கு, சிங்கள குடியேற்ர எதிர்ப்பாளர்களில் எத்தனை பெயர் தயாராக்வுள்ளனர்?
துரை
riz
If they give precise evidence that would confirm as they was lived own house not for rent, no another word….inevitable
so good jocularity that some government officers come to meet them from west, that say 4 us government give priority to majority people not consider problems of Tamil Muslim minority
thurai
//எப்படி லடசக்கணக்கில் தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு துரத்தப்பட்டார்கள். அரசுக்கு ஒரு பங்கும் இல்லையா?//அராஸ்
இப்ப கப்பல் கப்பலாக் நடுக்கடலில் தத்தழிக்கும் தமிழரை யார் எங்கிருந்து துரத்துகின்றார்களெனெ சொல்வீர்களா? 20 லட்சம் வரை ஏஜன்ட்ரிற்கு கொடுப்பதற்கு அரசாங்கமா கடன் கொடுக்கின்றது?. இலங்கை போய் வரும் புலத்துத் தமிழரெல்லாம் கட்டுநாயக்காவில் திருப்பி துரத்தப்படுகின்றார்களா?
துரை
சாந்தன்
//…உங்களுக்கும் அது பொருந்தும்….//maya
நான் உங்களைப்போல் நடப்பது நடந்துதான் தீரும் என கடைசியில் கையை விரிப்பதில்லை! ஆகவே எனக்குப் பொருந்தாது!
//…வடக்கில் குடியேறும் சிங்கள்வர்கள் நகரசுத்தியாளர்களாகவும், மரமேறியாகவும் தொழில் செய்வதைத்தடுத்து அந்தத்தொழில்களை தாமே ஏற்பதற்கு, சிங்கள குடியேற்ர எதிர்ப்பாளர்களில் எத்தனை பெயர் தயாராக்வுள்ளனர்?…//thurai
இங்கே இரண்டுவிடயங்கள்….
1) அதெப்படி நீங்களே அவர்களுக்கு நகரசுத்தி, மரமேறல் தொழில்களுக்கு அப்பொயின்மன்ற் லெற்ரர் கொடுத்து விட்டீர்கள்?
2) இதையே நான் சொன்னால் சிங்கள சகோதரர்களை மரமேறியாகவும், நகரசுத்தி தொழிலாளியாகவுமே நடாத்தும் ‘யாழ்ப்பான மேலாதிக்கம்’ என கூச்சல் போடும் முதல் நபராக நீங்கள் தான் இருப்பீர்கள்!
மாயா
//அப்போ ஏன் தேசத்தில் வந்து பந்தி பந்தியாக எழுதி நேரத்தை வீணாக்குகிறீர்கள். இப்ப சொன்னது போல் ஒரு வரியில் சொல்லியிருக்கலாமே. இப்போதாவது சொல்லி விட்டீர்கள் நன்றி!//
மேலே உள்ள வரிகள் அனைத்தையும் விட்டு விட்டீர்கள். அனைத்தையும்தான் சொன்னேன்.
//சாந்தன் – நான் உங்களைப்போல் நடப்பது நடந்துதான் தீரும் என கடைசியில் கையை விரிப்பதில்லை! ஆகவே எனக்குப் பொருந்தாது!//
நீங்கள் என்ன சொன்னாலும் நடக்க தீர்மானிக்கப்பட்டது நடந்தே தீரும் எனத்தான் சொன்னேன் . கையை விரித்தால் நடக்காது எனத்தான் அர்த்தம். அப்படி நான் சொல்லவில்லையே?
கையை விரிப்பதை முள்ளிவாய்க்காலில் உங்கள் ஆட்கள் செய்தார்கள். அதாவது ஆயுதங்களை கீழே வைத்து விட்டு : கையை தூக்கினார்கள். எனவேதான் இராணுவம் கொண்டு சென்றோரை தேடுகிறார்கள்.
அப்பாவி மக்களை விட்டு விட்டு : ஆரம்பத்திலேயே அதை செய்திருந்தால் அதிகம் பேர் உயிர் வாழ்ந்திருப்பார்கள். கையை விரித்தது நானல்ல : நீங்கள். ( உங்கள் அர்த்தத்தில்)
Kusumpu
சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் யாழ்பாணத்தில் என்ன பிரச்சனை என்பதானா இன்றை இலங்கைப்பிரச்சனை. வதங்கிப்போன வன்னிமக்களின் நிலை என்ன? கம்பிவேலிகளுக்குப் பின்னால் வாழும் தமிழர்களை யாழ்பாணத்தில் குடியேற்றுவதில் (அவர்கள் விரும்பினால்) குடியேற்றுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது. புண் எங்கோ கிடக்க மருந்தை எங்கோ தடவுகிறமாதிரி இருக்கிறது.
தளபதி /இந்த சிங்களவன் தான் சிறுவயதில் நான் இன்றும் மறக்காமலிருக்கும் ஒரு வசனத்தை சொல்லித்தந்தான்- “ஒக்கம வரல மேக்கட்ட றீபல”- இந்த வசனத்தின் அர்த்தம் இன்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு புரியுமா/ ஏனையா வைச்சுக்கொண்டு வஞ்சகம் செய்கிறீர்கள். எனக்கும் தமிழ் அரசியல்வாதிகள் போல் ஒன்றும் புரியவில்லை. தமிழாக்கம் தான் என்ன என்று சொல்லலாமே.
thurai
//2) இதையே நான் சொன்னால் சிங்கள சகோதரர்களை மரமேறியாகவும், நகரசுத்தி தொழிலாளியாகவுமே நடாத்தும் ‘யாழ்ப்பான மேலாதிக்கம்’ என கூச்சல் போடும் முதல் நபராக நீங்கள் தான் இருப்பீர்கள்//சாந்தன்
வன்னியில் புலிகள் அழிக்கப்படும்போது தென்னிந்திய தமிழர்கள் எங்கள் தொப்புள்கொடி என்று உறவு கொண்டாடினீர்களே அதற்கு முன் அவர்களிற்கு என்ன செய்தீர்கள்?
இலங்கையின் மலையகத்திலும், மலேசியவிலும் தோட்டத்தொழிலாளர்களாக ஆங்கிலேயரால் அடிமையாக்கப்பட்டு முதுகுமுறிய வேலை செய்ய கண்காணி தொழில் பார்த்த பரம்பரையல்லவா யாழ்ப்பாண மேலாதிக்கம்.
இப்பொதும் மலேசியா சிங்கப்பூரில் தமக்கென தனிஆதிக்கமும் பெருமையுடன் வாழ்கின்றவ்ர்கழும் யாழ் மேலாதிக்கமே. இவர்களிற்கெல்லாம் ஏன் விடுதலை தமிழ் என்பதெல்லாம் பேச்சில் வருகின்றதோ தெரியவில்லை.– துரை
Chandrakumar
அனைவரும் இலங்கையர் என்பதுதானாம் எனும் இன்றைய நிலையில் அனைவரும் இலங்கையர் என வாழ என்ன தயக்கம்? நானென்ன வெளி நாட்டில் பாட்டன் சொத்திலா வாழவந்தேன்? எனக்கு வாழ்வு கிடைக்கவில்லையா? என்னை யாராவது அடித்து, எழுதி சேறடித்து துரத்த முயன்றார்களா? நான் வாழும் இந்நாட்டில் என்னையும் மனித பண்புடன், பக்கத்து வீட்டானாக வணக்கம் ! எப்படிசுகம் ? நன்றி ! எனபேசி பழகுகிறார்கள்தானே! சிங்கள குடியேற்றத்தை தடுக்க விரும்பினால், சொகுசாக வாழும் நாட்டை விட்டு, இலங்கை செல்ல உங்களால் முடியுமா ? அப்படியானால் இலங்கை சென்று தடுக்க பாருங்கள்! நாளை தமிழீழம் கிடைக்கும் என ஏமாற்றியது போல் எழுதி நீங்களும் கெட்டு, மற்றவரையும் கெடுக்காதீர்கள் சகோதரர்களே! நன்றி ! சந்திரன்…
மாயா
“ஒக்கம வரல மேக்கட்ட றீபல” அல்ல ” ஒக்கொம வரெல்லா : மேக்கட்ட றீபள்ளா” என்பதே சரியானது. ஆரம்பத்தில் எனக்கும் சரியாக புரியவில்லை. சில எழுத்துகள் சரியாக எழுதப்பட்டு இருக்கவில்லை. அது வேறு அர்த்தமாகியிருந்தது.
மாணிக்கதாசன் சொன்னது ” ஒக்கொம வரெல்லா : மேக்கட்ட றீபள்ளா” > ” எல்லாரும் வாங்கடா: இங்க வந்து கழியுங்கடா” (டொயலட்டுக்கு இருங்க). என்பது Kusumpu
aras
இப்ப கப்பல் கப்பலாக் நடுக்கடலில் தத்தழிக்கும் தமிழரை யார் எங்கிருந்து துரத்துகின்றார்களெனெ சொல்வீர்களா”/ thurai
சந்தேகமென்ன இந்த அதிகாரத்தில் இருப்பவர்கள்தான்.கப்பலில் மிதந்து திரிபவர்களை மனிதர்களாக ஏற்று இலங்கையில் வாழ வைக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. இதை உணர்ந்த எவரும் இலங்கையில் தங்க நினைப்பார்களா?
/20 லட்சம் வரை ஏஜன்ட்ரிற்கு கொடுப்பதற்கு அரசாங்கமா கடன் கொடுக்கின்றது”/
ஆரம்பத்தில் ஏஜன்டுகளின் ரேட் கம்மியாக இருந்தது. இப்போது அதிகம். வெளிநாடுகளில் உள்ள பல உறவினர் சேர்ந்து உதவி செய்கிறார்கள். மக்களிடம் கொள்ளையிட்டதைக் கொண்டும் சிலர் தப்பி வருகிறார்கள்.
இலங்கை போய் வரும் புலத்துத் தமிழரெல்லாம் கட்டுநாயக்காவில் திருப்பி துரத்தப்படுகின்றார்களா?
அவர்களிடம் இருப்பது வெளிநாட்டு பிரஜை உரிமை அல்லது வதிவிட உரிமை. ஒன்றும் செய்ய முடியாதல்லவா?
aras
//கட்டுநாயக்காவால் கள்ளப் பாஸ்போட்டில் வர முடியும்.//
எல்லாமே கள்ளத்தனமா எடுத்ததுதானா? சுப்பர்.”
உயிருக்கு அஞ்சி அகதிகளாக வந்த எம்மையெல்லாம் ஸ்ரூடனட் விசாவிலோ வேலைவாய்ப்பு விசாவிலோ வந்த நீங்கள் எல்லாம் இப்படி கேவலமாகத்தான் நினைப்பீர்கள்.மேட்டுக்குடியாகிய உங்களுக்கெங்கே அகதிகளின் நிலமை விளங்கப் போகின்றது.
சாந்தன்
//….வன்னியில் புலிகள் அழிக்கப்படும்போது தென்னிந்திய தமிழர்கள் எங்கள் தொப்புள்கொடி என்று உறவு கொண்டாடினீர்களே அதற்கு முன் அவர்களிற்கு என்ன செய்தீர்கள்?….//thurai
அப்போ உங்கள் பங்குக்கு முன்னர் சகோதரங்கள் எனச் நீங்கள் சொன்ன சிங்களவரை இப்போ நகரசுத்தி, மரமேறல் அப்பொயின்மன்ற் கொடுக்கிறீர்களாக்கும். எனக்கும் உங்களுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடும் இல்லை என்கிறீர்களா? சபாஷ்!
BC
//அரஸ் – உயிருக்கு அஞ்சி அகதிகளாக வந்த எம்மையெல்லாம்…//
அகதியாக ஏற்று கொள்ளும்படி கேட்டு கொடுத்த வாக்குமூலத்தை மறுபடியும் எடுத்து இங்கே விடுகிறார். அப்படி கொடுத்தால் தான் திருப்பி அனுப்ப மாட்டார்கள்.
thurai
//அப்போ உங்கள் பங்குக்கு முன்னர் சகோதரங்கள் எனச் நீங்கள் சொன்ன சிங்களவரை இப்போ நகரசுத்தி, மரமேறல் அப்பொயின்மன்ற் கொடுக்கிறீர்களாக்கும். எனக்கும் உங்களுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடும் இல்லை என்கிறீர்களா? சபாஷ்//சாந்தன்
சிங்களவர் மரமேறினாலும், நகரசுத்தித்தொழில் செய்தாலும் வடக்கில் சம உருமையுடந்தான் வாழ்வார்கள். ஏனெனில் சிங்கள இராணுவம் அங்குள்ளது. மேலாதிக்கமும் அழிந்துவிடும். — துரை
thurai
//அவர்களிடம் இருப்பது வெளிநாட்டு பிரஜை உரிமை அல்லது வதிவிட உரிமை. ஒன்றும் செய்ய முடியாதல்லவா//அராஸ்
பிரஜா உருமையும், வதிப்பிட உருமையும் கிடைக்குமுன் எல்லோரும் சிங்களவர் போனால் எங்களைக் கொன்றுவிடுவார்கள் என்றுதான் சொன்னனாங்கள்.
அப்போ இனிமேல் அகதியாக வருவோரிற்கு கொழும்பிலேயே இலங்கை பாஸ்போட்டில் விசாவினை மேல்நாட்டவர் கொடுப்பதன் மூலம் தமிழர்களிற்கு பாதுகாப்பு கிடைக்குமா? அருமையான அரசியல் தீர்வும் பாதுகாப்பும்
//ஆரம்பத்தில் ஏஜன்டுகளின் ரேட் கம்மியாக இருந்தது. இப்போது அதிகம். வெளிநாடுகளில் உள்ள பல உறவினர் சேர்ந்து உதவி செய்கிறார்கள். மக்களிடம் கொள்ளையிட்டதைக் கொண்டும் சிலர் தப்பி வருகிறார்கள்.//அராஸ்
தப்பி ஓடுபவர்கள் ஏன் சிங்களவர் வாழும் தெற்கினை நோக்கி ஓடிவருகின்றார்கள்? வருடக்கணக்கில் கொழும்பில் தங்கிவருகின்றார்கள்? புலிகளிடமிருந்து தப்பி ஓடியவர்கள் என்று சொன்னால் பொருந்தும் என நினக்கின்றேன்.–துரை
thurai
//உயிருக்கு அஞ்சி அகதிகளாக வந்த எம்மையெல்லாம் ஸ்ரூடனட் விசாவிலோ வேலைவாய்ப்பு விசாவிலோ வந்த நீங்கள் எல்லாம் இப்படி கேவலமாகத்தான் நினைப்பீர்கள்.மேட்டுக்குடியாகிய உங்களுக்கெங்கே அகதிகளின் நிலமை விளங்கப் போகின்றது.//அராஸ்
ஈழத்தமிழரில் எல்லாக்குடிகழும் இப்போ அகதிகள்தான். அகதிகளானதற்குக் காரணம் மட்டுமே வடபகுதி மேலாதிக்க அரசியல். இவர்களிற்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போகும் யாவருமே பரிதாபத்துக்குரியவர்கள்.– துரை
karuna
அவை 56இலை அடிச்சு பிறகு 83இலை அடிக்க நாங்கள் பொறக்கேலாமால் அனுராதபுரதிலை பூந்து வெட்ட அவங்களும் எங்களை வெட்ட பிறகு நாங்கள் காக்கா மாரைவெட்ட அவை எங்களை வெட்ட மாறி மாறி வெட்டி இப்ப களைச்சுப்போய் ஒரு மாதிரி ஆளையாள் வித்தியாசமாகப் பார்க்கேல்லை திரும்ப தொடங்கீட்டியள். 40ஆயிரம் யாழ்ப்பாணத் தமிழர்களை கொழும்பிலை வைச்சுக்கொண்டு கனக்க கதைக்கிறவையிடம் ஒரு கேள்வி?
சரி கேள்வி இது தான் : தமிழனுக்கும் சிங்களவனுக்கும் பிறந்தவன் என்ன இனம்? முஸ்லீமுக்கும் தமிழனுக்கும் பிறந்தவன் என்ன இனம். இன்னுமொரு மிகவும் சிக்கலான கேள்வி : தமிழனுக்கும் சிங்களவனுக்கும் பிறந்தவனுக்கும் சிங்களவனுக்கும் முஸ்லீமுக்கும் பிறந்தவனகுக்கும் பிறந்த ஒருவனுக்கும் தமிழனுக்கும் முஸ்லீமுக்கும் பிறந்த ஒருவனுக்கும் பிறந்த பிள்ளைகளின் பிள்ளை ஒரு இந்திய வம்சாவழிக்கும் சிங்களவனுக்கும் பிறந்த பிள்ளையை கல்யாணம் செய்து பிறக்கிற பிள்ளை என்ன இனம்?
chandran .raja
விடை சுலபமானது கருணா! மனிதஇனம். கடைப்பிடிக்க வேண்டியது மனிதநேயம். நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.
VP
நான் யாரையும் குழப்பவில்லை ஆனால் பதில் செல்ல வேண்டியவர்கள் இன்னமும் வரவில்லை! எனது குழப்பமெல்லாம் இந்த மனித இனம் ஏன் இப்படி புடுங்கு படுகுது என்பதே! கறுப்பு வெள்ளை நான் பெரிசு நீ பெரிசு எல்லாம் எத்தனை நாளைக்கு! உந்தப்பெரிய டைனசோர் என்ற இனமே அழிந்துபோய்விட்டது! இந்த சிறிய மனித இனம் தன்னை தானெ அழித்து இன்று அழிவின் விளிம்பில் வந்து நின்று இன்னமும் கூக்குரல் இடுகிறது! என்னைவிடப் பெரியவன் யாரும் இல்லை என்று! அழிவை தானெ தேடும் இனம் தான் இந்த மனித இனம்! இதற்கு நிலவெறி மதவெறி இனவெறி எல்லாம் பிடித்து இன்று அழிவின் விளிம்பில் இருக்கையில் எம் தமிழினம் மீளவும் இருந்த இடத்தற்கு வந்து அதே பாட்டு பாடுகிறாரகள்…
aras
பிரஜா உருமையும், வதிப்பிட உருமையும் கிடைக்குமுன் எல்லோரும் சிங்களவர் போனால் எங்களைக் கொன்றுவிடுவார்கள் என்றுதான் சொன்னனாங்கள்.”/thurai
அது சரியாகத்தானே இருக்கிறது.(பிரஜா உருமையும், வதிப்பிட உருமையும் கிடைக்குமுன் எல்லோரும் சிங்களவர் போனால் எங்களைக் கொன்றுவிடுவார்கள் என்றுதான் சொன்னனாங்கள்.”) பிரான்ஸில் பிரஜா உரிமை கிடைத்தால் அவர் பிரெஞ்சுப் பிரஜை. கனடவில் வதிவிட உரிமை கிடைத்தால் அவர் கனடாவாசி. இலங்கை ஏதும் செய்ய வெளிக்கிட்டால் அந்தந்த நாடுகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அதுவே இலங்கைப் பிரஜை அதுவும் தமிழன் என்றால் யார் கேட்கப் போகின்றார்கள்?
அப்போ இனிமேல் அகதியாக வருவோரிற்கு கொழும்பிலேயே இலங்கை பாஸ்போட்டில் விசாவினை மேல்நாட்டவர் கொடுப்பதன் மூலம் தமிழர்களிற்கு பாதுகாப்பு கிடைக்குமா?”
இதைத்தான் குதர்க்கம் என சொல்வது.
palli
மூன்று மாதத்துக்குள் வேறு ஏதாவது இதைவிட கூடுதலாய் வந்துவிடும், அப்போது இதை அனைவரும் மறந்து விடுவார்கள் என தோழர் தப்புகணக்கு போடுமாபோல் உள்ளது,
சாந்தன்
//….சிங்களவர் மரமேறினாலும், நகரசுத்தித்தொழில் செய்தாலும் வடக்கில் சம உருமையுடந்தான் வாழ்வார்கள். ஏனெனில் சிங்கள இராணுவம் அங்குள்ளது. மேலாதிக்கமும் அழிந்துவிடும். — துரை ….//
கொஞ்ச நாட்களின் முன்னர் ‘இனவாத சிங்கள அரசு’ என நீங்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது மறந்து விட்ட்டது போலும்!
பரவாயில்லை இப்போது சிங்கள ராணுவம் இருக்கிறது சகோதரசிங்கள மக்களே வந்து நகரசுத்தி செய்யுங்கள், மரமேறுங்கள் என ‘சம உரிமையை நிலைநாட்ட’ அவர்களை அழைக்கிறீர்களாக்கும் ! வாழ்க உங்களின் சம உரிமை வெளிக்காட்டல். இனிமேல் சிங்கள ராணுவத்தின் சம உரிமைக்கொள்கைகளை மக்களுக்கு விளக்க சிங்கள சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு மரமேறல் தொழிலுக்கு அப்பொயின்மன்ற் லெற்றர் வழங்குங்கள்!
சாந்தன்
கீழே யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயனில் வந்த செய்தி.
——————-
”எங்களையும் மீள் குடியேற்றுங்கள்”-யாழ்ப்பாணத்தில் ஒரு நாடகம்?: உதயன்”1980 களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வாடகை வீடுகளில் வசித்து வந்தோம். நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக இங்கிருந்து இடம்பெயர்ந்தோம். சுமூகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு மீண்டும் இங்கு வந்துள்ளோம்.
நாங்கள் இங்கு வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து தாருங்கள்” என்ற கோரிக்கையுடன் சிங்கள மக்களில் 200 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளன.
இந்த விடயம்தான் யாழ்ப்பாணத்தில் இன்று பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் திடீரென மூட்டை முடிச்சுகளுடன் சிங்கள மக்கள் மீள்குடியேற்றத்திற்கு வந்துள்ளமை எல்லோரையும் சிந்திக்க வைத்துள்ளதுடன் அதன் பின்னூட்டல் என்னவாக இருக்கும் என்ற சந்தேகத்தையும் எல்லோருடைய மனங்களிலும் ஊடுருவச் செய்துவிட்டது.
யாழ்ப்பாணத்தில் 1983 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கானோர் இங்கிருந்த இடம்பெயர்ந்தனர். சொந்தக் காணியில், சொந்த வீட்டில் வாழ்ந்த அந்த மக்கள் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடங்கள் கடந்த நிலையில் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆக 55 குடும்பங்கள் மட்டுமே மீளக்குடியமர்ந்துள்ளனர்.
தாம் தற்போது வாழ்கின்ற இடங்களில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்ற அவர்கள் அந்தத் தொழில்களை கைவிட்டு யாழ்ப்பாணத்தில் என்ன செய்து உடனடியாக எந்தத் தொழிலை ஆரம்பிப்பது எப்படி. அதுவரைக்கும் தம்மைக் கட்டியெழுப்புவது எப்படி? அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எந்த வழி என்றெல்லாம் ஆற அமர சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் சொந்தக் காணிகளோ,வீடுகளோ இல்லாது வாடகை வீடுகளில் வாழ்ந்த இந்தச் சிங்கள மக்கள் எவ்வாறு? என்ன? துணிவுடன் எடுத்த எடுப்பில் இங்கு மீள்குடியேற வந்துள்ளார்கள் என்ற கேள்விக்கணைகளை அவர்களது வருகை எல்லோரது மனங்களிலும் ஏற்படுத்தியுள்ளது.
உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அரசு தம் வசப்படுத்தியுள்ள வலி. வடக்குப் பகுதியில் இன்னமும் தமிழ் மக்களை அதுவும் அவர்களது சொந்தக் காணியில் மீள்குடியேற்றம் செய்யாமல் 20 வருடங்களுக்கு மேல் இழுத்தடித்து வருகின்ற இந்த அரசாங்கம் சொந்தக் காணிகளோ, வீடுகளோ, இல்லாத இவர்களை குடியேற்றம் செய்யும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? அந்த மன உறுதியை ஊட்டியவர்கள் யார்? என்ற சந்தேகங்களும் சாதுவாக எழுந்துள்ளது.
யாழ். புகையிரத நிலையத்தில் எந்த விதமான அடிப்படை வசதிகளோ இல்லை. இந்நிலையில் எவ்வளவு காலம் தான் தங்கியிருக்கப் போகிறீர்கள்? என்று அங்குள்ளவர்களிடம் கேட்ட போது “”எவ்வளவு காலமெண்டாலும் பரவாயில்லை. எமக்கு நல்ல பதில் கிடைக்கும் வரையும் நாங்கள் மீளவும் போகமாட்டோம். இறுதிவரை எமது உரிமைக்காக போராடுவோம்” என்று அங்குள்ள அதாவது அந்த மக்களை குறிப்பாக மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்களை ஒழுங்கமைத்து வருகின்ற மல்காந்தி என்ற பெண்மணி கூறினார்.
உங்களுக்கு உரிய தீர்வு கிடைக்குமா? நீங்கள் கேட்கின்ற அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறதா? என்று கேட்டதற்கு “”நிச்சயமாக எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. இன்னும் ஓரிரு தினங்களில் பெரிய இடத்தில் இருந்து சரியான பதில் கிடைக்கும். அதற்காகத் தான் காத்திருக்கிறோம்” என்று உறுதிபடத் தெரிவித்தார். (அந்தப் பெரிய இடம்தான் எதுவோ?) அத்துடன் தமது உடைமைகளையும் ஓட்டோ, மோட்டார் சைக்கிள், ரி.வி. போன்ற கூடவே கொண்டு வந்திருக்கிறார்கள். இதை வைத்துப் பார்க்கின்ற போது இவர்கள் மீளவும் திரும்ப மாட்டார்கள் போலத்தான் தென்படுகின்றது.
இங்கு வந்துள்ள மக்களில் அநேகமானவர்களுக்கு தமிழ் நன்கு தெரியும். சரளமாகக் கதைக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் பேசாமல் ஓரிடத்தில் பேசாப் பொருளாய் உள்ளார்கள். மல்காந்தி, சௌந்தலா மற்றும் இராணுவத்தில் கோப்ரல் தரத்தினையுடைய விக்கிர மசிங்க இந்த மூவரும்தான் அங்கு வருகின்ற ஊடகங் களுக்குக் கருத்துச் சொல்லுகின்றவர்களாக உள்ளனர்.
ஏனையவர்களுடன் கதைக்கவே விடமாட்டார்கள்! அப்படி மற்றவர்களுடன் கதைக்க முற்பட்டாலும் ”நீங்கள் அந்த மூன்று பேரிடமும் போய் எல்லா தகவல்களை யும் கேளுங்கள்” என்று கூறி நழுவி வருகிறார்கள்.
ஏனையவர்கள் யாரும் எதுவும் கதைக்கக் கூடாதென்றும் அறிவுறுத்தியுள்ளார்களாம். இதில் 20 இற்கு மேற்பட்ட விதவைகள் அங்கு உள்ளனர். அவர்களில் போரில் இறந்து போன இராணுவ வீரர்களின் மனைவிமாரும் உள்ளடங்குவார்கள்.
மேசன், பேக்கறி, வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்களைச் செய்பவர்கள் எல்லாம் வந்துள்ளார் கள். அதில் அநுராதபுர வைத்தியசாலையில் அம்புலன்ஸ் சாரதியாகவுள்ள அரச ஊழியர் ஒருவர் விடுமுறையினை எடுத்து இங்கு வந்துள்ளதாகவும் பலாலி இராணுவ முகாமில் கோப்ரல் தரத்தில் உள்ள இராணுவ வீரர் ஒருவரும் தான் நீண்டதொரு விடுமுறையில் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள குடும்பங்களின் நிலைமைகளைப் பார்த்தால் பண வசதி படைத்தவர்கள் போலத் தெரியவில்லை. எல்லோரும் நடுத்தர மற்றும் மிகவும் மோசமான வறுமைக்கோட்டுக்குட்பட்ட நிலையினைச் சேர்ந்த மக்களாக உள்ளனர். வந்திருப்பவர்களில் வயது முதிர்ந்தவர்கள் தாம் முன்னர் யாழ்ப்பாணத்திலே வசித்ததற்கு ஆதாரமாக யாழ்ப்பாண முகவரிகளைக் கொண்ட “புத்தம் புதிய’ அடையாள அட்டைகளையும் காண்பிக்கிறார்கள். அந்த அடையாள அட்டைகள் ஒரு மாதகாலத் துக்குள்ளேயே பெறப்பட்டுள்ளன என்பதுவும் கவனத்தை ஈர்த்தன.
இந்த மக்களுடைய வாழ்வியல் எப்படித்தான் கடந்த நான்கு நாள்களாக நகர்ந்தது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவர்களுக்குரிய குடிநீர் வசதிகளை யாழ். மாநகர சபையும் , மின்சார வசதிகளை மின்சார சபையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. அத்துடன் பொலிஸ், இராணுவப் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அங்கு செல்பவர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட எல்லோரும் பதிவு செய்யப்படுகின்றனர்.
அநுராதபுரத்தில், மிஹிந்தலை எனும் இடத்தில் இருந்து பல்வேறு தொழில்களை மேற்கொண்டு தமது வாழ்வியலை நகர்த்திக் கொண்டிருந்த இவர்கள் அங்கிருந்து திடீரென இடம்பெயர்ந்த மக்களைப் போல இங்கு வந்து மூட்டை முடிச்சுகளுடன் தங்கியுள்ளார்கள் என்று நினைக்கும் போது இதற்குப் பின்னால் பெரும் பலம் வாய்ந்த சக்தியொன்று இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இவர்கள் மீள்குடியேற்றத்திற்கு வந்த போது இவர்களுடன் செய்திகளைச் சேகரிக்க தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகைகளின் செய்தியாளர்களும் வந்துள்ளனர் என்றால் பாருங்களேன்.
தாம் முன்னர் வாழ்ந்த இடங்களைத் தருமாறு கோரவில்லை என்றும் தமக்கு அரச காணிகளைப் பகிர்ந்து தருமாறே அரச அதிபரிடம் மனுக் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் எங்கு அரச காணிகள் உள்ளன என்ற கேள்வியும் அடுத்த கட்டத்தில் எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களில் அனேகமானவர்களுக்கே சொந்தக் காணிகள், வீடுகள் இல்லாத நிலையில் உள்ளனர். அவர்களில் பலர் ரயில் ஓடிய பாதைகளில் சிறிய கொட்டில்களை அமைத்து தமது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது ரயில் பாதைகள் புனரமைக்க வேண்டியுள்ளதால் அந்த மக்களும் அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டிய திரிசங்கு நிலையில் உள்ளனர். எங்கு போவது? என்ற செய்வது? என்ற தளம்பல் நிலையில் காணப்படுகின்றனர்.
காணிகளைப் பகிர்ந்தளிப்பது என்கின்ற விடயம் இன்றைய யாழ்ப்பாண சூழ்நிலையைப் பொறுத்தவரை சாத்தியப்படாது. ஏனெனில் இங்கு அரச காணிகள் எதுவுமே இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.
முன்னறிவித்தல் எதுவும் இன்றி திடீரென இங்கு வந்துள்ள சிங்கள மக்களால் யாழ்ப்பாண சிவில் நிர்வாகத்திற்கு சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது என்று யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பி.பி.ஸிக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். யாழ். அரச அதிபருக்கு மட்டுமன்றி இங்குள்ள அனைவருக்குமே தர்ம சங்கடமான நிலையே தோன்றியுள்ளது.
இந்த மீள்குடியேற்ற நாடகத்தின் கருப்பொருள் என்ன? தயாரிப்பாளர்கள் யார்? என்பதெல்லாம் வேஷம் கலைக்கும் போது எல்லோரும் தெட்டத் தெளிவாக உணர்வார்கள். இதுவே உண்மையாகும்.
——–
karuna
நீங்கள் எந்த நாட்டு பிரஜையாக இருந்தாலும் இலங்கை அரசிற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் நீங்கள் அங்கு போனதும் கைது செய்யப்படவீர்கள். கே.பி தாய்லாந்து பிரஜை அவரும் உள்ளேதான்!
aras
நீங்கள் எந்த நாட்டு பிரஜையாக இருந்தாலும் இலங்கை அரசிற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் நீங்கள் அங்கு போனதும் கைது செய்யப்படவீர்கள்.”
நாங்கள் இலங்கை அரசுக்கு எதிராக என்ன செய்தோம்? ஒன்றும் இல்லை. இலங்கை அரசுதான் காடையர்களை ஏவி எம்மை கொன்று தள்ளியது. வீட்டில் இருந்தாலும் பாடசாலையில் இருந்தாலும் கலைத்து கலைத்து செல்லால் அடித்தது. இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்.நாங்கள்தான் இலங்கை அரசை குற்றம்சாட்டும் நிலையில் இருக்கிறோம்.
thurai
//கொஞ்ச நாட்களின் முன்னர் ‘இனவாத சிங்கள அரசு’ என நீங்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது மறந்து விட்ட்டது போலும்!//சாந்தன்
இனவாத சிங்கள அரசிற்கும், சாதாரணசிங்கள மக்களிற்கும் பெரும் வேறுபாடுண்டு. தமிழ்தேசியப் பூச்சாண்டிகளிற்கு இது புரியாத விடயம்.
//சிங்கள சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு மரமேறல் தொழிலுக்கு அப்பொயின்மன்ற் லெற்றர் வழங்குங்கள்!//சாந்தன்
புலம்பெயர் நாடுகளில் யாழ்மேலாதிக்கம் செய்யாத தொழில் மரமேறலொன்றேயாகும். பனைமரமோ தென்னைமரமோ இங்கு இல்லை. இருந்தால் பணத்திற்காக இலங்கையில் இருந்தே அனுபவ சான்றிதழுடன் வநதிருப்பார்கள். –துரை
thurai
//இலங்கை அரசுதான் காடையர்களை ஏவி எம்மை கொன்று தள்ளியது. வீட்டில் இருந்தாலும் பாடசாலையில் இருந்தாலும் கலைத்து கலைத்து செல்லால் அடித்தது. இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்.நாங்கள்தான் இலங்கை அரசை குற்றம்சாட்டும் நிலையில் இருக்கிறோம்.//அராஸ்
சிறிது காலம் பொறுங்கள் உலகம் முழுவதும் கலைத்து கலைத்து அடிப்பார்கள் அப்போதுதான் சிங்களவர் பறவாயில்லை என்பீர்கள். ஊர், ஊராக தாவி பழகியோரிற்கு எப்பவும் சொந்த ஊர் கசக்கும். ஈழத்தமிழர்களிற்கு கூடுதலான பணம் கிடைக்கும் நாடே பெரியது.– துரை
BC
இவர் அரஸ் என்பவர். தான் வெளிநாட்டில் அரசில் தஞ்சம் எடுப்பதற்க்கு தேவையானது என்னவோ அதை கூறி தஞ்சம் எடுத்தார். இப்போ அதே விடயத்தை எங்களுங்கும் கூறி எங்களுக்கும் காதில் பூ சுத்த முயற்சிக்கிறார்.
சாந்தன்
//..இனவாத சிங்கள அரசிற்கும், சாதாரணசிங்கள மக்களிற்கும் பெரும் வேறுபாடுண்டு. தமிழ்தேசியப் பூச்சாண்டிகளிற்கு இது புரியாத விடயம்….//thurai
நீங்கள் ”சிங்கள ராணுவம்” எனவல்லா சொல்லி இருக்கிறீர்கள்? நீங்கள் ஒருமுறை சொன்னான் அதை நீங்களே கேட்கமாட்டீர்கள் போல் உள்ளதே?
//….புலம்பெயர் நாடுகளில் யாழ்மேலாதிக்கம் செய்யாத தொழில் மரமேறலொன்றேயாகும். பனைமரமோ தென்னைமரமோ இங்கு இல்லை. இருந்தால் பணத்திற்காக இலங்கையில் இருந்தே அனுபவ சான்றிதழுடன் வநதிருப்பார்கள். –துரை….//
இங்கே செய்யும் தொழில் அல்ல பிரச்சினை. வந்த சிங்கள மக்களே தாமக்கு என்ன தொழில் வேண்டும் எனச் சொல்லவில்லை. நீங்களாகவே அவர்களுக்கு அப்பொயின்மன்ற் லெட்டர் கொடுக்க முனைந்து, பின்னர் அதனை எங்கெங்கோ இழுத்துச்சென்று இப்போது யாழ்மேலாதிக்கத்திடம் வந்து நிற்கிறீர்கள்.
எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் ‘வந்த’ சிங்கள சகோதரர்களை ‘நகரசுத்தி, மரமேறல்’ செய்யலாமே என அப்பொயின்மன்ற் லெற்றர் எழுதிக்கொடுத்து, பின்னர் அவர்கள் மரமேறல் தொழில் செய்ய சிங்கள ராணுவத்தை காவல் போட்டு, அதை நியாயப்படுத்த மேலாதிக்ககாரன் போல் அல்ல நான் அவர்களுக்கு தொழில் கொடுக்கிறேன் என இன்னும் வலையில் விழுத்தி ‘மேலாதிக்க வாழ்க்கை’ வாழ முனைகிறீர்கள். மேலே உள்ள உதயன் செய்தியை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
சொல்லப்போனால் ‘யாழ்மேலாதிக்கத்தின்’ டிஜிற்ரல் விம்பம் நீங்கள் தான்.
aras
ஈழத்தமிழர்களிற்கு கூடுதலான பணம் கிடைக்கும் நாடே பெரியது.– துரை
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது திருக்குறள். தமிழீழம் வந்து எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திருந்தால் ஏன் இந்த நிலை? ஆனால் நான் இங்கு பேசுவது இலங்கை அரசு எமக்கு என்ன செய்தது என்பதையேயாகும். உங்களுக்கு இலங்கை அரசை பிழை கூறினால் ஏன் பிடிக்கவில்லை?
சாந்தன்
//…ஊர், ஊராக தாவி பழகியோரிற்கு எப்பவும் சொந்த ஊர் கசக்கும். ….// thurai
சொந்த ‘சகோதரர்கள்’ எனச்சொல்லி சொல்லி வானில் இருந்து குண்டு போடும் நாடு உங்களுக்கு இனிக்கலாம், ஆனால் எல்லோரும் உங்களைப்போல் ‘மன உறுதியும், மன்னிக்கும் பாங்கும்’ உள்ளவர்கள் அல்ல.
thurai
//சொந்த ‘சகோதரர்கள்’ எனச்சொல்லி சொல்லி வானில் இருந்து குண்டு போடும் நாடு உங்களுக்கு இனிக்கலாம், ஆனால் எல்லோரும் உங்களைப்போல் ‘மன உறுதியும், மன்னிக்கும் பாங்கும்’ உள்ளவர்கள் அல்ல.//சாந்தன்
இந்துக் குருக்களை கொதிக்கும் தாரில் சிங்களவர் போட்டார்கள் என்று சொல்லி தொடங்கிய தமிழீழ விடுதலைப்போராட்டம், சொந்த சகோதரர்களையே எரியும் ரயரினுள் துடிக்கத் துடிக்க போட்டது. இவர்களை விட சிங்களவர் கொடியவர்களா?விடுதலையென்பதும், போராட்டமென்பதும் இன்னமும் ஈழத்தமிழர்களிற்குத் தேவையா?– துரை
thurai
//ஆனால் நான் இங்கு பேசுவது இலங்கை அரசு எமக்கு என்ன செய்தது என்பதையேயாகும். உங்களுக்கு இலங்கை அரசை பிழை கூறினால் ஏன் பிடிக்கவில்லை?//அராஸ்
இலங்கை அரசு தமிழர்களிற்கு எதிராக நடக்கு முன்பே தமிழர்கள் தமிழர்களிற்கெதிராக கொடூரங்களைச் செய்துள்ளனர். இன்னமும் அதன் தாக்கமுள்ளது.
இலங்கை அரசை பிழைசொல்லி பிழைப்பு நடத்தும் கூட்டமே இன்று தமிழர்களிற்காக குரல் கொடுக்கின்றது. — துரை
சாந்தன்
//…இவர்களை விட சிங்களவர் கொடியவர்களா?விடுதலையென்பதும், போராட்டமென்பதும் இன்னமும் ஈழத்தமிழர்களிற்குத் தேவையா?– துரை….//
அதனை ஈழத்தமிழர் தீர்மானிப்பார்கள்!
சிங்களவர்கள் கொடியவர்களா என்பதனை ஒப்பீட்டளவில் தீர்மானிக்க முடியாது. அவ்வாறு பார்த்தால் இஸ்ரேலிய யூதர்களுடன் ஒப்பிடும்போது ஷியா, சுன்னி முஸ்லீம் எனப்பிரிந்து ஆளை ஆள் கொல்லும் முஸ்லிம்கள் மோசமானவர்கள். எனவே பாலஸ்தீனம் தேவையா? இல்லை என்பதே உங்கள் வாதமாயிருக்கலாம். ஆனால் அதனை பாலஸ்தீனர் தீர்மானிப்பார்கள்!
மேலும் சிங்களவர்கள் (யாழ்ப்பாணத்துக்கு அகதியாய் வந்த) மரமேறுவதா, இல்லை நகரசுத்தி செய்வதா என்பதனைத் தீர்மானிக்கும் பொறுப்பும் உங்களுக்கில்லை!
aras
விடுதலையென்பதும், போராட்டமென்பதும் இன்னமும் ஈழத்தமிழர்களிற்குத் தேவையா?– துரை”/
தேவை என்றுதான் பேரினவாதம் ஓயாமல் சொல்லுகின்றது. இன்றைக்கு வீட்டினுள் புகுந்த இராணுவத்தை பிடித்து கட்டிவைத்த மக்கள் போராடத்தான் போகின்றார்கள்.
இலங்கை அரசு தமிழர்களிற்கு எதிராக நடக்கு முன்பே தமிழர்கள் தமிழர்களிற்கெதிராக கொடூரங்களைச் செய்துள்ளனர்.//
ஏன் சிங்களவர்கள் சிங்களவருக்கு கொடுமைகளைச் செய்யவில்லையா? கதிர்காம அழகியில் இருந்து களனிகங்கைக்குள் பிணமாக மிதந்தவர்கள் யார்? அவர்களை யார் கொன்றார்கள்? அல்லது சிங்கள மக்களுக்குள்ளே ஒடுக்கப்பட்டவர்கள் இல்லையா?
thurai
//மேலும் சிங்களவர்கள் (யாழ்ப்பாணத்துக்கு அகதியாய் வந்த) மரமேறுவதா, இல்லை நகரசுத்தி செய்வதா என்பதனைத் தீர்மானிக்கும் பொறுப்பும் உங்களுக்கில்லை!//சாந்தன்
சிங்களவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டுவதா அல்லது சேர்ந்து வாழ்வதா என்பதை தீர்மானிப்பதும் அங்குள்ள மக்கழுக்கே உரியது உங்களிற்கில்லை.– துரை
thurai
//வீட்டினுள் புகுந்த இராணுவத்தை பிடித்து கட்டிவைத்த மக்கள் போராடத்தான் போகின்றார்கள்//அராஸ்
போராடுவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தொடக்கி விடுவார்கள். அடுத்த நிமிடமே தமிழர்களிற்கு அரிசியில்லை, மாவில்லை, ஆஸ்பத்திரியில் மருந்து இல்லை சிங்கள அரச மக்களை கொல்கின்றது என்று ஒப்பாரி. உலகமுழுவதும் பெரும்சாலை மறித்து போராட்டம் செய்து,உண்டியல் குலுக்குவீர்கள்.
//ஏன் சிங்களவர்கள் சிங்களவருக்கு கொடுமைகளைச் செய்யவில்லையா? கதிர்காம அழகியில் இருந்து களனிகங்கைக்குள் பிணமாக மிதந்தவர்கள் யார்? அவர்களை யார் கொன்றார்கள்? அல்லது சிங்கள மக்களுக்குள்ளே ஒடுக்கப்பட்டவர்கள் இல்லையா//அராஸ்
சிங்களவரினதும், தமிழர்களினதும் குணங்க்ழும் பழக்க வழக்கங்கழும் ஒன்றாக் இருக்கும்போது பிரிவினை எதற்கு. சிங்கள்வ்ரில் உயர்வானோரே சிங்களவர்களை ஆழ்வதால், தமிழர்களில் உயர்வான்வர்கள் என்று த்ங்களைத் தாங்களே கூறுவோர் தமிழர்களை ஆழ நினப்பதற்குப் பெயர்தான் விடுதலைப்போராட்டமா?– துரை
சாந்தன்
//….சிங்களவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டுவதா அல்லது சேர்ந்து வாழ்வதா என்பதை தீர்மானிப்பதும் அங்குள்ள மக்கழுக்கே உரியது உங்களிற்கில்லை.– துரை .//
மிகச்சரியாகச் சொல்கிறீர்கள். அவர்களுக்கு யாழ்மக்கள் சுயமாக தமது காணிகளைப் பகிர்ந்தளித்தால் வாழலாம். அதி உயர் பாதுகாப்பு வலயம் அதில் காணிச் சொந்தக்கார மக்களுக்கு அனுமதி இல்லை, கண்ணீ வெடி அபாயம் எனச் சொல்லி விட்டு ‘நட்சத்திர ஹோட்டல்’ கட்டி வியாபாரம் செய்யும் ராணுவம் போல் அல்லாதிருக்க வேண்டும். மேலும் யாழ் ஈ.பி.டி.பி கூட அரச காணி என்று யாழில் ஏதுமில்லை எனவேறு சொல்லி விட்டார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக சேர்ந்து வாழ்வது அவர்களின் உரிமை அல்லாது எனக்கில்லை, தேபோல அவர்களுக்கு மரமேறி, நகரசுத்தி அப்பொயின்மன்ற் கொடுப்பதற்கு உங்களுக்கு எந்த அருகதயும் இல்லை. நான் அறிந்தவரை இன்றுவரை அவர்கள் அந்த வேலைகளைக் கொடுங்கள், ராணுவம் இருப்பதால் சமவுரிமை என எந்தக் கதையும் விடவில்லை திரு.துரை அவர்களே!
karuna
தமிழீழம் கிடைத்திரந்தால் எல்லாம் தீர்ந்து விடும் என்று முட்டாள்தனமாக கூறுபவர்களுக்கு இது சமர்ப்பணம்
தமிழீழம் கிடைத்திருந்தால் எமக்கு அதிதவிமோசனமும் கிடைதிருக்கும்!
எதிர்த்து கதைத்தால் பச்சை மிழகாய் அதையும் மிறினால் பச்சை மட்டை!
மட்டை உமை புடைத்தும் நீர் பேசினால் பொட்டு வந்து தருவார் பொட்டை!
மொட்டை ஏதுமின்றி உம் காரியம் நடைபெறும் இடம் ஒரு வெட்டை!
வெட்டையில் குழியில் புதைத்து விட்டு போடுவார்கள் உமக்கு பட்டை!
பேச சுதந்திரம் கதைக்க சுதந்திரம் ஏன் நித்திரைக்கு கூட சுதந்திரம் கிடைத்திராது.
இவர்கள் கொன்றெளித்த தமிழ் அறிஞர்கள் ஆயிரத்தை தாண்டும்
இவர்கள் விரட்டியத்த புத்தி ஜீவிகள் லட்சத்தை தாண்டும்
இவர்களின் பிடிவாத்தால் நாடிழந்தோர் தொகை கோடியை தாண்டும்!
ஆனால் இன்னமும் நாம் பிடிவாதம் பிடிப்பது புலிகளின் தாகத்திற்கு!
thurai
//அவர்களுக்கு யாழ்மக்கள் சுயமாக தமது காணிகளைப் பகிர்ந்தளித்தால் வாழலாம்//சாந்தன்
யாழ்மக்களிற்கா சுயமாக பகிர்ந்தளிக்கும் பழக்கம் வரும்? பணம் வாங்கிக் கொண்டு காணிகளை விற்போர் கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தவனிற்கு விற்காமலுள்ளனர். தமிழனே தமிழ்பகுதியில் தலைநிமிர்ந்து வாழ கூடாது என்னும் அசிங்கமான பழக்கமுடைய சமூகத்தவர்கள் முதலில் திருந்தி தமிழர் என்ற உணர்வு யாவருக்கும் வரவேண்டும். அதன் பின்னரே சிங்களவர் யார் தமிழர் யரென்பது யாவருக்கும் புரியும்.
தமிழரை அடக்கி ஆழவேண்டுமென்று ஓர் தமிழன் எண்ணுவதும் சிங்கவர் எண்னுவதும் ஒன்றேயாகும்.– துரை
சாந்தன்
//…யாழ்மக்களிற்கா சுயமாக பகிர்ந்தளிக்கும் பழக்கம் வரும்?…//
அப்போ ராணுவம் அக்காணிகளை வலிந்து பறித்தெடுத்து சிங்களவருக்கு ‘பகிர்ந்தளிக்கலாம்’ என்கிறீர்களா? ஆம் என்றால்
எந்த மூக்கையும் சுற்ராமல் ‘ஆம்’ எனச் சொல்லி விட்டுப்போங்கள். ஆம் அல்லது இல்லை என பதில் தருவீர்களா துரை. மேலும் நான் எனது 3வது பின்னூட்டத்தில் சோதிலிங்கத்திடம் கேட்டது போல் (சாந்தன் on October 8, 2010 3:25 pm ) உங்களிடமும் கேட்க ஆசை. பதில் தருவீர்கள் என நினைக்கிறேன்.
thurai
//மேலும் நான் எனது 3வது பின்னூட்டத்தில் சோதிலிங்கத்திடம் கேட்டது போல் (சாந்தன் ஒன் ஓச்டொபெர் 8, 2010 3:25 ப்ம் ) உங்களிடமும் கேட்க ஆசை. பதில் தருவீர்கள் என நினைக்கிறேன்.//சாந்தன்
தமிழர்கள் மத்தியில் தமிழரையே அடக்கி அவர்களின் உருமைகளைப் பறித்தும், மனிதனை, மனிதனாக மதிக்கத் தெரியாதவர்களிற்கும் விடுதலைப்போராட்டம் தேவையா? எந்த மூக்கையும் சுற்ராமல் ஆம் அல்லது இல்லை என பதில் தருவீர்களா சாந்தன்.
அப்போ ராணுவம் அக்காணிகளை வலிந்து பறித்தெடுத்து சிங்களவருக்கு ‘பகிர்ந்தளிக்கலாம்’ என்கிறீர்களா? சாந்தன்
ஆம். சாதிபார்த்து தமிழர்களிற்கு விற்காமலும், தாமும் குடியிருக்காமல் பராமரிப்பின்றி இருக்கும் காணிகளை அரசாங்கம் (இராணுவம்) பறித்து சிங்களாவரிடம் கொடுப்பது சரியானதே. தாழ்த்தப்பட்ட தமிழர்களை அரசாங்கம் குடியிருத்தினால் இரவோடு இரவாக வீட்டோடு கொழுத்தியிருப்பார்கள் தமிழீழ விடுதலையின் முன்னோடிகள்.– துரை
aras
நீங்கள் சொல்வது சமூகப் பிரச்சனை(சாதி). சரியான பாதையில் போராட்டம் சென்றிருந்தால் அதற்கும் ஒரு முடிவு வந்திருக்கும். ஒரு அரசு இன்னொரு இனத்தின் மீது அடாத்து செய்ய நினைப்பது இரு இனங்களையும் மோத வைத்து மீண்டும் அழிவுப் பாதையில் அழைத்து செல்லும்.
thurai
//இரு இனங்களையும் மோத வைத்து மீண்டும் அழிவுப் பாதையில் அழைத்து செல்லும்.//அராஸ்
தமிழரிடையேயிருந்த சாதிப்பிரச்சினையே, இனப்பிரச்சினை தொடங்குவதற்கும், ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப்போராட்டம் தோல்வியடந்த்தற்கும் காரணம். தமிழர்களின் இன்றைய நிலமைக்குக் காரணம், சாதரண தொழிலாளர்களல்ல. தமிழர்களிற்குள் தாங்களே உயர்ந்தவ்ர் தங்களிற்கே அரசியல் உருமையும் தமிழர்களைப் பிரதிநிதிப்படுத்தும் தகைமையுமுண்டெனெ அன்றும் இன்றும் முன்னிற்பவர்களேயாகும்.– துரை
thurai
//நீங்கள் சொல்வது சமூகப் பிரச்சனை(சாதி). சரியான பாதையில் போராட்டம் சென்றிருந்தால் அதற்கும் ஒரு முடிவு வந்திருக்கும்//அராஸ்
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, இந்தியாவில் இயக்கங்கள் வளரும்போதே சாதியும் சேர்ந்தே வளர்ந்தது. அதாவது போரிற்குப்பெயர் தமிழீழ விடுதலை. செயலிற்குப் பெயர் சாதியினைகாத்தலும், வளர்த்தலுமாகவேயிருந்த்து.– துரை
சாந்தன்
//…ஆம். சாதிபார்த்து தமிழர்களிற்கு விற்காமலும், தாமும் குடியிருக்காமல் பராமரிப்பின்றி இருக்கும் காணிகளை அரசாங்கம் (இராணுவம்) பறித்து சிங்களாவரிடம் கொடுப்பது சரியானதே…//
நன்றி துரை அவர்களே.
சரி என வைத்துக்கொண்டாலும் சாதிபார்த்து விக்கப்படாத சாதிக்காரனுக்கல்லவா கொடுக்க வேண்டும்? ஏன் சிங்களவனுக்கு கொடுக்க வேண்டும்? இல்லையா?
இனியாவது ‘இனவாத ஸ்ரீலங்கா அரசு’ எனக்கூறுவதை நிறுத்திவீர்கள் என நினைக்கிறேன். இரண்டுபக்கமும் வாலையும் தலையையும் காட்டி பின்னூட்டம் இடுவதை நிறுத்துங்கள்!
உங்கள் முன்னைய கேள்விக்கு அரஸ் பதிலளித்திருக்கிறார்.
thurai
//இனியாவது ‘இனவாத ஸ்ரீலங்கா அரசு’ எனக்கூறுவதை நிறுத்திவீர்கள் என நினைக்கிறேன். இரண்டுபக்கமும் வாலையும் தலையையும் காட்டி பின்னூட்டம் இடுவதை நிறுத்துங்கள்//சாந்தன்
இங்கு பின்னோட்டம் விடுபவர்களெல்லாம் பரிதாபமானவர்கள்தான். நீங்கள் கூறுவதுபோல் இரண்டுபக்கமும் வாலையும் தலையையும் காட்டி பின்னூட்டம் எழுதுவதாக வைத்துக்கொள்வோம்.
தமிழீழதாகம் என்று 30 வருடமாக கூறியவர்கள். எங்களை துரோகிகள் என்றவர்கள். துரோகிகள் என்று கூறி படு கொலை செய்தவர்கள். அந்தப் படுகொலை செய்தவர்களை கடவுளாக வணங்கியவர்கள். உலகமுழுவதும் ஊரார் பணங்களை மிரட்டிப் பறித்து உல்லாச வாழ்வு வாழ்பவர்கள்.
சிங்களவர் எங்கள் எதிரிகளென்று இனத்துவேசத்தை தமிழர் சமூகத்தினரிடையே கக்கி தமது வாழ்வை ஓட்டுபவர்கள். அன்றும் இன்றும் இலங்கை அரசுடன் கள்ளத்தொடர்பினை வைத்து கொண்டு வாழ்பவர்களிற்கு நாங்கள் இணயாக இருக்க முடியுமா சாந்தனே பதில் கூறுங்கள்.– துரை
thurai
//சரி என வைத்துக்கொண்டாலும் சாதிபார்த்து விக்கப்படாத சாதிக்காரனுக்கல்லவா கொடுக்க வேண்டும்? ஏன் சிங்களவனுக்கு கொடுக்க வேண்டும்? இல்லையா?//சாந்தன்
தமிழர்களில் காணியற்ரவர்களிற்கு சாதிப்பாகுபாடின்றி காணிகளில் விட்டும் விற்ரும் இருந்தால் இந்த நிலமை வந்திராது. சாதித் துவேசிகளிற்கெதிராக குரல் கொடுக்க முடியாதவர்கள் தான், சிங்கள் அரசிற்கெதிராக இங்கிருந்து குரல் கொடுக்கின்றார்கள். அழிவது அங்குள்ள ஏழைகள் இவர்களல்ல. முள்ளி வாய்க்கால் முடிவல்ல இவர்களிற்கு ஆரப்பமே புலிகள் கூறுகின்றார்கள் அது சரியானதே.
தமிழர்களின் அடுத்த அழிவிற்கு வழிகாட்டியே இவர்களின் வாதங்கழும் கருத்துக்கழும்.– துரை
சாந்தன்
//…தமிழர்களில் காணியற்ரவர்களிற்கு சாதிப்பாகுபாடின்றி காணிகளில் விட்டும் விற்ரும் இருந்தால் இந்த நிலமை வந்திராது. சாதித் துவேசிகளிற்கெதிராக குரல் கொடுக்க முடியாதவர்கள் தான், சிங்கள் அரசிற்கெதிராக இங்கிருந்து குரல் கொடுக்கின்றார்கள்…..//thurai
நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. சாதித்துவேசத்தால் காணி வாங்கும் உரிமை மறுக்கப்பட்ட உள்ளூர்வாசிகளை விடுத்து ‘ராணுவம் வலிந்து பறித்து’ ”சமூக நீதியை நிலைநாட்ட” சிங்களவருக்கு ஏன் அக்காணிகளைக் கொடுக்க வேண்டும்? என்ன நியாயம் இது?
aras
எல்லா சமூகங்களிலும் சாதி இருக்கிறது. உலகத்திற்கே நாகரீகம் கற்று கொடுத்ததாக கூறும் வெள்ளையர்களிடையேயும் இருக்கிறது. பிரித்தானியப் பிரதமர் பதவிக்கு மக்கள் சாதி பார்த்து தான் வாக்களிக்கிறார்கள். நல்ல தலைவனாக இருந்தாலும் இங்கிலாந்தை சேர்ந்தவராக இல்லாவிடின் அவர் பதவிக்குவர முடியாதுள்ளது.
thurai
//பிரித்தானியப் பிரதமர் பதவிக்கு மக்கள் சாதி பார்த்து தான் வாக்களிக்கிறார்கள். நல்ல தலைவனாக இருந்தாலும் இங்கிலாந்தை சேர்ந்தவராக இல்லாவிடின் அவர் பதவிக்குவர முடியாதுள்ளது.//அராஸ்
அப்போ தமிழர்களில் ஆண்டாண்டு காலமாக தமிழர்களில் உயர்ந்தவர்களென்று தம்மைத்தாமே கூறி தமிழர்களிற்குத் தலைமை தாங்குவோரெல்லாம் நல்ல தலைவராக இல்லாததால் தான், ஈழத்தமிழர்களிர்கு இந்த அவலநிலைமையா?–
//நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. சாதித்துவேசத்தால் காணி வாங்கும் உரிமை மறுக்கப்பட்ட உள்ளூர்வாசிகளை விடுத்து ‘ராணுவம் வலிந்து பறித்து’ ”சமூக நீதியை நிலைநாட்ட” சிங்களவருக்கு ஏன் அக்காணிகளைக் கொடுக்க வேண்டும்? என்ன நியாயம் இது?//சாந்தன்
தாழ்த்தப்பட்ட சமூகத்தின்ரிற்கு இராணுவம் பறிக்கும் காணிகளை கொடுப்பதால் தமிழரே தமிழரைக் கொல்வதை இராணுவம் தூண்டி விடுவதாக அமையுமல்லவா?
நோய்க்கு மருந்து கொடுப்பதோடு மட்டுமல்ல, நோய்வருவதற்கான காரணங்களைக் கண்டறிந்து தடுப்பதே அறிவாளிகலின் செயல். சாதிப்பாகுபாடும் சமூக ஏற்ரத்தாழ்வுகழும் தமிழரிடையே உள்ளவரை தமிழரின் பிரச்சினைகளை யாராலும் தீர்க்கமுடியாது.– துரை
aras
இலங்கையில் நிலவும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணாதவரை எந்தப்பிரச்சனையும் தீராது.தமிழரிடையே உள்ள சாதியை ஆயுதங்களாலா தீர்க்க முடியும்.?
thurai
//இலங்கையில் நிலவும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணாதவரை எந்தப்பிரச்சனையும் தீராது.தமிழரிடையே உள்ள சாதியை ஆயுதங்களாலா தீர்க்க முடியும்.?//அராஸ்
ஆங்கிலேயர் ஆட்சியின்போதும், அதன் முன்பும் சாதிப்பிரச்சினை தமிழரிடம் இருந்துவந்தது. அன்னியர் கொடுத்த பதவிகளின் காரணமாக் ஆங்கிலத்தினை கற்று சிங்களவ்ரையும் தமிழர்களையும் அன்னியர் ஆளஉதவி புரிந்தனர் சில தமிழர்.
சிங்களவர் படிப்படியாக் தென்னிலங்கையில் தமிழர்களின் பதவிகளை பறிக்கும்போதே தமிழ் மொழியினை தமது உயிராக்கினர். தமிழ் பகுதிகளை தாங்களே ஆள வேண்டுமென்று எண்ணங்கொண்டவர்களின் கோசமே தமிழ் எங்கள் உயிரினிலும் மேல் என்பது. இவர்களிற்கு தமிழனினுள் கஸ்டப்படும், துன்பப்படும் ஏழை எளியவ்ர்கள் கண்களிற்குத் தெரியாது. தங்கள் பதவிகளிற்கும் புகழிற்குமே தமிழர்களை சிங்கள்வ்ர்களிற்கு
பலி கொடுத்தார்கள்.
கண்ணில் காணாத மொழிக்கும், இறக்கும்போது கொண்டு செல்ல முடியாத மண்ணிற்கும் காட்டும் அக்கறை தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவர் மீதும் காட்டியிருந்தால் அதுவே தமிழரின் விடுதலையின் பலமான அத்திவாரமாக அமைந்திருக்கும்.– துரை
சாந்தன்
//…தாழ்த்தப்பட்ட சமூகத்தின்ரிற்கு இராணுவம் பறிக்கும் காணிகளை கொடுப்பதால் தமிழரே தமிழரைக் கொல்வதை இராணுவம் தூண்டி விடுவதாக அமையுமல்லவா?…/
அப்போ தமிழர் சிங்களவரை கொல்லுவதற்கு ராணுவம் இச்செயல் மூலம் தூண்டி விடுகிறது என்கிறீர்களா? அவரசரப்பட்டு கீபோட்டில் கைவைக்காமல் ஒரு கனம் சிந்தியுங்கள். ஸ்ஸ்……தாங்க முடியவில்லை!!!
//…நோய்க்கு மருந்து கொடுப்பதோடு மட்டுமல்ல, நோய்வருவதற்கான காரணங்களைக் கண்டறிந்து தடுப்பதே அறிவாளிகலின் செயல். …//
மேலே நீங்கள் சொன்ன பதிலில் இருக்கிறதே இதற்குப்பதில்!
thurai
சாந்தன் மற்றும் சிங்களவர் வடபகுதியில் குடியேறுவதை எதிர்ப்பவ்ர்களிர்கு.
இன்னும் 10 வருடத்திற்கு புலிகள் இருப்பார்களாயின் யாழ்பாண்த்தில் தமிழர்களே இருந்திருக்கமாட்டார்கள். எத்தனை சிங்கள ராணுவ வீரர்களின் உயிர் அர்ப்பணிப்பினால் இப்போ யாழ் மக்கள் சந்தோசமாகவும், புலம்பெயர் மக்கள் ஆனந்த்மாகவும் வட பகுதியில் களிக்கின்றார்கள்.
அந்த சிங்கள இராணுவவீரர்களிற்கு மலர் வளையம் சாத்தியும், கால் கை துண்டிக்கப்பட்டோரிற்கு உதவிகள் வளங்கவும் தமிழர் கட்மைப்பட்டுள்ளனர். சரி முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளிற்காக இதனைச் செய்யாது விடுவோம்.
சிங்களவர்களிற்கு புலிகளை அழித்தமைக்கும் தமிழரை வாழவைத்தமைக்கும் நன்றி சொல்லகடமைப்பட்டுள்ளோம். இதனை ஏற்காதவ்ர்கள் புலிகளை திரும்பவும் வளர்த்தெடுத்து அதன் பின் வடபகுதியைப் கைப்பற்ரியபின் சிங்களவரை விரட்டவும்.– துரை
thurai
//அப்போ தமிழர் சிங்களவரை கொல்லுவதற்கு ராணுவம் இச்செயல் மூலம் தூண்டி விடுகிறது என்கிறீர்களா? அவரசரப்பட்டு கீபோட்டில் கைவைக்காமல் ஒரு கனம் சிந்தியுங்கள். ஸ்ஸ்……தாங்க முடியவில்லை!!!//சாந்தன்
முஸ்லிம்களை புலிகள் அவர்களது சொந்த நிலங்களிலிருந்து தெற்குக்குத் துரத்தும்போது சிங்களவ்ரைக் கேட்டா துரத்தினீர்கள். அங்கு அவர்களிற்கு என்ன ஒழுங்குகள் செய்து கொடுத்தீர்கள். சிங்களவ்ர்தானே ஏற்ராகள். அவ்ர்களை மட்டுமா தமிழர்க்ளையும்தான் ஏற்ரார்கள். எல்லோரும் காணிவாங்கிக் கொண்டா போனார்கள்.
யாராவ்து முஸ்லிம்கள் எதிர்க்கின்றார்களா? கொலைகாரப்புலிகளும் புலம்பெயர் புலியின் ஆதர்வாளர்கள் மட்டுமே. எந்த ஊரிலும் போய் வாழ்வோம், யாரின் பண்த்தினைப் பறிப்போம், தேவையெனின் உயிர்களையும் பறிப்போம். ஆனால் எங்கழூரில் ஒருவரையும் குடியேற விடமாட்டோம். இதுவே கொலைகாரப் புலிகளின் குணம் தமிழர்க்ழுடையதல்ல.– துரை
Rohan
இடம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமது சொந்தக் காணிகளில் வாழ அனுமதி இல்லை. புலி எதிர்ப்பே தமது மூச்சும் பேச்சுமாக இருந்து, ஏதோ புலி அழிந்தால் தமிழர்க்கு ஏற்றமும் மாற்றமும் வரும் என்று சாதித்த ‘மாற்றுக்கருத்தாளர்களின்’ மெளனம் காதைச் செவிடுபட வைக்கிறது.
thurai
//இடம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமது சொந்தக் காணிகளில் வாழ அனுமதி இல்லை. புலி எதிர்ப்பே தமது மூச்சும் பேச்சுமாக இருந்து, ஏதோ புலி அழிந்தால் தமிழர்க்கு ஏற்றமும் மாற்றமும் வரும் என்று சாதித்த ‘மாற்றுக்கருத்தாளர்களின்’ மெளனம் காதைச் செவிடுபட வைக்கிறது.//றோகன்
யாழ்பகுதியில் உள்ளவர்களை வன்னிக்கு அழைத்தபுலிகள் காணிகளையும் கொண்டா வரச் சொன்னார்கள். தங்களிற்குப் பாதுகாப்பிற்கு கொண்டு சென்று, காணிகளையும் இளக்கவைத்து உயிர்களையும் பலி கொடுத்தார்கள்.
இவர்களை ஊக்குவித்த , முன்னின்று வழிநடத்தியவர்கள் நாடுகடந்த தமிழீழ நாடகம் போடுகின்றார்கள். இவர்களால் மேலும் தமிழர்களிற்கு அழிவு ஆக்கமில்லை. -துரை
ragul
கலந்துரையாடல்: “யாழ் திரும்பியுள்ள சிங்கள மக்களின் மீள்குடியேற்றம்”
கடந்த யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் மீள்குடியேற திரும்பியுள்ளமை குறித்த ஒரு பகிரங்க கருத்துப் பகிர்வு
தலைமை நெறிப்படுத்தாளர்: சி.ராஜேஸ்குமார்
காலம்: 16.10.2010 சனி மாலை 4.00
இடம்: நாவலர் மண்டபம், நாவலர் வீதி, நல்லூர்
ஆர்வலர்கள் அனைவரும் வருக !
ஏற்பாட்டாளர்கள்: யாழ் ஆய்வறிவாளர் அணியம்,
த.பெ.இலக்கம் 165, யாழ்ப்பாணம்/// நன்றி தேனி
நந்தா
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் புலிகளால் துரத்தப்பட்டு அவர்களின் காணிகள் பிடுங்கப்பட்டு புலி வால்களுக்கும் மாவீரர்களின் குடும்பங்களுக்கும் புலிகளினால் கொடுக்கப்பட்டுள்ளதுடன் அவை சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளன. யு என் பி அரசு அதற்கு சம்மதித்துள்ளது. கண்காணிப்பாளர்கள் என்ற நோர்வே கும்பல்கள் கூட அதற்கு ஆதரவளித்துள்ளன.இன்று அந்த காணிகளைப் பெற்றுக் கொள்வதில் உண்மையான உரிமையாளர்கள் பல போராட்டங்களை நடத்ததுவதுடன் பல சட்டப் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
alan
Sinhala families in Jaffna: New land for the displaced — Chamikara Weerasinghe
All Sinhala families in IDP centres in Jaffna will be resettled. They will be given new land, Resettlement Minister Milroy Fernando yesterday promised 150 displaced Sinhala families living in makeshift tents at the Railway Station.
Minister Fernando told the families that he will brief to President Mahinda Rajapaksa about their problems. He assured them that they will get food, water and sanitary facilities and extra care from the Ministry during their stay in the IDP centre. He ordered Rs1,000 allowance be paid to every member of each displaced family.
Fernando told the Daily News, “ they have hitherto been paid Rs 200 and from now on they will be paid Rs1,000 .” ”I called the Essential Services Commissioner, the Jaffna District Secretary and other local authorities to ensure that they get enough supply of food and water,” said Fernando. As pointed out by some Sinhala families at the IDP centre, they were forced to live in the centre as their homes and lands have been occupied by others. They were chased out of their homes by the LTTE terrorists in 1983. They have been living in temporary shelters since then until they came to Jaffna recently to settle in their original homes.
Asked why that the returnees could not settle in their original homes, Minister Fernando said they have gone to Jaffna after 30 years. Their lands had been occupied by others since then. Asked if it was prolonged occupation by others or any legal matter that has led to the situation of Sinhala families having to live in IDP centres, Minister Fernando said there is no legal issue obstructing their rightful ownership to their properties.
DAILY NEWS
sivam
சிங்களவரின் வருகை பற்றி ராகவனின் கருத்து dantv.tv/arch_arasiyalkalam.html
Ajith
The real reason for the Sinhala visits to Jaffna:
A group of Sinhala visitors from South Sri Lanka on Saturday stormed into Jaffna Library while the All Ceylon Medical Association sessions were in progress. The group was from the Sinhala tourists who arrived Saturday in more than 30 buses at the main entrance of Jaffna Public Library. Despite a sign board in three languages – Sinhala, Tamil and English on display that no visitors will be allowed during the usual visiting hours (4:30 p.m to 6:30 p.m) due to the conference, the Sinhala visitors had demanded the security guard and the only unarmed policeman to allow them in, an eyewitness told TamilNet. Following heated argument the visitors smashed the sign board and overpowered the guard and stormed into the library where the seminar was in progress. The seminar which began Friday is to continue until Sunday.
மாயா
நான் நேற்று சுவிசில் வாழும் ஒரு சிங்களவரை சந்தித்தேன். அச்சு அசல் யாழ்பாணத் தமிழில் கதைத்தார். அவர் யாழ்பாணத்தில் பிறந்து ; யாழ் சிங்கள வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். அவருக்கு இப்போது வயது 45 – 50 இருக்கலாம். நான் அவரிடம் கேட்ட கேள்வி ” யாழ்பாணத்தில் இருந்த சிங்கள வித்தியாலயத்தில் எத்தனை பேர் உங்கள் காலத்தில் படித்தார்கள்?” என்பதே.
அவர் தந்த பதில் “500 க்கு அதிகமான மாணவர்கள் இருந்தார்கள்” என்பதே.
ஒரு குடும்பத்தில் 2 அல்லது 3 பிள்ளைகள் இருந்தாலும் ; எத்தனை குடும்பம் யாழ்பாணத்தில் இருந்தன என்பதை உணரலாம். சிலரது கருத்துகள் முரண்பட்டதாக இல்லை; ஆனால் மாற்ற முடியாத கருத்துகளாக வைத்துக் கொண்டுள்ளார்கள்.
கடந்த வாரம் புலிகளுக்கு ஆதரவான ஒரு பெரியவரை சந்தித்தேன். அவர் இந்தியா போய் இருக்கலாம் என்ற எண்ணத்தில் போய் மீண்டும் சுவிசுக்கு திரும்பி வந்தவர். அங்கே உள்ள நுளம்பு கடியால் தன்னால் அங்கு வாழ முடியாது என்றார். இலங்கைக்கு போய் வாழலாம். இப்போது புலிகளில் இருந்தவர்களே வந்து போகிறார்கள். அங்கே வாழத் தொடங்கியுள்ளார்கள் என்றேன்.
“எங்களுக்கு கீழ வேலை செய்த சிங்களவருக்கு கீழ் நாங்கள் போய் வாழ்வதா?” என கேள்வி கேட்டார். அவர் கடந்த காலங்களில் நல்ல உயர் தொழிலில் இருந்தவர். இவருக்கு கீழ் அநேக சிங்களவர்கள் பணியாற்றியுள்ளார்கள். தமிழ் – சிங்களம் – ஆங்கிலத்தில் நல்ல புலமை. அவரது எண்ணங்கள் இவை.
எனக்கு பக்கத்தில் இருந்த தமிழ் நண்பர் அவர் எமை விட்டு அகன்ற பின்னர் சொன்னார் ” ஐயாவுக்கு ஊரில் நல்ல வசதி. அங்க போய் நிம்மதியாக இருக்கலாம். இவர்கள் அந்தக் காலத்தில எங்களையும் மதிச்சவர்கள் இல்லை. ” என்றார்.
பலர் சமூகம் என்பதை விட தனிப்பட்ட கோப தாபங்களுக்காக அரசியல் செய்வோர். செய்பவர்கள். இவர்களை மாற்ற முயல்வது விரயம்.
சாந்தன்
//… ” யாழ்பாணத்தில் இருந்த சிங்கள வித்தியாலயத்தில் எத்தனை பேர் உங்கள் காலத்தில் படித்தார்கள்?” என்பதே. அவர் தந்த பதில் “500 க்கு அதிகமான மாணவர்கள் இருந்தார்கள்” என்பதே …//
இங்கே பிரச்சினை அதுவல்ல. மாறாக அவர்கள் (இருந்த 500 பேரும்) திரும்பி வரும் பட்சத்தில் அரசாங்கம் அவர்களுக்கு காணி கொடுக்க வேண்டுமா? இல்லை வேலை போட்டு கொடுக்க வேண்டுமா? அல்லது வீடு வாடகைக்கு பிடித்து கொடுக்க வேண்டுமா? அல்லது திரு.துரை சொன்னதுபோல தமிழரின் காணிகளை ராணுவ உதவியுடன் பறித்து ‘சாதிப்பிரச்சினையை ‘ போக்குவதற்கு கொடுக்க வேண்டுமா என்பதே?
அவ்வாறு நீங்கள் ஆம் எனும் பட்சத்தில் 1958, 1977, 1983 போன்ற கலவரங்களின் பின்னர் அதே போல ஸ்ரீலங்கா அரசு தமிழர்களிடம் நடந்து கொண்டதா?
thurai
//அவ்வாறு நீங்கள் ஆம் எனும் பட்சத்தில் 1958, 1977, 1983 போன்ற கலவரங்களின் பின்னர் அதே போல ஸ்ரீலங்கா அரசு தமிழர்களிடம் நடந்து கொண்டதா?//சாந்தன்
சிங்கள அரசாங்கம் இலவசமாகவும் பாதுகாப்புடனும் யாழ்பாணத்திற்குத் தமிழரை அனுப்பிவைத்தது. கலவரம் முடிந்தவுடன் காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு போகும் புகையிரதத்தில் யாழ்ப்பாண்த்தில் இருந்து ஏறுவோர் இருக்க இடம்கிடையாது.
தமது சொந்தப்பணத்தில் வாங்கிய அடிநோ மாறமுன்னரே தெற்கு நோக்கி புறப்பட்டனர். இதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் என்ன தொடர்பு? யாராவது போகாதீர்கள் எனத்தடுத்தீர்களா? தடுத்தாலும் அவர்கள் கேட்டிருப்பர்களா?– துரை
thurai
//“எங்களுக்கு கீழ வேலை செய்த சிங்களவருக்கு கீழ் நாங்கள் போய் வாழ்வதா?” என கேள்வி கேட்டார். அவர் கடந்த காலங்களில் நல்ல உயர் தொழிலில் இருந்தவர். இவருக்கு கீழ் அநேக சிங்களவர்கள் பணியாற்றியுள்ளார்கள். //மாயா
இப்படிப்பட்டவர்கள் தமிழரின் அரசியலைக் கையிலெடுத்ததாலேயே முள்ளிவாய்க்காலை தமிழர்களிண் முடிவு வாய்க்காலாக்கினர். இவர்கள் ஆங்கிலம் படித்து அன்னியவனிற்கு சேவை செய்வதை பெருமையாக கருதியவ்ர்கள். தமிழீழ விடுதலை, தமிழரின் உருமை என்று இவர்களின் வாயிலும் எழுத்திலும் வருவது தமிழரையும் உலகினையும் ஏமாற்ரி வாழ்வதற்கேயாகும். — துரை
மாயா
துரை சொல்தைப் படித்த போது எனக்கு என் தாத்தா சொன்ன ஒரு விடயம் நினைவுக்கு வந்தது. யாழ்பாணம் மற்றும் யாழ் தீவுப் பகுதியில் வந்தவர்கள் எல்லாம் ஆரம்ப காலத்தில் குடும்பத்தோடு சிங்களப் பகுதிக்கு வந்தவர்கள் இல்லை. குடும்பம் யாழ்பாணத்தில் இருந்ததால் ; அக்கம் பக்கம் இருந்த சிங்கள பெண்களோடு குடும்பம் நடத்தினார்களாம். அப்படிப் பிறந்த அவர்களது குழந்தைகள்தான் தமது வைப்பாட்டன் அப்பன்மாருக்கு கலவர காலங்களில் அடி போட்டவர்களாம். ஆரம்ப காலங்களில் எல்லாம் செய்துவிட்டு பின்னர் சொந்த மனைவியரை கொண்டு வந்து வாழ்வதை சகிக்க முடியாத ; அந்த குழந்தைகளே இவர்களுக்கு தர்ம அடி போட்டதாம். அதில் அப்பாவிகளும் மாட்டினார்கள் என்பார்.
அதை அப்போது என்னால் ஏற்க முடியவில்லை. இப்போது புரிகிறது? புலத்தில் ஒரு சிலர் தமது தங்கலுக்கு யாரையாவது மணமுடித்து ; பேப்பர் வந்த பிறகு இவர்களை விவாகரத்து செய்துவிட்டு ஊர் பெண்களை கட்டிக் கொண்டு வந்து குடித்தனம் செய்கிறார்கள். நல்ல காலம் இந்த மக்கள் அதை டேக் இட் ஈசியாக எடுத்துக் கொள்கிறார்கள். இல்லாவிட்டால் ஏகப்பட்டவர்களுக்கு தர்ம அடிதான்.
Ajith
“சிங்கள அரசாங்கம் இலவசமாகவும் பாதுகாப்புடனும் யாழ்பாணத்திற்குத் தமிழரை அனுப்பிவைத்தது.- துரை
தமிழரை ஏன் இலவசமாகவும் பாதுகாப்புடனும் அனுப்பியது என் துரை அவர்கள் விளக்கமாக கூறினால் நல்லாக இருக்கும். அவர்களுக்கு யாரிடமிருந்து பாதுகாப்பு தேவைப்பட்டது? ஏன் Colombo , இல் பாதுகாப்பான் இடம் இல்லையோ? யர்ர் தெரு தெருவாக பெட்ரோல் ஊற்றி தமிழர்களை கொளுத்தினார்கள்? யார் தேர்தல் வாக்கு இடாப்பை வைத்து தமிழரை தேடினார்கள்? கலவரம் என்று நல்ல தமிழில் சொல்கின்றீர்களே வெட்கபடுகிரீர்களா இனப் படுகொலை என்று சொல்ல கஷ்டப்படுகிறீர்களா?
“இவர்கள் ஆங்கிலம் படித்து அன்னியவனிற்கு சேவை செய்வதை பெருமையாக கருதியவ்ர்கள்” _ துரை
நீங்கள் ஆங்கிலம் படிக்கவிலைய ஆங்கிலத்தில் வேலை செயவில்லைய? உங்கள் பண்டரனையகே எங்கே படித்தார்? எங்கே பட்டம் பெற்றார்? என்ன மொழியில் படித்தார்? ஏன் அவருக்கு சின்ஹல மட்டும் சட்டம் தேவைப்பட்டது?
thuai
//தமிழரை ஏன் இலவசமாகவும் பாதுகாப்புடனும் அனுப்பியது என் துரை அவர்கள் விளக்கமாக கூறினால் நல்லாக இருக்கும். அவர்களுக்கு யாரிடமிருந்து பாதுகாப்பு தேவைப்பட்டது?//அஜீத்
புலிகள் தோன்று முன் யாழ்ப்பாணம் யாவருக்குமே பாதுகாப்பான இடம்தான். தெற்கில் சிங்களவர்களினால் பாதுகாக்கப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர்? எனவே சிங்களவர் அனைவரும் கொடியவர்களல்ல என்பதை ஏற்பீர்கள். முஸ்லிம்களை புலிகள் துரத்தும்போது எத்தனை முஸ்லிம்களை தமிழர் காப்பார்ரினர்?
சிங்கள அரசு தமிழர்களைக் காப்பாற்ரிய சிங்களவ்ர்களை தாக்கவில்லை. ஆனால் புலிகள் முஸ்லிம்களை யாராவது தமிழர் காப்பாற்ரியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் நீங்களே சொல்லுங்கள். புலியா? சிங்கள அரசா? நீதியானவர்களென்று.– துரை
Ajith
திரு துரை அவர்களே,
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருகிரீர்களே?
தெற்கில் சிங்களவர்களினால் பாதுகாக்கப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர்? _ Thurai
தெற்கில் சிங்களவர்களினால் கொல்லபட்டவர்கள் எத்தனை பேர்?
வடக்கில் தமிழரால் கொல்லப்பட்ட சின்ஹலவர், முஸ்லிம்கள் எத்தனை பேர்?
எனவே சிங்களவர் அனைவரும் கொடியவர்களல்ல என்பதை ஏற்பீர்கள்? – Thurai
ஆம். ஆனால் சின்ஹல அரசுகள் எல்லாம் கொடியவை? பெரும்பாலான சின்ஹல மக்களும் கொன்றர்வர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். சின்ஹல அரசின் பாதுகாப்பு படைகள் என்ன செய்தார்கள் தமிழர்களை கொல்லும்போது? இதுவரை எத்தனை கொலைகாரர்கள் சட்டத்தின் முன் நிருதப்படர்கள்?
சிங்கள அரசு தமிழர்களைக் காப்பாற்ரிய சிங்களவ்ர்களை தாக்கவில்லை . ஆனால் புலிகள் முஸ்லிம்களை யாராவது தமிழர் காப்பாற்ரியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் நீங்களே சொல்லுங்கள். புலியா? சிங்கள அரசா? நீதியானவர்களென்று.– துரை
ஆனால் சிங்கள அரசு தமிழர்களைக் கொன்ற சின்ஹலவர்களையும் தாக்கவில்லை, தடுக்கவில்லை, சட்டத்தின் முன் நிறுத்தவில்லை. ஏன் என்பதை விளக்குவீர்களா?
புலிகள் என்ன செய்திருப்பார்கள் என்பதை விட, சின்ஹலவரும் சின்ஹல அரசும் செய்ததை ஏன் ஏற்க தயங்குகிறீர்கள்? ஒரு அரசாங்கம் எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாத அப்பாவி மனிதர்போல் இருகிறீர்கள? இங்கே புலிகளை இழுக்காமல் உங்களால் உங்கள் சின்ஹல அரசை நியபடுத்த முடியுமா? நீங்கள் சொல்வதை பார்த்தால் ஒரு அரசு மக்களை கொல்வதும், மக்கள் உடமைகளை அழிப்பதும் தான் அதன் கடமை என்றல்லவா இருக்கிறது. சின்ஹல அரசின் காலத்தில் தான் யாழ் நூலகம் எரியூடபட்டது. சின்ஹல அரசால்தான் தமிழாராச்சி மகாநாட்டில் மக்கள் கொல்லப்படர்கள்.
ஜெயராஜ்
சிங்கள அரசை வசைபாடியோ புலிகளை புகழ்பாடியோ பிரச்சினை தீர்க்கமுடியாது. சத்தியாக்கிரகத்தில் இருந்த கரும்புலி வான்புலி தாக்குதலும் நடத்தியாகிவிட்டது ஆனால் தீர்ந்ததா பிரச்சினை. புலிகள் இருந்த காலத்தில் சிங்களம் பயந்தது, இப்போ அப்படி இல்லை என்றால் புலிகள் இருந்தகாலத்தில் தமிழர்களும் வாய் மூடிமெளனமாகவே இருந்தார்கள் காரணம் பொட்டு வைப்பார்கள் என்று. இன்று அந்த நிலைமையில்லை இதை நீடித்து தீர்வு காண்பதே மேல் அதைவிட்டுவிட்டு பழைய சிங்களம் சிங்கள அரசு தமிழர் தம்மை தாமே ஆளப்பிறந்தவர்கள் என்று வெற்றுக்கோசம் இடுவதால் அந்த மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்காது சிங்கள அரசு புனிதம் என்று அர்த்தம் இல்லை இப்போ புலிக்கொடியோ செங்கொடியோ சிங்க கொடியோ அல்ல பிரச்சினை முதலில் அவர்கள் நிம்மதியாக வாழட்டும்.– ஜெயராஜ் பிரான்ஸ்
மாயா
Stop the war என்றவர்கள் Start the war என்கிறார்களா?
thurai
//புலிகள் என்ன செய்திருப்பார்கள் என்பதை விட, சின்ஹலவரும் சின்ஹல அரசும் செய்ததை ஏன் ஏற்க தயங்குகிறீர்கள்? ஒரு அரசாங்கம் எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாத அப்பாவி மனிதர்போல் இருகிறீர்கள? //அஜீத்
சிங்கள அரசுசெய்வதை கேட்பதற்கு தமிழர்கள் எல்லோரையும் தமிழர்களாக நேசித்த ஒரு தமிழ்தலைவனை இங்கு முன்மொழியவும். அது மட்டுமல்ல தமிழரைத் தமிழராக மதிக்கத் தெரியாதவர்கள் சிங்களவரிடம் என்ன உருமை கேட்கின்றார்கள் என விளக்கவும். தமிழர்கள் தாம் ஒரு இனமென்று கூறி சிங்களவரை எதிர்ப்பதற்கு என்ன தகுதியில் உள்ளார்கள்? எல்லோரும் தமிழ பேசுபவர்கள் என்பது மட்டும் போதுமா? சிங்கள அரசில் குற்ரம்காணுமுன் தமிழரினுள் வாழும் தமிழரால் பிழைப்பு நடத்துவோரை கண்டறியுங்கள். இதுவரை களை எடுப்போம் எனத்தொடங்கி துரோகிகளாக்கி புலிகளால் கொல்லப்பட்டவர்களிற்கு இதுவரை நீங்கள் கூறிய ஆறுதலென்ன? அல்லது வாயை மூடி மவுனம் சாதித்தீர்களா? தமிழரால் தமிழரே கொலைச்ய்யப்படுவதை 30 வருடமாக பார்த்து ரசித்த உங்களிற்கெல்லாம் இப்போ தமிழரிடம் திடீரென என்ன அக்கறையென்பதை முதலில் கூறுங்கள்.– துரை
மாயா
கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களான வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் உள்ள இரணுவ சோதனை சாவடிகள் உட்பட அனைத்து சோதனைச் சாவடிகளும் நீக்கப்பட உள்ளன.
இந்நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் ஆகின்றன. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் உள்ள சோதனைச் சாவடிகள் உடனடியாக அகற்றப்படுகின்றன என்றும் ஏனைய இடங்களில் உள்ளவை படிப்படியாக அகற்றப்படும் என்றும் இராணுவ பேச்சாளர் மேயர் ஜெனரல் உதய மெதவெல தெரிவித்துள்ளார்.
சாவடிகளுக்குப் பதிலாக நவீன முறையிலான கண்காணிப்பு நடவடிக்கைகள் இருக்கும் என்றார்.
-News
மாயா
சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதனை எவராலும் தடுக்க முடியாது: கீதபொன்கலன்
—————————————————————-
யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் தங்கியிருந்ததாகவும், சிங்கள மகாவித்தியாலயமொன்று காணப்பட்டதாகவும் அதனால் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதனை எவராலும் தடுக்க முடியாது என கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் பீட பீடாதிபதி கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யுத்த நிறைவின் சுதந்திரத்தை மக்கள் அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். லக்பிம சிங்கள பத்திரிகைக்கு அளித்த விசேட நேர்காணலின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மீள் குடியேற்றப்பட்ட மக்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் பிரயோகித்து வரும் அழுத்தங்கள் தளர்த்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மக்கள் அதிகளவு வளப்பற்றாக்குறையை எதிர்நோக்கவில்லை எனவும் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதேச மக்களுக்கு போதியளவு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் தங்கியிருந்ததாகவும், சிங்கள மகாவித்தியாலயமொன்று காணப்பட்டதாகவும் அதனால் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதனை எவராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அரசாங்கத்தின் அனுசரணையுடன் அரசாங்கத்தின் தேவைக்காக சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் குடியேற முனைப்பு காட்டினால் அது ஆரோக்கியமான நிலைமையாக கருதப்பட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களவர்களைப் போன்றே முஸ்லிம்களும் இடம்பெயர்ந்ததாகவும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளின் போது அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சிறுபான்மை மக்கள் தொடர்பில் கரிசனை காட்டி வருவதாக வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் இவ்வாறான ஓர் பின்னணியில் மட்டுமே தமிழ் புலம்பெயர் மக்கள் வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய முன்வருவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் திருத்தங்களின் மூலம் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக இந்திய வம்சாவளித் தமிழர்களும் முஸ்லிம்களும் நாடு முழுவதிலும் வியாபித்துள்ளதாகவும் புதிய தேர்தல் முறைமையினால் அவர்களின் பிரதிநிதித்துவம் அற்றுப் போகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தீர்வு வழங்க வேண்டும் எனவும், தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-News
BC
//மாயா- Stop the war என்றவர்கள் Start the war என்கிறார்களா? //
உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என்றார்கள். நிரந்தர போர் நிறுத்தமே வந்துவிட்டது.