யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை

0010.jpgபுனர் வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகராவின் ஆலோசனைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் 272 மில்லியன் ரூபா செலவில் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் 1000 கைதிகள் தங்கக் கூடிய வசதி கொண்ட புதிய சிறைச்சாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

Show More
Leave a Reply to கருணா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    சிறைச்சாலைக்குள் இன்னொரு சிறைச்சாலையா?

    Reply
  • பல்லி
    பல்லி

    திறந்தவெளி சிறைசாலையாக இருக்காவிட்டால் சரிதான், காரனம் இதைதான் புலிகள் பல ஆண்டுகள் செய்தார்கள். அரசுமா என மக்கள் ஏக்கபட கூடாதல்லவா??

    Reply
  • கருணா
    கருணா

    //தமிழ்வாதம் on September 9, 2010 2:11 pm

    சிறைச்சாலைக்குள் இன்னொரு சிறைச்சாலையா?//

    பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்குடன் நடத்தப்படும் படையினர் – பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் தலைமையகமும் யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கமும் இணைந்து இச்சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்துள்ளன.இதில் அதிதிகளாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சனத் ஜெயசூரிய, பிரிகேடியர் பிராங்ளின் ரொட்ரிகோ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இச்சுற்றுப்பேட்டியில் 22 அணிகள் பங்குபற்றின. இவற்றில் 18 அணிகள் யாழ் மாவட்ட விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்தவையாகும். ஏனைய 4 அணிகள் இராணுவம் கடற்படை விமானப் படை மற்றும் பொலிஸ் ஆகியவற்றைச் சேர்ந்தவையாகும்.இறுதிப்போட்டிக்கு யாழ். ஜொனியன்ஸ் அணியும் விமானப்படை அணியும் தகுதி பெற்றுள்ளன. இத்தொடரில் சம்பியனாகும் அணிக்கு 30 ஆயிரம் ரூபாவும் இரண்டாவது அணிக்கு 20 ஆயிரம் ரூபாவும் மூன்றாவது அணிக்கு 10 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன. இச்சுற்றுப்போட்டி தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு நேற்று முற்பகல் 10 மணிக்கு யாழ். மாவட்ட பாதுகாப்புப் படையினரின் மக்கள் தொடர்பாடல் நிலையத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

    Reply