TNA MP பி. பியசேன அரசியல் யாப்பு திருத்தத்திற்கு ஆதரவு

jj.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன அரசியல் யாப்பு திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக சற்றுமுன்பு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    ஒரே நாடு, ஒரே இனம், ஒரே கொடி என்கிற மகிந்தவின் மன்னராட்சி, கிட்லரின் சர்வாதிகாரத்தை மேவியபடி போகிறதைப் பற்றி தேசத்தில் யாரும் பேசவில்லை, ஏனெனில் இவர்கள் இன்னமும் புலி வாலைப் பிடித்தபடி காலம் களிக்கிறார்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    ஒரே தேசம், ஒரே இனம் ஒரே கொடி, ஒரே பார்வை நல்லதுதானே? இலங்கை வாழ் அனைவருக்கும் ஒரேவிதமான நடைமுறை இருந்தால் அலகுகள் எதற்கு? சுளகுகள் எதற்கு?

    ஏற்கனவே எழுதியாகிவிட்டது:

    // தமிழர்களைப் போல் இனவாதிகள் இருக்கும் போது, சிங்களவர்கள் போன்ற இனவாதிகளும் இருந்தே ஆவார்கள். எனவேதான் உங்களைப் போன்றவர்களை , அதாவது ஆங்கில வல்லுனர்கள் சொல்வதை புரிந்து கொள்ள, ராசபக்சவால், ஆங்கில கல்வி முறை விரைவில் அமுலுக்கு வர இருக்கிறது. இதில் என்ன நன்மை தெரியுமா? சிங்களவன் விரும்பாவிட்டால், தமிழ் படிக்கவும் தேவையில்லை. தமிழன் விரும்பாவிட்டால் சிங்களம் படிக்கவும் தேவையில்லை. இருவரும் பொது மொழியாக ஆங்கிலத்தை கற்கலாம். அடுத்து என்ன? சிங்களவனுக்கும் தமிழனுக்கும் உரையாட ஒரு பொது மொழியுண்டு. அதனால் அரசியல்வாதிகளது கோசங்கள் மறையும். உலகத்தோடு நாளைய சமுதாயம் பயணிக்கவும் வாய்ப்பு உருவாகும். அரசியல் புளுகர்களது பருப்பு எதிர்காலத்தில் வேகாது. இந்த மாற்றங்களுக்காகவேனும் மகிந்த இன்னும் 10 வருடம் அதிபராக (ஏகாதிபதியாக) இலங்கையை ஆளுதல் வேண்டும். சிங்கை அதிபர் லீக்குவான்யு ஆண்டதும் இப்படித்தான். எதிர்த்தவன் ஆதவனையே பார்த்ததில்லை. ராசரத்தினத்தை தவிர?……. பிரபாவும் இதையேதான் செய்தான். வன்னி கடும் சிறை அடிமை வாழ்வை விட , மகிந்தவின் 18 ஆவது அரசியல்யாப்பு திருத்தம் தமிழருக்கு தீங்கு விளைவிக்காது. 5 வருட யுத்தம்: 5 வருட அரசியல் போராட்ம் ; இனி வருவது மாபெரும் மாற்றமாக இருக்கும்.

    மகிந்த ஆட்சியில் செத்து மடிவர் எனச் சொன்ன தமிழர் சிரித்து மகிழ்கின்றனர். எதிர்காலத்தில் வன்னியும் வளம் கொழிக்கும் நிலமாக மாறும். சந்திரிகா ஆட்சியில், அவர் செய்தது குடித்ததும், கூத்தாடினதும்தான். மகிந்த ஆட்சியில் ஏகப்பட்ட மாற்றங்கள். நட்டவன் அறுவடை செய்வதில்லை. அடுத்த சந்ததி மகிழ்வாக வாழும். பண்டாவும் , JRம் , பிரபாவும் தந்த வடுக்கள் உடன் மாறாது. அதற்கு காலம் எடுக்கும் .

    http://thesamnet.co.uk/?p=22082#comments//

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    மாயா! மனித சுதந்திரத்தை மறுதலித்து, மன்னர்கள் வாழ்ந்தார்கள், சர்வாதிகாரிகள் வந்தார்கள். கவிகளாகவும், கவிபாடிகளாகவும், கூலிக்கு மாரடிப்போராகவும் சிலர் வரலாறு சொல்வர். மனிதம் மீண்டும் இவர்களை வாழவைக்காது. பிரபாகரன் செய்வது எல்லாம் சரியென்கிற சிந்தனைதான் தமிழரை வீழ்த்தியது போல், மகிந்தா செய்வதை ஏற்றுக் கொள்வது சிங்களவரையும் வீழ்த்தும். இன்னொரு தேசிய இனத்தை அடிமைப்படுத்துகிற மற்றைய தேசிய இனம் சுதந்திரமாக வாழாது என்பது வரலாறும், வரையப்பட்ட தத்துவமும் ஆகும்.

    Reply
  • anparsu.a
    anparsu.a

    எல்லாரும் மகிந்தவை திட்டுவதன்மூலம் நியாவாதியாக ஆசைப்படுகிறார்கள். ஆகட்டும். ஆனால் ஏன் திட்டுகிறார்கள் அரசியலமைப்பின் மாற்றம் என்ன? இது மக்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சொல்லிவிட்டு கிட்லர் முசோலினி என்றால் நாமும் சேர்ந்து ஒருபிடி பிடிக்கலாம். ப்ளிஸ்.;

    Reply
  • chandran.raja
    chandran.raja

    அன்பரசு! தமிழன் என்றால் அவனுக்கென்றுறெரு தனிக் குணம் உண்டு. ஜனாதிபதியாக இருக்கட்டும் கட்சியாக இருக்கட்டும் அல்லது கட்டுரையோ அல்லது பின்னோட்டமாக இருக்கட்டும் எப்பொழுதும் தேவைகளைவிட தன்முகம் தெளிவாக ஜொலிக்க வேண்டும் என்பதில் தன்னை முதல் அடையாளப் படுத்திக் கொள்ளுவான். இதில் முன்னுக்கு என்ன நடந்தது. பின்னுக்கு என்னநடந்தது என்பதைப் பற்றி கேள்விக்கே இடம் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் தமிழ்மொழியை பேசுபவர்களைகூட அவர்கள் தமிழர்களாக அங்கீகரிக்க மாட்டார்கள். தமிழர்கள் யார் என்பதைப் பற்றி கேள்வியையே அவர்கள் தன்னைத்தானே இதுவரை கேட்டதில்லை.தெரிந்ததெல்லாம் குண்டுசட்டி குதிரைஓட்டம். கிட்டலர் என்னசெய்தான் மகிந்தாராஜபக்சா என்ன செய்தார் என்பதைப் பற்றிய விபரம் கண்முன்னால் இருந்தும் இதை சொல்லத்துணியவில்லை என்றால் இவர்கள் சிந்தனை எப்படிபட்டதாக இருக்கும்?. இதில் குறுக்கிச் சொல்லவதாக இருந்தாலும் ஒருவன் உலகயுத்தத்தை தொடக்கிவைத்தான். அடுத்தவன் நீண்டுபோன உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தான்.

    மாற்றம் அடையாமல் இருந்த சட்டத்தில் தான் ஐந்து இனக்கலவரங்களும் முப்பது வருடஉள்நாட்டு யுத்தமும் நடந்து முடிந்தது என்பது தமிழ்வாதத்திற்கு தெரியாது என்பதல்ல. அதை புரிந்து கொள்ள தமிழ்வாதத்தின் தமிழ்பண்பாடு தடுக்கிறது. சட்டமும் ஏதோ ஒருவகையில் பேப்பரில் வடிவமைக்கப் பட்டவைதான். அமெரிக்காவின் “உலகமக்களின் பொதுநலன்கள்” மாதிரி. இங்கு பாதிப்பு அடைவதற்கு ஒன்றுமே இல்லை. நாட்டுமக்களின் விருப்பதின் பெயரிலேயே அமோக ஆதரவைப் பெற்று தேர்தலில் ஜனாதிபதியானார். அதில் வந்த பாராளுமன்ற பிரதிநிதிகள் ஊடாகத்தானே! பாமரமக்களுக்கு புரியாத சட்டம் மாற்றப்படுகிறது. அந்தபாமர மக்களே! அதற்கு பொறுப்பானவர்கள். தமது வாழ்விற்கு சங்கடம் வரும்போது அதை இறக்கி வைப்பதற்கான வலிமையையும் பெறுவார்கள். இந்த வாதத்தையாவது தமிழ்வாதம் ஏற்றுக் கொள்ளவேண்டும். நடந்து முடிந்ததும் சட்டப்படிதான் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    அன்பரசுக்கு!
    வல்லடி வாதங்களைத் தவிர்க்க, படிக்க முயற்சிப்பவர்களின் பார்வைக்கு கீழ்வரும் இணைப்பு உதவும். இதைத் தமிழன் எழுதவில்லை.

    http://www.groundviews.org/2010/09/02/the-18th-amendment-to-the-constitution-process-and-substance/

    Reply