நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவில் நேற்று வரலாறு காணாத ஜன சமுத்திரம்

nallur01.jpgநல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நேற்று 7ம் திகதி நடைபெற்ற போது பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர்த்திருவிழா நேற்று அதிகாலை ஆரம்பமானது. தேர்த்திருவிழாவினைக் காண யாழ். குடாநாட்டில் இருந்தும் தென் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் வருகை தந்திருந்தனர். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரும் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.

Show More
Leave a Reply to pandithar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பல்லி
    பல்லி

    மக்கள் மகிழ்ச்சியில் இருப்பதால் சிலகாலம் பகுத்தறிவு ஓய்வெடுக்கட்டும் தப்பில்லை; நல்லூர் கந்தனுக்கு எமது??

    Reply
  • pandithar
    pandithar

    உண்ணா நோன்புக்கு
    திலீபனை தின்னக்கொடுத்த
    திடலின் துடக்கு
    முள்ளி வாய்க்காலில்
    கழிந்து போனது…

    வேரறுக்கும் உட்பகையால்
    நலிந்து வீழ்ந்தவரை
    வேலெடுத்து வெற்றி கொண்டதால்
    வேலவன் திருவுருவம் காண
    நல்லூர் திடல் நிரம்பி வழிந்தது.

    இனி …
    தமிழர்கள் கோவணத்துடன்
    திருவோடு கொண்டு
    தெருக்களில் அலையாமல்

    கிடைப்பதை எடுத்துக்கொண்டு
    இன்னும் எடுப்பதற்கு நிமிர்வோம்
    வாருங்கள்…

    காத்திருப்புக்கள் தருவது
    ஏமாற்றங்களை….

    Reply