கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை: பயிற்சி நிலையம் ஆரம்பம் 1500 யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு

workers.jpgகிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1500 யுவதிகளுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடடிவக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதற்கமைய ட்ரைஸ்டார் நிறுவனம் கிளிநொச்சியில் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதுடன் எதிர்வரும் 13ம் திகதி பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனியார் ஆடைத் தொழிற்சாலையில் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 80 யுவதிகளுக்கும் கொழும்பில் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் ஐம்பது மில்லியன் ரூபா செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட வுள்ளது. முதற்கட்டமாக தேர்ந்தெடுக்க ப்பட்ட 80 யுவதிகளுக்கு பயிற்சி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இரத்மலானை யிலுள்ள ட்ரைஸ்டார் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

மூன்று மாத காலம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. உணவு, தங்குமிட வசதிகளுடன் மாதமொன்றுக்கு ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது என்று ஆளுநர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுத்த வேண்டு கோளுக்கமைய இந்த தொழில் வாய்ப்பை வழங்க மேற்படி நிறுவனம் முன்வந்துள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைக்கு அடிக்கல் நடப்படவுள்ள துடன் அங்கு ஆரம்பிக்கப்படவுள்ள பயிற்சி நிலையத்திற்கு 50 தையல் இயந்திரங்களும் வழங்கப்படவுள்ளன.

தொழிற்சாலை அமைக்கப்படும் இடம் தொடர்பாக இரு தரப்பினரும் இன்னும் ஓரிரு தினங்களில் கலந்து ஆலோசித்து இவ்வார இறுதிக்குள் உரிய தீர்வை காணவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை ஏனையோ ருக்கு கிளிநொச்சியிலேயே பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு தொழிற் பயிற்சி வழங்குவதன் மூலம் இந்தப் பிரதேச மக்களுக்கும் மேலும் ஊக்குவிப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • aras
    aras

    விவசாய நிலங்களோடு பிணைக்கப்பட்டு உழைத்து தலைநிமிர்ந்து வாழ்ந்த மக்களை வெறும் உடல்உழைப்பை முதலாளிகளுக்கு விற்கும் ஏதுமற்றவர்களாக ஆக்கும் முயற்சி! விவசாய பூமியில் எதற்கு இந்த முயற்சி?

    Reply
  • nantha
    nantha

    புலிகள் விவசாயத்தில் தன்னிறைவுடன் வாழ்ந்த மக்களை “கையேந்தி” பிச்சைக்காரர்கள் ஆக்கியுள்ளனர். இந்தநிலயில் 1500 பேரை சட்டை தைக்க விடுவதனால் பாதிப்புக்கள் இருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்!

    Reply
  • மாயா
    மாயா

    கடந்த 30 வருடங்களாக குண்டுகள் பயிரிடப்பட்டன. அப்போது விவசாய நிலமாக aras உணரவில்லை? இப்போது மட்டும் உணர்ந்திருக்கிறார்கள். நீங்கள் வழி காட்டுவதும் இல்லை , வாழ வழி காட்டுவோரை விடுவதும் இல்லை. இதைத்தான் சாகவும் விடாமல் , வாழவும் விடாமல் செய்யும் தமிழனின் குணம்? ஏகப்பட்ட நிலங்கள் வன்னியில் உள்ளது. நான் கடந்த மாதம் போய் வந்த போது காண முடிந்தது. கட்டுநாயக்காவில் ஆலைகள் இருக்கின்றன. அங்கே வீடுகளும் உண்டு. சில வயல்களும் உண்டு. புணர்வாழ்வு பெற்று வெளிவரும் இளைஞர்கள் – யுவதிகள் பணத்துக்காக திருடி , கொலை செய்து வாழும் நிலை ஊதியம் கிடைப்பதால் மாறும். அதனோடு அவர்களது குடும்பமும் வாழும் . புலிகள் தொழில் பயிற்சிகளை எந்த இளைஞருக்கும் கொடுக்கவில்லை. கொலைப் பயிற்சியை மட்டுமே அளித்தார்கள் நீங்கள் நாளை ஊருக்குப் போனாலும் உங்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்க கொலைதான் அவர்களால் செய்ய முடியும்? அதை தவிர்க்க இது போன்ற தொழில் வாய்ப்புகள் அத்தியாவசியமானது.

    நீங்கள் ஏதாவது செய்துள்ளீர்களா, அவர்கள் வாழ்வுக்காக?

    Reply
  • aras
    aras

    1500 பேரோடு இது முடிந்து விடப் போவதில்லை. எப்படி சிங்கள பெண்கள் சுதந்திரவலயத்தில் “வறுகி” எடுக்கப்படுகின்றார்களோ அதே நிலையை தமிழ்ப் பெண்களுக்கும் ஏற்படுத்துகின்றார்கள். பல இடங்களில் இந்த தையல் வேலைக்கு பெண்கள் கொண்டு செல்லப்படுவதை மக்கள் முறியடித்துள்ளதை நீங்கள் அறியவில்லையா? மக்களுக்கு எப்படிப்பட்ட பிழைப்பு வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். பாதை ஓரங்களில் மக்களை கூடாரங்களில் எறிந்து விட்டு கண்துடைப்புக்காகவும் தங்கள் இலாபத்திற்காகவும் எடுக்கப்படும் மக்கள் விரோதிகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். நாம் வாழுவோம். எம்மை சுற்றி வளைத்துள்ள இராணுவம் வெளியேறுக!

    “நீங்கள் ஏதாவது செய்துள்ளீர்களா, அவர்கள் வாழ்வுக்காக”//
    உங்களைப் போல் இதுவரை அதிகாரத்திற்கு ஜால்ரா போடவில்லை. புலியை வைத்துக் கொண்டு குறுகிய நோக்கில் எமது பிரச்சனையை பார்க்கவில்லை. தெருவில் வீசப்பட்டுள்ள மக்களுக்கு துரோகம் நினைக்கவில்லை.

    Reply
  • சுகுணகுமார்
    சுகுணகுமார்

    /உங்களைப் போல் இதுவரை அதிகாரத்திற்கு ஜால்ரா போடவில்லை. புலியை வைத்துக் கொண்டு குறுகிய நோக்கில் எமது பிரச்சனையை பார்க்கவில்லை. தெருவில் வீசப்பட்டுள்ள மக்களுக்கு துரோகம் நினைக்கவில்லை.//

    அப்ப புலிக்கு நீங்கள் போட்டது பல்ட்டியோ? தலைவரை காக்க 3 லட்சம் தமிழர்களை பிணைக்கைதிகளாக கொண்டுபோய் சிப்பிலி ஆட்டிப்போட்டு என்ன மனச்சாட்சியோடை இங்கை வந்து எழுதுகிறீர்கள்.

    Reply
  • BC
    BC

    போகின்ற போக்கை பார்த்தால் வெளிநாட்டில் இருந்து உத்தரவே பிறப்பிப்பார்கள் இலங்கையில் உள்ளவர்கள் என்ன வேலைக்கு போகலாம், என்ன வேலைக்கு போக கூடாது என்று.

    Reply
  • aras
    aras

    அப்ப புலிக்கு நீங்கள் போட்டது பல்ட்டியோ?”//
    என்ன ஆதாரத்தில் நான் புலி என எழுதுகிறீர்கள்? அரசை எதிர்த்தால் நான் புலி ஆதரவாளா? புலி கொல்லிப் போட்டுது புலி அழிச்சுப் போட்டுது என எழுதுகிறீர்களே 58ம் ஆண்டில் இருந்து இந்த சிங்கள அதிகாரம் தமிழ் மக்களுக்கு என்ன செய்தது? அது செய்ததெல்லாம் சரியாகி விடுமா? உங்களுக்கு புலிதான் பிரச்சனை. உங்களுக்கு அதிகாரத்தின் துணையோடு உங்கள் பணத்தை கட்டடஙகளிலும் தொழில்களிலும் முதலீடு செய்து கொழுக்க வேண்டும். அதற்கு ஏற்றாற் போலத்தானே நீங்கள் கருத்து சொல்வீர்கள். பாவப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

    Reply
  • கருணா
    கருணா

    கேட்டா உடனை 58இற்கு போய்விடுவியள். எங்கடை தமிழ் சுத்துமாத்து தேசிய அரசியல் தான் சிங்கள தேசியத்தை வளர்த்தது. ஒரு பிரச்சனைக்கு இன்னுமொரு பிரச்சனையை வளர்த்த தமிழ் கட்சிகளும் இந்த இனவாத வளர்ப்புக்கு ஒரு காரணம். சிங்கள பேரினவாதத்தை வளர்த்ததே தமிழ் தேசியம் தான். 1987இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒரு பாதுகாப்பான ஒப்பந்தம். அதை சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து கெடுத்தது புலிகள் தான். எனவே புலிகள் தான் இங்கு பெரிய பிரச்சனை. கிடைத்த சந்தர்ப்ங்கள் எல்லாவற்றையும் கிடாசி விட்டு சிங்களவன் தரேல்லை தரேல்லை என்று அப்பாவித்தனமா குற்றம் சாட்டுவதை முதலிலை நிற்பாட்டுங்கோ.

    வன்னியிலை விவசாயம் நீங்கள் நினைக்கதை விட தற்போது நன்கே நடைபெற ஆரம்பித்துள்ளது. ஆனால் ஒரு 1500 பேருக்கு வேலை கொடுக்கும் உற்பத்தி நிலையம் வந்தால் அது இன்னமும் அந்த மக்களின் வாழ்க்கைக்கு உரம் கொடுக்கும். அரசாங்கம் தற்போது விதை நெல்லு தண்ணியிறைக்கும் மெசின் போன்ற உபகரணங்களையும் கொடுத்தது தெரியாதா?

    Reply
  • மாயா
    மாயா

    //நாம் வாழுவோம். எம்மை சுற்றி வளைத்துள்ள இராணுவம் வெளியேறுக!//
    நடக்கிற காரியம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் .

    //தெருவில் வீசப்பட்டுள்ள மக்களுக்கு துரோகம் நினைக்கவில்லை.//

    என்னதான் செய்யப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள். அதையாவது கேட்போம்.

    ஆனால் ஒன்று , வெளிநாடுகளில் உள்ளவர்களது போராட்டம் எல்லாம் வெறும் கண் துடைப்பு நாடகம் என்பதை அந்த மக்கள் உணர்ந்துள்ளனர். வெளிநாட்டில் வாழ்வதற்காகவும் , தம்மை உயர்த்திக் கொள்ளவும் பகடைக் காய்களாகிப் போனதை அந்த மக்கள் இப்போது நன்றானக உணர்ந்தேயுள்ளனர். தவிரவும் முன்னர் போல் அவர்கள் இல்லை, வெகு சமயோசிதமாக நடந்து கொள்கிறார்கள். புலி ஆதரவாளர்களோடு புலி போலவும், புலி எதிர்ப்பாளர்களோடு புலி எதிர்ப்பு போலவும் நடந்து கொள்கிறார்கள். கொஞ்சம் இருந்து மனம் விட்டு வன்னி மக்களோடு பழகிய போது, எந்தப் புத்தில எந்த பாம்பு இருக்கு என்று யாருக்கு தெரியும். இப்ப தேவை உயிர் வாழ்வது மட்டும்தான் என்கிறார்கள். ஈழத்தை நேசித்தவர்களால் என்னதான் பெற முடிந்தது? கடைசியில் புலிகள் இருந்த சொத்து சுகங்களையும் யாருக்கும் கிடைக்கப் பண்ணாமல் எரித்துப் போட்டே செத்தார்கள். எதிர்கால சந்ததிக்காக ஒரு நாடு என்று சொன்னார்கள். கடைசியில் இருந்த சந்ததியையே அழித்துப் போட்டல்லவா போனார்கள் என்பது மனதை வருடும் அவர்களது கேள்வி?

    மகிந்த ஆட்சியை சிங்களவர்களே இப்போதைக்கு இல்லாமல் செய்ய முடியாது என உணர்ந்துள்ள நிலையில், சும்மா ஆமியை அகற்றுவது, மக்கள் விரோதிகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும், தாயம் காண்பது எல்லாம் வெற்று காத்து குடிக்கும் கதை. விபத்துக்குள்ளானவனுக்கு முதலில் தேவை ஒரு சொட்டுக் காற்றும், தண்ணீரும். அதன் பின் அவசர சிகிச்சை. அதை விட்டு விட்டு அவன் பிழைக்க உண்ண உணவுதான் வேணும் என்பது புத்திசாலித்தனமாகப் படவில்லை. அந்த சனத்தை ஊனமாக்கி விட்டார்கள். அவர்களுக்கு இப்போது அந்தக் கொடிய பயங்கரத்தை மறக்க மனநல சிகிச்சையும், அடுத்த வாழ்வுக்கான நம்பிக்கையும் இப்போது தேவை. அதை விடுத்து இங்கிருந்து விதண்டாவாதம் பேசுவதெல்லாம் ஒரு நன்மையையும் தராது.

    Reply
  • BC
    BC

    புலி கொல்லிப் போட்டுது புலி அழிச்சுப் போட்டுது என எழுதுகிறீர்களே என்று Aras மிக சாதாரணமாக கேட்கிறார்.புலிகள் தமிழர்களை கொன்று, அழித்து அவர்கள் வாழ்க்கையை 1958 ஆண்டு நிலமைக்கு கொண்டுவந்து நிறுத்தியது பற்றி எல்லாம் அக்கறை இல்லை.
    புலிகளில் சிலர் தமிழீழ போராட்டம் என்று சுருட்டிய பணத்தை இலங்கையில் முதலீடு செய்ய விருப்பம். மற்ற சிலருக்கு புலிகளின் யுத்தத்தால் வாழ்விழந்த மக்களை அதே நிலையில் வைத்திருந்து அதை காட்டியே பிரசாரம் செய்து பணம் சுருட்ட திட்டம்.

    Reply