உடல் பருமனை கட்டுப்படுத்த கொரக்கா நல்ல நிவாரணி

உடலில் சதை போடுவதைக் கட்டுப்படுத்த கொரக்காப்புளி உதவுகிறது என்று உள்ளூரிலும் வெளிநாட்டிலும் நடந்த ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என விவசாய அமைச்சின் தொழில் முயற்சியாளர் அபிவிருத்திப் பணிப்பாளர் டி. பி. டி. விஜேரத்ன தெரிவித்தார்.

உடல் பருமனுடையவர்கள் உலகில் பரந்த அளவில் காணப்படுகின்றனர். இது ஆண், பெண் என்ற இரு பாலாருக்கும் பொதுவானது. முறையான சிகிச்சை அளிக்கப்படாதவிடத்து இது பல பிரச்சினைகளை மட்டுமன்றி மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.

இவ்வாறான உடற் பருமன் உள்ளவர்களின் சதையைக் குறைப்பதற்கு கொரக்காப்புளி உதவுகிறது. கொரக்கா பழத்தில் நிறைய ஹைட்ரொக் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது கொழுப்பு உருவாவதை கடடுப்படுத்துகிறது என்று விஜேரத்ன கூறினார்.

ஹைட்ரோசிட்ரிக் அமிலம் கொலஸ்ட்ரோலை கட்டுப்படுத்துவதுடன் ஈரலில் கிளைக்கோஜென் உற்பத்தியாவதை அதிகரிக்கிறது. இது உடலில் சதை போமுவதைத் தடுக்கிறது. உடனடி நிவாரணம் பெறுவதற்கு சிலர் இந்த அமிலத்தை பயன்படத்த முனைகின்றனர். எனினும் அவ்வாறு உடனடியாக பயன்பெற முயற்சிப்பது மேலும் சுகாதார பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    தடுப்பு முகாம்களில் இருக்கும் தமிழர்கள் உடல் பருமன் குறைந்து காணப்படுவது, அரசாங்கம் வாரிவழங்கும் கொரக்காப்புளி போட்ட உணவுகளையே உட்கொள்ளுவதாலே என்றும் குறிப்பிட்டால், ஆய்வு GSP வரிசலுகைக்கு மேலான வருமானத்தை மகிந்தாவிற்கு ஈட்டித்தரும்.

    Reply