வடக்கிலுள்ள மக்கள் மீது அரசாங்கத்திற்கும் தனக்கும் அதிக பட்ச சந்தேகமுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும், நல்லிணக்க ஆணைக்கழுவின் விசாரணைகளின் போது சாட்சியமளித்து உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். வடபகுதி மக்கள் இன்னமும் விடுதலைப் புலிகள் மீது அனுதாபம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். வடபகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் சரணடையாத விடுதலைப் புலிகள் எத்தனை பேர் உள்ளனர் என எமக்குத் தெரியாது. அடையாளம் காணப்படாமல் எத்தனைபேர் உள்ளனர் என்பதும் தெரியாது. அவர்களில் பலர் விடுதலைப்புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவாக முளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அவர்களே மிக ஆபத்தானவர்கள் எனவும் அவர் கூறினார்.
வடக்கில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதைத் தடுக்கும் பொருட்டு கணிசமான இராணுவத்தினரை அங்கு கடமையிலீடுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற் உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.
கே.பி பற்றி அவர் குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகளின் மூத்த உப்பினரான கே.பியின் மனதை மாற்றுவதில் இராணுவம் வெற்றிகண்டுள்ளது எனவும் அரசுடன் இணைந்து ஒரே நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உணர்வை அவருக்கு ஏற்படுத்தியதை பலரும் வரவேற்கின்றனர். இது முக்கியமானதோர் விடயம் எனவும் குறிப்பிட்டார்.
BC
அவர்களில் பலர் விடுதலைப்புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவாக முளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அவர்களே மிக ஆபத்தானவர்கள் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சொல்வது உண்மை தான். யாழ் பல்கலைக்கழக தீபச்செல்வன் ஞாபகத்துக்கு வருகிறார்.
lio
உங்களுக்கு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் என்று செய்தால்தானே உங்கள் பைகள் நிரம்பும் இதைவிட நீங்கள் எந்த மக்கள் மீதும் அக்கறையில்லாதவர்கள் என்பது எமக்கு தெரிந்த விடயம்.
nantha
கோத்தபாயவின் கருத்துக்கள் சரி என்றே கருதுகிறேன். ஆனானப்பட்ட குமரன் பத்மநாதனே “அம்பேல்” ஆகியிருக்கும் பொழுது மற்றையவர்கள் இலங்கை அரசுக்கெதிராக எந்த “இராமாயணம்” பாடினாலும் எடுபடப் போவதில்லை! “உலக நாடுகள்” (International Community) அதனைக் கணக்கெடுக்காது இலங்கை அரசுக்கு எதிராகப் போர் குற்றம் என்ற கணையைத் தொடுத்து மானம் கெடவே போகிறார்கள்.
Ajith
When did Sinhala Sri Lanka had a faith in Tamils? 1958 is a good start
thurai
அரசாங்கம் புலிகளின் மீதே தடைவிதித்து செயல்படுகின்றது. தமிழரின் உருமைகளிற்கு எதிராகவல்ல. தமிழரின் அரசியல் தலைவர்களை உருவாக்குவது தமிழர்களின் பொறுப்பு. தமிழர்களின் அரசியல் தலைவர்களை கொலைகாரப் புலிகளிடமிருந்து காப்பது சிங்கள அரசின் பொறுப்பு.
இதற்கு எதிராக குரல் கொடுத்து தங்கள் பணப்பையை நிரப்புவது புலம்பெயர் புலிகளின் விருப்பு.
துரை