ஆலயச் சூழலில் தயாரிக்கப்படாத உணவுகளை விற்பதற்கு அனுமதியில்லை

யாழ். நல்லூர் ஆலயத் திருவிழாக்களையொட்டி ஆலயச் சூழலில் அமைக்கப் படும் தேநீர்க் கடைகள், மற்றும் உணவுச் சாலைகள் என்பவற்றில் வைக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் உரிய இடத்திலேயே தயாரிக்கப்பட வேண்டுமென யாழ். மாநகர சபையின் சுகாதார குழுவின் தலைவர் மங்களேஸ்வர் தெரிவித்துள்ளார்.

வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்படும் உணவுப் பொருட்கள் உணவகங்களில் விற்பனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தரவுகளை மீறி செயற்படுகின்ற உணவகங்களின் உத்தரவுப்பத்திரங்கள் யாவும் நீக்கப்படுவதுடன் உணவகங்கள் உடனடியாக பூட்டி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply to londonboy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • londonboy
    londonboy

    இப்படியான நல்ல சரியான விடங்களில் இனிமெல் தொடர்ந்தும் கவனமெடுங்கள் மாநகர சபையினர் தரமான நிர்வாகத்தை நடத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கிறோம்.

    Reply