நல்லூர் திருவிழாவில் இம்முறை புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதம் ஆரம்பமாகி நடைபெறவுள்ள நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பெண்கள் சேலை, நீளப்பாவாடை சட்டை, தாவணி ஆகிய உடைகளை அணிந்து வந்தால் மட்டுமே ஆலயத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர். சுடிதார் முதலான வேறு உடைகளை அணிந்து வருபவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆண்கள் வேட்டி அணிந்து வரவேண்டும். காற்சட்டை உடபட்ட வேறு உடைகளில் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள நல்லூர் திருவிழாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக நேற்று (16-07-2010) யாழ். மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைறேறப்பட்ட முடிவுகளின் படியே இவை அறிவிக்கப்பட்டுள்ளன.
தென்னிலங்கையிலிருந்து ஏராளமான பெரும்பான்மை இனத்தவர்கள் இத்திருவிழாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும் உடைகள் குறித்து தென்பகுதி பத்திரிகைகளில் மும்மொழிகளிலும் விளம்பரம் செய்யப்படும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அங்கப்பிரதிட்டை செய்யும் பக்தர்களுக்கு, நோய்த் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்காக வீதிகளில் மணல் பரவப்படும். தினமும் அம்மண் பரிசோதனை செய்யப்படும். ஆலய வீதிகளில் பாதணிகளுடன் நடமாட எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சுகாதாரம், குடிநீர்விநியோகம் முதலான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
BC
யோகேஸ்வரி அம்மையாரின் முடிவுக்கு எனது வாழ்த்தை தெரிவிக்கிறேன். ஐரேப்பாவில் கூட ஒரு இடத்துக்கு போக வேண்டும் என்றால் அவர்கள் சொல்லும் முடிவை நாங்கள் பின்பற்ற வேண்டும். வட இந்தியர்கள் பயங்கரவாதிகள் என்று கூறும் புலிஆட்களின் அபிமான உடை சுடிதார்.
Kumar
முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்போடுவதேன் பிசி. புலி போய் ஒர வருஷமாச்சு. இன்னும் உங்களால் புலிக்கு வெளியெ வந்து சிந்திக்க முடியவில்லையே. பிளீஸ் வேக்கப்.
கந்தையா
புலி போய் ஒரு வருடமாய்ச்சு என்று சொல்பவர்கள் சந்தர்ப்பத்துக்கேற்றவாறுதான் அதைப்பாவிக்க முனைகிறார்கள். இப்படிச் சொல்லும்போது 30 வருடமாய் புலி செய்த கொலைகளையும் கொள்ளைகளையும் சனங்கள் மேல் செய்த அடாவடிகளையும் மூடிமெழுகிவிட்டுப் போவதுதான் உள்நோக்கம்.
rohan
கந்தையா //புலி போய் ஒரு வருடமாய்ச்சு என்று சொல்பவர்கள் சந்தர்ப்பத்துக்கேற்றவாறுதான் அதைப்பாவிக்க முனைகிறார்கள். //
முதலாவது பின்னூட்டத்தைப் பார்த்த போது குமார் சொன்னதையே நானும் நினைத்தேன். ஆனால், கந்தையாவுக்கு அது புரிந்ததாகத் தெரியவில்லை.
புலி விழுந்தால் தமிழர்களுக்கு விமோசனமே இருக்காது – இலங்கை அரசு தமிழர்களை கேவலமாய்நடாத்தும் என்ற் புலி அபிமானிகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாம் அதில் உண்மை இருக்கும் என்று நினைத்துக் கொண்டோம். புலி தான் தமிழர்களுக்கு நல்ல விடயங்கள் நடப்பதை தடுக்கிறது என்று மாற்றுக் கருத்தாளர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாம் அதிலும் உண்மை இருக்கும் என்று நினைத்துக் கொண்டோம்.
புலி விழ முதலே தமிழர்கள் அழிந்தனர். புலி வீழ்ந்த பின்னர் அவர்கள் உரிமைகள் ஏதுமின்றி மந்தைகளாக நடாத்தப் படுகிறார்கள்.
ஆனால், மன வருத்தம் என்ன என்றால், இந்த மாற்றுக்கருத்தாளர்கள் பலர் இன்னமும் செத்த புலி அடிப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். சரி – இந்தக் கோரப் புலி இனி இல்லை நாமும் இனி வாயடிப்பதை விட்டு ஏதாவது செய்யலாம் என்று இவர்கள் எழுவர் – எமது மக்களைத் தமது சிங்களச் சகோதரர்களுடன் இணைந்து காப்பர் என்று பார்த்தால்,நாம் ஏமாற்றம் தான் அடைகிறோம்.
புலி செய்தவை காலாகாலமாகப் பேசப்படும் – மறைந்து போகும் வாய்ப்பே இல்லை. மற்றவர்களின் மேல் துரோகிப் பட்டம் கட்டிய புலிகள் பாட்டம் பாட்டமாக செய்கிற ‘துரோகம்’ பற்றி ஒரு புலி அபிமானி என்னிடம் கதை கதையாகச் சொன்னார்.
மூத்த புலிகள் மற்ற ஆயுதக் குழுக்களுடன் இணைந்து நின்று பழைய புலி ஆதரவாளர்களைக் காட்டிக் கொடுக்கும் நிலைமைகள் பற்றியும் சொன்னர். ஆனால் அது அவர்கள் பிரச்சனை.
மற்றவர்களுக்குத் தெரியாமல் செய்கிறோம் என்ற பொய்யுரை தொடர்ந்து எங்களுக்குத் திரையாக இருக்கிறது! தவித்துப் போயிருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்வதை விடுத்து, நாம் தொடர்ந்து செத்த புலி அடித்து மகிழ்வோம்.
கந்தையா
றோகன் நீங்கள் நான் சொன்னதை உறுதிப்படுத்திறீங்கள். நன்றி
BC
//கந்தையா- புலி போய் ஒரு வருடமாய்ச்சு என்று சொல்பவர்கள் சந்தர்ப்பத்துக்கேற்றவாறுதான் அதைப்பாவிக்க முனைகிறார்கள். //
கந்தையா சொன்னது முழுவதும் உண்மை. றோகான் எப்போதுமே புலிகளை செய்த அட்டூயங்கள் தெரியவந்தால் பதபதைத்து துடித்து ஓடி வந்து புலிகளின் பெயரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவர். இவர்களுக்கு புலிகள் தமிழர்களை அழித்தது, கேவலமாய்நடாத்தியது, பள்ளிகூடம் போகவிடாமல் பிள்ளைகளை பலவந்தமாக பிடித்து பலி கொடுத்தது எல்லாவற்றையும் மூடிமறைத்து சிங்கள அரசு தமிழர்களை இந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்டது ஆகவே புலிகளின் தலைமையில் அணி திரளவேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கதைவிட தான் திட்டம்.
//தவித்துப் போயிருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்வதை விடுத்து, //
தவித்துப் போயிருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்ததால் அசின் இவர்களிடம் வாங்கிகட்ட வேண்டியுள்ளது.
rohan
இது ஒரு waste முயற்சி என்று தெரிந்தாலும், “றோகான் எப்போதுமே புலிகளை செய்த அட்டூயங்கள் தெரியவந்தால் பதபதைத்து துடித்து ஓடி வந்து புலிகளின் பெயரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவர்.” என்று சொல்கிற BCக்கு ஒரு சவால்.
தங்கள் பொய்யுரைக்கு ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா?
kamal
1984களில் புலிகள் யாழ்பல்கலைக்கழகத்திலும் மற்றும் இடங்களிலும் விநியோகித்த ஒரு துண்டுப்பிரசுரத்தில், பெண்கள் சைக்கிள் ஓடத் தடையும், அரைப்பாவாடை சட்டை போட தடையும், காற்சட்டை போடுவதற்கு கூட தடையும் விதித்தனர். இப்படிப் பெண்கள் போடாமல் இருத்தல்தான், தமிழரின் கலாச்சாரம் என்றனர். இதை மீறினால் தண்டனை என்று எச்சரித்தனர். யாழ்பல்கலைக்கழகம் உட்பட பரந்த எதிர்ப்பின் காரணமாகவும் அவர்கள் அதை கைவிட்டாலும் வடமராட்சியில் இந்த தமிழ் “கலாச்சாரம்” அமுல்படுத்தப்பட்டது. பெண்கள் முழுப்பாவாடையுடன் தான், வடமராட்சி பிரதேசத்தில் வாழமுடிந்தது.
இப்படித்தான் புலிப் பாசிச சிந்தனை முதல் செயல்கள் அனைத்தும் அன்று பாசிச வடிவம் பெற்று வளர்ந்தது. இன்று மகிந்த சிந்தனை எங்கும் பாசிச வடிவமாகி வருகின்ற சூழலில், அது யாழ் இந்து பாசிட்டுகளுடன் கூடி தன்னை இந்து “கலாச்சாரத்தின்” பாதுகாவலனாக தன்னையும் சேர்த்து பிரகடனம் செய்கின்றது. இதைத்தான் யாழ் மாநகரசபையின் தீர்மானம், வெட்டவெளியாக இன்று வெளிப்படுத்தியுள்ளது.
இப்படித்தான் வழிபட வேண்டும், இப்படித்தான் உடுப்பு போட வேண்டும் என்பது, தனிமனித வழிபாட்டு உரிமையில் தலையிட்டு அதை மறுக்கின்றது. மாறாக தனிமனித உரிமையை மறுத்து, அது மதப் பாசிசமாக வடிவமெடுக்கின்றது. அதை மகிந்தாவின் பாசிசத்துடன் கூட்டாக கூட்டுச் சேர்ந்து, அதை சமூகம் மீது இன்று பலாத்காரமாகத் திணிக்கின்றது. இந்தக் காட்டுமிராண்டித்தனம் எந்த எதிர்ப்புமின்றியே பாசிசமயமாகின்றது.– தமிழரங்கம்
rohan
ஆம்பிளங்க சட்டை போட அனுமதி உண்டா? திறந்த ஒடம்பில தொந்தி மேல சங்கிலி ஊஞ்சலாட நம்ம ஆம்பிளங்க நடந்து வாற அழகே தனி!
அது சரி. ஆமி ஆளுங்களுக்கும் இந்த விதி எல்லாம் இருக்கா, நம்ம தமிழ் மக்களுக்கு மட்டும் தானா அப்பிடீன்னு யோகேஸ்வரி அம்மையார் சொல்லுவாரா?
Appu hammy
Do the Gods really care how people are dressed. The Gods must have made a mistake when they created humans, to create them naked i.e without clothing. What is so wrong in a pair of jeans?
Kumar
Do the Gods really care how people are dressed. The Gods must have made a mistake when they created humans, to create them naked i.e without clothing. What is so wrong in a pair of jeans?
Appu Hammy, cloth rules are to reduce crime and eve-teasing only. No politics please. In the temple, people cannot concentate when a female person next to you stand in Bikini, or a male next to you stand in seaside get up with a sunglass on. Unwanted – corrupted sexually oriented crime would be encouraged if the council let it go. You can’t go to the sea side and the religious place of worship with the same manner. Please understand.
nantha
எல்லா மத வழிபாட்டுத் தலங்களிலும் “உடை” விதிமுறைகள் உண்டு. எனவே நல்லூரில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள “முறைகள்” வரவேற்கப்பட வேண்டிய விஷயமே ஆகும்! ஆனால் அதனை கோவில் நிர்வாகம் கொண்டு வராமல் நகர சபை கொண்டுவரும் நிலைதான் புரியவில்லை!
rohan
Kumar // Appu Hammy, cloth rules are to reduce crime and eve-teasing only. No politics please. In the temple, people cannot concentate when a female person next to you stand in Bikini, or a male next to you stand in seaside get up with a sunglass on. //
அப்படியா, குமார்?
தொள தொள மேல் மற்றும் கீழ் அங்கிகளுடனான வட இந்திய உடைகள் இடுப்பு வெளித்தெரிவதும் தாரளமாக முதுகு தெரிவதுமான சேலையை விட அல்லது உடலின் மேல் பகுதியைத் தெளிவாகக் காட்டுகிற (முழுப்பாவாடை) சட்டையை விட செக்ஸியாக இருக்கின்றனவா உங்களுக்கு?
BC
றோகான், தேசம்நெற்றில் நீங்கள் எழுதிய பொரும்பாலான பின்னோட்டங்களே அதை உணர்த்துகின்றன.
கமல், நாட்டில் தமிழ் கலாச்சார உடை அணிய வேண்டும் என்றால் அது நிச்சயமாக பாசிசம், காட்டுமிராண்டித்தனம் தான். ஆனால் நல்லூர் ஆலயத்திற்குள் போவதற்க்கு கலாச்சார உடை அணிய வேண்டும் என்பது எப்படி காட்டுமிராண்டித்தனமானது என்பது விளங்கவில்லை. கோவிலுக்குள் போய் தான் கும்பிட வேண்டும் என்று முடிவு எடுத்த பின் தமிழ் கலாச்சார உடை அணிவது காட்டுமிராண்டித்தனமாக தெரிவது ஏன்? தமிழ் கலாச்சார உடைகள் மீது அவ்வளவு வெறுப்பா! யாழ்பாணத்தில் நடந்த விஜய் அன்ரோனியின் இசை நிகழ்ச்சியை மக்கள் பார்த்து ரசித்தார்கள் என்பதற்காக சனங்கள் கலாச்சாரத்தை சீரளித்து(?!) போட்டார்கள் என்று திட்டினார்கள். அந்த கலாச்சார காவலர்கள் இப்போ இதை பாராட்டலாமே!
kamal
பிசி அது எனது கருத்தல்ல ரயாகரன் கருத்து.
றோகன் சேலையோ சட்டையோ மற்றும் எந்த உடுப்புமே உடுக்கும் விதத்தில் மட்டமல்ல பார்ப்பவர்கள் மனதையும் பொறுத்ததே செக்ஸி என்பது.
நந்தா கருத்துடன் நான் உடன்படுகிறேன்.
கந்தையா
வடஇந்திய உடைகளை இலங்கைத் தமிழர்கள் உடுக்காது இந்திய எதிர்ப்பு உணர்வைக் காட்டவேணுமென கொள்ளலாமோ??..
Appu hammy
Kumar
You do not know What is SXEY?? What is so wrong in a pair of jeans?
thiruparan
‘பார்ப்பவர்கள் மனதையும் பொறுத்ததே செக்ஸி ‘
சராசரி மனிதர்களை வைத்து கருத்தெழுதுங்கள். செக்ஸ் உணர்வு இயல்பானது
vanthiyadevan
sex=god
the way you looking it
pandithar
முழங்கால் தெரியும் ஆடையை மாற்றி
தமிழ் மகள் நடை போடு!…
யாழ் மாநகர அன்னை யோகேஸ்வரி அம்மா அவர்களுக்கு
நன்றி கூறி தலை வணங்குகின்றேன்.
ஆடை!…
நிர்வாணத்தை மறைக்க
நாகரீகம் எடுத்த
தீர்மானம்!….
வாழ்க்கையை வறுமைக்குள்
தொலைத்து விட்ட
கிராமத்து சகோதரியின்
தேய்ந்த பாவாடையில்
கிழிந்த ஓட்டைகள்…
நடை பாதை கடை காரன்
நாகரீகம் அடிக்கடி மாறாதா என்று
ஆவலோடு காத்திருக்கிறான்..
நாளுக்கு நாள் ஆடை மாற்றும்
செல்வந்தர்களின் பழைய ஆடைகளை
கொள்வனவு செய்வதற்காக….
கோடை கால தாவரங்கள்
தாவணி அணிகின்றன.
குளிர்காலத்தில் ஆபாசமாக
நிர்வாணமாகின்றன…
மனிதர்களில் மட்டும்
இது மாறி நடக்கின்றது…
கோடை என்ன குளிர் என்ன
தமிழர்களின் தலைகள் மீது
எழுதி வைத்த தீர்ப்பு
கால நிலை மறந்து
தமிழர்களாக மட்டும்
வாழ நினை!
இது நாகரீகத்தின் மீதான
அகற்ற முடியாத அழுக்கு…
இந்த முறை என் கிராமத்து
சகோதரி நல்லூருக்கு போகிறாளோ
தெரியாது….
அவளிடம் இருப்பது
யாரோ உறவுக்காரன் ஒருவர்
வாங்கி கொடுத்த சுடிதார் மட்டுமே…
தயவு செய்து செல்வந்தர்களே
இனியாவது தாவணிகளை
அன்பளியுங்கள்….
மாநகர அன்னையின்
அடுத்த தீர்மானக்கண்கள்
தமிழர்களை மட்டும் நோக்காது…
கிராமங்களையும் நோக்கியும்
நேசமுடன் நீளும்….