வைகோ, நெடுமாறன் சிறையில் அடைப்பு

yko_03.jpgதமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் தொடர் கொலை செய்து வருவதைக் கண்டித்தும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களை மூடக்கோரியும் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து இலங்கை தூரதகத்தை மூடக் கோரி ஊர்வலமாக அனைவரும் துணைத் தூதரகத்தை நோக்கி கிளம்பினர். இதையடுத்து போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர், வைகோ, பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் உள்ளிட்ட 282 பேரை மட்டும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது, 188, 341, 153(A), 143, 7 I (A), 145,285,506(I), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப் போடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். வைகோ உள்ளிட்ட சிலரை திருச்சிக்கும், நெடுமாறன் உள்ளிட்ட சிலரை கடலூருக்கும், நடராஜன் உள்ளிட்ட சிலரை மதுரைக்கும் கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். பெண்களை வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர்.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    வைகோ நெடுமாறன் ராஜேந்திரன் போன்றேரை சிறையில் அடைப்பதே தப்பு.
    மத்தியயரசுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் இவர்களை எப்படி கையாளப் போகிறார்கள்?
    இந்திய சிறையில் எந்த மானிலத்தைப் பார்த்தாலும் சந்தேகத்தின் பெயரில் ஒரு புலி இருந்து கொண்டேயிருக்கும். இவர்களை அவர்களுடன் சேர்த்தடைத்தால் இந்தியா என்னவாகும்?
    கண்ணிவெடி வைப்பதையும் அண்ணன் தம்பியையும் துரோகிபட்டம் கொடுத்து போட்டுத் தள்ளுதல் முறையை கற்றுக்கொள்ள மாட்டார்களா?
    ஏற்கனவே ஆந்திரா சண்டீஸ்காரர்களில் ஈழத்துபுலிகள் பதுங்கியதால் தான் கண்ணி வெடிவித்தையை கற்றுக்கொண்டதாக கதையிருக்கிறது. இந்த வெறிபிடித்தவர்கள் கேரளா கர்நாடகா ஆந்திரா மானிநிலங்களில் உள்ள புகையிரதத்திற்கும் கர்பிணிகள் பாடசாலை பிள்ளைகள் போகும் வாகனங்களுக்கு கண்ணிவெடிகள் குண்டுகள் வைக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். இந்தியாவிலும் சிறீலங்கா இராணுவத்தின் ஆழஊடுருவும் படையணியின் நடவடிக்கையே என்று அறிக்கை விடமுடியுமா?.

    இது ஒருபுறம் இருக்க..இவர்கள் ஒருபோதும் தம்மினத்திற்காக குரல் கொடுத்தவர்கள் அல்ல. தமிழ்நாட்டில் ஈழஅகதிகள் முகாம் என்று எத்தனை வகையுள்ளது. மண்டபம் செங்கல்பட்டு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அவர்களின் வாழ்வுநிலை சொல்லவேண்டியதில்லை. இந்த இருபதுவருட தற்கொலை பட்டியலே இவர்களின் வாழ்வுநிலைக்கு முகக்கண்னாடி.

    வைக்கோ நெடுமாறன் இந்த அகதிகள்முகாமுக்கு என்ன சாதித்திருக்கிறார்கள். இதில்லிருந்து தெரியவில்லையா? இவர்கள் போடும் வேஷம்.
    நெடுமாறனின் துறவிவேஷம். அரசனாவதே ஆசை. வைக்கோ ஜெயலலிதா கருனாநிதி போன்ற ஒரு இடத்தை எட்டிப்பிடித்து விடவேண்டும் என்பதே.
    ராஜேந்திரன் பிராமணியஎதிர்பு நல்ல பலன் அளிக்காதால் ஈழப்போராட்டத்தை துடுப்பாக பயன் படுத்துபவர். ஒட்டுமொத்தத்தில் இவர்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வெறிகுணத்தையும் கொலைக் கலாச்சாரத்தையும் தத்துவவாக்காக எடுத்து தமது எதிர்காலத்தை எண்ணி வாழ்வு நடத்துபவர்கள். இவர்களை எண்ணி இந்திய அரசுக்கு கூடிய அவதானிப்பு தேவை என்பதைத்த் தான் தற்போதைக்கு கூறமுடியும். சிறையில் அடைத்த போதும்..

    Reply