துட்டகைமுனு மன்னன் எல்லாளனுக்கு சிலை வைத்தான் – எஸ். ஸ்ரீதரன்

parliament.gifஎல்லாள மன்னனை தோற்கடித்த துட்டகைமுனு  மன்னன் எல்லாளனுக்கு சிலை வைத்து வணங்கினான். ஆனால் அரசாங்கம் இந்து மற்றும் தமிழ் கலாசாரங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள் ஆகியவற்றை அழித்தொழிக்கின்றது. உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனின் நினைவுத் தூபியைக் கூட தகர்த்தெறிந்துள்ளீர்கள். இவ்வாறான தமிழர் விரோத நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள காணிகள் உரியவர்களிடத்தில் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதை விடுத்து மேலும் மேலும் காயப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெவித்தார்.

Show More
Leave a Reply to lamba Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • chandran.raja
    chandran.raja

    எல்லாளனும் துட்டகைமுனுவும் நேருக்கு நேர்நின்று போரிடதாகத் தான் வரலாறு இருக்கிறது. ஏழைகளை இளைஞர்களை மாணவ மாணவிகளை மூளைச்சலவை செய்து போருக்கு-மறைந்திருந்து தாக்குவதற்கு அனுப்பிவிட்டு பதுங்கியிருக்கவில்லை இந்த இரு மன்னர்களும்.
    இந்த நவீனகால வன்னிசிற்றரசர் எதிரியென கருதிய சிங்களஅரசுடன் போராட்டம் நடத்தவில்லை. எல்லையில் இருந்த சிங்களமக்களுடன் போராட்டம் நடத்தினார். சொந்த இனத்தையே வடக்கில் இருந்து துரத்திவிட்டார். சொந்த போராட்டசக்திகளை சொந்தமண்னில் அழித்துமல்லாமல் இந்தியாவரை சென்று அழிப்புவேலைகளை நடத்தினார். தென்னை வைத்திருந்தவன் தேங்காய் தரவேண்டும். கோழிவைத்திருந்தவன் முட்டை தரவேண்டும். பிள்ளைகளை பெற்றவர்கள் பிள்ளை தரவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.

    பயங்கரவாதச்செயல்களை சட்டரீதியாக உரிமைகோர திலீபனை உனக்கு பின்னால் நான்வருகிறேன் என்று சொல்லி அகிம்சை போராட்டத்திற்கு அனுப்பிவிட்டு “தானும் தன்குடும்பம்” என்று பதுங்கிக் கொண்டார்.

    இதெல்லாம் ஒருகெட்ட கனவாக தமிழ்மக்களின் நினைவுகளில்லிருந்து மெல்லமெல்ல மறைந்துபோக முயற்சிக்க இந்த பாராளுமன்ற உறுப்பினர் நிரந்தரமாக மக்கள்மனதில் அழியாநினைவுகளோடு இருக்கவேண்டும் என கனவு காண்ணுகிறார். இவர் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் தலைமைஆசிரியர் என்பதும் முன்னாள் புலிகளின் சிறப்புதளபதி தீபனின் சகோதரியை மணமுடித்தவர் என்பதும். பாடசாலை முடிந்தவேளை செஞ்சிலுவைச்சங்க ஜீப்வண்டியில் பிள்ளைகளைப் பிடித்து பிரபாகரனுக்கு அனுப்பி வைத்தவர் என்பதும் எமக்கு கிடைத்த செய்தி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // துட்ட கைமுனு மன்னன் எல்லாளனுக்கு சிலை வைத்து வணங்கினான். //

    உப்படித்தான் எதையும் அரைகுறையாக அறிந்து கொண்டு, எம்மவர்கள் கதைபதனாலேயே பிரைச்சினைகள். எல்லாளனுக்கு துட்டகைமுனு சிலை வைக்கவில்லை, சமாதியே கட்டினான். அந்த சமாதிக்கருகாமையால் செல்வோர்கள், அந்தச் சமாதியை வணங்கிச் செல்ல வேண்டுமென உத்தரவும் போட்டிருந்தான். இன்று அரசு செய்யும் அடாவடித்தனங்களுக்கு யார் காரணம்?? இன்று குரல் கொடுப்போர், அன்று புலிகள் படுகொலைகள் முதல் பல தவறுகளைச் செய்தபோது ஏன் வாய்மூடி மெளனிகளாக வாழாவிருந்தனர்?? இன்று இறந்தவர்களின் நினைவிடங்களை அழிப்பதற்கே துள்ளிக் குதிப்பவர்கள், அன்று உயிரோடு பலபேரை புலிகள் தீயிட்டுக் கொழுத்தியபோது எங்கே சென்றிருந்தார்கள்?? அன்றே இந்த வாய்ச்சொல் வீரர்கள் மனிதர்களாக நடந்திருந்தால் இன்று தமிழர்களுக்கு இந்த நிலை வந்திருக்குமா??

    Reply
  • BC
    BC

    ஸ்ரீதரன் கவலை முழுவதும் புலிகளின் அடையாளங்கள் அழிக்கபடுவது பற்றிதான். இந்து, தமிழ் கலாசாரங்கள் வரிசையில் இதையும் சேர்த்துவிட்டால் அவருக்கு வசதி.

    Reply
  • lamba
    lamba

    ஸ்ரீதரன்
    வரவு செலவுத் திட்டம் பற்றி என்ன கதைத்தீர்கள் என சொல்லலாமே

    Reply