தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவி ஆகிய இரு முக்கிய பணிகளையும் முன்னெடுக்க தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து ஒரு பொது இணக்கப்பாட்டிற்க வரவேண்டும் என வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். June 18 2010 இலங்கை தனியார் வானொலி ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுகளை கைவிட்டு பொது உடன்பாட்டிற்கு வர வேண்டியது இக்காலகட்டத்தில் முக்கியமானதெனவும் அவர் வலியுறுத்தினார். இதற்காக தன்னால் இயன்ற பங்களிப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்காகவே தான் இலங்கை வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி எதனையும் சாதிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவரெனவும், அவர் தமிழ் மக்களுக்கு தீரவு ஒன்றை வழங்கக் கூடிய பலத்துடன் இருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னதாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து ஆராயப்பட வேண்டும் எனவும், ஒரே எடுப்பில் அதிகாரப் பகிர்வை நோக்கி செல்வது கடினம் எனவும் திரு. வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
thurai
அரசியற்கட்சிகள் மட்டுமன்றி, உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ்மக்கள் யாவரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஈழத்தமிழரின் நலன்களை மட்டும் கருத்திற் கொண்டு செய்ற்படுத்தல் இன்றைய காலகட்டத்தில் மிகமுக்கியமானது.
துரை