தேசிய வெற்றிவிழா கொண்டாட்டம்; இன்று கொழும்பில் கோலாகலம்

victory-parade.jpgவிடுதலைப் புலிகளுடனான போர் வெற்றியின் ஒரு வருட பூர்த்தி தேசிய வெற்றி விழா மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.

விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றியின்   ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்துள்ள தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு காலை 8 மணிக்கு காலி முகத்திடலிலும் மாலை 4.30 மணிக்கு படைவீரர்களின் தேசிய நினைவு தின வைபவம் பாராளுமன்ற மைதானத்திலும் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் முப்படைகளின் தளபதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்கள் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பில் முதற்தடவையாக முப்படைகள் மற்றும் பொலிஸார் ஒன்பது ஆயிரம் பேர் இம்முறை பங்குகொள்ளவுள்ளதுடன் அணி வகுப்பின்போது வழமையை விட வித்தியாசமான முறையில் முப்படையினர் தமது சாகசங்களை காண்பிக்கவுள்ளதாக இராணுவப் பேச்சாளர், மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இவர்களில் 537 முப்படை அதிகாரிகளும், 8960 முப்படை வீரர்களும் அடங்குவர். பிரதான வைபவங்களில் பிரதமர் தி.மு.ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் வெற்றியை பாராட்டும் வகையிலும் அவர்களது சாகசங்களை வெளிப்படுத்தும் வகையிலும் முப்படைகளின் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புக்கள் இடம்பெறவுள்ளன.வழக்கமான அணி வகுப்புக்கு மேலதிகமாக இறுதிக்கட்ட படை நடவடிக்கையில் கலந்துகொண்ட பெரும்பாலான படை வீரர்கள் முதற் தடவையாக பங்குகொண்டு பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டமை தொடர்பில் செயல்முறையில் காண்பிக்கவுள்ளதுடன் அதற்காக பயன்படுத்திய கனரக ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை காண்பிக்கவுள்ளனர்.

யுத்த நடவடிக்கையின்போது அங்கவீனமுற்ற படைவீரர்களும் சக்கர நாற்காலிகளில் இருந்தவாறு அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • Appu hammy
    Appu hammy

    why you do not talk about equal right,equal freedom, equal justice for all.

    Reply
  • Ajith
    Ajith

    இவர்களில் 537 முப்படை அதிகாரிகளும், 8960 முப்படை வீரர்களும் அடங்குவர்.

    Out of this how many tamils? Any Guess?

    பிரதான வைபவங்களில் பிரதமர் தி.மு.ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
    Out of this how many tamils? Any Guess? Is this a national victory?

    Reply
  • accu
    accu

    நானும் கொண்டாடுகிறேன். அரச படைகளின் வெற்றியை அல்ல புலிகளின் தோல்வியை.

    Reply
  • Ajith
    Ajith

    accu
    In other words you celebrate murder of over 100,000 innocent tamils by Sinhalam.

    Reply
  • மாயா
    மாயா

    // Ajith on June 19, 2010 6:13 am accu
    In other words you celebrate murder of over 100,000 innocent tamils by Sinhalam.//

    புலிகள் கொன்ற தமிழரை கணக்கில் எடுக்கவில்லையா ஐயா?

    புலிகள் செத்த பிறகு இறந்த தமிழர்களை விட , புலிகள் இருந்த போது செத்த தமிழர்கள் அதிகம். எனவே இது தமிழர்களின் வெற்றியும் ஆகும். வாழத்தான் மனிதன் பிறந்தானே தவிர , சாவதற்கு அல்ல. இன்றும் ஓடியவன் வாழ்கிறான். பாவப்பட்டவன் சாகிறான். இயன்றவன் நாடு கடந்து சந்தோசமாக தமிழீழம் என பேசியே வயிற்றை நிரப்புகிறான். தமிழீழம் என பேசுவோரின் வாழ்வுக்காக அங்கு வாழும் அப்பாவிகள் இரையாகினர், இன்றும் இரையாகின்றனர்.

    எனவே இது இலங்கை வாழ் மக்களின் வெற்றி.

    Reply
  • accu
    accu

    அஜித் ஒரு லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தால் அதில் பெரும் பகுதியினரை கொன்றவர்கள் புலிகளே. மிகுதிபேரையும் அரச படைகளின் தாக்குகுதல் நிலைகளில் பலாத்காரமாய் விரட்டிச் சென்று நிறுத்தி அவர்களின் இறப்புக்கு காரணமானவர்களும் புலிகளே. இது தவிர அஜித் போன்றோர் வெளிநாடு வந்து ஆங்கிலேயராக மாறிக்கொண்டிருந்தவேளை அங்கே நமது நாட்டில் ஆயிரமாயிரம் தமிழ்ச் சிறுவர்களும் சிறுமிகளும் புலிகளினால் பலாத்காரமாய் பிடிக்கப்பட்டு புலித்தலமைகளின் உயிரைப் பாதுகாப்பதற்காக (நாட்டின் விடுதலைக்கல்ல) பலியிடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். மேலும் எத்தனையோ அப்பாவிகள், நியாயவாதிகள், மாற்று இயக்கங்களில் இருந்து ஒதுங்கி சாதாரணவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த பழய போராளிகள் என வகைதொகையில்லாமல் புலிகள் வேட்டைநாய்களாகமாறி வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள். இவையெல்லாம் இப்போ நிறுத்தப்பட்டுள்ளது காரணம் புலிகளின் ஒட்டுமொத்த அழிவு. எனவேதான் நான் புலிகளின் அழிவை கொண்டாடுகிறேன். இப்போ மட்டுமல்ல காலாகாலத்துக்கும் கொண்டாடுவேன்.

    Reply
  • BC
    BC

    அழிப்பதை வாழ்வாக்கி அழிக்கப்படுபவர்களை தங்களது முதலீடு ஆக்கிய புலிகளின் அழிவை நானும் கொண்டாடுகிறேன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    /…..அழிப்பதை வாழ்வாக்கி அழிக்கப்படுபவர்களை தங்களது முதலீடு ஆக்கிய ….//BC

    இதைத்தான் ஸ்ரீலங்காவின் கட்சிகளான யூ.என்.பியும் ஜேவிபியும் இன்றைய அரசைப்பார்த்துச் சொல்கின்றன !

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பி.சி. என்ன? சுயநலசிந்தனைக்கு உட்படாதவன் வக்கிரபுத்திக்கு அடிமைப் படாத ஒவ்வொரு தமிழயென்ன? ஒவ்வொரு மனிதனும் கொண்டாட வேண்டிய கொண்டாட்டமே! புலியழிக்கப்பட்ட நினைவுநாட்கள் இல்லையேல் முப்பது வருடங்கள் இழக்கப்பட்ட சுதந்திரத்தை திரும்ப
    நாம் பெற்றிருக்க முடியுமா?.
    மீன்சந்தையில் மீன்மலிவாகக் கிடைப்பதற்கும் பனங்களியில்லாமல் இலகுவாக மக்கள் உடுப்பு துவைப்பதற்கும் கொழும்பு யாழ்பாணத்திற்கு பயணங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டதிற்கும் புலிகளின் அழித்தெழிக்கப் பட்டதின் விளைவே!. எல்லாவற்றறை விட ஒரு புதியசமுதாயம் உருவாக பாடசாலையும் கல்லூரியும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமானது புலிகள் அழிக்கப்பட்டதும். அதன் நினைவு நாட்களும். புலிகளால் பயன்பெற்ற ஒருசிலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களே இதற்கான எதிர் கருத்தை வைக்கமுடியும்.

    Reply
  • Rohan
    Rohan

    இப்படி, புலி அழிவை ஒரு சிலர் கொண்டாடித் திளைத்துக் கொண்டிருக்க, மறு புறத்தில் தமிழரின் தினசரி அழிவைப் பெரும்பான்மை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

    Reply
  • Ajith
    Ajith

    பி.சி. என்ன? சுயநலசிந்தனைக்கு உட்படாதவன் வக்கிரபுத்திக்கு அடிமைப் படாத ஒவ்வொரு தமிழயென்ன? ஒவ்வொரு மனிதனும் கொண்டாட வேண்டிய கொண்டாட்டமே!

    Unfotunately there are only a few individuals fall into your category. It is the only those people who participated in the victory celebration. None of the true tamils were there in your victory celebration. Tamils are well aware of who you are and what are your motives. When Sinhalam used food, medicine and water as a weapon of war against tamils you were with those murderous Sinhalam. When the whole world accused Sinhalam for war crimes and human right accuses, you were thepropaganda machines to safeguard the Sinhala masters. If you r unselfish tamilsyou should have fight against LTTE directly if they are wrong instead of joining the Sinhalam which is in its mission of wipe out tamils. The same number of people were there to enjoy the fall of tamils in the hands of Sinhalese. Even 10 1958, Sinhalese burnt tamils you were with them enjoying the bloodshed of tamils. You all were celebrated along with Sinhalam when Jaffna library was burnt by Sinhalam. You celebrated with Sinhalam when Sinhalam drilled the eyes of Kuttimani and 52 others inside the Sinhala prison. The argument you put is LTTE did that, So whats wrong with Sinhalam doing that?

    Reply
  • BC
    BC

    //தமிழரின் தினசரி அழிவைப் பெரும்பான்மை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.//

    காதில் பூ சுற்றும் புலிகளின் முயறச்சி தொடர்கிறது.தமிழரின் தினசரி அழிவு என்பது புலிகளின் அழிவுடன் முடிவுக்கு வந்ததுவிட்டது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    அஜீத்!
    புலிகளின் தோல்வி பயங்கரவாதின் தோல்வி. ஒரு அரசியல் அறிவுவைக் கொண்டிராத மூர்க்கம் கொண்ட இயக்கத்தின் தோல்வி. இந்த தோல்வியை தமிழ்மக்களின் தோல்வியாக கருதும் உங்களை நான் என்னவென்று சொல்வது?
    புலிகள் அல்லாதவர்களையும் புலிகளை எதிர்பவர்களையும் புலிகளை விமர்சிப்பவர்களையும் நீங்கள் தமிழர் இல்லாதவர்ராக கணிக்க முற்படுகிறீர்கள்?
    இதையே மாறிநான் உங்களை திருப்பித் தாக்கினால் நீங்கள் பயங்கரவாதி! இல்லையா?

    ஒருஇனத்தைப் பற்றியயோ ஒருமதத்தப்பற்றியோ தவறான அபிப்பிராயம் கொண்டிருப்பது தவறு. எதையும் அரசியலாயே அணுகுவது தான் புதுநாகரீகமானது. பூட்டிய சிறைக்குள் பரிதாபகரமாக பயங்கரமான முறையில் கொல்லப்பட்டது. அடுத்து வந்த இனக்கலவரங்களுக்கும் எமது முன்னோர்களாக தமிழ்அரசியல் தலைவர்களுக்கும் நீண்டசம்பந்தம், இந்த பழைமைவாதிகளில் இருந்தே “சூரியதேவன்” உதித்து முள்ளிவாய்களில் மங்கி மறைந்தான்.
    சிங்களஅரசுக்கு மட்டுமல்ல தமிழ்மக்களும் குறிப்பாக வன்னிமக்களும் கொண்டாடங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்கவேண்டும். இருந்தால் மட்டுமே தமிழ் இனம் ஒரு முற்போக்கான இனமாகக் கருதப்படும்.

    Reply
  • Ajith
    Ajith

    Why confusion? Which of the following is right?
    1. காதில் பூ சுற்றும் புலிகளின் முயறச்சி தொடர்கிறது.

    2. தமிழரின் தினசரி அழிவு என்பது புலிகளின் அழிவுடன் முடிவுக்கு வந்ததுவிட்டது.

    The fact remains same. Sinhala military raped tamils in Kilinochi. Chavakacheri and Vavuniya magistrates transferred because of the murder case against Chavakacheri students. Sinhalam continue its action.

    தமிழீழம் என பேசுவோரின் வாழ்வுக்காக அங்கு வாழும் அப்பாவிகள் இரையாகினர், இன்றும் இரையாகின்றனர்.

    எனவே இது இலங்கை வாழ் மக்களின் வெற்றி.
    Why today Sinhalam eat tamils after the victory of Srilanka (Sinhala)

    Reply