விடுதலை புலி தமிழகத்தில் குண்டுத்தாக்குதல்

track.gifவிடுதலை புலிகளின்  ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தமிழ் நாட்டின் விலுபுரம் மாவட்டத்தில் உள்ள புகையிரத தண்டவாளம் ஒன்றில் குண்டு வெடிக்க செய்துள்ளனர். இச்சம்பவம்  இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இக்குண்டு வெடிப்பு காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கான விஜயம் மேற்கொண்டமையை கண்டித்தே இக்குண்டு வெடிப்பு  இடம்பெற்றதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம் அப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.  இக்குண்டு வெடிப்பு காரணமாக சென்னைக்கான பல புகையிரத சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன

Show More
Leave a Reply to NANTHA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

24 Comments

  • Rohan
    Rohan

    அம்சாவும் ஊரில் இல்லை.. என்னவோ நடக்குது மர்மமா இருக்குது

    Reply
  • thurai
    thurai

    உண்மையோ, இதில் உண்மையில்லையோ இதற்கு நெடுமாறன், வைகோ, திருமா, சீமான்,போன்ற்வ்ர்களே பதில் சொல்லவும் பொறுப்பேற்கவும் வேண்டும்.

    துரை

    Reply
  • siva
    siva

    இந்தியா அங்கையிருக்கிற இலங்கைத் தமிழரை திருப்பியனுப்ப பிளான் போடுகிறது. அதற்கான முன்னெடுப்பே இது

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..உண்மையோ, இதில் உண்மையில்லையோ இதற்கு நெடுமாறன், வைகோ, திருமா, சீமான்,போன்ற்வ்ர்களே பதில் சொல்லவும் பொறுப்பேற்கவும் வேண்டும்…..//

    அருமை…அற்புதம்..இதுவல்லவோ பேச்சுச்சுதந்திரம். உண்மையில்லாத ஒன்றாக இருக்கலாம் எனச் சொல்லிவிட்டு இதற்கு பதில் சொல்ல வேண்டுமாம்,!
    செய்தியின் தலைப்பு… ”விடுதலைப்புலி குண்டுத்தாக்குதல்” என இருக்கு. அடுத்த வரி …. ”விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள்” என இருக்கு.- குண்டு வச்சவன் சொல்லி வச்ச மாதிரி நோட்டீசை போட்டிட்டு போனானாம்.

    இதெல்லாம் ஒரு செய்தி! இதை எழுதியவர் பதில் தர கடமைப்பட்டவர். ஆனால் இங்கு துரை யாரோ பதில் தரவேண்டுமாம என ‘டிமாண்ட்” வேறு. இதற்கெல்லாம் பதில் சொல்லி நான் பின்னூட்டம்!

    Reply
  • Rohan
    Rohan

    “உண்மையோ, இதில் உண்மையில்லையோ இதற்கு நெடுமாறன், வைகோ, திருமா, சீமான்,போன்ற்வ்ர்களே பதில் சொல்லவும் பொறுப்பேற்கவும் வேண்டும்.” / துரை இவர்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்றும் சொன்னால் நலம்.

    Reply
  • NANTHA
    NANTHA

    “புலிகளின்” சுவையை தமிழ்நாடும் அறியட்டும்! இந்திய மத்திய அரசுக்கு கடும் வேலைகள் காத்திருக்கின்றன! தவிர வடகிழக்கில் அரச இராணுவ குவிப்புக்கு இது இன்னொரு அத்திவாரம்!

    Reply
  • thurai
    thurai

    சாந்தன்,றோகன் இருவரிற்கும்,
    உலகம்முழுவதும் பயங்கரவாதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட புலிகளை ஆதரிப்பவர்கள் தான் இவர்கள். தமது அரசியல் வாழ்வைக் காக்க ஈழத்தமிழர் தேவையா? அதற்கு புலிகளை ஆதரிக்கவேண்டுமா? வேறுவழிகளில்லையா?

    புலிகள் இவர்களைப் பிடித்து வைத்திருக்கின்றார்களா அல்லது இவர்கள் புலிகளை பிடித்து வாழ்கின்றார்களா? இவர்களால் தமிழகத்திலும் இந்தியாவிலும் அமைதி வாழ்வு பாதிக்கப்படுவது புலிகளின் புலத்தில் வாழும் ஆதரவாளர்களிற்கு ஆனந்தமே அளிக்கும். காரணம் அவர்கள் மக்களின் அழிவில் வாழ்ந்து ஆனநதம் கண்டவர்கள்.

    வல்லவனிற்கு வல்லவனும், அவனுக்கும் மேலாக ஓர் வல்லவ்னும் உலகில் தோன்றுவார்கள். தோன்றிக் கொண்டேயிருப்பார்கள். புலி செய்ததோ செயவில்லையோ பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆதரவாளர்கள். தம்பி இருக்கின்றார் என்று சொல்வது போல் நெடுமாறன் புலிகள் செயவில்லையென்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டியத்துதானே.

    துரை

    Reply
  • Rohan
    Rohan

    ““புலிகளின்” சுவையை தமிழ்நாடும் அறியட்டும்! இந்திய மத்திய அரசுக்கு கடும் வேலைகள் காத்திருக்கின்றன! தவிர வடகிழக்கில் அரச இராணுவ குவிப்புக்கு இது இன்னொரு அத்திவாரம்!” என்று விடப்படும் பின்னூட்டம் விசித்திரமானது!

    கடைசி வாசகம் வேடிக்கையானது. இப்போது இல்லாத புதுத் திட்டத்தின் கீழ் அல்லது காரணத்தின் கீழா குவிப்பு நடக்கப் போகிறது? இந்திய மத்திய அரசு செய்கிற கடும் வேலைகளில் ஒன்று தான் குண்டு வெடிப்பும் அது பற்றிய செய்தித் தெறிப்புகளும் நாராயணசாமியின் அறிக்கையும். By the way, புலிகளின் சுவையைத் தமிழ்நாடு என்றோ அறியும்!

    Reply
  • thurai
    thurai

    புலிகள் சிங்கள அரசிற்கு பொல்லைக் கொடுத்து அடி வாங்கினார்கள். இப்போ இந்திய அரசிடம். பாதிக்கப்படுவது ஈழ்த்தமிழர். புலத்து புலியின் ஆதரவாளர்களே குதியுங்கள் வீதியில்.

    துரை

    Reply
  • NANTHA
    NANTHA

    ஆகா! கண்டு பிடிப்புக்களுக்கு குறை கிடையாது!நல்ல காலம்! ராஜிவ் காந்தி, அமிர்தலிஙம் ஆகியோரையும் இந்திய அரசுதான் கொன்றது என்று எழுதாத வரைக்கும்!

    Reply
  • Rohan
    Rohan

    “சாந்தன்,றோகன் இருவரிற்கும்,” என்று ஆரம்பித்து,
    “புலி செய்ததோ செயவில்லையோ பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆதரவாளர்கள்.” என்று தொடர்கிறார் துரை.

    இது என்ன நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை. புலி இருந்திருந்தாலும் கூட, எல்லாச் சில்லறைக் குற்றச் சாட்டிற்கும் புலி ஆதரவாளர்கள் ‘ஐயோ நாம் இல்லை – ஐயோ அவர்கள் இல்லை’ என்று கூரையில் ஏறி நின்று குரல் கொடுக்க வேண்டும் என்றா சொல்ல வருகிறீர்கள்? புலி ஆதரவாளர்கள் என்ன, முகவர்கள் கூட அப்படிச் செய்ய வேண்டியதில்ல என்பது என் கருத்து.

    “தம்பி இருக்கின்றார் என்று சொல்வது போல் நெடுமாறன் புலிகள் செயவில்லையென்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டியத்துதானே.”
    என்பது எப்படிச் சரியாகும்?

    அவர் தம்பியைக் கண்டிருப்பாரோ என்னவோ? கண்டிருந்தால் சொல்லலாம் தானே? ஆனால், புலி ஒரு அமைப்பாகவே இல்லை. நெடியவன், கேபி, உருத்திரா, அப்படி இப்படி எத்தனை பேர் என்று புலி விசுவாசிகளுக்கே தெரியவில்லை! புலி செய்ததா இல்லையா என்ற தகவல் நெடுமாறனுக்கு எப்படித் தெரியும்?

    Reply
  • Rohan
    Rohan

    “ஆகா! கண்டு பிடிப்புக்களுக்கு குறை கிடையாது!நல்ல காலம்! ராஜிவ் காந்தி, அமிர்தலிஙம் ஆகியோரையும் இந்திய அரசுதான் கொன்றது என்று எழுதாத வரைக்கும்!”

    சும்மா பேசாதீர்கள்.
    பாகிஸ்தானின் புலனாய்வுப் பின்னணி கொண்ட தூதரக அதிகாரியைக் கொழும்பில் வைத்துக் கொல்ல முயன்றது யார்? தெரியுமா தங்களுக்கு?

    தமிழக மீனவர்களைப் புலி கடத்தி குழியில் வைத்துத் தார்ப்பாய்ப் படங்குகளால் மூடி வைத்திருந்தது என்ற செய்தியின் பின்னணியில் இருந்தது யார்? தெரியுமா தங்களுக்கு?

    புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரிகளுடன் தோள் உரசியபடி இந்த விபரங்களை உரையாடி இருப்பீர்கள் இல்லையா?

    அது இருக்க, வெள்ளைக் கொடி பிடித்து வந்த புலிகளை இந்திய அரசுதான் கொன்றது என்பதை மறுப்பவர்கள் பேசுகிறீர்கள்!

    Reply
  • john
    john

    /அது இருக்க வெள்ளைக் கொடி பிடித்து வந்த புலிகளை இந்திய அரசுதான் கொன்றது என்பதை மறுப்பவர்கள் பேசுகிறீர்கள்!.//

    நன்றி. சனத்தைச் சாகடித்தபின் வெள்ளைக் கொடியுடன் ‘சரணடைந்த கோழைகளே’ புலிகள் என்பதை ஏற்றுக் கொண்டதற்கு. இதற்கு மேல் வாய்வீரம்தான் வேண்டிக்கிடக்கு.

    Reply
  • BC
    BC

    //John – சனத்தைச் சாகடித்தபின் வெள்ளைக் கொடியுடன் ‘சரணடைந்த கோழைகளே’ புலிகள்//
    கோழைகள் மட்டுமல்ல, சாதாரண புலிகளை குப்பி கடிக்க வைத்து சாகடித்துவிட்டு தாங்கள் மட்டும் வாழ்வதற்காக வெள்ளை கொடி பிடித்த துரோகிகள் புலிகள்.தலைவர் பெற்றோல் ரின்னோடு இரண்டுபேரை வைத்திருந்தவராம்,தான் இறக்க வேண்டி வந்தால் தனது உடல் அரசின் கையில் கிடைக்காமல் எரித்துவிடும் படி உத்தரவு போட்டிருந்தாராம்,இப்படியான பொய் கதைகளுக்கு மட்டும் புலிகளிடம் குறைவில்லை.

    Reply
  • Ajith
    Ajith

    உண்மையோ, இதில் உண்மையில்லையோ இதற்கு நெடுமாறன், வைகோ, திருமா, சீமான்,போன்ற்வ்ர்களே பதில் சொல்லவும் பொறுப்பேற்கவும் வேண்டும்.

    Why should tamils have to respond to the terror made by Sonia Gandhi and Rajapakse corporation. So, Rajapakse and Sonia are pure vegetarians only eat and drink tamil blood.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // சனத்தைச் சாகடித்தபின் வெள்ளைக் கொடியுடன் ‘சரணடைந்த கோழைகளே’ //
    அட இதைத்தான் அவங்க இராசதந்திரம் என்கிறாங்க. நீங்க கோழைங்க என்கிறீங்க. சாந்தனும், றோகனும், அஜித்தும் கோபிக்கப் போறாங்க….

    Reply
  • thurai
    thurai

    அஜீத்,
    இராசபக்சவும், சோனியாகாந்தியும் தமிழ்மக்களின் இரத்தத்தை குடிக்கும் கொலைகாரர் ஏற்கின்றேன். ஆனால் அவர்கள் தங்கள் சொந்த மக்களை காப்பாற்ருகின்றார்கள், வளர்க்கின்றார்கள். ஆனால் புலிகழும் தமிழீழ விரும்பிகழும் தமது சொந்த இனமான தமிழரின் இரத்தத்தை வைக்கின்றார்களே. இதனை பார்க்கும் எமக்கு சொனியாவும், இராசபக்சவும் புலிகளிலும் பார்க்க மேலானவர்களாகத் தெரிவதில் என்ன தவறுண்டென்பதை விளக்குவீர்களா.

    துரை

    Reply
  • PALLI
    PALLI

    இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. காரனம் இந்தியாவில் குண்டு வைக்க புலிகள்தான் வேண்டும் என்று இல்லை, அங்கு ஒரு மிருககாட்சி சாலையே உண்டு; தவறாக நாம் சிந்திப்பதால் தவறு செய்தவர்கள் தப்பிக்க சந்தர்ப்பம் அதிகம்;

    Reply
  • Rohan
    Rohan

    // சனத்தைச் சாகடித்தபின் வெள்ளைக் கொடியுடன் ‘சரணடைந்த கோழைகளே’ //

    கோழைகளோ காகிதப் புலிகளோ என்பதில் எனக்கு இரு கருத்து இல்லை. யார் செய்தாலும் குற்றமே என்பது என் கருத்து. செத்த புலி அடிக்கும் வீரர்களை என்னசெய்ய

    Reply
  • NANTHA
    NANTHA

    இவ்வளவும் தெரிந்த ரோகன் எதற்காக புலிகளை எச்சரித்து தப்ப வைக்கவில்லை என்பதுதான் தெரியவில்லை. சிலவேளை இந்த “வெள்ளைக்கொடி” ஐடியா ரோகன் கொடுத்ததாக இருக்குமோ?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….திருமா, சீமான்,போன்ற்வ்ர்களே பதில் சொல்லவும் பொறுப்பேற்கவும் வேண்டும்….// துரை

    தமிழ் மக்களின் எழுச்சியை அடக்கவே தண்டவாளம் தகர்ப்பு நாடகம்? – சீமான் கேள்வி
    சென்னை, ஜூன் 14,2010

    ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் எழுச்சியையும் அடக்கி விடும் அற்ப நோக்கத்தோடு ‘விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு’ நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

    “விழுப்புரம் அருகே சித்தணியில் மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தை வெடிவைத்துத் தகர்த்ததாகவும், விழிப்புணர்வுடன் துரித கதியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் அசம்பாதிவிதம் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் ராஜபக்ஷேவின் வருகைக்கு எதிரான துண்டுப்பிரசுரம் ஒன்று கிடந்ததாகவும் அப்பிரசுரத்தில் பிரபாகரனின் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்ததாகவும், ஆகவே பிரபாகரனின் ஆதரவாளர்கள் அல்லது ஈழ விடுதலை ஆதரவாளர்கள் இந்த தண்டவாளத் தகர்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன.

    ஆனால் இந்த தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. இதனை தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை.

    முதலாவதாக ரயில் தடம் புரள்வதையும், மோதலையும், நூற்றுக் கணக்கான மக்கள் அழிவையும் எதிர்பார்த்து குண்டு வெடிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு சிறிய காகிதத்தில் எழுதப்பட்ட சில வரிகள் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற கேள்வியெல்லாம் தொக்கு நிற்கிறது.

    அப்படித்தான் உரிமை கோர வேண்டுமானால், சிறிய காற்றுக்குக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாத கையால் எழுதப்பட்ட காகிதத் துண்டு தான் அவர்களுக்கு கிடைத்ததா? மின்னியல் யுகத்தில் இவையெல்லாம் சோடிக்கப்பட்ட சிறுபிள்ளத் தனமானவையாகவே தோன்றுகின்றன.

    இப்படி இருக்கையில் சம்பவ இடத்தில் கிடந்த துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில் விசாரணையைக் கொண்டு செல்வதாக போலீசார் கூறும் போது விசாரணை நேர்மையாக நடைபெறுமா? என்கிற அச்சம் எழுகிறது.

    அதே போல மாநிலக் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே சம்பவம் நடைபெற்ற ஒரு சில மணி நேரத்தில் இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை.

    புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை.

    சம்பவ நடந்த இடத்தில் கிடந்ததாக இவர்களால் சொல்லப்படும் துண்டுக்காகிதத்தை வைத்து இவர்களாகவே முடிவைச்சொலவது எவ்வாறு சரியாகும்? விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு விஷயத்தில் காவல்துறையினர், முழுமையான விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் பெறுவதற்கு முன்பே சம்பவம் நடந்த ஒருசில மணி நேரங்களில் அவசரப்பட்டு கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.

    அதே போல முந்தைய சேலம் வண்டியின் டிரைவர் பயங்கர வெடிச் சத்தம்கேட்டவுடன் நிலைய அதிகாரி ருத்ரபாண்டிக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் பேரணிக்கு முந்தைய ரயில் நிலையமான முண்டியம்பாக்கம் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினார் என்றும் அதன் பின்பு திருச்சி வண்டியின் டிரைவர் 10 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.இது நம்ப முடியவில்லை.ஏனென்றால் வெடிச்சத்தம் கேட்டவுடன் ரயிலை நிறுத்துவார்களே தவிர இயக்க மாட்டார்கள். இது போன்று பல சந்தேகங்கள் எழுகின்றன.

    சித்தணி தண்டவாளத் தகர்ப்பில் உண்மை நிலையை அரசு விளக்க வேண்டும். அதை விட்டு விட்டு பேரினவாத இலங்கை அரசிற்கு எதிராக போராடுகிறவர்களை அச்சுறுத்தும் நோக்கோடு முன்கூட்டியே திட்டமிட்டு விசாரணையை முன்னெடுப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் விஷயமாக உள்ளது.

    போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய போது தமிழர்கள் தங்களைத் தாங்கள்தான் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டார்களே தவிர பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்ததில்லை. தவிரவும் பிரபாகரனின் தம்பிகள் யார் என்பதையும் இங்கே அடக்குமுறைச் சக்திகளுக்குச் சுட்டுக் காட்ட விரும்புகிறேன்.

    ஈழத் தமிழ மக்கள் மீதான வன்னி யுத்தத்தை பேரினவாத இலங்கை அரசு கட்டவிழ்த்து விட்ட போது தமிழகத்தில் போர் நிறுத்தம் கேட்டு நாமெல்லாம் போராடினோம். தன்மானத் தமிழனும் வீரத்தியாகியுமான முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீர வேங்கைகள் தங்களின் இன்னுயிரை ஈந்தனர்.

    பிரபாகரனின் உண்மையான தம்பியான முத்துக்குமார் நமக்கெல்லாம் விட்டுச் சென்ற பாடம் அதுதான். தன்னுயிரைக் கொடுத்து, தன்னை வதைத்து, தன்னை எரித்து பேரினவாதிகளை எதிர்ப்பதுதான் பிரபாகரனின் தம்பிகளின் போராட்ட மரபே தவிற அடுத்தவர் உயிர்களைப் பறிப்பதல்ல.

    பேரெழுச்சியோடு முத்துக்குமாரின் ஊர்வலத்தில் திரண்டு கண்ணீரோடு முத்துக்குமாரை வழியனுப்பிய தாய்மார்களும் பொதுமக்களும் தங்களுக்காக, தங்களின் இனத்துக்காக தன்னுயிர் ஈந்தவன் முத்துக்குமார் என்பதால் அவனை ஒரு மகனாக நினைத்து தமிழ்தாய் வணங்கி நிற்கிறாள். அப்படி தமிழ் தாய்மார்களின் வணக்கத்திற்குரியார்கள்தான் பிரபாகரனின் தம்பிகள் என்பதை நாம் தன்னலமற்ற தியாகத்தால் உலகுக்கிற்கு உணர்த்தியிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    இதை எல்லாம் விட மிகச் சிறந்த வரலாற்று முன்னுதாரணமாக எம்மினத் தலைவர் அண்ணன் பிரபாகரனும் சான்றாகி நிற்கிறார். எதிரிக்கும் கூட கருணை கட்டு என்கிற விடுதலைப் போர் மரபுத் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள ஈழ விடுதலைப் போராளிகளே அதற்குச் சான்று. அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்திற்குள் அப்பாவி தமிழ் மக்களை அழைத்து வந்து லட்சம் லட்சமாக கொன்றொழித்தது பேரினவாத இலங்கை அரசு.

    தம் கண்ணெதிரே எந்த மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதமேந்தினாரோ அந்த மக்களே கொன்றொழிக்கப்பட்ட போது கூட தங்களிடம் இருந்த கனரக ஆயுதங்களாலோ, நவீன விமானங்களாலோ புலிகள் சிங்களர்களான பொது மக்களைத் தாக்கியதில்லை. பேரிவனவாத இலங்கை அரசின் பொருளாதார நலன்களையும், இராணுவக் கட்டமைப்பையும் சிதைப்பதாகத்தான் புலிகளின் தாக்குதல் இருந்தது.

    ஏழு விமானத் தாக்குதல் நடத்தப்பட்டும் கூட அதில் ஒரு சிங்கள பொதுமகனாவது கொல்லப்பட்டிருப்பனா? என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    போரை முன்னெடுத்த இலங்கை அரசிற்கும், போருக்கு துணை போன காங்கிரஸ் அரசிற்கும் எதிராக ஜனநாயக ரீதியாக தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துவங்கியதும் பேரினவாத யுத்தக் குற்றவாளிக்கு டெல்லியில் சிகப்புக் கமபள வரவேற்போடு, விருந்து கொடுத்து கௌரவித்ததையும் நினைத்து தமிழ் மக்கள் மனக்கொந்தளிப்புக்குளாகியுள்ளனர். தமிழகமெங்கிலும் பல்லாயிரம் பேர் ராஜபக்ஷேவின் வருகையைக் கண்டித்து போராடி கைதாகினர்.

    தமிழ் மக்களின் இந்த மனக்கொதிப்புகளை அடக்கியும் ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் எழுச்சியையும் அடக்கி விடும் அற்ப நோக்கத்தோடு இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்று தெரியவில்லை,” என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Reply
  • thurai
    thurai

    புலிகள் காந்திவழியிலேயே நடந்தவர்களென்று சீமான் ஈழத்த்மிழர்களிற்கு புலம் பெயர்நாடுகளில் விரைவில் சொற்பொழிவாற்ருவார். அதனையும் கேட்பதற்கு ஒர் கூட்டம் புலத்திலுள்ளது.

    இலங்கை அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஈழத்தமிழரிடையேயும், இந்திய அரசினை குற்ரம் சாட்டி தமிழகத்திலும் புலிகளிற்கு ஆதரவு தேடமுற்படுவதன் பலன்களே இந்த அசம்பாவிதங்கள். இது தொடர்கதை. சிஙக்த்தின் மீது ஏறி விளையாடும் சுண்டெலிகளால் சிங்கத்திற்கு தொல்லைதான். ஆனால் உயிராபத்து சிங்கத்திற்கல்ல. சுண்டெலிக்குத்தான்.

    துரை

    Reply
  • BC
    BC

    //எதிரிக்கும் கூட கருணை கட்டு என்கிற விடுதலைப் போர் மரபுத் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள ஈழ விடுதலைப் போராளிகளே அதற்குச் சான்று.//

    நல்லாக விளங்கிவிட்டது குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி.

    Reply
  • Rohan
    Rohan

    பிரபாகரனின் தம்பியர் ஒருவர் கைது?
    ஆயுத தொகுதி ஒன்றுடன் இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொண்டு சென்ற பையில் சந்தேகத்துக்குரிய பொருட்கள் இருந்ததாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்..

    கைதானவர் 52 வயதான மொஹமட் பசீர் என கூறப்படுகிறது. அவருடன் மேலும் ஒருவர் சென்ற போதிலும் விசாரணைகளின் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

    Reply