யுத்தத் தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கென வவுனியாவில் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலையை அமைத்துக் கொடுக்கத் தீர்மானித்துள்ள பிரபல இந்திய நடிகர் விவேக் ஒபரோய் அதற்கென முதற்கட்டமாக 50 மில்லியன் ரூபாவினை வழங்கவுள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறுகிய காலத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் தற்போது அமைதி சூழல் உருவாகியுள்ளதை சர்வதேச நாடுகள் உணர்ந்துகொள்ள ஐஃபா திரைப்பட விழா வழிவகுத்துள்ளது எனவும் குறிப்பிட்டார். சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள பிரபல இந்திய நடிகர் விவேக் ஒபரோய் நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் தலைமையில் ஐஃபா விருது விழா சம்பந்தமான இச்செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு நடிகர் விவேக் ஒபரோய் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் :-
நான் வவுனியாவிற்குச் சென்றிருந்தேன் யுத்தத்தினால் பாதிப்படைந்த பகுதியைப் பார்வையிட்டேன். அங்கு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
PALLI
புலம் பெயர் தேசத்தில் தமிழ் நடிகர் சிலரின் படங்களை கோடிகணக்கில் எடுத்து அவர்களை வளர்ப்பவர்கள் இந்த தகவலை படிப்பது நல்லது; ஒரு சில தமிழரே இவரது படங்களை பார்ப்பார்கள்; அவர் செய்ய்ய துடிக்கும் உதவியில் நாமும் பங்கு கொள்கிறோம் என எந்த தமிழ் நடிகரும் இதுவரை சொல்லவில்லை; ஆனால் ஈழ தமிழர் போராட்டத்துக்கு மட்டும் சில ஏற்பாட்டுடன் (வேண்டாமே) கமராவுக்கு போஸ் கொடுப்பார்கள், இவர்கள் தமிழருக்காய் தேசிய திரை பட நிகழ்வை நிராகரித்ததை விட விவேக் ஒபரோய் அதில் கலந்து தனது தொழிலையும் மதித்து உன்மையில் தமிழருக்கு என்ன வேண்டும் என்பதை நிருபித்து விட்டார்,
வன்னி மக்கள் மனதில் இன்று விவேக் ஒபரோய் ஒரு சூப்பர்ஸ்ரார், அதுவே உன்மையும் கூட பல்லியும் அவருக்கு தமிழனாய் நன்றி தெரிவித்து கொள்கிறேன்;
BC
உண்மையான சுப்பர் ஸ்டார் விவேக் ஒபரோய்க்கு நன்றிகள்.
சாந்தன்
முதலில் இச்செய்தியின் மூலம் என்ன? இணைப்பு இருந்தால் தரவும். அல்லது செய்தி ஆசிரியர் அப்போது உடனிருந்தாரா?
நான் அறிந்த வரை இச்செய்தியை ‘லங்கா புவத்’ மட்டுமே வெளியிட்டுள்ளது. ஆனால் விவேக் ஒபரோய் 50 மில்லியன் கொடுத்தார் என அதில் இல்லை, மாறாக அவர் ஒரு பாடசாலையைக் கட்ட ‘திட்டமிட்டிருக்கிறார்’ எனவும் அதற்காகன ஆரம்பக்கட்ட நிதியாக 50மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவுமே குறிப்பிட்டிருக்கிறது. அந்த 50 மில்லியன் யாரால் ஒதுக்கப்பட்டிருக்கிறது என சொல்லப்படவில்லை. இச்செய்தி வேண்டுமென்றே வாசகனுக்கு ஒரு ‘மயக்க’ நிலையை தோற்றுவிப்பதற்காக வேண்டுமென்றே எழுதப்பட்டிருப்பதாக கருத இடமுண்டு!
“..The Superstar is planning to put up a school in Vavuniya located in Mareithuruppai where 75 students are studying. As an initial cost of the 1st phase of the construction Rs 50 million is allocated…”
விவேக் ஒபரோய் 50 மில்லியன் கொடுக்கிறார் என்றால் அவ்வாறு போட்டிருக்கலாமே? (இந்திய மதிப்பு அண்ணளவாக 25 மில்லியன் (2.5 கோடி) விவேக் ஒபரோயின் சம்பளம் 4 கோடி, இதில் 2.5 கோடியை அவர் கொடுக்கிறார் என்றால் பாராட்டவேண்டும் தான்.
இதேபோலத்தான் கடந்த வருடம் எமது கல்லூரிக்கு திடீரென வந்த ராணுவம்/அரசியல்வாதி குழு ஒன்று உங்களுக்கு ஜனாதிபதியின் மகன் நீச்சல் தடாகம் கட்டித்தரப்போகிறார் இடத்தைக்காட்டுங்கள் எனச் சொல்லி அளவெடுக்க ஆரம்பித்து விட்டனர். பின்னர் அச்செய்தி அதிபரால் எமக்கும் சொல்லப்பட்டது. பின்னர் அத்திட்டம் வேறோர் கல்லூரிக்குப் போய் விட்டது. நாமும் ஏதோ நல்லது நடந்தால் சரி என விட்டுவிட்டோம்.
ஆனால் நேற்றைய செய்தி…
கல்லூரியில் வெட்டிய கிடங்கு வெட்டியபடி இருக்க வந்த இரும்பு, சீமெந்து எல்லாவற்ரையும் தனியாருக்கு விற்றுவிட்டு கொழும்புக்கு ஓடிவிட்டது நாமல் ராஜபக்சாவின் தோழர்கள் கூட்டம்!
சாந்தன்
//… இவர்கள் தமிழருக்காய் தேசிய திரை பட நிகழ்வை நிராகரித்ததை விட விவேக் ஒபரோய் அதில் கலந்து தனது தொழிலையும் மதித்து உன்மையில் தமிழருக்கு என்ன வேண்டும் என்பதை நிருபித்து விட்டார்….//
என்ன இது ‘தேசிய திரைப்பட நிகழ்வா? யார் சொன்னது? அப்போ ஏன் அதற்கு சர்வதேச இந்திய விழா எனப் பெயர்? அது ஏன் ஊரூராக சுற்றி வருகிறது? டெல்லியில் நடாத்தப்படும் தேசிய திரைப்பட விழா வேறு இது வேறு. இது வெறும் வியாபார நிகழ்வு. இதுவரை இந்த ‘தேசிய’ விழா இந்தியாவில் நடைபெறவே இல்லை! இதில் தெரிவுசெய்யப்படும் படங்கள் ஹிந்தி மட்டுமே!
மேலும் இவ்விழா ஒன்றில் பேசிய மம்முட்டி இந்திய சினிமா என்றால் பொலிவூட் (ஹிந்தி) மட்டுமல்ல வேறு மொழிச் சினிமாவும் உண்டு அதை எல்லாம் கணக்கிலெடுக்காமல் இந்தியா என்றால் ஹிந்தி சினிமா மட்டுமே என கூறுவது பிழை என விழா மேடையிலேயே ஆத்திரத்துடன் பேசியது பரபரப்பான கதை!
//…அவர் செய்ய்ய துடிக்கும் உதவியில் நாமும் பங்கு கொள்கிறோம் என எந்த தமிழ் நடிகரும் இதுவரை சொல்லவில்லை;…//
தமிழ் நடிகரை விடுங்கள் பல்லி ‘காசைச் சுண்டினால் ஆட்டம்போடும் ‘ கூட்டம். நீங்கள் ஏன் விவேக் ஒபராயிக்கு பங்களிக்கக்கூடாது? ஆரம்பிக்கலாமே உங்கள் பங்களிப்பை!
//….ஆனால் ஈழ தமிழர் போராட்டத்துக்கு மட்டும் சில ஏற்பாட்டுடன் (வேண்டாமே) கமராவுக்கு போஸ் கொடுப்பார்கள்,…//
கொழும்பில் நடந்த விழாவில் விவேக் ஒபராய், சல்மான் கான் போன்றவர்கள் நிமிடத்துக்கு ஒரு முறை சொன்ன வாசகம் “நாம் இங்கே பாலம் கட்ட வந்திருக்கிறோம், சுவர்கள் கட்ட வரவில்லை” என. ஆனால் விவேக் ஒபராயும் சல்மான் கானுக்கும் இடையில் இருக்கும் தனிப்பட்ட பிரச்சினையை வெளிப்படையாக காண்பித்தார்கள் எனச் செய்தி படித்தேன்! நல்ல பாலம்…நல்ல சுவர்! சும்மா யாரோ எழுதிக்கொடுத்ததை சொன்னால் சினிமாவில் சரிவரலாம், நிஜத்தில்?
thurai
வராமல் தடுக்கப்பட்ட நடிகர்கழும் வந்திருந்தால் மேலும் உதவிகள் கிடைத்திருக்கும். மானமுள்ள ஈழத் தமிழர்களிற்காக் உயிரைக் கொடுக்கும் தமிழீழ புலிகளின் அனுதாபிகள் புலத்திலும், தமிழகத்திலும் 50 மில்லியனைச் சேர்த்து உடனடியாக தங்களின் மானத்தைக் காப்பாற்ருவார்களென
எதிர்பார்க்கின்றேன்.
துரை
BC
//துரை – மானமுள்ள ஈழத் தமிழர்களிற்காக் உயிரைக் கொடுக்கும் தமிழீழ புலிகளின் அனுதாபிகள் புலத்திலும் தமிழகத்திலும் 50 மில்லியனைச் சேர்த்து உடனடியாக தங்களின் மானத்தைக் காப்பாற்ருவார்களென எதிர்பார்க்கின்றேன். //
அவர்கள் அவசரகால நிதிசேகரிப்பு எல்லாம் செய்வார்கள். ஆனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்ல, தங்கள் சொத்தோடு சொத்துகள் சேர்ப்பதற்காக.
சாந்தன்
//….வராமல் தடுக்கப்பட்ட நடிகர்கழும் வந்திருந்தால் மேலும் உதவிகள் கிடைத்திருக்கும்…..//
ஆமாம்..கிடைத்திருக்கும். ஆனால் அவர்களில் பலர் தமது விமானச்செலவு, ஹோட்டல் பதிவு உட்பட ஒன்றுக்கும் பணம் கொடுக்கவில்லை என அழுகிறது ஸ்ரீலங்காவின் உல்லாசப்பயணத்துறை! இவர்களுக்கு இருக்கைகள் கூட இலவசம். இவர்கள் நிச்சயமாக அள்ளிக்கொடுப்பார் கிள்ளி எடுக்க ரெடியாக இருங்கள்!
மேலும் இ்வர்களின் ஹோட்டல் பதிவுக்கு முன்பணம் செலுத்தியது ஸ்ரீலங்கா அரசு. வராமல் விட்டவர்களின் அறையை ‘ஓசியில்’ எடுத்தவர்களில் முதன்மையானவர் அமைச்சர் லஷ்மண யாப்பா ! அதுமட்டுமா இந்த அறைகளை ( அரசால் அட்வான்ஸ் கொடுக்கப்பட்ட) எடுக்க போட்டா போட்டி எனச் சொல்லிருக்கிறார் ஹோட்டல்காரர்!
//… தமிழகத்திலும் 50 மில்லியனைச் சேர்த்து உடனடியாக தங்களின் மானத்தைக் காப்பாற்ருவார்களென எதிர்பார்க்கின்றேன்….//
வந்த நடிகர்கள், வராமல் விட்ட நடிகர்கள், வந்தும் விமானநிலையத்திலேயே திரும்பிவிட்டோம் என ’வாக்குமூலம்’ கொடுத்த நடிகர்கள், வந்தும் நாட்டின் ‘ஜனநாயகமுரைப்படி பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி‘ தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தும் வராமல் விட்ட நடிகர்கள், வந்து தமது சொந்தப்பிரச்சினைகளை அரங்கேற்றிய நடிகர்கள் எல்லோரும் ஏற்றிய மானத்துக்கு வராமல் விடுவது பரவாயில்லை !
//…..அவர்கள் அவசரகால நிதிசேகரிப்பு எல்லாம் செய்வார்கள். ஆனால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்ல, தங்கள் சொத்தோடு சொத்துகள் சேர்ப்பதற்காக….//
யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக ‘நீல சேனை’ புகழ் நமல் ராஜபக்ச்சா இரும்புக்கம்பி, சீமெந்து சுருட்டின மாதிரியோ? அல்லது இந்தா அள்ளிக்கொடுக்கிறோம், சகோதரங்கள் என சொல்லி இப்போது வீடெல்லாம் கட்டேலாது விளைச்சல் முடிய அவர்களே கட்டிக்கொள்ளலாம் என திருவாய் மலர்ந்திருக்கும் மஹிந்தா மாதிரியோ?
இந்த கூத்துக்கு அரசு செலவழித்த தொகை 1000மில்லியன் வரை வரும். இதில் போடப்பட்ட 2700 ஆசனங்களில் 400 மட்டுமே இலங்கையர்களுக்கு. வராமல் விட்ட நடிகர்களும் வந்திருந்தால் 2300 x 50 = ??? எக்கச்சக்க லாபம் வந்திருக்கும். தமிழ் மக்களும் அஹா..ஓஹோ என வாழ்ந்திருப்பார்கள் !
ஆனால் சிங்கள மக்களின் கருத்துகளை ஸ்ரீலங்கா பேப்பர்களில் பார்க்கும் போது பொதுவாக அவர்களின் கருத்து “25000 ரிக்கற் எடுத்து ிவர்கள் என்ரரெயின் பண்ணி நாம் பார்க்க வேண்டுமா” எனும் திட்டல் பாணீயிலேயே இருக்கிறது. அத்துடன் இந்த ரிக்கற்றுகளின் ஒரிஜினல் விலை இரண்டு லச்சத்தில் இருந்து 12 லட்சம் வரை இருந்தது என்கிறார்கள். பின்னர் 25000க்கு குறைக்க வேண்டி வந்தும் யாரும் போகவில்லையாம். வந்தவர்களில் இருவர் மூவ்ரைத்தவிர விருது வாங்கவே ஆளில்லையாம். ஸ்ரீலங்கா நடிகைக்கும் போகிறபோக்கில் ஒரு விருது கொடுத்துள்ளனர். அவரே இந்த விருது வழங்கப்படப்போகும் விடயம் கடைசி நேரத்திலேயே தெரியும் எனச் சொல்லி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்!
NANTHA
சாதாரணமாக இலங்கைத் தமிழர்கள் இந்தி படங்கள் பார்ப்பது கிடையாது. அந்தநிலையில் ஒரு இந்திநடிகர் இலங்கயில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சிறுவர்களுக்காக “ஏதோ” உதவி செய்யப் புறப்பட்டதை “முட்டி” மோதி தேவையில்லாத “இயக்க” தர்மநியாயங்களை முன்வைத்து நேரத்தை வீணடிக்காமல் இருப்பது நல்லது.
BC யின் கருத்து கருத்தில் கொள்ளக் கூடியதே. இதுவரையில் “கம்பி வேலிக்குள்” என்றெல்லாம் வானாளாவ கதையளந்தவர்கள் பத்துநயா பைசா அந்த மக்களுக்காகக் கொடுக்கவில்லை.
இலங்கையில் தமிழன் மண்டையை போட்டாலே தங்களுக்கு “சுகவாழ்வு” என்று அலைபவர்களுக்கு மற்றவர்களின் மனிதாபிமானம் எப்போதும் கடுக்காய்தான்!
பல்லி
//என்ன இது ‘தேசிய திரைப்பட நிகழ்வா? யார் சொன்னது? அப்போ ஏன் அதற்கு சர்வதேச இந்திய விழா எனப் பெயர்? //
ஜயோ தப்பு தப்பு, இந்த நாடு கடத்திய ஈழத்துக்கு பின் சர்வ வருகுதில்லை சாந்தன்;
சாந்தன்; விடிந்தால் கலியாணம்; விடிய முன் ஒருதரம்; என்பது போல் எல்லாத்தையும் தப்பு தப்பாய் பார்க்காதையுங்கோ;
// பல்லி ‘காசைச் சுண்டினால் ஆட்டம்போடும் ‘ கூட்டம். நீங்கள் ஏன் விவேக் ஒபராயிக்கு பங்களிக்கக்கூடாது? ஆரம்பிக்கலாமே உங்கள் பங்களிப்பை!//
அவரது உதவியை பாராட்டியதே பல்லியின் ஆரம்ப பங்களிப்புதான், அது இன்னும் தொடரும் சாந்தன் கவலை வேண்டாம்;
// “நாம் இங்கே பாலம் கட்ட வந்திருக்கிறோம், சுவர்கள் கட்ட வரவில்லை” என.//
பாலம் என்பது உறவு, சுவர் என்பது பிரிவு,
தொடரும் பல்லி;
சாந்தன்
//..பாலம் என்பது உறவு, சுவர் என்பது பிரிவு, .//
அதை வரிக்கு வரி கொழும்பில் சொன்னவர் விழாவில் என்ன செய்தார் என்பதே கேள்வி. அவருக்கும் (விவேக் ஒபரோய்) சல்மான் கானுக்கும் தனிப்பட்ட பிரச்சினை ஏற்கனவே உண்டு. பாலம் கட்ட வந்தவர்கள் ஆளை ஆள் வெளிப்படையாகவே தவிர்த்தனர் என்பது செய்தி! இது என்ன சொல்கிறது என்றால் இந்த சுவர், பாலம் , எல்லாம் வெறும் பம்மாத்துக் கதைதான்!
இவ்வளவு காலமும் கொழும்பில் ஜனநாயகம், உரிமை, சகோதரம், சமாதானம், சமத்துவம் என்பன பட்ட பாட்டைத்தான் சுவர், பாலமும் படுகிறது!
பல்லி கருத்துகளை சொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து தனித்து பிரித்தெடுத்து (Out of context) ஸ்பின் பண்ணுவது நல்லதல்ல!
இந்த விழா எந்த வகையில் ‘தேசிய விழா’ எனச்சொன்னால் நல்லது!
PALLI
//இந்த விழா எந்த வகையில் ‘தேசிய விழா’ எனச்சொன்னால் நல்லது!//
கடந்த கால தமிழ் தேசியம் இந்த விழாவில் கவனம் கொண்டிருப்பதால் இது ஒரு தேசியவிழா என பல்லி பரபரப்பாய் சொல்ல மாட்டேன், முன்னாடியே சொல்லி விட்டேன் சர்வ தவறிவிட்டது, சுட்டி காட்டியதுக்கு நன்றி;
//பல்லி கருத்துகளை சொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து தனித்து பிரித்தெடுத்து (Out of context) ஸ்பின் பண்ணுவது நல்லதல்ல!//
உன்மைதான் அதனால்தான் கடுப்புகளை களைந்து அதுக்கான பதிலை பல்லியின் வழியில் சொல்லுகிறேன்;
//பாலம் கட்ட வந்தவர்கள் ஆளை ஆள் வெளிப்படையாகவே தவிர்த்தனர் என்பது செய்தி//
இதில் என்ன தப்பு கருத்து முரன்பாடு இருப்பின் அவர்கள் பழகுவதை தவிர்த்து கொள்ளலாம்; ஆனால் தாக்கி கொள்ளபடாது;
PALLI
புலிக்காய் பணம் சேர்த்த இந்திரன் பல கோடி செலவு செய்து ரம்பாவை தமிழ் மருமகளாக்கும் போது தமிழர் ஆதரவு இல்லாத ஒரு நடிகர் அதுவும் இந்தி நடிகர் தமிழருக்கு உதவ போவதாக சொல்லுவது பாராட்டபட வேண்டும், அதுவும் அவர் தெரிவு செய்தது பாடசாலை. அதாவது கல்வி, இதனால் அவரை பாராட்டுவதில் பல்லிக்கு தப்பாக படவில்லை, ஏன் ஈழபோராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதுக்காய் சில நடிகர் படம் புலம்பெயர் தேசத்தில் ஓடபடாது, சிங்கள சொல் பேசியதால் ஓடபடாது காங்கிறஸ்சில் இனைந்தால் ஓடபடாது என வேடம் கட்டும் இங்குள்ளவர்கள் எமது வன்னி மக்களுக்காய் இந்த நாயகர்கள் என்ன செய்தார்கள் என கேட்டதுண்டோ;
விசுவன்
//புலிக்காய் பணம் சேர்த்த இந்திரன் பல கோடி செலவு செய்து //
இந்திரன் எனக்கு தெரிந்த ஒருவர்! இவர் புலிக்காக பணம் சேர்த்தது என்பது புனைகதை! 5 சகோததர்கள் கடும் உழைப்பால் தான் இன்று முன்னணியில் நிற்கிறாரகள்! இவர்கள் தான் புலிக்கு பணம் கொடுத்தார்கள். இவர்கள் மிகவும் கஸ்டப்பட்டு முன் வந்தார்கள். ஆனால் இவர்கள் இந்த நடிகர் போல மக்களுக்க உதவுவார்களா என்பது சந்தேகமே! புலிக்கு பணம் கொடுத்த பலர் மக்கள் கஸ்டத்திற்கு பணம் கொடுப்பார்களா? புலிக்கு பணம் கொடுத்தால் விலாசம் அடிக்கலாம் தானே!
மாயா
விவேக் ஒபரோய் இந்தி பட நடிகர், ஆனால் இவர் ஒரு தமிழர். இவர் சுனாமி காலத்தில் தமிழ் நாட்டின் ஒரு பகுதியை தத்தெடுத்து முழுமையாக கட்டிக் கொடுக்க முனைந்த போது ஜெயலலிதா அதைத் தடுத்து விட்டார். இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் அப் பகுதி மக்களுக்கு , அவரது மறைமுக பப்ளிசிட்டி இல்லாத உதவிகள் மூலம், அவர்கள் முன்னேற வழி செய்தார். இவரது படங்கள் தமிழில் வெளி வருவதுமில்லை:இவருக்கு பெரிதாக தமிழ் ரசிகர்களும் இல்லை. மனிதாபினத்தை மட்டுமே இவரிடம் காண முடியும். அந்த வகையில் இவரது இவ் உதவிக் கரம் பாதிக்கப் பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு நிச்சயம் பெரிதும் உதவும். தனது சுயநலத்துக்காக விழாவில் பங்கேற்காத கலைஞர்கள், கலைஞர்களே இல்லை. கலைஞர்களுக்கு அரசியலை விட , மக்கள் நலனே முதன்மையானது. அதை தமிழ் நடிகர்களை விட , ஒபராயிடம் பார்க்க முடிகிறது. புலிகள் எப்போதும் சாவின் மூலம் , அதாவது சாவது அல்லது சாவடிப்பது எனும் தியரியில் வாழ்வதேயாகும். வாழ்வதற்கு அல்லது வாழ வைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை.
வாழ வழி காட்டும், விவேக் ஒபரோய்க்கு எனது வாழ்த்துகள்.
சாந்தன்
//….இந்தி நடிகர் தமிழருக்கு உதவ போவதாக சொல்லுவது பாராட்டபட வேண்டும்….//
நான் June 9, 2010 1:57 pm இல் எழுதிய பின்னூட்டத்தில் “விவேக் ஒபரோயின் சம்பளம் 4 கோடி, இதில் 2.5 கோடியை அவர் கொடுக்கிறார் என்றால் பாராட்டவேண்டும் தான்” எனச் சொல்லி இருப்பதை நீங்கள் படிக்கவில்லை போலும்.
ஆனாலும் இச்செய்தியின் மூலத்தில் (லங்கா புவத்) குழப்பம் தரும் வகையில் இருந்த செய்தியை தேசம் செய்தியாலர் தனக்கு விரும்பியபடி மொழிபெயர்த்துள்ளார். மூலச்செய்தியில் விவேக் ஒபராய் 50 மில்லியன் தருவதாக சொல்லவில்லை!
மேலும் இந்த வவுனிய விஜயம் விவேக் ஒபராய் தனது பெயரை ‘காப்பாற்றிக்கொள்ள’ எடுத்த நடவடிக்கையே அன்றி வேறல்ல. ஆகவே இதற்கு ‘நன்றி’ சொல்ல வேண்டுமாயின் நியாயமாக பகிஷ்கரிப்பை கோரியோருக்கே நன்றிகள் சேரவேண்டுமல்லவா?
விவேக் ஒபராயும் விழா ஏற்பாட்டாளரும் தொலைக்காட்சியில் தோன்றி விவதித்தபோது ‘காசு கொடுத்து அமிதாப் வீட்டுக்கு முன்னால் ஆட்களைக் கொண்டு வந்தனர்’ என விழா ஏற்பாட்டாளர் கூறப்போக அதற்கு செய்திவாசிப்பவர் ஆதாரம் கேட்க விடயம் சிக்கலாகி விவேக் ஒபராய் தலையை கவிழ்த்தது பார்த்தேன். அப்போதுகூட அவர் வவுனியா போகும் விடயம் சொல்லவில்லை. அவர்களின் திட்டத்தில் கிரிக்கற் மட்டுமே இருந்தது. அதுவும் ஸ்ரீலங்கா சிறுவர் கிரிக்கற் நலநிதிக்கு என இருந்து பின்னர் ‘புலிப்போராளி’ களுக்கும் இதில் கொஞ்சம் கொடுக்கலாம் என்றிருக்கிறோம் என மாறியது.
பின்னர் நடந்த ஜோக் இன்னும் மணி! சல்மான் கான் மற்றும் ஜக்குலின் ஃபெனாண்டசுக்கு வவுனியா போக விருப்பமில்லை என கைவிரித்தனர். ஆகவே போரினால் பாதிக்கப்பட்ட சிறுவருக்கான வீடமைப்புத்திட்டம் ஒன்றில் கையில் சீமெந்து கலவையுடன் போடோவுக்கு போஸ் கொடுத்தனர்.
வீடமைப்பு எங்கே தெரியுமா? ஜா-எலவில் !
வீடமைப்போர் யார் தெரியுமா? சமாதான நோபல் பரிசுபெற்ர அமெரிகாவின் முன்னைநாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டரால் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை அவர் உடல்ரீதியாக பங்களிப்புச் செய்யும் ‘Habitat for the Humanities’ அமைப்பு! (ஆம் ஜிமி காட்டர் கையில் சுத்தியலுடன் முழு நாளும் நிற்பார்) அவமைப்பின் இணையத்தளத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஜா-எலவில் வீடு கட்டுவதாக ’ஜோக்’ எங்கேயுமில்லை! மேலும் ஜக்குலின் ஃபெனாண்டஸ் கையில் சேமெந்துக்கலவையுடன் நிற்கும் படத்தில் இருக்கும் ‘போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்’ கைகளில் ஆளுக்கொரு டிஜிற்ரல் கமரா!
வன்னியில் குழந்தைகளின் கைகளில் டிஜிற்ரல் கமரா இருப்பதாக லிற்றில் எயிட் கூட சொல்லவில்லை!
செய்தியின் உண்மைத்தன்மையும் நடந்த கூத்துகளையும் கேட்கப்போக அதற்குப் பதிலளிகாமல் ரம்பாவில் வந்து நிற்கிறீர்கள். நியாயமா பல்லி?
எனவே பாராட்டத் தேவையில்லை மட்டுமல்ல அதை வைத்துக்கொண்டு போகிற போக்கில் புலிக்கு கல்லெறிவதும் நல்ல விவாதப்பண்புமல்ல.
/சர்வ தவறிவிட்டது, சுட்டி காட்டியதுக்கு நன்றி;….//
’சர்வ’ மட்டுமல்ல ‘தேசிய’ என்பதும் தவறு. இது வெறும் வியாபார விழா. கான்ஸ் திரைப்பட விழா கூட ஒரு வியாபார விழாவே. ஆனால் வியாபாரம் ஒரு பகுதியே அன்றி முழுமையும் அதுவல்ல. இவ்விழா பற்றி இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளர் குறிப்பிடும்போது பரிசு ‘குழப்பத்துக்கு’ கொடுக்கவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.
//…..இதில் என்ன தப்பு கருத்து முரன்பாடு இருப்பின் அவர்கள் பழகுவதை தவிர்த்து கொள்ளலாம்; ஆனால் தாக்கி கொள்ளபடாது;….//
கருத்து முரண்பாடுள்ளவர்கள் பழகுவதை தவிர்க்கலாம் நல்லதும் கூட ஆனால் திட்டமிட்ட இனவாத அடக்குமுறையை நியாயப்படுத்த அரசியலமைப்பு ராணுவ உதவிகொண்டு கொலைசெய்யும் அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு ‘பாலம்’ கட்டச் சொல்வதும் செல்வதும் என்ன நியாயம்? இதற்காகத்தான் சொல்கிறேன் பிரச்சினையின் ஆழ அகலம் அறியாதோர் பேசும் பேச்சுக்கள் ஒரு இனத்தின் போராட்டத்தையே கொச்சைப்படுத்துபவையாக இருக்கும்!
இதேபோலவே தென்னாபிரிக்க இன அடக்குமுறை அரசுக்கு வெள்ளையடிக்க புறப்பட்ட (வெள்ளைக்கார அரசுதான் ஆனாலும் வெள்ளையடிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தனர்) ஸ்ரீலங்காவின் முதலாவது கிரிக்கற் ரெஸ்ற் ரீமின் கப்ரன் கூட சொல்லி இருந்தார். அங்கே சென்றதால் அவரின் விளையாட்டு தொழில் வாழ்க்கைமுழுதும் தடை செய்யப்பட்டது. இவரின் (1982) ‘சுவர்/பாலம் தென்னாபிரிக்க வாக்கியம் இன்றும் ஸ்ரீலங்காவுக்கு பொருந்துவது காலத்தின் கோலம்!
thurai
//எனவே பாராட்டத் தேவையில்லை மட்டுமல்ல அதை வைத்துக்கொண்டு போகிற போக்கில் புலிக்கு கல்லெறிவதும் நல்ல விவாதப்பண்புமல்ல//சாந்தன்
புலி யென்பது தமிழரின் கொடியல்ல, புலி தமிழரிற்கும் உலகத்திற்கும் கொடியதே. பயங்கரவாதப் புலிகள். அன்றும் இன்றும் என்றும். இதனை ஏற்காதவர்கள் மிச்சமாகவுள்ள தமிழரையும் அழித்து புலம் பெயர் நாடுகளில் வீரம் பேச முனைபவர்களேயாகும்.
உலகமுழுவதும் நடப்பது இப்போ புலி வேட்டை. உல்லாச விடுதிகளையும் விட்டு இலங்கையிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக செய்திகள். இவர்களைக்காக்க நாடுகடந்த அரசாங்கம். இன்னமும் இந்த்ப்பணப் புலிகள் தமிழரின் உருமைப்பேச்சை விடவில்லை. முதலில் இவர்களாக்
ஒதுங்காத வரை தமிழரின் உருமைப்பேச்சு புலிகளின் பயங்கரவாதப் பேச்சாகவே இருக்கும்.
புலிகள், புலிகள் சார்ந்த அமைப்புகள், தங்கள் சுயநலன்களிற்காக ஈழ்த்தமிழரின் பெயரால் பிழைப்பு நடத்தும் வரை சிங்கள அரசு செய்யும் தவறுகளிற்கு பாதுகாப்பு புலிகழும் அவர்களின் ஆதரவாளார்களுமேயாகும்.
துரை
BC
//நமல் ராஜபக்ச்சா இரும்புக்கம்பி, சீமெந்து சுருட்டின மாதிரியோ? //
வெளிநாட்டில் இருந்து கொண்டு புலிகளின் உலக புகழ் சுருட்டல் எந்த மாதிரியோ? என்று கேட்பது ஆச்சரியம் தான்! தங்கள் விசிற்றிங் அறையில் துப்பாக்கியோடு பிரபாகரன் நிற்க்கும் ஒரு பெரிய படமும் புலிக் கொடியும் வைத்திருந்த புலி விசிறிகள் பலர் இருந்தனர். அதில் கணிசமானோரின் அறையில் இப்போ படத்தையும் கொடியையும் காணவில்லை. அவர்களிடம் கேட்டால் புலிகளின் சுருட்டல் எந்த மாதிரியானது என்று அறியலாம்.
தமிழ் வாதம்
நீங்கள் பலர் முன்னைனாள் போராளிகளல்லவா! புலிக் காய்ச்சலால் அவதிப்பட்டு, இங்கு கருத்தாடுவதுடன் சேர்த்து, இதிலுள்ள அனைவரும் சேர்ந்து, நீங்கள் வலிந்து ஆதரவு நல்கும் அரசுடன் சேர்ந்து, அனாதைப் பிள்ளைகளுக்கு ஒரு முன்மாதிரியான கல்வி நிலையமொன்றை அமைத்து, செயல் வீரர்களாக மாறக் கூடிய நல்ல தருணத்தை ஏன் உருவாக்கக் கூடாது? சிந்தனைகளிலும் சின்ன மாற்றம் ஏற்படும். விமர்சகர்கள் படைப்பாளிகள் ஆகும் தோற்றம் கிடைக்கும்.
PALLI
//இந்திரன் எனக்கு தெரிந்த ஒருவர்! இவர் புலிக்காக பணம் சேர்த்தது என்பது புனைகதை! 5 சகோததர்கள் கடும் உழைப்பால் தான் இன்று முன்னணியில் நிற்கிறாரகள்//
விசுவன் பல்லியின் தகவல் தவற வாய்ப்பில்லை; எதுக்கும் மீண்டும் ஒருதரம் பல்லியின் தகவலை சரி பார்க்கவும்; முடிந்தால் இந்திரனின் அண்ணர் யார்? அவருக்கும் புலிக்கும் உள்ள தொடர்புகளை நேரம் வரும்போது தெரிவிக்கிறேன்;
rohan
“விவேக் ஒபரோய் இந்தி பட நடிகர், ஆனால் இவர் ஒரு தமிழர். இவர் சுனாமி காலத்தில் தமிழ் நாட்டின் ஒரு பகுதியை தத்தெடுத்து முழுமையாக கட்டிக் கொடுக்க முனைந்த போது ஜெயலலிதா அதைத் தடுத்து விட்டார்.”
ஒபரோய் அரை பஞ்சாபி – அரைத் தமிழர் என்பது எனது ஞாபகம். அவரது தனிப்பட்ட உதவும் மனப்பான்மை பற்றியும் அவரது அம்மா தொண்டு வேலைகளில் ஈடுபடுபவர் என்றும் எங்கோ வாசித்ததாக நினைவு. வாசலில் ஏற்றுவதாக ஏற்றி சுற்றிக் கொண்டு வந்து மெனிக் முகாமில் கொண்டு வந்து விட்டது மாதிரி இல்லாது, உண்மையாகவே அவர் தொண்டு செய்து (அதை இடையில் வந்தவர்கள் சுருட்டிக் கொண்டு போகாமலும் இருந்தால்) நல்லது தானே!
chandran.raja
இப்படியும் ஒரு கோஷம் வைக்கலாமே! தமிழருக்கு உதவிசெய்தவர்களின் திரைப்படம் தமிழ்நாட்டில் ஓடுவதற்கு தமிழ்நாட்டு சினிமாசங்கம் அனுமதி மறுக்கிறது. போராட்டம் என்ற பெயரில் தமிழரின் உயிர் எடுப்பவர்களுக்கே அனுமதி கொடுக்கும். ஏனெனில் இது “தமிழ்நாட்டு சினிமா உலகம்”.
Ajith
Sri Lanka spent 1000 million to sponser this festival.Why couldn’t spend that money to the affected people. The actor is an actor (like Sonia).
chandran.raja
ஈழத் தமிழர்களின் எதிர்கால வாழ்வை ஐம்பது வருடங்களுக்கு மேலாக குத்தகை எடுத்த யாழ்பாண வக்கீல்களும் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர்களின் வாழ்வையும் சாவையும் ஆயுதரீதியில் சுவீகரித்து கொண்ட புலிககளும் ஏதோ ஒருமுறையில் சிங்கள-தமிழ்மக்களுக்கு ஒரு சீனச்சுவரை எழுப்பி விட்டார்கள் என்பது மறக்கமுடியாத உண்மையாகும்.
ஒரு இனத்தின் அமைதியைக் குலைக்ககூடிய பலம் எங்கிருந்து வந்தது?.
ஒன்று பிரித்தானியாவின் அங்கீகரிக்கப்பட்ட கல்விமுறை.
இரண்டாவது புலம்பெயர்நாடுகளில் இருந்து யாழ்பாணத்திற்கு பெருக்கெடுத்து வந்த பொருளாதார-பணப்பலம்.
இவை இரண்டுமே ஈழத்தமிழரின் அமைதியை குலைத்து சவக்காடாக்கியது. யாரும் மறுக்க முடியுமா?.
இனிவரும்காலத்தில் போராட்டத்தை நடத்த நீதியைத்தேடி புறப்பட்டால் இருபக்கத்திலும் பார்த்துக்கொள்ளுங்கள் தமிழனில் யாரவது வக்கீலாக இருக்கிறானா என்று. அதே போலத்தான் புலம்பெயர் நாடுகளில் தாய்யக விடுதலைக்காக பணம் சேகரிக்க கொப்பி கொண்டு திரிந்தவர்களையும் இனம்
காண வேண்டியுள்ளது. சரி.விஷயத்திற்கு வருவோம். புலிகளுக்கு மிகப்பெரிய வசூலைக் கொடுத்தநாடு கனடா. இந்திரன் பூர்வீகம் மானிப்பாய். பல சகோதர்கள் உட்பட்ட குடும்பத்தில் இவர் கடைசிப் பிள்ளை. இந்திரன் புலிகளுக்காக காசுவசூலிக்க கொப்பி கொண்டு திரிந்தது கிடையாது. எல்லாம் பஞ்சபாண்டவர் போல இருந்த நான்கு அண்னன்மாரின் சாமத்தியமும் உபயமுமே!.
“மெயிக்வூட்” நிறுவனம் கனடாவில் நல்ல நிலையில்லுள்ள நிறுவனங்களில் அதுவும் ஒன்று. அதன் ஒரு கிளைமுகாம்மை செங்கல்பட்டில் நிறுவ புறப்பட்டதே! ஆந்திராமகள் மானிப்பாயிக்கு மருமகளாக வந்த சரித்திரம். விசுவனின் கஷ்ரப்பட்டு முன்னேறினார்கள் என்ற சூத்திரம் தான் எனக்கு புரியவில்லை.
NANTHA
கனடாவில் பலர் தாங்கள் சுருட்டிய பணத்தை “வெள்ளையாக்க” வியாபாரங்களை தொடக்குவது வழக்கம். அல்லது அடையாளம் தெரியாமல் இருக்க வேறு ஆட்களிடம் பணத்தைக் கொடுத்து அவர்களுடைய வியாபரங்களாக நடத்துகிறார்கள். புலிகள் தொலைந்த பின்னர் பல”பங்கு” பிரச்சனைகள் தொடங்கியுள்ளன.
இந்த இந்திரனும் “புலி” என்று திரிந்தவர். தவிர “கஸ்ட்ரோ” கொடுத்த பணத்தில் தொழில் தொடங்கியதாகவும் ஒரு தகவல் உண்டு.
இவர்களை விட பகிரங்கமாக அறியப்படாத ஒரு இளையதம்பி கோடிக்கணக்கில் புலிகளின் பணத்தை வைத்து வியாபாரம் செய்வதாக வந்த சேதி இன்னமும் வியப்பானது. இந்த இளையதம்பி பெரும் வியாபரநிலயங்களின் உடைமை என்பதும் தனது மகளின் கணவனான சிங்கள மருமகனுக்கு கோடிக்கணக்கில் வீடு வாசல்கள் கொழும்பில் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கொழும்பில் பல வழிகளிலும் முதலீடுகள் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன.
மொத்தத்தில் புலி என்று சுருட்டியவர்கள் தமிழர்களின் நலன்ளை விட தமது வளமான வாழ்வையே வசதியாக்கியுள்ளனர்.
thurai
ஈழத்தமிழர்களிற்கு உருமைவேண்டும், விடுதலை வேண்டும், தனியாக ஓர் நாடு வேண்டும். அங்கு வாழும் ஏழைகளிற்கோ அரசாங்கம் சாப்பாடு கொடுக்க வேண்டும். நடிகர்களின் பணத்தில் பாடசாலை கட்ட வேண்டும்.
ஒரு இனம் தன் காலில் தானாக நிற்க்கும் வரை அவர்களிற்கு எங்கு விடுதலையுண்டு? புலம் பெயர்நாடுகளிலிருந்து போரை நடத்தி தமிழர்களின் வாழ்வை அழித்து ஏழ்மையில் தள்ளியவர்கள், இன்று ஏழைப்பிள்ளைகளை பராமரிக்க பணம் கேட்கின்றார்கள்.
அரசியலிற்கு நாடுகடந்த அரசு அமெரிக்காவில், போராட்டத்திற்கு ஜெனீவா முன்றல். இதன் பின்னணியில் புலிகள். இதுவரை உலக முழுவதும் ஈழத்தமிழர்களை போரினால் அழித்து, அதனை விளம்பரமாக்கி, பணத்தை தேடியவர்கள் தான் புலிகள். உலகமுழுவதும் முதலீட்டாள்ராக வாழவோர் அநேகர் புலிகளே.
இந்தப் போலி விடுதலைப்போராளிகள் மக்கள் மத்தியில் மனிதராக வாழ்வதென்றால் புலிகளிற்கு ஈழப்பிரச்சினை அவசியம் தேவை. அல்லாவிடில் இவர்கள் மக்களின் பார்வைக்கு திருடர்களேயாகும்.
சிங்களவர் இலங்கையில் தமிழரின் உயிரைப் பறித்தார்களென்றால். புலம்பெயர்நாடுகளில் புலிகள் பணத்தைப் பறித்தார்கள். பறித்த பணத்தை இலங்கையின் தென்பகுதியில் முதலீடு. இதுவும் ஓர் விடுதலையா? சிங்கள அரசை குற்ரம் சொல்லி காலத்தை வீணாக்காமல் முதலில் தமிழரை ஏமாற்ரிப் பிழைக்கும் தமிழரை இனம்கண்டு கொள்வதே இன்றைய புலம் பெயர் மக்களின் கடமையாகும்.
துரை
palli
//உண்மையாகவே அவர் தொண்டு செய்து (அதை இடையில் வந்தவர்கள் சுருட்டிக் கொண்டு போகாமலும் இருந்தால்) நல்லது தானே!//
கவனத்தில் கொள்வது நல்லது;
palli
//இந்திரன் பூர்வீகம் மானிப்பாய். பல சகோதர்கள் உட்பட்ட குடும்பத்தில் இவர் கடைசிப் பிள்ளை. இந்திரன் புலிகளுக்காக காசுவசூலிக்க கொப்பி கொண்டு திரிந்தது கிடையாது. எல்லாம் பஞ்சபாண்டவர் போல இருந்த நான்கு அண்னன்மாரின் சாமத்தியமும் உபயமுமே!.//
நன்றி சந்திரா எனது வேலையில் பாதியை குறைத்து விட்டீர்கள்; இனி மானாட மயிலாடதான்;
விசுவன்
இந்திரனின் அண்ணன் பம்மாத்து கண்ணன் ஊரிலை உள்ள அனைவரையும் இயக்கத்துக்கு சேர்தவர் ஆனால் இவர் பம்மாத்து விட்டவர். கனடாவில் இவர்களின் வளர்ச்சியை கண்டு பொறாமையால் கட்டி விடப்பட்ட கதைகள் தான் புலியின் பணத்தில் இவர்கள் வளர்ந்தார்கள் என்பது. முதலில் நட்டத்தில் ஓடிய இவர்களின் வியாபாரம் பின்னர் வேட்டர்லூ பல்கலைக்கழகத்தில் வியாபார பட்டப்படிப்பை மேற்கொண்ட இந்திரன் நிர்வாகத்தில் வந்த பின்னர் வெற்றிகரமாக இயங்க தொடங்கியது. ஆனால் புலிகளிடம் பணம் புரள முன்பே 1993 இல் இவர்கள் தமது வியாபாரத்தை ஆரம்பித்து அமரிக்கா எங்கும் வியாபிக்க தொடங்கினார்கள். புலிகள் பணம் முதலிட வெளிக்கிட்டது சமாதான ஒபந்ததந்தின் பின்னரே. அந்த காலப் பகுதியல் இவர்கள் தமது வியாபாரத்தை மிகவும் வெற்றிகரமாக முன்னிலைப்படுத்தியிருந்தனர். இவர்கள் புலிக்கு வால் பிடித்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இவர்களின் கடின உழைப்பை நாம் மறுதலிப்பது சரியல்ல.
தமிழ் வாதம்
திண்ணயிலிருந்து, தீனி கொட்டி, தினவெடுத்து, எங்கெல்லாம் பழி போட்டு, ஏக்கமுடன் வால் பிடித்து, நோக்கம் எதுவுமின்றி ரொம்பவும் எழுது வதுதான் உங்கள் வாழ்வாதாரமோ? உமி குற்றி அரிசி தேடும் உழைப்பினை மறப்போம். செயலற்ற ஆர்ப்பரிப்பு பயனற்றுப் போய்விடும். நினைவில் கொள்க.
என் கேள்வி என்ன ஒருவர் கண்களிலும் படவில்லையா? [தமிழ் வாதம் on June 1, 2010 8:17 pm]
chandran.raja
விசுவன்! நீங்கள் இருக்கும் நகரத்தில் எப்படியோ தெரியாது. 1979 ல் ஆறு பேர்ருடன் இருந்த எங்கள் ஊர் 1983 யூலைக்கு பின்னர் எண்பது பேர்ராயிற்று. அந்த நேரத்திலேயே கட்டாய வசூல்நடக்கத் தொடங்கிற்று. விரும்பிக் கொடுத்தவர்களும் உண்டு. ஒருமாத சம்பளத்தை முழுமையாக அர்பணித்தவர்களும் உண்டு. ஈழத்தில் நடந்த உக்கிரமடைந்த உள்நாட்டு போர் தமது தமது மணைவி பிள்ளைகளையும் அப்பா அம்மா பாட்டன் பாட்டியையும் கூப்பிடுவதற்கு வசதியாக இருந்ததுமல்லாமல் நிரந்தரவதிவுடமை பெறுவதற்கும் வசதியாக இருந்தது. ஒன்றை இழந்து இன்னொன்றைப் பெறுவது போல. புலிகளின் பணம் புரளுவது 93 காலப்பகுதி என பிழையாக கணக்கு போடாதீர்கள்.
palli
//. நினைவில் கொள்க.//
இது என்ன வாதம் சொல்லுக தமிழ்வாதம்;