கொழும் பிலும் புற நகர்ப் பகுதிகளிலும் புலிகள் இயக்கத்தினர் தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
புலிகளின் அனுதாபிகளான தமிழர்களுக்காக இந்த வீடுகளை நிர்மாணிக்க புலிகள் முதலீடுகளைச் செய்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சமர்ப்பித்துப் பிரதமர் உரையாற்றினார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 இற்குச் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வழமையான நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தைச் சமர்ப்பித்த பிரதமர், அவசர காலச் சட்டம் தொடர்பான பிரேரணையையும் சமர்ப்பித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ஜயரட்ன, கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் தொடர்மாடிக் குடியிருப்புகளை நிர்மாணித்து புலிகள் மீள ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களைத் தேடிக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இறுதி யுத்தம் நடைபெற்ற போது புலிகள் இயக்க உறுப்பினர்கள் மக்களுடன் மக்களாகக் கலந்துள்ளதாகவும் தற்பொழுது தென் பகுதியில் தங்கியிருக்கும் அவர்கள் பாதாள உலகக் கும்பல்களுடன் தொட ர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறிய பிரதமர், ஏற்கனவே, கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய 71 பேர் கடந்த மே மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் மேலும் பலரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் நாடு கடந்த தமிbழ அரசை’ நிறுவ வாக்கெடுப்புகளை நடத்தியிருக்கிறார்களென்று சுட்டிக்காட்டிய பிரதமர் இவ்வாறான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கும் புலிகளின் செயற்பாடுகளை முற்றாகத் தடுப்பதற்கும் அவசர காலச் சட்டத்தை நீடிக்க வேண்டியிருப்பதாகவும் பிரதமர் மேலும் கூறினார்.
chandran.raja
பிரதமர் டி.எம்.ஜயரட்னா வின் கருத்து இனவாதக் கருத்தாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. இவர் கடந்தகாலப் புலிகளைப் பற்றியோ இன்றைய நிலையில் உள்ள புலிகளைப் பற்றியோ எந்தவித மதிப்பீட்டையும் கொண்டிருக்கவில்லை. இப்படியான கருத்து திரும்பவும் பல இனங்கள் வாழும் இலங்கைத்தீவில் இனக்கலவரத்திற்கு முதல் குத்துவிளக்கை கொழுத்தி வைப்பதாகவேஅறியப்பட இருக்கிறது. ஆனால் ஒரு இனக்கலவரத்திற்கு சுகந்திரக்கட்சி எந்தவிதத்திலும் துணைபோக மாட்டாது என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
பிரதமர் டி.எம்.ஜயரட்னா அவர்களே! புலிகள்தான் தமிழர். தமிழர்கள்தான் புலிகள் என்றகருத்தை ஆகக்குறைந்தது அறுபது வருடசரித்திரத்தை கற்றறிந்தவன் சொல்ல மாட்டான்.நீங்கள் அதன் ஊதுகுழலாக செயல் படமுற்படுகிறீர்கள். புலம்பெயர்ந்த தமிழ் புலிகளிடம் பிரமிக்கத்தக்க பணம் உள்ளதை நான் அறிவேன். அவர்கள் தொடர்மாடிக் கட்டிடங்கள் கட்டுவது மட்டுமல்லாது ஒருநகரத்தை விலைபேசி வாங்கக்கூடிய பணவலிமை பெற்றவர்கள்.
புலிகள் ஏழைகளை போராளியாக்கி குண்டுகட்டி அனுப்பி அதில் ஆதாயம் கண்டவர்கள். ஏழைகளின் குடிசைகளை அவர்கள் எரித்துத்தான் பழக்கமோ ஒழிய வீடுகட்டிக் கொடுத்தது பழக்கமில்லாதவர்கள். இந்த உண்மையை பிரதமர் அவர்களே புரிந்து கொள்ள வேண்டும். தொடர்மாடி கட்டிடம் கட்டுவது பணம் உள்ளவனின் ஆதாயம் தேடும் வழிகளில் ஒன்று. அதை முற்றுமுழுதாக தமிழ் இனத்தின் மீது சுமத்தி விடாதீர்கள்.
சாந்தன்
பாவம் லண்டன் கோஷ்டி. இப்ப எல்லாம் ஓகே! உல்லாச பயண விடுதி கட்டிறம் எண்டு போய் போட்போட்டு படம் எடுத்தவையள். அதை நம்பி ‘பழைய புலியளே இப்ப ஓகே எண்டினம்’ என அறிக்கை தயாரிச்சு படிச்சவை எல்லாம் கோவிந்தா போல கிடக்கு! எல்லாம் குடுக்க வேண்டிய இடத்தில குடுக்காமல் அலுவல் பாக்கலாம் என நம்பினதுதான்.
NANTHA
இலங்கயிலும் புலிகளால் கொள்ளையிடப்பட்ட பணம் உண்டு. அவர்கள் யாழ்ப்பாணத்தில் “டூரிஸ்ட்” விடுதி அமைக்கப் புறப்பட்டவர்கள். இப்போது கொழும்பில் “தொடர் மாடி” என்று புறப்பட்டிருக்கிறார்கள்.
சாந்தன்
இவ்வாறுதான் சந்திரிகா காலத்தில் கொழும்பில் தொடர்மாடி கட்டியபோது ஜே.வி.பியினருக்கு கொடுக்க வேண்டியதை கொடுகாமல் விட்ட போது அவர்கள் ‘கொழும்பு பாரம் தாங்காமல் தாழப்போகிறது’ என சொல்லி தமது ‘அறிவின் ஆழத்தை’ காடினர். இபோது பிரதமர் தனது அறிவை கொட்டுகிறார்! இப்போதுதான் இந்திய என்ரரெயின்மன்ற் முடிந்தது என்று பார்த்தால் அடுத்த கோமாளிக்கூத்து!
thurai
புலிகளின் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் நடந்தவையெல்லாம், இப்போ முன்னணியாகினறது.
துரை
Ajith
The matter of the fact there is no Sinhala politics without LTTE and TULF. We should not forget how every sinhala person used tamils to build up their economic conditions. I can tell you hundreds of examples. For example one of my relative who came to Colombo to send someone. He is a poor coconut businessmen in the market. He was arrested by a policeman and the policeman kept a granade in his bag and he was kept inside. Later his family have to pay 500,000 rupees for his release. Once a prominant scientist who workedthroughtout his life in a government department. One of the Sinhala colleague who competed for Director post informed police that the tamil had a relationship with LTTE. Later police harressed him and withdrew his plan for te Director Post.
Ordinary Sinhala begger to top government servant President Rajapakse used tamils right as a means of livelihood. For the tamil slaves of Sinhala everything is the false of tamils.