முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்ச்சியாக தேசத் துரோகமான அறிக்கைகளை விடுத்து வருகிறார். அவருக்கு என்ன தண்டனை வழங்குவது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதித்துறையினரின் பொறுப்பாகுமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.
பி. பி. ஸியின் ‘ஹார்ட்டோக்’ நிகழ்ச்சிக்கு இரகசியமாக தொலைபேசியில் பேட்டி கொடுத்த பொன்சேகா, ‘புலிகளுக்கெதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவ அதிகாரிகள் சிலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்திருக்கலாம்’ எனக் கூறியுள்ளார். பி.பி. ஸி ‘ஹார்ட்டோக் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஸ்ரீபன் ஸக்கூர் இதனை இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்’.
இதுபற்றி கருத்துத் தெரிவித்த லக்ஷ்மன் ஹுலுகல்ல மேலும் கூறியதாவது; ‘பி.பி.ஸியுடன் இரகசியமாக செய்து கொண்டதாக கூறப்படும் தொலைபேசி பேட்டியின் மூலம் ஜெனரல் சரத் பொன்சேகா, ஜனாதிபதியையும், பாதுகாப்பு செயலாளரையும், பாதுகாப்பு படையினரையும் மட்டுமன்றி முழு நாட்டையும் சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுத்துவிட்டார்’ என்றார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான எந்தவொரு சுதந்திர விசாரணையின் போதும் தான் இது பற்றி சாட்சியமளிக்கவும் தயாராக இருப்பதாக ஜெனரல் பொன்சேகா தனது இரகசிய தொலைபேசி பேட்டியில் மேலும் கூறியிருந்ததாக தொகுப்பாளர் ஸ்டீபன் ஸக்கூர் மேலும் கூறியிருக்கிறார்.
“இவ்வாறான தேசத்துரோகத்தனமானதும், ஆத்திரமூட்டும் வகையிலானதுமான கூற்றை ஜெனரல் பொன்சேகா வெளியிட்டிருப்பது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் காட்டிக்கொடுக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருக்கிறார்” என்றும் ஹுலுகல்ல சுட்டிக்காட்டினார். மனிதாபிமான யுத்தத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு படைகளில் இருந்த அதிகாரிகளும் ஏனையவர்களும் மிகுந்த கடமையுணர்வுடனும் தியாக சிந்தையுடனும் செயற்பட்டனர் என்று லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறுகிறார்.
அவர்கள் மேற்கொண்ட தியாகங்களினால் இந்த நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடிந்தது. அதற்கான தலைமைத்துவமும் வழிகாட்டலும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
அவர்கள் மீது பொறாமை கொண்டிருந்த ஜெனரல் பொன்சேகா அவர்களை சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுப்பதன் மூலம் வஞ்சம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவ்வாறான அறிக்கைகள் அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதுடன் கடுமையான செயற்பாடுகளின் மூலம் பெறப்பட்டயுத்த வெற்றியை குறைத்து மதிப்பிடவைக்கும்.
தனது முன்னைய கூற்றுக்களை ஜெனரல் பொன்சேகா மறுத்துள்ள போதிலும் இறுதியாக பி.பி.ஸிக்கு வழங்கிய இறுதியான தொலைபேசி பேட்டியை அவர் எந்த வகையிலும் மறுக்க முடியாது. ஏனெனில் அது அவரது சொந்த குரலிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெனரல் பொன்சேகா முன்னர் உண்மையான இராணுவத் தளபதியாக நடந்துகொண்ட போதிலும் அதன் பின்னர் அவர் தேசத்துரோகமாக நடந்துகொண்டதால் இலங்கை சமூகத்திடம் இருந்த நன்மதிப்பை இழந்ததுடன் கெட்ட பெயரையும் சம்பாதித் துக்கொண்டுள்ளார் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கோமின்டயசிரி கூறியுள்ளார்.
நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுப்பதன் மூலம் தனிப்பட்ட ரீதியில் லாபம் பெற ஜெனரல் சரத் பொன்சேகா முயற்சி செய்வதாகவும் கோமின் டயசிரி மேலும் கூறினார்.
இராணுவத்தின் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள், தொடர்ந்து சொல்வாரானால், ”அவர் தூக்கிலிடப்படுவார்” – கோட்டாபாய ராஜபக்ஷ
இலங்கையில் கடந்த வருடம் நடந்த இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள், தொடர்ந்து சொல்வாரானால், ”அவர் தூக்கிலிடப்படுவார்” என்று இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபாய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். பிபிசியின் ஹார்ட் டோக் நிகழ்ச்சிக்கான செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியிருக்கின்ற சரத் பொன்சேகா அவர்கள், ”தான் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்காகவே இந்த சிரமங்களை எதிர்கொள்வதாக” தன்னிடம் கூறியதாக தெரிவித்த பிபிசியின் செய்தியாளர், ”ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடக்குமாயின் அதற்கு தான் முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் இந்த விடயங்களை அங்கு கூறுவேன்” என்றும் பொன்சேகா கூறியிருக்கிறாரே என்று கோட்டபாய ராஜபக்ஷவிடம் கூறினார்.
அதற்கு பதிலளித்த கோட்டாபாய அவர்கள், ”அவர் அதனை செய்ய முடியாது. அவர் இராணுவத்தின் தளபதியாக இருந்திருக்கிறார். அவர் பொறுப்பு மிக்கவார இருந்திருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம். அது ஒரு துரோகம் . எவ்வாறு அவர் பொய் சொல்ல முடியும். அவர் எவ்வாறு நாட்டை காட்டிக்கொடுக்க முடியும்.” என்று கூறீனார்.
“உண்மைகளை கூறுவது தனது கடமை” என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக தமக்குத் தெரிந்த “உண்மைகளை கூறுவது தனது கடமை” என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்
அப்படி செய்வது தேசத் துரோகமாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.
சுயாதீன விசாரணையில் ஜெனரல் பொன்சேகா பங்கு கொண்டு சாட்சியம் அளிக்க முடியாது என்று பிபிசியின் ஹாரட் டாக் நிகழ்சியில் கூறியிருந்த பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ, ” பொன்சேகா பொறுப்பு மிக்கவாராக இருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். (சாட்சியம் அளிப்பது) அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம்.” என்று கூறியிருந்தார்.
தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது பிபிசியின் சிங்கள சேவையின் சந்தன கீர்த்தி பண்டாரா, அவரைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு செயலர் பிபிசியிடம் தெரிவித்திருந்த விடயங்கள் குறித்துக் கேட்டபோது மேற்கண்ட கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.
தன்னை பாதுகாப்புச் செயலர் பொய்யர் என்று விளித்திருப்பது பற்றி கருத்து வெளியிட்ட பொன்சேகா, தான் பொய் சொல்லவில்லை என்றும், தான் பொய் சொன்னதாக குற்றம் சாட்டும் பாதுகாப்புச் செயலர் தன்னுடன் தொலைக் காட்சி மூலம் விவாதம் நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் நடந்த போரில் தனக்குத் தெரிந்தவரை போர் குற்றங்கள் நடைபெறவில்லை என்றும், இருந்தும் யாராவது புதிய ஆதாரங்களுடன் மேலதிக விபரங்களுடன் புகார்களை முன்வைத்தார் அது பற்றி நிச்சயம் ஆராயப்பட வேண்டும் என்றும் பொன்சேகா கூறினார்.
Ajith
who betrayed Sri Lanka? Rajapakse family or Sarath Fonseka? Why silence? WIt is clear from Gotapaya that he agree that his government is responsible for war crimes and telling the truth is betrayal to the Sinhala race. Fonseka never said his forces are responsible for war crimes, So the Gotapaya and Mahinda gave direct orders to kill innocent civilians of the nation. It is shame that Sri Lanka is ruled by murderers.
Rohan
மனவருத்தத்துக்குரிய விடயமே இவை தான்.
சட்டத்தைத் தனது கையில் எடுத்துக் கொண்டு ஒரு சைக்கோ போல தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் தான் தூக்கில் போடுவேன் என்று சூளுரைக்கும் கோத்தபாயவை நீதிக்கு முன்னால் நிறுத்த முடியவில்லை. புலியை நம்பிப் போனார்களோ புலியின் நிர்ப்பந்தத்தில் போனார்களோ பல்லாயிரக்கணக்கில் துவைக்கப்பட்ட பரிதாபத்திற்குரிய அம்மக்களுக்கு நியாயம் கிடைக்க் வழியில்லை.
வீடுகள் கட்டுகிறோம் வாழ வைக்கிறோம் என்றி வெளியில் சொல்லிக் கொண்டு, தமிழர்களிடம் போனபோது உங்களுக்கு வீடு கட்ட எமக்கு முடியாது என்று சொல்லும் மகிந்தவை அம்பலப்படுத்த வழியில்லை. தேற்கிலும் படையினருக்கும் மட்டும் வீடுகள் கட்டப்படும் – பல கோடியில் பிலிம் காட்டப்படும். ஆனால், ‘சகோதரர்களுக்கு’ வீடு கிடையாது.
தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து விட்டோம் என்று சொல்லும் பாலிதவை எதிர்கொள்ள வழியில்லை.
சரத்தையும் கொன்று தானும் தற்கொலை செய்வேன் என்று சொல்லும் மேர்வின் போன்றவர்கள் தான் அரசின் முக்கிய குரல்கள் என்று எக்ஸ்போஸ் செய்ய முயற்சி இல்லை.
எத்தனை முகங்கள் புலிக்கு இருக்கின்றன என்று அந்த முகங்களுக்கே தெரியவில்லை. ஆனாலும், தாம் செய்வோம் என்று அவரவர் ‘போலிப் பொறுப்பு’ எடுப்பர். செய்ய வரும் மற்றவரையும் தடுப்பர். இது அரசின் பணி – நம்மது அல்ல என்று தத்துவம் பேசுவர்.
மாற்றுக் கருத்தாளர் தாமும் ஏதும் செய்யார் – ஏதாவது நல்ல விடயம் செய்ய வருபவரையும் தடுப்பர். அவ்வாறோனோருக்கு அவர்கள் புலி முத்திரை குத்தி மகிழ்வர்.
ஓரிருவர் தம் முயற்சியில் சில செய்ய எழுவர். புலி ஆதரவாளர்கள் இவர்களின் முனை முறிப்பர். செத்த புலி அடிப்போரின் இலக்குகளாகவும் இவர்கள் ஆவர். முடிவில் இவர்களும் மனம் உடைந்து போவர்.
தமிழனாய்ப் பிறந்த பாவத்துடன் எம்மினத்தார் உழல்வர். தொடர்ந்து உதைபட்டு நாயிற் கடையாய் நைந்து மடிவர்.
KARUNA
என்ன இருந்தாலும் மேற்கிற்கும், பேராதிக்கங்கழுகும் எதிராகக் குரல் கொடுக்கக் கூடிய அச்சம் அறியாத என் தலைவன் கோத்தபாய வாழ்க!
thurai
//மாற்றுக் கருத்தாளர் தாமும் ஏதும் செய்யார் – ஏதாவது நல்ல விடயம் செய்ய வருபவரையும் தடுப்பர். அவ்வாறோனோருக்கு அவர்கள் புலி முத்திரை குத்தி மகிழ்வர்.//றோகன்
30 வருடமாக புலிகள் செய்ததை யாராவது புலத்திலோ, தளத்திலோ தடுத்தோமா? தவறுகளை சுட்டிக்காட்டினோம் திருந்தினார்களா? தாமுமழிந்து தமிழரையும் அழித்த பின்பு இன்னும் எதற்கு புலிக்கொடியும் ஈழ்த்தமிழர் பிரச்சினையும் இவர்களிற்கு.
புலியில் சிலரே தவறு விட்டனர். அவர்களை தூக்கியெறிந்து விட்டு முடியாவிடால் வெளியில் வந்து புதிய அமைப்பை மாற்ருக் கருத்தாளர்க்ழுடன் சேர்ந்து முன்னெடுக்கலாமே. ஏன் முடியவில்லை? இதற்குப் பெயர்தான் புலிப்பயங்கரவாதம்.
துரை
Rohan
தாமுமழிந்து தமிழரையும் அழித்த பின்பு இன்னும் எதற்கு புலிக்கொடியும் ஈழ்த்தமிழர் பிரச்சினையும் இவர்களிற்கு.”
“புலியில் சிலரே தவறு விட்டனர். அவர்களை தூக்கியெறிந்து விட்டு முடியாவிடால் வெளியில் வந்து புதிய அமைப்பை மாற்ருக் கருத்தாளர்க்ழுடன் சேர்ந்து முன்னெடுக்கலாமே. ஏன் முடியவில்லை?”/
இயக்கம் என்று வந்தால் நீங்கள் முழுப்புலியாக இருக்கலாம் அல்லாவிட்டால் புலி எதிர், என்று தான் இருக்கலாம். இடையில் இருக்க முடியாது. புஷ் சொன்னது போல, ‘நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள் – அல்லது நீங்கள் எதிரிகளுடன் இருக்கிறீர்கள்’.
நடுநிலையாளர்கள் இங்கிருந்து அங்கோ அங்கிருந்து இங்கோ போக முடியாதபடி இரு புறமும் இருந்தது உண்மை இல்லையா?
“இதற்குப் பெயர்தான் புலிப்பயங்கரவாதம்”/
மிக்க நன்று. மற்ற இயக்கங்கள் தம்மை உள்ளிருந்து விமர்சித்தவர்களுக்குக் களம் அமைத்துத் தந்தனவா, என்ன? கொலைக்களம் தானே அனுப்பின. இயக்கம் விடுத்து மறு இயக்கம் போனவர்களை உருப்படியாக விட்டார்களா, என்ன?
புலிக்கு எதிரான கருத்து உடையவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இயங்கி ஒரு சரித்திரம் படைத்துக் கொண்டிருப்பதாகவும் ‘புலிப் பயங்கரவாதம்’ தான் ஏதோ தடைக்கல்லாக இருப்பதாகவும் அல்லவோ காட்டப் பார்க்கிறீர்கள், துரை.
thurai
/புலிக்கு எதிரான கருத்து உடையவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இயங்கி ஒரு சரித்திரம் படைத்துக் கொண்டிருப்பதாகவும் ‘புலிப் பயங்கரவாதம்’ தான் ஏதோ தடைக்கல்லாக இருப்பதாகவும் அல்லவோ காட்டப் பார்க்கிறீர்கள், //றோகன்
தமிழ்ப்பகுதிகளில், சிங்கள இராணுவத்தினரின் கீழ் தமிழராக வாழ்வோர் சரித்திரம் படைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இதனை விட புலத்துப் புலிகள் சாதித்ததை மற்ற பினோட்டங்களில் வாசிக்கவும்.
துரை
Ajith
தமிழ்ப்பகுதிகளில், சிங்கள இராணுவத்தினரின் கீழ் தமிழராக வாழ்வோர் சரித்திரம் படைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
Yes Sinhala army is making history.
விசுவமடு ரெட்பானா பகுதியில் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் நான்கு இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
thurai
//விசுவமடு ரெட்பானா பகுதியில் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் நான்கு இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்//
புலிகளின் நிர்வாகத்திலிருக்கும் போது வன்னியில் ஒருவரையும் அடையாளம் காட்ட முடியவில்லையே. சிங்கள அரசின் கீழ் மக்கள் நியாயம் கேட்க வழி கிடைத்துள்ளதே.
துரை
nirmalan
//இலங்கை இராணுவத்தில் இருந்தவர்களெல்லாம் ஏதோ உத்தமர்கள் இல்லை. ஆனால் இதில் சமயம் பார்த்து சிலர், புலிகள் ஏதோ உத்தமர்கள் என்பது போல் சரடு விடுவது தான் வேடிக்கை. விடுதலைப்புலிகள் பல இராணுவ அதிகாரிகளை மடக்குவதற்கு எம்மினப் பெண்களையே பாவித்ததை எந்தப் பட்டியியலில் இணைப்பது. அதுபோல் கொழும்பில் விடுதலைப்புலிகளின் புலனாய்வாளர்களாக இருந்தவர்களுக்கு, மனைவி போல் இணைந்து வாழ பல தமிழ் அழகிகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றார்கள். பின்பு இந்த அழகிகளையே இராணுவ அதிகாரிகளுடன் இரகசியமாக உறவு வைக்கப் பயன்படுத்தியுள்ளார்கள். யாழ் மாவட்டத்தில் அச்சுவேலி என்ற ஊரில் கணவன் வெளிநாடொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்க தாயையும் அவரது 4 மகள்களையும் விடுதலைப்புலிகள் தமது இச்சைகளுக்கு தொடர்ந்து பாவித்து வந்தார்கள். குறித்த இந்தக் குடும்பத்தினர் அச்சுவேலியைச் சேர்ந்தவர்களல்ல. வேறொரு ஊரிலிருந்து வெளியேறி தற்காலிகமாக அச்சுவேலியில் வாழ்ந்தவர்கள். ஊரவர்கள் இது தெரிந்தும் புலிகளுக்கு பயத்தினால் கண்டிக்கத் திராணியற்றிருந்தனர். 1995 இல் யாழை விட்டு வன்னிக்கு ஓடியபோது மக்களைக் கூட காப்பாற்ற நினைக்காத புலிகள் இந்தக் குடும்பத்தை தம்முடன் அழைத்துச் செல்வதில் தீவிரம் காட்டி அழைத்துச் சென்றனர்.
கருணா புலிகளிலிருந்து வெளியேறிய பின், கருணா புலிகளோடு இருந்த போது எத்தனை பெண்களை சீரழித்தாரென புலிகளே பட்டியல் வாசித்தார்கள். ஆக கருணா புலிகளிலிருந்து வெளியேறியிருக்கா விட்டால் இந்தப் பட்டியல் வெளி வந்திருக்காது. இதுபோல் புலிகளோடு தொடர்ந்து இருந்ததால் எத்தனை கருணாக்கள் காப்பாற்றப் பட்டிருப்பார்கள். எனியும் புலிகளை உத்தமர்களென்று எவரும் காதில் பூ வைக்கும் வேலைகளை செய்ய வேண்டாம். விரும்பினால் உங்கள் காதுகளில் நீங்களே பூ வைத்து திருப்திப்பட்டுக் கொண்டிருங்கள். //
thankyou -பார்த்திபன் on November 3, 2009 10:03 am
chandran.raja
தமிழ் பெண்களின் மானம் கற்புகளைப் பற்றி யாரர்? கதைப்பது. யாருக்கு தகுதியிருக்கிறது? இலங்கைலுள்ள மேட்டுக் குடிகளுக்கு (நான்பணம் படைத்த சோம்பறி கூட்டத்தை தான் குறிப்பிடுகிறேன்.அதில் இந்துத்தமிழர் முஸ்லீம் தமிழர் சிங்களவர் என எல்லோரும் அடங்குவார்கள்) மலையக சிறுமிகளை இளம்பெண்களை சில ஆயிரம்ரூபா விலைபேசி அடிமையாக்கி கொண்டிருக்கிற இனத்திலும் சமூகத்திலும் அல்லவா? நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உழைப்பின் பெருமையைப் பற்றி கற்றறிந்து செல்வம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிந்தவர்களா நாம்?
வயிற்றுக்குள்ளும் மார்புக்கச்கைகுள்ளும் வெடிகுண்டுகளை கட்டிவிட்டு தற்கொலையாளி போனவர்களின் வீரம் பற்றி கதைத்து…உள்ள தமிழ்பெண்களின் வயிறையும் மார்பையும் தடவிப்பார்பதற்கு அனுமதி கொடுத்ததல்லவா? தமிழ் சமூகம். 83 ம் ஆண்டு ஏழாம் எட்டாம் மாதங்களென நினைக்கிறேன் ஜேர்மனிலுள்ள பிரதித்திபெற்ற தொலைகாட்சி இங்குள்ள நான்கு தமிழரை அழைப்பித்து பேட்டி கண்டது. அந்தபேட்டியாளரின் ஒரு கேள்வி. நீங்கள் ஏன்? பதின்மூன்று இராணுவத்தைக் கொன்றீர்கள்? என்ன தேவையிருந்து என்பதே!.
அதற்கு பதில் அளித்தவர்கள் யார் என்பது வாசகர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். அவர்கள் சொன்னபதில் நான்கு கல்லூரி மாணவிகளை காணவில்லை இது சிங்கள இராணுவத்தின் கைங்கரியமே!இனி எம்மால் பொறுக்க முடியாது என்பதே. இதன் பிறகு ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம்.
அன்று கருத்துச் சொன்ன அதே மேதாவிகள் தான் இன்றும் கருத்துச் சொல்லுகிறாகிறார்கள். மற்றவனுக்கு சமஉரிமை கொடுப்பதை மறுதலிப்பதே முதலாளித்துவ குணாம்சம். இனி என்ன? விளக்கம் வேண்டும்?.
BC
நன்றி நிர்மலன். இது பார்த்திபன் 7 மாதங்களுக்கு முன்பு எழுதியது. ஆனால் புலி ஆதரவாளர்கள் இன்னும் மக்கள் காதில் பூ சுறறும் முயற்சியை இன்னும் தொடர்கிறார்கள். பார்த்திபன், நீங்கள் முன்பு போல் அடிக்கடி வரவும். அன்பான வேண்டுகோள்.
Kusumpu
பென்சேகா காட்டிக்கொடுத்துவிட்டார் சர்வதேசத்திடம் காட்டிக்கொடுத்து விட்டார் என்பதன் மூலம் ஏதோ ஒரு குற்றம் மறைக்கப்பட்டிருக்கிறது அது சர்வதேசத்தின் முன் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதுதானே உண்மை. இதிலிருந்து ஒன்று தெழிவாகப்புலனாகிறது. அரசு ஒரு சர்வதேசக்குற்றத்தை செய்துள்ளது. இலங்கையின் இராணுவ இரகசியங்களை இன்னொரு நாட்டுக்குக் காட்டிக் கொடுப்பதே துரோகமாகவும் நீதிக்குப் புறம்பானதுமாகும். ஆனால இங்கே மக்களின் மேல் ஏற்படுத்தப்பட்டு இராணுவப்பிரயோகம் கொலை சித்திரவதை என்பன இராணுவ நிதிமன்றத்துக்கு அப்பாற்பட்டது. இது ஒரு சிவில் வழக்காக மாற்றப்படவேண்டிய கடமை ஜனநாயகத்துக்கு உண்டு. உதாரணமாக இரத்தஞாயிறு (பிளடிசனடேய்) இதாவது அரச இயந்திரமான பாதுகாப்புப்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று பொன்சேகா இராணுவ அதிகாரியோ சர்வசாதாரணமான இராணுவச் சிப்போயோ கூட இல்லை. பிரதமா மந்திரியாயினும் ஜனாதிபதியாயினும் புலித்தலைவர்களை மக்களை கொல்லுமாறு உத்தரவு கொடுத்தது யாராணினும் இது இராணுவநீதி மன்றுக்கு அப்பாற்பட்டது. இதை உத்தரவிடுவதற்கு கோத்தபாய இல்லது மகிந்த என்ன இராணுவ அதிகாரிகளா? இது இராணுவ வரையறையையே மீறும் செயல் அல்லவா. ஜனாதிபதியோ அல்லது பாதுகாப்பு அமைச்சரோ சிவில் நிர்வாக நீதியின் கீழ் உள்ளவர்கள். இன்றுள்ள ஜனநாயக அமைப்பில் கருணா பிள்ளையான் ஏன் நான் கூட பாதுகாப்பு அமைச்சராக வரலாம் எமக்கு இராணுவம்பற்றிய அறிவு படிப்பு எவ்வளவு இருக்கிறது. இராணுவ மேலதிகாரிகள் செய்ய வேண்டியதை கோத்தபாயவோ மகிந்தவோ செய்தால் இவர்கள் இவர்கள் பாதுகாப்பமைச்சரோ ஜனாதிபதியோ அல்ல இவர்கள் இராணுவ மசின்கள். இவர்கள் புலிகளை விட எந்தவிதத்திலும் சிறந்தவர்கள் அல்லர்.