ஆறுமுகன் அமைச்சுப் பதவி ஏற்பதில் இன்னும் முடிவில்லை

arumugam.jpgஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் எம். பி, அமைச்சுப் பதவி ஏற்பது தொடர்பில் இன்னமும் முடிவுகள் எட்டப்படவில்லையெனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த அமைச்சரவையில் வகித்த அமைச்சுப் பொறுப்புகள் இந்தமுறை எவருக்கும் மீள வழங்கப்படாததால், இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அமைச்சைப் பெறுவது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆறுமுகன் தொண்டமான் எம். பிக்குக் கால் நடை அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்ட போதிலும் அதனை அவர் ஏற்கவில்லையெனத் தெரிய வருகிறது. இந் நிலையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். இன்று அல்லது நாளை தொண்டமான் அமைச்சர் பதவி ஏற்பார் எனத் தெரிய வருகிறது.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • மாயா
    மாயா

    தொண்டமானுக்கு கொடுக்கவிருந்த பதவியோடு வேறு சில பொறுப்புகளும் உள்ளடக்கிய புதிய அமைச்சர் பதவியொன்று கிடைக்கவுள்ளது. இதை ஜனாதிபதி , நேரடியாக தொலைபேசியில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 30ம் திகதிக்குள் அனைத்தும் தெரியவரும்.

    Reply