இலங் கையில் சட்டத்தின் ஆட்சி நிலைபெற வேண்டும் என்று ஜெனரல் சரத் பொன்சேகா தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த 12 தினங்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து சரத் பொன்சேகா அவர்கள் பொது இடத்தில் பேசிய முதலாவது தருணம் இதுதான்.
சுருக்கமான தனது உரையில், முதலில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரை வாழ்த்திய பிறகு, பொன்சேகா அவர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தாக்கிப் பேசினார். இலங்கைக்கு, ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும், தனிநபர் மற்றும் ஊடக சுதந்திரமும் தேவை என்று அவர் கூறினார். தான் வருத்தத்துடன் பேசுவதாக கூறிய அவர், பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வெள்ளை உடையில் வந்திருந்த பொன்சேகா அவர்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கைகுலுக்கிக் கொண்டதுடன், பார்வையாளர் அமரும் பகுதியை நோக்கி கையசைத்தார்.
PALLI
கன்னி உரை ;இதுவே இறுதி உரையாக
இருக்காமல் பார்த்துக்குங்க;
sumi
என்ன பல்லி வக்காளத்தா?