நாடு முழுவதிலும் அமைதியான வாக்களிப்பு

பதினான் காவது பாராளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7:00 மணிக்கு நாடு முழுவதிலும் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமானது. இன்று மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்தது. தேசம்நெற் சார்பில் கண்டி, மாத்தளை, குருணாகலை ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்த எமது குழுவினர் தேர்தல் அமைதியாக நடைபெற்றதை உறுதிப்படுத்தினர். அத்துடன் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. சில சில இடங்களில் சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் கூட அவை வாக்களிப்பினை பாதிக்கக் கூடியதாக இருந்ததாக இதுவரை உத்தியோகப் பூர்வமாக கிடைக்கப் பெறவில்லை. 

அமைதியான தேர்தலொன்றை நடத்துவதற்காக முப்படையினரும் பொலீஸாரும் விசேட கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது மக்கள் வாக்களிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. பெரும்பாலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது வாக்களிப்பு விகிதம் குறைவடைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.   தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு முதல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முடிவுகள் வெளியானவுடன் மாவட்ட ரீதியான முடிவுகளை தொகுத்துத் தர தேசம்நெற் விசேட ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

Show More
Leave a Reply to Sivam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Sivam
    Sivam

    வன்னி மாவட்டத்தின் 2,66,975வாக்காளர்களில் 65,416 வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். இதன்படி வாக்களிப்பு வீதமானது 24.5ஆகும். இதன்படி வவுனியா தொகுதியில் 1,12,924 வாக்காளர்களில் 37,891பேர் (33.55) வாக்களித்துள்ளனர். முல்லைத்தீவு தொகுதியில் 68,729வாக்காளர்களில் 8012பேர் (11.66) வாக்களித்துள்ளனர். மன்னார் தொகுதியில் 85,322வாக்காளர்களில் 19,513பேர்(22.78) வாக்களித்துள்ளனர். இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 15,763பேரில் 8087பேர் (51.31)வாக்களித்துள்ளனர்.

    இந்நிலையில் வன்னி மாவட்டத்தில் 20ஆயிரம் வாக்குகளைப் பெறும் கட்சிக்கு குறைந்தபட்சம் 03ஆசனங்களாவது கிடைக்கும் சாத்தியமே காணப்படுகிறது. இந்த ஆசனங்கள் புளொட் அமைப்புக்கா?, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கா? என்பது தெரியாதநிலை உள்ளது. ஆயினும் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் குறிப்பாக முல்லைத்தீவு மக்கள் மத்தியில் தீவிர தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த புளொட் அமைப்பினருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின் நிமித்தம் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினரால் அப்பகுதி வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும் போது தடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

    அத்துடன் அவர்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் நோக்கில் வாக்களிப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப் பட்டதென்பதை தேர்தல் ஆணையாளரின் உதவியதிகாரி சுட்டிக் காட்டியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாயினும் இன்னும் சிறிது நேரத்தில் வன்னித் தேர்தலின் சரியான முடிவுகள் தெரிய வரும். இது இவ்விதமிருக்க யாழ்ப்பாணத்தில் 18முதல் 20வீதமும், திருமலையில் 58வீதமும், மட்டக்களப்பில் 56வீதமும், அம்பாறையில் 60வீதமும் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெறவில்லையென்று ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சுமத்தியுள்ளார். இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இன்று நண்பகல் வரையில் 40வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது இவ்விதமிருக்க யாழ் மாவட்டத்தில் மந்தகதியில் வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதுடன் அங்கு 15வீத வாக்குகளே பதிவாகியுள்ளதாகவும், புத்தளத்தில் 33வீத வாக்களிப்பு இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை தற்போது வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வருவதுடன், பாதுகாப்பு ஏற்பாட்டுடன் நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச்செல்லப்படவிருப்பதாகவும் தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலiயில் இன்றுமாலை 6மணியளவில் தபால்மூல வாக்களிப்புக்கள் எண்ணப்படவுள்ளன. இம்முறை தேர்தல் வடக்கு கிழக்கைப் பொறுத்தமட்டில் அமைதியாக நடைபெற்றதுடன், மக்கள் வாக்களிப்பில் அக்கறை காட்டியமை குறைவாகவே காணப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் அக்கறை காட்டாமையானது சமூகத்தின் பின்னடைவுக்கே வழிவகுக்குமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    Reply
  • Sivam
    Sivam

    bbc.co.uk/tamil/news/story/2010/04/100408_slpoll.shtml
    வாக்குப் பதிவு முடிந்தது தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்திருந்தன
    இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. வாக்குப் பதிவு மந்தமாக இருந்ததாகவும், ஆங்காங்கே வன்சம்பவங்கள் நடந்திருந்ததாகவும் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன. கடந்த வருடம் அரச படையினர் விடுதலைப் புலிகளை தோற்கடிக்கடித்ததன் பின்பு அங்கு நடக்கின்ற முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது.

    பல இடங்களில் வாக்குப் பதிவு சுமூகமாக நடந்தது என்றாலும் வாக்களிப்பின்போது நடந்ததாகத் தெரிவிக்கப்படும் தேர்தல் முறைகேடுகள் பற்றி தங்களுக்கு முன்னூறு புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் என்ற சுயாதீனக் குழு கூறுகிறது.

    இப்புகார்களில் 80 சச்தவீதமானவை ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராகவே தெரிவிக்கப்படடுள்ளன.

    கண்டி நகரருகே ஓர் இடத்தில் வாக்குச் சாவடிக்கு வந்த எதிர்க்கட்சி முகவர்களை ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் விரட்டி அடித்து, வாக்குச் சாவடிக்குள் அதிரடியாக நுழைந்து, வாக்குப் பெட்டிகளில் வாக்குகளை நிரப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    தென்னிலங்கையில் இரு இடங்களில் வாக்குச் சாவடி அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவற்றில் யாரும் காயம் அடைந்ததாகத் தெரியவில்லை.

    நாடளவில் சராசரியாக 40 சதவீதம் அளவிலேயே வாக்குப் பதிவு நடந்திருப்பதாகக் கருதப்படுகிறது. யாழ்ப்பாணம் பகுதியில் வாக்குப் பதிவு மிகவும் குறைவாக இருந்ததாகத் தெரிகிறது.

    கடந்த ஜனவரி நடந்த தேர்தலில் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் அரசியலில் தனது செல்வாக்கையும் ஆதரவையும் இந்தத் தேர்தல்கள் வலுப்படுத்தும் என்று நம்புகிறார்.

    இலங்கையின் எதிர்க்கட்சிகள் சிதறுண்டு காணப்படுவதாகவும், அரசாங்கத்தை அவர்கள் ஒருமித்த குரலோடு விமர்சித்திருக்கவில்லை என்றும் கொழும்பிலுள்ள எமது செய்தியாளர் கூறுகிறார்.

    Reply
  • Hazan
    Hazan

    GENERAL ELECTION RESULTS 2010
    http://www.srilankanelections.com/results/results-main.shtml

    Reply
  • Appu hammy
    Appu hammy

    Bandara attacked, four arrested Saturday, 10 April 2010 UNP Puttalam District candidate and former MP Palitha Range Bandara, who contested at the 2010 General Elections, was assaulted in Chilaw this evening and has been admitted to hospital. Four people have been arrested over the incident. Four people have been arrested over the incident, Police spokesman S.P Jayakody

    The police spokesman further said that among those arrested was a UNP member and said the clash was part of intra-party rivalry. He also said that Range Bandara was transfered to the Colombo National hospital from Chilaw for further treatment. He was believed to be in critical condition. (ER)

    Reply