புலத்தில் வேகாத பருப்புகள் இலங்கைத் தேர்தல் களத்தில்

Seveal_K_JHC_in_Jaffnaயாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – யுகே யின் தலைவர் க செவ்வேள் யாழில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுகின்றார். பெரும்பாலும் ஆளும்கட்சியின் பட்டியலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட க செவ்வெள் தற்போது சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அல்லது களம் இறக்கப்பட்டு உள்ளார்.

தன்னை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என விளம்பரப்படுத்தும் க செவ்வேள் லண்டனில் சட்டத்தரணி அல்ல என்றும் சட்ட உதவியாளராகவே பணியாற்றி வருகின்றார்.ஆனால் க செவ்வேளுக்காக யாழில் ஒட்டப்பட்ட பிரசுரங்கள் அவரை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என வர்ணித்து இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் சினிமாத்துறையிலும் ஈடுபட்ட க செவ்வேள் சில படங்களையும் தயாரித்து இருந்தார். இவர் படத் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்த வேளையில் இவரது பொறுப்பில் இருந்த அரசியல் தஞ்ச வழக்குகள் சில பாதிக்கப்பட்டு இருந்தது.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மானவரான இவர் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு விசனம் தெரிவித்து உள்ளனர். ஆனால் அது அவருடைய அரசியல் தெரிவு என்ற அடிப்படையிலும் பழைய மாணவர் சங்கத்தின் யாப்பு உறுப்பினர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என்ற கடப்பாட்டை கொண்டிராததால்  க செவ்வேளிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் இன்னும் சிலரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
க செவ்வேளை விடவும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினர் அருளர், முன்னால் தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் கிறிஸ் சரவணன் ஆகியோரும் லண்டனில் இருந்து சென்று தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    இவர்களை ‘புலத்தில் வேகாத பருப்புகள்’ என எவ்வாறு சொல்கிறீர்கள்?
    உங்களின் விளக்கப்படி ‘வேகாத’ ,’பருப்பு’ என்றால் என்ன வரைவிலக்கணம்?
    யார் யார் ‘பருப்பாக’ தகுதி உள்ளவர்கள், ‘வேகுவதற்கு’ என்ன லெவலில் இருக்க வேண்டும்?

    Reply
  • thurai
    thurai

    நேற்ருப் பெய்த மழைக்கு இன்று முழைத்த காளான்கள் என்றும் சொல்லலாம். புலியின் பிடியில் மக்கள் ஈழத்திலும் புலத்திலும் அவஸ்தைப்பட்ட காலாம் போய்விட்டது. இப்போ இந்த திடீர் அரசியல்வாதிகள் புலத்திலும், இலங்கையிலும் தோன்றியுள்ளார்கள். இவர்கள் மழைக்கு புற்றுக்கால் புறப்பட்ட பூச்சிகள் வெளிச்சத்தை தேடிப்போய் சிற்குகளை இழந்து வீழ்வது போல் வந்த இடமும் போன இடமும் தெரியாமல் போய் விடுவார்கள்.

    உருமை இழந்தவ்ர்கழும், பிரச்சினைப்படுபவர்கழும் வாய் திறக்குமுன் உல்லாச அரசியல் வாதிகள் இலங்கையை நோக்கி படையெடுப்பது ஆண்ட பரம்பரை மீண்டுமொரு தமிழரைவைத்துப் பிழைப்பதில் என்ன குறை என்பதுபோலாகும்.

    துரை

    Reply
  • Aras
    Aras

    இவர் மக்களுக்கு அப்படி என்னதான் சேவை செய்தார்? சட்டத்தரணி என்றவுடன் யாழ் சமூகம் வாய் பிளக்கும் என நினைக்கிறார் போலும். சினிமாவில் நுழைந்து கோடிகளில் புரளலாம் என நினைத்தவர் இப்போது தேர்தலில் திரும்பியிருக்கிறார்.

    Reply
  • padamman
    padamman

    இவர் சென்னையில் சினிமா ஆசை காட்டி ஒரு பெண்னை பாலியல் பாலக்காரம் செய்து உள்ளதாகவும் அதைப்பற்ரிய செய்திகள் நக்கிரன் பத்திரிக்கையில் செய்தியாக வந்ததாகவும் அதனால் இவர் இந்தியாபக்கம் போகமுடியாமல் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.

    Reply
  • Ahmed Nadvi
    Ahmed Nadvi

    Mr. Sevvelis is not a solicitor. He has been only a case worker. He has not even studied law. I do not understand why this guy cannot tell the truth to the people and stand in the election. why does he think that he should be a solicitor to contest in the election.

    A big lie at the outset of the election would lead him to lie to his constituents if he wins. So another one in the long list of cheaters among the Tamil community. Voters should reject persons like him.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இந்த செவ்வேள் பற்றி எனக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லைத்தான். இவர் பழைய (இன்றும்) புளொட் ஆள். லண்டனில் இவர்தான் 1980களில் புளொட் அலுவலகத்தை நடத்தியவர் என நினைக்கிறேன். பலமுறை புளொட் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டபோது அதிகாலை வேளை இரவுவேளை என்றில்லாமல் அங்கிருந்து தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தவர்.

    ஆனாலும் பட்டம்மானின் ‘இருப்பதாகவும் அறியமுடிகின்றது’ வகை பதில்கள் வெறும் பம்மாத்து. ஆதாரம் இருந்தால் சொன்னால் நல்லது. அல்லது நக்கீரனைத் தொடர்புகொண்டால் நிச்சயம் தருவார்கள். பட்டம்மான் நக்கீரனைத் தொடர்புகொண்டு ஆதாரம் தருவதுதான் முறையான செயல்.

    மேலும் அஹமட் நத்வி சொல்வது போல் ஏன் இவர்கள் ஊருக்குச் சென்று ‘கதை’ விடுகிறார்களோ தெரியவில்லை. ஒருவேளை பழைய யாழ் எம்.பி யோகேஸ்வரன் காட்டிய வழியோ தெரியவில்லை. 1977 தேர்தலில் யோகேஸ்வரனுக்கு ஆசனம் வழங்கியதற்கு கூட்டணி சொன்ன பதில் ‘அவர் லண்டனில் தமிழர் உரிமைக்கு போராடியவர்’ என்பதாகும்!

    Reply
  • Kannan
    Kannan

    Who is the perfect politicion now a days or before May 18…? Do you think Pirabhaharan never lie to the people he said he loved..??? I don’t know Mr Seveal but atleast he didn’t kill 40’000 inosent our boys and girls.. and destroyed the daispora thamils… so let the people in our land decide, you guy’s have no rights to tell who is better and who’s lies. Please atleast let the people alone…

    Reply
  • anwar
    anwar

    நல்ல வேளை ..செவ்வேல் எடுத்த படத்தின் பெயரை போடாமல் விட்டீர்கள். அது வேறு விவாதத்தை கிளப்பியிருக்கும்.
    இந்த கிரிஸ் சரவணனைத்தான் ,தூதுவர் அம்சாவோடு இணைத்து பேசினார்கள்.
    புலத்தில் இவர்களின் ‘பருப்பு’ வேகவில்லைத்தான். but மகிந்தரின் பருப்பில் இவர்கள் வேகிவிட்டார்கள்.
    மகளிட்ட சொல்லி [ மாயா ], அருளருக்கும் ஒரு பாட்டு எழுதச்சொல்லலாம்.
    புலிக்கு மட்டும் ஏன் எழுதினாய் எண்டு ,அப்பா கோவிக்கப்போகிறார்.
    அது சரி .. இது மைசூர் பருப்பா அல்லது துவரம்பருப்பா?

    லண்டனில நோத்தாறிசுகள்தான் அதிகம் எண்டு கேள்வி.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    கண்ணன்,
    பிரபாகரன் பொய்சொன்னார் என்பதற்காக எல்லோரும் சொல்லலாமா? அல்லது இப்போதைய அரசியல் வாதிகள் நல்லவர்கள் இல்லை என்பதற்க்காக இனிவருவோரும் அவ்வாறு இருக்கலாம் என்றால் ஏன் தேர்தல் வைக்கவேண்டும். இவர்கள் ஏன் லண்டனில் இருந்து போய் இலக்சனில் நிற்கவேண்டும். முன்னர் இருந்தவர்களையே தொடர்ந்து இருக்க விடலாமே?
    செவ்வேள் தான் ஒரு சட்டத்தரணி என நோட்டீஸ் அடித்திருக்கிறார் என்கிறார் கட்டுரையாளர். அவ்வாறாயின் செவ்வேள் பொய் சொல்கிறார். அவரின் உண்மை முகம் மக்களுக்குத் தெரிய வேண்டாமா? அவரை அறிந்த லண்டன் வாசிகள் பேசாமல் இருக்க வேண்டும் என்கிறீர்களா? அவ்வாறாயின் பிரபாகரனைப்பற்ரியும் பேசாமல் இருந்திருக்கலாம் அல்லவா?

    //….நல்ல வேளை ..செவ்வேல் எடுத்த படத்தின் பெயரை போடாமல் விட்டீர்கள். அது வேறு விவாதத்தை கிளப்பியிருக்கும்….//
    அன்வர், இவர் தயாரித்த படங்கள் ‘கோடம்பாக்கம்’ , ‘காதல்டொட்கொம்’.

    Reply
  • singam
    singam

    செவ்வேள் செய்வது பிழையெண்டால் மாவை சேனாதிராசாவும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் செய்வது சரியா ? மாவை தான் இந்தியாவில் எம்.ஏ. படித்தது என்று துண்டுப்பிரசுரத்தில் போட்டிருக்கிறார். சுரேஸ் தான் லண்டனில் எம்.எஸ்.சி. பட்டதாரி என யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு காது குத்தியிருக்கிறார்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…செவ்வேள் செய்வது பிழையெண்டால் மாவை சேனாதிராசாவும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் செய்வது சரியா ?…///

    செவ்வேள் செய்வது பிழைஎன்றால்த்தான் மாவையும், சுரேசும் பிழையா? மாவையும், சுரேசும் பொய் சொல்லி இருந்தால் அவர்கள் செய்வதும் பிழையே! இதிலெந்த சந்தேகமும் வேண்டாம்.
    அதேபோல பிரான்ஸ் சோபோர்ண் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வாங்கியவர் என்று சொன்ன சந்திரிகாவும், ஜனநாயக வாதிகள் எனச் சொல்லி ‘வெள்ளைவான்’ கடத்தல்கள் செய்யும் முன்னாள் ‘புரட்சிக்காரரும்’ பிழைதான்.
    இவர்களின் பிழைகளைச் சொல்லி செவ்வேளை நியாயப்படுத்த வேண்டாம்!

    Reply
  • மாயா
    மாயா

    தமிழர்கள் மொக்குகளாக இருக்கும் வரை, தமிழ் அரசியல்வாதிகள் அல்லது அரசியல்வாதிகளாக வர முயல்வோர் வாழ்வார்கள். பொய்களைப் போல உண்மைகளை தமிழர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. யதார்த்தங்களையும் ஏற்பவர்கள் இல்லை.

    எல்லோரும் தம்மை முதன்மைப் படுத்திக் கொள்ள அப்பாவித் தமிழர் மேல் சவாரி போக நினைக்கிறார்கள். அதற்காக காது குத்தாதவர்களுக்கு காது குத்துகிறார்கள். குத்தியவர்கள் காதையே அறுக்கிறார்கள்.

    புலத்திலும் , புலிகள் ஏனையவர்களை முன்னேற விடாமல் தடுத்தார்கள். இப்போது புலிகள் சார்ந்திருந்தோர் முன்னேற்றத்தை தடுக்க முயல்கிறார்கள். இவர்கள் எவரும் தமிழராய், தமிழரைப் பார்பதில்லை, பார்த்ததும் இல்லை, பார்க்கப் போவதும் இல்லை. எனவே எதிர்கால தமிழ் சமூகம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளோடு தம்மை சங்கமித்துக் கொள்ளும். அதுபோல இலங்கையில் சிங்கள சமூகத்தோடு தமிழரும் கலந்து விடுவார்கள். இதற்கு காரணம் , தமிழ் தலைவர்கள் பென்சனுக்காக அரசிலுக்கு வந்தவர்கள். இந்த உண்மையை தமிழன் உணராத வரை தமிழன் சோரம் போவதைத் தடுக்க முடியாது.

    புலத்திலிருந்து அங்கு அரசியல் செய்யப் போகிறார்கள் என்றால் , அவர்கள் ஏதோ தனிப்பட்ட நலனுக்காக , வியாபாரம், தமது சொத்துக்களை மீட்க , என்பன போன்ற ஏதாவது ஒன்றைச் செய்யும் திட்டத்தோடு களம் இறங்கியிருக்கிறார்கள்.

    உண்மையில் மக்கள் மீது இவர்கள் நேசம் கொண்டவர்களென்றால் , இந்த அரசியலை விட்டு , ஏதாவது ஒரு பகுதி மக்களில் சிலர் வாழ , ஒரு தொழில் வாய்ப்பை அல்லது உதவி பணியொன்றை செய்யலாம். அங்கேயுள்ளவர்கள் அவர்களது அரசியலை பார்த்துக் கொள்வார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற பின் கொழும்பிலும் , இந்தியாவிலும் போய் தங்கி விட்ட அரசியல்வாதிகளை அந்த தொகுதி மக்கள் , இது போன்ற தேர்தல் காலங்களில்தான் சந்திப்பதுண்டு. வெளிநாட்டுக்காரர்கள் தேர்தலில் வென்றால் , அந்த மக்கள் வீஸா எடுத்துத்தான் அவரை தேடி வர வேண்டும். பட்டினியோடு வாழ்பவனுக்கு பாஸ்போட் எடுத்து , வீஸா எடுத்து…………..தலை சுத்துது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….தமிழர்கள் மொக்குகளாக இருக்கும் வரை,..///

    //….எல்லோரும் தம்மை முதன்மைப் படுத்திக் கொள்ள அப்பாவித் தமிழர் மேல் சவாரி போக நினைக்கிறார்கள்….///

    மாயா,

    மொக்குகள் என்கிறீர்கள் அடுத்த வரியில் பின்னர் அப்பாவிகள் என்கிறீர்கள்.
    முன்பொருமுறை சோம்பேறிகள் காசும் தருவீர்கள் தானே எனக்கேட்டார்கள், அமெரிக்கன் சொன்னான். ஐயையோ மானம் போகுது என்றீர்கள். பின்னர் காசும்தருகினம் எனப் பழைய புலி சொல்லி குதூகலிப்பதாக சாமரம் வீசினீர்கள்.
    அதை எல்லாம் தூக்கிச்சப்பிடுமாப்போல் இது.அடுத்தடுத்த வரிகளிலேயெ தலைகீழாக தொங்குகிறீர்கள்!!!!!

    Reply
  • மாயா
    மாயா

    சாந்தன் , மொக்குகளை மொக்குள் என்றும் , அப்பாவிகளை அப்பாவிகள் என்றும், சோம்பேறிகளை சோம்பேறிகள் என்றும், இடத்துக்கும் , நடைமுறைக்கும் ஒப்ப கதைப்பதில் என்ன தவறு?

    தமிழரை தமிழர் என்றும் , சிங்களவர்களை சிங்களவர் என்றும் , ரோப்பியரை ஐரோப்பியர் என்றும் சொல்கிறோம். உங்கள பாசையில் புலிகளை , நீங்கள் துரோகிகள் என்று சொன்னதில்லை. அதிலிருந்து வெளியேறிய பிறகே துரோகிகள் என்றீர்கள். இது எந்த வகையில்?

    எல்லாரையும் மனிதன் என்று சொல்லலாம். ஆனாலும் புத்திசாலியாகவும் , மடையனாகவும், ஏமாறுபவனாகவும் ஆகும் போது அவனை அப்படி அழைக்கின்றனரா? இல்லை. திருடனைக் கூட மனிதன் என அழைக்கின்றனரா?

    Reply
  • sumi
    sumi

    இவர்கள் புலத்தில் இருக்கும் போது “அண்ணன் எப்போ சாவான் -திண்ணை எப்போ காலியாகும்” என்று காத்திருந்தார்கள். தற்போது பூனையில்லாத வீட்டில் எலிகளுக்கு
    நல்ல கொண்டாட்டம்.மன்னிக்கவும் புலியில்லாத வீட்டில்…..அவ்வளவுதான்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ///……மொக்குகளை மொக்குள் என்றும் , அப்பாவிகளை அப்பாவிகள் என்றும், சோம்பேறிகளை சோம்பேறிகள் என்றும், இடத்துக்கும் , நடைமுறைக்கும் ஒப்ப கதைப்பதில் என்ன தவறு….////

    ‘இடத்துக்கும்’, ’நடைமுறைக்கும்’ ஒப்ப பேசுவதற்குப் பெயர் சந்தர்ப்ப வாதம்!
    நீங்கள் அதைச் செய்வீர்கள் என்பது ஒன்றும் ஆச்சர்யமல்ல. அடுத்தடுத்த வரிகளில் செய்வீர்கள் எண்ரு தெரிந்தது கொஞ்சம் புதிதுதான்.
    உங்கள் மொழியில் அதற்கு அறிவுஜீவித்தனம் என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது!

    Reply
  • Ravi
    Ravi

    புத்திசாலியும்,ஏமாற்றுக்காரனும் எங்கும் பிளைத்துக்கொள்ளுவான்.நீங்கள் நாலுபேர் இங்கிருந்து கத்தி ஒன்றும் ஆகப்போவதில்லை.பாவம் மக்கள் .

    Reply
  • மாயா
    மாயா

    //உங்கள் மொழியில் அதற்கு அறிவுஜீவித்தனம் என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது! – சாந்தன் //

    அது இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் மண்டையை போட்டிருக்க வேண்டியதில்லை. கையில் கிடைத்ததை வாயில் போட்டுக் கொள்ளத் தெரியாததை என்னவென்று சொல்வது?

    மகிந்தவை யதார்த்தவாதி என்று சொன்ன புத்திசாலிக்கு பின்னால் நின்றவர்களால் , அவர்களைப் போன்றவர்களைத்தான் மெச்ச முடியும். புலிக் கூட்டம், கடைசியில் சரத் பொண்சேகா நல்லவர் ஓட்டுப் போடுங்கோ என்றதெல்லாம் புத்திசாலித்தனம்?

    //இடத்துக்கும்’, ’நடைமுறைக்கும்’ ஒப்ப பேசுவதற்குப் பெயர் சந்தர்ப்ப வாதம்!//
    அம்மாவுக்கும் , பொண்டாட்டிக்கும் வித்தியாசமில்லை. இருவரும் பெண்தான் என நடப்பவன் உங்களைப் பொறுத்தவரை புத்திசாலி. அம்மா வேறு, தங்கச்சி வேறு, அக்கா வேறு, மனைவி வேறு என நினைப்பவன் சந்தர்ப்பவாதி. அப்படித்தானே?

    Reply