அரசியல் கட்சிகளின் பெயராலும் ஒருசில நிறுவனங்களின் பெயராலும் யாழ் குடாநாட்டில் பொதுமக்களிடம் இருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகத்திற்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. எனவே யாழ். குடாநாட்டு மக்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டுமென ஈ.பி.டி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் கேட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், யாழ் மாநகர சபைத் தேர்தல் காலத்திலும் நலன்புரி நிலையங்களில் இருப்போரை விடுவித்துத் தருவதாகக் கூறி சில சக்திகள் இதேபோன்று பொது மக்களிடமிருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்வாசி
ஆடு நனைகின்றதென்று ஓநாய் அழுகின்றது அல்லது சாத்தான் வேதம் ஓதுகின்றது.
அரஸ்
இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் இன்னமும் இந்த பாழாய்ப் போன புலிகள் அழிக்கப்படவில்லைப் போல இருக்கிறது. தயவு செய்து தோழரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.
thayakan
யோசி!.. யோசி!.. யோசி!!
என் சீவன் யாழ் வாசி!!!
இந்த அறிக்கை விட்டது
கூட்டமைப்பு அல்ல… ஈ.பி.டி.பி விட்ட அறிக்கை அது!
ஆடு நனைகின்ற கதை வேறு ஆட்களுக்குத்தான் பொருத்தம் பாருங்கோ…..
muraly
யாழ்வாசி நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள்? அறிக்கையை ஒழுங்காக முதலில் படியுங்கள்