சரத் பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரதம்

sarath_fonseka-02.jpgதமது பிள்ளைகளுடன் தொலைபேசி ஊடாக உரையாட அனுமதி தருமாறு கோரி ஜெனரல் சரத் பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவரது பாரியார் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 
தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள தமது மகள்மாருடன் உரையாடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. எனவே இக்கோரிக்கை நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதத்தினை ஜெனரல் சரத் பொன்சேகா தொடரவுள்ளதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

21 Comments

  • Appu hammy
    Appu hammy

    What’s going on in our nation ??
    Demo-cracy at its best. Not too far behind the closest ally Myanmar

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் மட்டும் காந்தியை படம் காட்டி,
    அகிம்சைக்கு அச்சாரம் போடாது,
    அமெரிக்க எகாதிபத்தியமும் அதைச் செய்விக்கும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அடடா இராணுவம் கைது செய்த அப்பாவித் தமிழ் இளைஞர்களுக்கு, இவர் இராணுவத் தளபதியாக இப்படியெல்லாம் வசதிகள் செய்து கொடுத்தாரா?? இவர் இராணுவக் கைதியாக இருக்கின்றார் என்பதை மறந்து விட்டார் போலுள்ளது.

    Reply
  • palli
    palli

    சாகா வரம் (தண்டனை) வேண்டி சாகும்வரை உண்ணா விரதம்; நடந்தவை ;நடப்பவை நடக்க இருப்பவை எல்லாமே அவன் செயல்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..அடடா இராணுவம் கைது செய்த அப்பாவித் தமிழ் இளைஞர்களுக்கு, இவர் இராணுவத் தளபதியாக இப்படியெல்லாம் வசதிகள் செய்து கொடுத்தாரா?? ….//

    இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கவேண்டியது மஹிந்தாவிடம்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    மகிந்த அகதிமுகாமிலுள்ள மக்களை 180 நாட்களுக்குள் மீள்குடியேற்றம் செய்யப் போவதாக முன்பு அறிக்கை விட்டபோது, இதே சரத் பொன்சேகா தான் அதற்கு சாத்தியமில்லை குறைந்தது 3 வருடங்களுக்குப் பின் தான் மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென மறுப்பறிக்கை விட்டவர். இராணுவம் கைது செய்த இளைஞர்கள் பற்றிய விபரங்களை அறிவதற்கும், இவர் தான் தடை விதித்து அலைக்களித்தார். மகிந்த முப்படைத்தளபதி என்பதால் அவர் தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பென்று நொண்டிச்சாட்டு சொல்லிவிட முடியாது.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    சரத்! சாமியே சரணமையப்பா!! செய்த பழிவிடாதப்பா… பாவத்தின் சம்பளம் மரணம்…மரணம்…மரணம்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    என்ன பார்த்திபன் நிங்கள் ஆகலும் தான் பகிடி விடுகிறியள். நானே எல்லாவற்றுக்கும் பொறுப்பு சர்வதேச விசாரன வேண்டும் என்றால் என்னிடம் கேட்கட்டும் என மார்தட்டி மஹிந்தாவே சொல்லியும் நொண்டிச்சாட்டு அது இது என வக்காலத்து வாங்குறியள். மஹிந்தாவே நாணிச்சிவக்கப்போகிறார்!

    சரி அதுதான் போகட்டும், மஹிந்தாவுக்கு இப்போது தெரிவியுங்களேன். இனியாவது ‘அப்பாவித்தமிழர்களுக்கு’ வசதி உண்டா? அவர்கள் விடுவிக்கப்படுவார்களா? அற்லீஸ்ற் அவர்களின் குடும்பங்களுக்கு அவர்கள் எங்கே ’வைத்திருக்கின்றனர்’ என்ற அடிப்படை தகவல்களையாதல் சொல்லுவாரா ‘முப்படைத் தளபதி’.

    Reply
  • NANTHA
    NANTHA

    இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு தொலைபேசி வசதிகள் செய்துகொடுக்கப்பட்ட செய்தியை வெளிநாட்டிலுள்ள பாதிரிகளும், புலிகளும் இன்றுவரை சொன்னது கிடையாது. அப்படிச் சொன்னால் தங்களுடைய “சித்திரவதை” முகாம் கதை கந்தலாகிவிடும் என்று பயந்தவர்கள் இன்று முகாம் மக்களை விடக் கூடாது என்று சொன்ன பொன்சேகாவுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

    தற்போதுள்ள முகாம்களின் தொலைபேசி இலக்கங்களை இன்றும் இலங்கைத் தூதரகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    நான் பகிடி விடவில்லை. ஆனால் தாங்கள் தான் வடிவேலு கணக்கில் பிளந்து கட்டுகின்றீர்கள். இலங்கையில் நடந்த யுத்தம் சம்மந்தமாகவே மகிந்தவின் அந்த அறிவிப்பு வந்தது.

    முன்பு உங்களைப் போன்றவர்கள் தான் அகதி முகாம் மக்களை வெளியேற விட்டாலே, அவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்வார்கள் என்று அறிக்கை விட்டீர்கள். அரசு மக்களை வெளியே விட்டதும், அந்த மக்களுக்கு அரசின் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கூக்குரல் எழுப்புகின்றீர்கள். ஆனால் மக்களைச் சாட்டி “புலன்” பெயர்ந்தவர்கள் வெளிநாடுகளில் சுருட்டிய பல பில்லியன் பணத்தில், ஒரு சல்லிக்காசு கூட அந்த மக்களுக்கு சென்று சேரவில்லை. ஆனால் இன்றும் அந்த மக்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் திரும்பத் திரும்ப தொலைக்காட்சிகளில் காட்டி சுருட்டுவது மட்டும் தொடர்கின்றது. இன்று முகாம்களிலிருந்து வெளியேறிய மக்களே தாம் முகாமிலேயே இருந்திருக்கலாம் என்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கின்ற நிலைமை. அதுபோல் புலிகளென்று அரசு கைது செய்து வைத்திருக்கின்றவர்களை யூனிசெவ் நிறுவனம் தனித்தனியாக புகைப்படம் எடுத்து 3 வீடீயோக்கள் பல மாதங்கள் முன்பே வெளியிட்டதை தாங்கள் அறியவில்லையோ. (அறிந்திருந்தாலும் அதை ஒப்புக் கொள்ள உங்கள் மனம் விடாது). பலர் பெற்றோரிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டதும், பலரை அவர்களது பெற்றோர் சென்று சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டதும் தங்களுக்குத் தெரியாதென்றே நாங்க நம்புகின்றோம். ஏனென்றால் நீங்க ரொம்ப நல்லவர்…….

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பார்த்திபன்,
    நிறைவேற்று அதிகாரம் என்றால் என்ன, முப்படைத் ‘தளபதி’ என்றால் என்ன என அறிய முயலுங்கள். நான் வடிவேலுகனக்காக கதைவிடுவதை விடுங்கள் ஊர் சிரித்விட்டுப் போகு அதில் ஒன்றும் நட்டமில்லை. ஆனால் ‘தளபதி’ என்றால் விஜய், அஜித் லெவலில் தான் என நீங்கள் மஹிந்தாவைப் பற்றிச் சொன்னால் என்ன நடக்கும் என பாக்கியசோதி சரவணமுத்திவிடம் கேளுங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    எனக்கு நிறைவேற்று அதிகாரம் பற்றியோ, முப்படைத்தளபதி பற்றியோ நீங்கள் வகுப்பெடுக்க வேண்டிய நிலையில் நான் இல்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராயினும், எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் அதிகாரம் மகிந்தவிற்கு இல்லையென்பதை முதலில் தாங்கள் புரிந்து கொள்ளுங்கள். அப்படிப்பட்ட அதிகாரமிருந்திருந்தால் பாராளுமன்றத் தேர்தலில், தனது கட்சிக்கு 2/3 பெருண்பான்மை கிடைக்க வேண்டுமென்று மகிந்த ஆசைப்பட வேண்டிய தேவை இருக்காது.

    உங்களைப் போன்றவர்கள் தலை தலை என்று உசுப்பிவிட்டு கடைசியில் தலையிலேயே கொத்து வாங்கி போக வைத்தது போல, சரத் பொன்சேகாவையும் தளபதியிலிருந்து தலை ரேஞ்சுக்கு உயர்த்த உருவேற்றி இன்று வடிவேலு ரேஞ்சுக்கு கீழிறக்கி கருத்தெழுதுகின்றீர்கள். பாவம் எப்படியிருந்த சரத் பொன்சேகா இன்று உங்களைப் போன்றவர்களின் உசுப்பேற்றலால் இப்படி……

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    /…..எனக்கு நிறைவேற்று அதிகாரம் பற்றியோ, முப்படைத்தளபதி பற்றியோ நீங்கள் வகுப்பெடுக்க வேண்டிய நிலையில் நான் இல்லை….//

    உங்கள் பின்னூட்டங்களே என்னை அவ்வாறு நினைக்க வைத்தன, கோவித்துக்கொள்ள வேண்டாம் !
    ‘அப்பாவி’ இளைஞர்களை விடுவிக்க 2/3 ஒன்றும் தேவையில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //அப்பாவி’ இளைஞர்களை விடுவிக்க 2/3 ஒன்றும் தேவையில்லை.//

    அப்பாவி இளைஞர்களை விடுவிக்க 2/3 பெருண்பான்மை தேவையில்லைத் தான். ஆனால் சில “புலன்” பெயர்ந்ததுகள் தங்கள் இருப்பிற்கும், பணச் சுருட்டல்களுக்குமாக மீண்டும் தமிழீழப் போராட்டம் என்றும் வட்டுக்கோட்டை வடலிக்குள் தமிழீழம் என்றும் பிலிம் காட்ட வெளிக்கிட்டால், அரசு எப்படி புலிப் போராளிகளை வெளியில் விட முன்வரும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…அரசு எப்படி புலிப் போராளிகளை வெளியில் விட முன்வரும்…..//
    அப்பாவி இளைனரில் ஆரம்பித்து, அடுத்தவனை வசதியாக பழிசொல்லி ‘புலிப்போராளி’ என முடிக்கிறீர்கள். ஒரு வேளை உங்கள் மொழியில் புலிப்போராளிகள் அப்பாவிகளோ! என்னே மாற்றம் உங்கள் சிந்தனையில்!

    அப்போ அண்மையில் த்ம்மைப்பற்றி அவதூறாக எழுதியதற்காக ’உள்ளே தள்ளப்பட்ட’ பத்திரிகையாளரை அவர் சுற்றவாளி என மஹிந்தா தானே சொல்லி விடுவைத்ததாக கூறினாரே. மேலும் நீங்கள் சொல்வதுபோல ’புலன்’ பயர் கோஷ்டியால் தான் நான் விட மறுத்தேன் என சரத் சொல்லியதாகவும் எடுத்துக்கொள்லலாம் தானே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //அப்பாவி இளைனரில் ஆரம்பித்து, அடுத்தவனை வசதியாக பழிசொல்லி ‘புலிப்போராளி’ என முடிக்கிறீர்கள்.மேலும் நீங்கள் சொல்வதுபோல ’புலன்’ பயர் கோஷ்டியால் தான் நான் விட மறுத்தேன் என சரத் சொல்லியதாகவும் எடுத்துக்கொள்லலாம் தானே.//

    நான் வசதிற்கேற்றவாறு தங்கள் பாணியில் கதையளகக்கவில்லை. அரசினால் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவி இளைஞர்களலல்ல. குறுகிய காலத்தில் புலிகளால் பலாத்காரமாக கடத்தப்பட்டு போராளளியாக்கப்பட்டவர்களையே அப்பாவிகள் எனலாம். இவர்களைக் கூட அரசு வெளியில் விட நினைத்தாலும், “புலன்” பெயர்ந்தவர்களின் செயற்பாடு அவற்றை தடுத்து விடுகின்றது. அது போல் “புலன்” பெயர்ந்தவர்கள் சரத் பொன்சேகாவை, தலையின் இழப்புக்கு பின் தான் இன்னொரு தலைலயாக்க உருவேற்ற வெளிக்கிட்டவை. அதற்கு முன் சரத் பொன்சேகா பொறுப்பில் இருந்த போது “புலன்” பெயர்ந்தவர்கள் அவருக்கு வைத்த பெயர்கள் பிசாசு, துரோகி, கொலைகாரன் போன்றன. ஆதலால் அந்த நேரத்தில் “”புலன்” பெயர்ந்தவர்களின் கதையை சரத் பொன்சேகா கேட்க சந்தர்ப்பமேயில்லை என்பது கூட தங்கள் புலனுக்குப் புரியவில்லையா??

    Reply
  • sumi
    sumi

    உணவு கிடைக்க வழி இருந்தால், சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதில் என்ன தவறு.விரதம் இருந்தால் விதைத்த வினை என்ன தினையாகி விடுமா? சுத்த பம்மாத்து.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பார்த்திபன் on March 8, 2010 11:01 am
    அடடா இராணுவம் கைது செய்த அப்பாவித் தமிழ் இளைஞர்களுக்கு, இவர் இராணுவத் தளபதியாக இப்படியெல்லாம் வசதிகள் செய்து கொடுத்தாரா??

    பார்த்திபன் on March 10, 2010 11:19 am
    //அப்பாவி’ இளைஞர்களை விடுவிக்க 2/3 ஒன்றும் தேவையில்லை.//
    அப்பாவி இளைஞர்களை விடுவிக்க 2/3 பெருண்பான்மை தேவையில்லைத் தான்.

    பார்த்திபன் on March 11, 2010 12:49 am
    நான் வசதிற்கேற்றவாறு தங்கள் பாணியில் கதையளகக்கவில்லை. அரசினால் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவி இளைஞர்களலல்ல.

    இவை அனைத்தும் உங்கள் வார்த்தைகள் தான்…

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    இணைப்பிற்கு நன்றிகள். இவற்றிற்கு அர்த்தம் எல்லா இளைஞர்களும் அப்பாவிகள் என்று தங்களுக்கு எந்தத் தமிழ் வாத்தியார் படிப்பித்தவர்?? அதையும் குறிப்பிட்டிருக்கலாமே……

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….இவற்றிற்கு அர்த்தம் எல்லா இளைஞர்களும் அப்பாவிகள் என்று தங்களுக்கு எந்தத் தமிழ் வாத்தியார் படிப்பித்தவர்….//
    இங்கே விவாதம் ‘கைது செய்யப்பட்ட அப்பாவி இளஞர்களுக்கு’ ‘வசதி’ செய்து கொடுப்பதில் ஆரம்பித்தது இல்லையா? கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என தெரிந்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் . இல்லையா? நீங்கள் அதைக்கோராமல் ‘வசதி’ செய்துகொடுக்கப்படக்கூட இல்லை என்ற ‘உண்மையை’ ஒத்துக்கொண்டீர்கள். இல்லையா? நான் ஏன் ‘நிறைவேற்று அதிகாரம்’ கொண்ட ஜனாதிபதி அவர்களை விடுவிக்கவில்லை எனக்கோரியபோது அவர் 2/3 பெரும்பான்மை வைத்திருப்பினும் கூட கஷ்டமான காரியம் எனக்கூறினீர்கள். இல்லையா?

    என் கேள்வி எல்லாம் ‘பார்த்திபன்’ ஒத்துக்கொண்ட ‘அப்பாவி’ இளஞர்கள் ஏன் ‘நிறைவேற்று அதிகாரம்’ கொண்டவரும் பார்த்திபனின் அபிமானத்துக்குரியவருமான மஹிந்தாவால் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பதே? அதற்கு உங்களின் பதில் ‘புலன்’ பெயர் கூட்டம் ‘நாடுகடந்த தமிழீழம் கேட்டால்’ விடமுடியாது என்பதாக் இருக்கிறது. அவ்வாறாயின் ஸ்ரீலங்காவின் சட்டத்தில் வெளிநாட்டில் தமிழர் ஏதாவது செய்தால் அது ஸ்ரீலங்காவுக்குப் பிடிக்கவில்லை என்றால் ‘சகோதரர்கள், ஒருதாய்மக்கள்’ என்பன போன்ற இன்னோரன்ன தேன்வழியும் அடைமொழிகளால் ஜனாதிபதியால் அழைக்கப்படும் ‘அப்பாவித்தமிழர்களை’ உள்ளேபோடுதல் தான் நீதியானதா? அவ்வாறாயின் மிக்க மகிழ்ச்சி!

    கீழே நீங்கள் எழுதியது..

    ”அப்பாவி இளைஞர்களை விடுவிக்க 2/3 பெருண்பான்மை தேவையில்லைத் தான். ஆனால் சில “புலன்” பெயர்ந்ததுகள் தங்கள் இருப்பிற்கும், பணச் சுருட்டல்களுக்குமாக மீண்டும் தமிழீழப் போராட்டம் என்றும் வட்டுக்கோட்டை வடலிக்குள் தமிழீழம் என்றும் பிலிம் காட்ட வெளிக்கிட்டால், அரசு எப்படி புலிப் போராளிகளை வெளியில் விட முன்வரும்.”

    அப்பாவி இளஞர்களை விடுவிக்க ஆரம்பித்து விடுவிக்காமல் இருப்பதனை மறைக்க ‘புலிப்போராளிகளை’ என முடிக்கிறீர்கள்! என் கேள்வி எல்லாம் இன்னும் எத்தனை நாள் அல்லது எத்தனை தேர்தல்கள் முடியவேண்டும் நீங்கள் கூறிய ‘அப்பாவி இளைஞர்களை’ விடுவிக்க என்பதே!

    Reply
  • Ajith
    Ajith

    அடடா இராணுவம் கைது செய்த அப்பாவித் தமிழ் இளைஞர்களுக்கு, இவர் இராணுவத் தளபதியாக இப்படியெல்லாம் வசதிகள் செய்து கொடுத்தாரா?? இவர் இராணுவக் கைதியாக இருக்கின்றார் என்பதை மறந்து விட்டார் போலுள்ளது.

    Rajapakse finally came down ordered to give phone facilities. Within a day of hunger strike Rajapkse removed the ban. What a great leader. We all know Lasatha Wickrematunge was assasinated by the order from Rajapakse. Unfortunely, he didn’t give him a chance even to go for hunger strike. The difference is Lasatha was a journalist and a very good friend of Rajapakse and he knew the brutality of Rajapakse. He coudn’t to give assasination order to Fonseka because Rajapakse couldn’t get the correct person inside military. Thatswhy he dicided to torture him for life. Fonseka is not a prisoner of military but a political prisoner for no crimes other than contesting elections.
    It is pathetic to support Rajapkase as a powerless man compared to Fonseka. Rajapakse took the power from Fonseka on the orders of India after the end of war. Rajapkase has and had the power to overrule Fonseka’s decisions. Rajapakse never disagreed with Fonseka when he said. Why he has to wait so long to take actions against him?
    அப்பாவி இளைஞர்களை விடுவிக்க 2/3 பெருண்பான்மை தேவையில்லைத் தான். ஆனால் சில “புலன்” பெயர்ந்ததுகள் தங்கள் இருப்பிற்கும், பணச் சுருட்டல்களுக்குமாக மீண்டும் தமிழீழப் போராட்டம் என்றும் வட்டுக்கோட்டை வடலிக்குள் தமிழீழம் என்றும் பிலிம் காட்ட வெளிக்கிட்டால், அரசு எப்படி புலிப் போராளிகளை வெளியில் விட முன்வரும்.

    Don’t contradict yourselfparthipan. The innocent youths has become Tiger fighter within a minute. If it is Fonseka they are innocent youths. If it is for Rajapakse they become LTTE fighters. What a love with Rajapakse! What you are saying is that all tamils should surrender to Rajapakse and accept whatever he says, otherwise Rajapakse won;t release all innocent youths in his prison (Camps).

    Reply