ஸ்ரீபதி சூரியாராச்சியின் மனைவி ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சு – ஐ. ம. சு. முவை ஆதரிக்க முன்வருகை

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் மனைவியுமான தில்ருக்ஷி ஸ்ரீபதி சூரியாராச்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குத் தமது பூரண ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன் இச்சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைமைத்துவம் மற்றும் அதன் செயற்திட்டங்கள் குறித்து திருமதி தில்ருக்ஷி தமது அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையின் நிலைப்பாடற்ற தன்மை மற்றும் தூர நோக்கற்ற திட்டங்கள் குறித்து தமது அதிருப்தியைத் தெரிவித்த அவர்; தற்போது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் பலமான வேலைத்திட்டங்களுக்கு சுயாதீனமாக தமது பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீபதி சூரியாராச்சி கட்டியெழுப்பிய அமைப்பு வியூகத்தினைப் பயன்படுத்தி எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பலப்படுத்துவதற்கு உழைப்பதாக அவர் மேலும் தெரிவிததார்.

தில்ருக்ஷி சூரியாராச்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு கம்பஹா மாவட்டத் தலைவியாகவும் ஐ. தே. க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமாகவுள்ளார். மேற்படி நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply to rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • rohan
    rohan

    இவர் தானே ஜனாதிபதி பக்கத்திலிருந்து எவரும் தனது கணவரின் மரணச் சடங்கிலும் கலந்து கொள்ள வேண்டியதில்லை என்று சொன்ன அம்மணி?

    இவரது கணவர் தானே ராஜபக்செ சகோதரர்கள் புலிக்குப் பணம் தந்ததற்கான ஆதாரங்களை வைத்திருந்ததாக அறியப்பட்ட பெருமகன்?

    Reply