தேர்தலில் போட்டியிட்டதற்காக பொன்சேகாவுக்கு விசேட சலுகைகள் வழங்க சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்

gl.jpgநாட்டில் கலவரம் வெடிக்கும் என்பதாலோ அரசியல் காரணங்களுக்காகவோ சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டத்தினை அமுல்படுத்தாமல் இருக்க முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமனாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதற்காக அவருக்கு விசேட சலுகை எதனையும் வழங்க சட்டத்தில் இடமில்லையென ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, நாட்டில் அமுலில் உள்ள சட்டத்தின் பிரகாரமே சரத் பொன்சேகா மீது இராணுவ நீதிமன்றத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ சட்டம் 1949 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்படுத்தப்படுகிறது. இராணுவ ஒழுக்கவிழுமியங்களை பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் நோக்கமோ தலையீடோ கிடையாது. இந்த வழக்கில் தமது தரப்பு சாட்சியங்களையும் ஆவணங்களையும் முன்வைக்கவும் அரச தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும் பொன்சேகா தரப்புக்கு அவகாசம் உள்ளது.

இங்கு மனித உரிமை மீறல் தொடர்பாக எதுவித பிரச்சினையும் எழாது. பொன்சேகா தரப்பிற்கு தமது தரப்பு வாதங்களை முன்வைக்க முழுமையான அனுமதியும் வழங்கப்படும். தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவும் சட்டத்தில் இடமுள்ளது. பொன்சேகாவை பழிவாங்கும் நோக்கத்துடன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இராணுவத்தில் இருந்த போது செய்த தவறுகள் தொடர்பிலேயே இராணுவ சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொன்சேகாவை கைது செய்ததால் நாட்டில் கலவரம் வெடிக்கும் என்பதாலோ குழப்பம் ஏற்படும் என்பதாலோ சட்டத்தை அமுல்படுத்தாதிருக்க முடியாது.

ஜனாதிபதிக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் எதிராக மாத்திரமே வழக்குத் தொடர்வதற்கு சட்டத்தில் இடமில்லை. பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு எதுவும் இடம்பெறாது. இராணுவம் சுயாதீனமாகவே இந்த விசாரணைகளை முன்னெடுக்கிறது.

பொன்சேகா விவகாரத்தை பூதாகரமாக்கி அரசியல் லாபம் பெற எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இலங்கை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் தவறான கருத்தை உருவாக்கவும் இலங்கையை மோசமான நாடாக காட்டவும் முயற்சி செய்யப்படுகிறது. இலங்கையுடனான கொடுக்கல் வாங்கலை யும் ஜி.எஸ்.பி. சலுகையையும் நிறுத்தவும் முதலீடுகளை தடுக்கவும் பொருளாதார ரீதியில் இலங்கையை மட்டந்தட்டவும் சதி செய்யப்படுகிறது. இந்த நோக்கங்களை அடைய ஒருபோதும் இடமளியோம் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா, ஜனநாயகத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் மட்டுமன்றி எதிர்க் கட்சியினதும் பொறுப்பாகும். ஆனால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டை சுமத்த சில நாடுகள் முயற்சி செய்கின்றன. இதற்கு சாட்சி வழங்க பொன்சேகா தயாராகிறார். ஆனால் இராணுவ ரகசியங்களை ஓய்வுபெற்ற பின்னரும் வெளியிட முடியாது என்றார்.

Show More
Leave a Reply to NANTHA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • NANTHA
    NANTHA

    இந்த அறிவிப்புக்கு நம்ம தமிழ் “வல்லுனர்கள்” மவுனம் காப்பார்கள். ஏனென்றால் “புலிகளின்” மேதகு பிரபாகரன் போலவே மஹிந்த என்று நம்பும் அவர்களால் இலங்கையிலுள்ள சட்டங்கள் பற்றி சிந்திக்க முடியாது.

    Reply
  • palli
    palli

    நாங்கள் யதார்த்தத்தை நம்புபவர்கள், அதனால் நோக்கமே அதுவென இருக்கும்போது அதுக்கு சட்டத்தையோ அல்லது சாக்கடையையோ அழைப்பது புதிதல்ல; ஆனாலும் திருமதி சரத் போட்டியிட ஏதாவது தடங்கல் உண்டு என ஏதாவது ஒரு துறை அமைச்சர் வந்து சொன்னால் மகிந்தாவுக்கு மகிழ்ச்சிதரும்; தெலுங்கு படம் போல் உள்ளது ;சரத் விடுதலை பற்றி மகிந்தா ரணில் சந்திப்பு, பல்லிக்கு எதுவுமே தெரியாது அதனால் பல்லி தூக்கி குப்பையில் போடுங்க என்பதுபோல் சிலர் எழுதினார்கள், நானும் தவறி விட்டேனோ என யோசித்தேன்; ஆனால் பிக்குகள் சரத்தின் கைது தவறு என விவாதிக்க மகானாடே கூடுகிறார்கள். நீதிபதிகள் திருமதி சரத்தின் மனுவை ஏற்று 23 தேதி விசாரிக்க போகிறார்கள்,'(அரச வக்கிலின் வாதத்துக்கு பின்னும் என்பது குறிப்பிடதக்கது) சட்டங்களே தொழிலாக கொண்ட கணக்கில்லாத வக்கில்கள் சரத்தின் கைது தவறென போராட முற்படுகின்றனர்; ஆனால் இதை பல்லி சொன்னால் மட்டும் பல்லி படிக்காதவனா,,?? இதில் புதிய தலைவலி அரசுக்கு நவனீதம் பிள்ளையாலும்; கோர்டன் வைஸ் ஆலும் ஆரம்பித்திருக்கு; அவர்களை கைது செய்யகோத்தய பட்ச்சாவால் முடியாது; பதில் சொல்லிதான் ஆக வேண்டும்;

    Reply
  • NANTHA
    NANTHA

    சரத் பொன்சேகாவின் கைது பற்றியே இந்த கட்டுரை கூறுகிறது. அவருடைய மனைவி மருமகன் வங்கிக் கணக்குகள் பற்றியல்ல.

    வக்கீல்கள் (ஒரு அரபு வார்த்தை) வாதாடுவார்கள். அது அவர்களின் தொழில். சரிக்கும் வாதாடலாம். பிழைக்கும் வாதாடலாம். எனவே “சரத்” நிரபராதி என்று “தீர்ப்பு கிடைக்கும் என்று பொருளல்ல.

    புலிகளின் “கங்காரு” நீதிமன்றங்களின் தீர்ப்புகளைக் கேட்டு “மெய்” சிலுத்தவர்கள் இலங்கை நீதிமன்றங்களும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புவது புதினமல்ல.

    Reply
  • palli
    palli

    //வக்கீல்கள் (ஒரு அரபு வார்த்தை) வாதாடுவார்கள். அது அவர்களின் தொழில். சரிக்கும் வாதாடலாம். பிழைக்கும் வாதாடலாம். எனவே “சரத்” நிரபராதி என்று “தீர்ப்பு கிடைக்கும் என்று பொருளல்ல. //
    உங்களது இந்த பின்னோட்டத்தில் ஏதோ ஏலாமை புரிகிறது வக்கில் என்றால் வாதாடதான் செய்வார், அதுக்கு அரபு நாட்டுக்கு விமானம் ஏறிப்போய் ஒரு வார்த்தை தேவையா இது?? ஆனால் நீதிமன்றம், நீதிஅரசர் மகிந்தாவின் (அரசின்) அங்கத்தவர்தானே?? இப்படி எத்தனை திண்டாட்டம், தோல்வி எமக்கு பிரச்சனையல்ல ஆனால் அதர்மம் ஜெயிக்ககூடதல்லவா?? மகிந்தாவை பொறுத்த மட்டில் இனிப்பு(சுகர்) வருத்தகாரர் வாழ்வுதான், மிக அவதானமாக இருக்க வேண்டும் இல்லையேல் ஒன்றொன்றாய் போய்விட வாய்ப்புகள் மட்டுமல்ல சந்தர்ப்பமும் அதிகம்,

    Reply
  • NANTHA
    NANTHA

    பல்லி ஒரு “தமிழ்” காக்கும் ஆள் என்ற வகையில் “வக்கீல்” என்பதற்கு ஒரு குறிப்பு தந்தேன். அதற்காக விமானப் பயணம் என்பது படு சோகம்.

    சம்பந்தனும், மனோ கணேசனும் பொன்சேகாவுக்கு ஆதரவு என்றவுடன், பொன்சேகா வெல்லப் போகிறார் என்று நம்பிய பல்லிக்கு இப்போது என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

    இப்போது “நீதி அரசர்கள், நீதிமன்றங்கள்” எல்லாம் ராஜபக்ஷவின் கையில் என்று சொல்வது “இயலாமை”யின் அறிகுறிதான். ஆனால் பொன்சேகா ஏதோ உத்தம புத்திரன் என்று பல்லி இன்னமும் நம்பிக்கொண்டிருப்பது எந்த “அடிப்படையில்” என்று தெரியவில்லை.

    //மகிந்தாவை பொறுத்த மட்டில் இனிப்பு(சுகர்) வருத்தகாரர் வாழ்வுதான், மிக அவதானமாக இருக்க வேண்டும் இல்லையேல் ஒன்றொன்றாய் போய்விட வாய்ப்புகள் மட்டுமல்ல சந்தர்ப்பமும் அதிகம்,//
    ஆமா! அவருக்கு என்ன இப்போது போயுள்ளது? இன்னமும் ஆறு வருஷங்களுக்கு “சுக்கான்” பிடிக்கும் பதவி வந்துள்ளது பல்லிக்கு தெரியாதோ?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..சரத் பொன்சேகாவின் கைது பற்றியே இந்த கட்டுரை கூறுகிறது. அவருடைய மனைவி மருமகன் வங்கிக் கணக்குகள் பற்றியல்ல…//

    இதே கருத்தை எல்லா தலைப்புகளுக்கும் ‘பாதிரிக் கணக்கு’ காட்டும் உங்கள் பதில் எழுதலுக்கும் கவனித்து எழுதுங்கள். நல்லகாலம் சரத்தின் சட்டத்தரணி ‘பாதிரி’ இல்லை!

    Reply
  • palli
    palli

    //சம்பந்தனும், மனோ கணேசனும் பொன்சேகாவுக்கு ஆதரவு என்றவுடன், பொன்சேகா வெல்லப் போகிறார் என்று நம்பிய பல்லிக்கு இப்போது என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. //
    பல்லி சம்பந்தன் மனோ சரத்துக்கு ஆதரவு கொடுக்க முன்பே அதாவது தேர்தல் என அறிவித்தவுடன் எனது வொட்டு சரத்துக்கு என சொன்னேன்; அதில் பல்லிக்கு வெற்றிதான், நீங்கள் சிங்களமக்களின் மனனிலையை வெற்றியாக கொண்டாடுறியள்; பல்லியோ தமிழ் மக்கள்
    மனநிலையில்தான் பல்லியும் என்பதால் பல்லிக்கு இது தோல்வியல்ல; தேர்தல் சமயத்தில் எனது பின்னோட்டங்களை எடுத்து வாசிக்கவும்(விரும்பினால்)

    //ஆனால் பொன்சேகா ஏதோ உத்தம புத்திரன் என்று பல்லி இன்னமும் நம்பிக்கொண்டிருப்பது எந்த “அடிப்படையில்” என்று தெரியவில்லை.//
    நந்தா 10 தேதி பார்த்திபனுக்கு பதில் சொல்லும்போதே சரத் குற்றவாழிதான் என சொன்னேன்; கவனிக்கவில்லையா?? ஆனாலும் அவரது சாட்ச்சியம் தமிழருக்கு தேவை என்பதால் அவரது விடயங்களில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டுகிறேன், திரும்பவும் சொல்லுகிறேன் சரத் தமிழர் நண்பர் அல்ல, ஆனால் தமிழருக்கு வேண்டியவர்;

    //ஆமா! அவருக்கு என்ன இப்போது போயுள்ளது? // போக கூடாது என்பதால்தான் சரத்கைது,

    //பல்லி ஒரு “தமிழ்” காக்கும் ஆள் என்ற வகையில் //
    அப்படி இருக்க நிறைய ஆசை பல்லிக்கு, ஆனால் பல்லியின் தகுதி பல்லிக்கு தெரியும் என்பதால் நீங்கள் சொல்லுவது தவறு திருத்துங்கள் தமிழ் அழிக்க விரும்பாதஆள் என சொல்லலாம்:
    அதென்ன நந்தாவுக்கு எதுக்கெடுத்தாலும் அயல் மொழியில் அத்துபடியோ, நல்லதுதான் நாலுமொழி தெரிந்து இருப்பது;

    Reply
  • NANTHA
    NANTHA

    சாந்தன்:
    அந்த கட்டுரையில் “தமிழ் மக்களின் தற்போதைய அவலங்களுக்கு உதவிகள்” என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு “தமிழர்களின்” பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் பற்றியும் கூறவேண்டும். அதன்னால்த்தான் “பாதிரிகளின்” கணக்குகள் வந்தன.

    இந்துக்களின் வழிபாடுகள் பற்றி கண்டனம் செய்யும் ஆட்கள் “கத்தோலிக்கர்களின்” கூத்துக்கள் பற்றி மவுனம் சாதிப்பது ஏன்?

    பல்லியின் “தமிழ்” பிரச்சனைகள் எனக்கில்லை. தவிர இலங்கையில் இரண்டு மொழிகளே உள்ளன. அதை படிப்பதில் நந்தாவுக்கு எதுவித கஷ்டமும் கிடையாது. நந்தாவுக்கு மலையாளமும் நன்றாக பேசவும் முடியும்.

    Reply