மேனனின் இலங்கை வருகையும் அவரது அரசியல் பார்வையும்

sivashankar.jpgஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் விரைவில் இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (ஜனவரி 31) தமிழ் நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்த அவருடன் வன்னி முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பாக உரையாடியதாக மேனன் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

வன்னி மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இந்தியா உதவி வரவதாகவும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக அனைத்தத் தரப்பினரும் உடன்படக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

சிவசங்கர் மேனன் மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் அரசுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள இந்திய ராஜதந்திரி. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தேசியக் கட்சிகளே பலமடைய வேண்டும் என்ற எண்ணப்பாட்டை சிவசங்கர் மேனன் கொண்டிருந்ததாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவித்து இருந்தன. சிறுபான்மை தேசிய இனங்களின் அரசியலைப் பலவீனப்படுத்தி இலங்கைத் தேசிய அரசியலை முன்னிலைப்படுத்துகின்ற ஒரு போக்கை சிவசங்கர் மேனன் ஆதரிப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

நாம் இந்தியர் என்பது போல் நாம் இலங்கையர் என்ற பொது அரசியல் அடையாளத்தை நோக்கி இலங்கை நகர்வதையே சிவசங்கர் மேனன் போன்றவர்கள் விலியுறுத்துவதாக தொரியவருகின்றது.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    இந்த சிவகங்கரமேனன் என்பவர் “தம்பிரான்களால்” அங்கீகரிக்கப் பட்டவர்கள் அல்ல?!. பாலக்காடு பிராமணர்கள் ஓரளவுக்கு நியாயமானவர்கள். இது அவர்கள் கடைப்பிடிக்கும் சில கட்டாய வழிமுறைகலாலால் ஆகும். ஆனால், சமுத்திரி தம்பிரான்களுக்கு கணக்குப் பிள்ளையாக இருந்த வழிவந்த சிவசங்கர மேனன், அவருடைய அப்பா மற்றும் மாமா போன்றோர்கள் ஜவகர்லால் நேரு நிர்வாகத்தில், சீனா, இஸ்ரேல், யுகஸ்லோவியா போன்ற நாடுகளில் தூதுவர்களாகவும், முதல் இந்திய வெளியுறவு செயலாளர்களாகவும் பணியாற்றியவர்கள்!. இவரின் இலங்கைத் தொடர்பு பற்றிய விவரங்கள் தேசம்நெட் வட்டத்துக்கு தெரிவது சிரமம் என்றாலும் 30 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் பல்வேறு நாட்டு தூதுவர்களாக இருந்து தற்போது, பெரும்பாலும் ஆஸ்திரேலியாவில் வட்டுக்கோட்டை தமிழீழம் காணும், புலன்பெயர் இளையோர் அறிந்திருப்பார்கள்!. நான் கூற வருவது திரு.கலைஞர் கருணாநிதியும் இதை அறிந்திருப்பார். இவருடைய தந்தை, கே.பி.எஸ்.மேனன் தான், இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களை கொண்டுவந்து திராவிட இயக்கங்களின் “டமாரங்களை” கேலிக்குரியதாக்கினார்!. மகனுடைய செயலும் அவ்வழியிலேயே அமைந்திருப்பது வியப்பில்லை!. நேருவும் – இந்திராவும் உருவாக்கிய இந்திய அரசியல் இயந்திரத்தை, நிர்வாக இயந்திரத்தின் அத்துனை செயல்களுக்கும் “இந்தியா என்கிற இறைமை” பொறுப்பெடுக்கத்தான் வேண்டுமா என்பதை சம்பந்தப் பட்டவர்கள்தான் சிந்திக்க வேண்டும். மளையாளம் என்ற மொழி 300 – 400 ஆண்டுகளுக்கு முன்பு கிடையாது என்கிறபோது, இந்த மேனன்கள் எப்படி மேற்குலக அச்சு காகிதங்களை படித்துவிட்டு, தங்களை “ஆரியர்கள்” என்ற கருத்துக் கரு கொண்டிருக்க முடியும் -தம்பிரானுக்கே வெளிச்சம்!.ஆஸ்திரியாவில்(வியன்னா) இவர் செய்த வேலைகளும்,மும்பாய் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐ.ஜி.கார்காரே அவர்கள் செய்த வேலைகளும், தற்போது இவர் இலங்கையில் நகர்த்தும் காய்களும், சர்வதேச முக்கியத்துவம் பெற்றவைகள் இவைகளை, வர்மாக்களும், தம்பிரான்களும்தான் கவனித்துக் கொள்ள வேண்டும்!.

    Reply
  • மாயா
    மாயா

    //நாம் இந்தியர் என்பது போல் நாம் இலங்கையர் என்ற பொது அரசியல் அடையாளத்தை நோக்கி இலங்கை நகர்வதையே சிவசங்கர் மேனன் போன்றவர்கள் விலியுறுத்துவதாக தொரியவருகின்றது.//

    இதுதான் இனி ஒரேயொரு வழி. தொப்புள் கொடி உறவுகளின் கனவுகள் விரைவில் பலிக்க வேணும். முதலில் நாம் இலங்கையர். அதன் பின்னே நாம் தமிழர் – சிங்களவர் – சோனகர் – பறங்கியர் – மலே ……… எல்லாம். அதை ராஜாதி ராஜன் மகிந்த நடத்துவார். தமிழ் – சிங்களம் – முஸ்லீம் என பெயர் வைத்துள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் மரண சாசனம் உடனடியாக எழுதப்பட வேண்டும். அப்பதான் நம்ம நாடு உருப்படும்.

    Reply
  • palli
    palli

    இந்த கட்டுரை சில காலங்களுக்கு முன்பு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்; ஆனால் இன்று நிலமை வேறு; இந்தியா ஒரு நிலைபாட்டை எடுக்க வேண்டிய கட்டத்தில் உள்ளது; அதுக்கு சீனாவின் இலங்கயில் ஆக்கிரமிப்பு ஒரு காரனம் என சொன்னாலும் மேலும் சில காரனங்களும் உண்டு, மேனன் பயனம் சரத் மகிந்தா சிலம்பாட்டத்துக்கு ஒரு எச்செரிக்கைதான்; இந்தியாவில் அதுவும் டெல்லியில் ஒரு தமிழர் மகாநாடு நடக்க இருக்கும் வேளையில் இவரது இலங்கை பயனம் மிகவும் முக்கியமானது; விடுதலை அமைப்பு எதுவும் இல்லாமல் ஏதாவது ஒருதீர்வு அரசு தமிழருக்கு வழங்க வேண்டும்; அந்த நேரத்தில் தாமும் தமது இலைங்கை மீது ஒரு ஆக்கிரமிப்பு செய்யலாம் என்பது டெல்லியின் கனவாகலாம்; இதுக்கு ஒரு முன்னோட்டமே வடக்கேயும் ஒரு இந்திய தூதரகம் துறக்கும் முயற்ச்சி, இத்துடன், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி வடகிழக்கு சேராவிடில் அது இந்தியாவை இலங்கை ஓரம் கட்டிவிட்டது என்பது ஆகிவிடும்;

    இன்றுவரை தமிழக மீனவர் இலங்கை கடல்படையினால் தாக்குதல் இப்படி பல பிரச்சனைகள் இந்தியாவுக்கு உள்ளது, இருப்பினும் இந்திய ராணுவ ஜெனரலும் சரத்தும் மிக நெருங்கிய நண்பர்கள், சரத்துக்காக இந்திய அரசுடன் ஜெனரல் கண்டிப்பாக பேசுவார், இந்த ஜெனரலுடன் நாராயணன், மேனன் ,நம்பியார் முக்கூட்டு மிக நெருங்கிய வாரபாடு; ஏன் சோனியாவின் செல்ல பிள்ளைகள் என கூட சொல்லலாம்; ஆகவே மேனன் வருகை மகிந்தாவுக்கு சில வேகதடை போட வாய்ப்புக்கள் அதிகம்; இந்தியாவுக்கோ அல்லது சோனியாவுக்கோ இலங்கை தமிழர் மீது பகை இல்லை, இந்த குடிகெடுத்த புலிகள் மீதுதான் பகையும் பழியும்;

    Reply
  • NANTHA
    NANTHA

    // மலையாளம் என்ற மொழி 300 – 400 ஆண்டுகளுக்கு முன்பு கிடையாது என்கிறபோது,//

    இந்த தகவல் உண்மையா என்று ஒரு ஆய்வு தேவை.

    இந்திய தமிழர்களின் வாழ்விலும், பேச்சிலும் “தெலுங்கு” வாடை அதிகம். அது “தெலுங்கர்கள்” தமிழகத்தை ஆட்சி செய்த படியால் வந்திருக்க முடியும்.

    இலங்கையர்களும், கேரளியர்களும் “பல” கலாச்சார விஷயங்களில் ஒன்றிப் போகிறார்கள்.

    முன்னூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழை தற்போதுள்ள தமிழர்கள் “படித்தவுடன்” விளங்கிக் கொள்வார்களா?

    போர்த்துகீசர் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவரப்பட்ட “மலபார்” பகுதியை சேர்ந்தவர்கள் யார்? புகையிலை, மிளகாய் என்பன போர்த்துகீசர் காலத்தில் எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்கள். இன்றும் “யாழ்ப்பணத்தில்” மலையாள புகையிலைச் சங்கம் உள்ளது. கேரளாவிலும் “யாப்பாணம்”பொயிலை என்பது பிரபலமான ஒன்று.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    நந்தா!, வரலாறுகளை ஆராயுங்கள், ஆனால் அதன், தற்போதைய பிரச்சனைகளில், குறிப்பாக மே18 க்கு பிறகு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் முக்கியம்!. தற்போதைய எழுத்து தமிழ் ஐரோப்பியர்களின் வருகையால், அச்சேறுவதற்கு தகுந்தமாதிரி பல மாறுதல்கள் ஏற்படுத்தப் பட்டது. இந்தியாவில் பல மொழிகள் அப்படிதான்!. “திராவிடம்” என்பது, காலனித்துவ நிர்வாகத்துக்கு வசதியாக, தமிழர் மீது மட்டும் புகுத்தப்பட்ட சாக்கடை. “செந்தமிழ்” என்று ஒன்று இல்லை, இது பிரித்தாளும் சூழ்ச்சி. சோழர்களும், பல்லவர்களும் சமஸ்கிருதத்தை வளர்த்ததற்கான “இந்துத்துவ விளக்கம்” வேறு!. சார்லஸ் டார்வின் கொள்கையில் சில குளறுபடி போல, “மொழியியலிலும்” குளறுபடியானது, உலகின் அனைத்து மொழிகளிலும் பல ஒற்றுமையான வார்த்தைகள் உண்டு. “தாவோயிஸம்” கூறுகிறமாதிரி, “எல்லவற்றிற்கும் தொடர்புகள் உண்டு (ஈத்தர் அல்லது டார்க் எனர்ஜி)”.

    மற்றபடி…The earliest written record resembling Malayalam is the Vazhappalli inscription (ca. 830 CE).The term “Malayalam” comes from the words mala meaning mountain and alam meaning people in old Tamil land or locality.[26] Hence malayali means Mountain’s people who lived beyond the Western Ghats, and Malayalam the language that was spoken there. Malayalam started was a dialect of Tamil spoken by the Chera people (Chera dynasty) one among the three tripartite ancient Tamil Kingdoms.Doctrina Christam,the first book to be published at Quilon in Kerala was written in “Malayalam Tamul” by Fr. Henrique Henriques, a Jesuit priest at 1578 at Quilon.During the Portuguese period most of the printed books from Cochin and Quilon used to be in Tamil.Arnos Pathiri was among the first European missionaries who had a Sanskrit bias, who wrote Grandha Bhashayude Vyakaranam, a Malayalam grammer book in 1700s.Dutch and British missionaries unlike Portuguese, promoted Sanskrit and the Grantha Bhasha which led to the acceptance of Malayalam writings by Christians hitherto used only by Nairs and Namboothiris.The identification of Sanskrit as belonging to Indo-European languages family prompted them to support Sanskrit based Grantha Bhasha which would replace the Malayalam-Tamil as Malayalam.The early literature of Malayalam comprised three types of composition: Malayalam Nada,Tamil Nada and Sanskrit Nada.By the end of 18th century some of the Christian missionaries from Kerala started writing in Malayalam(1778),Church Mission Society which started a seminary at Kottayamat 1819 also started a press which printed Malayalam books in 19th century.The language belongs to the family of Dravidian languages. Robert Caldwell, in his book A Comparative Grammar of the Dravidian or South-Indian Languages states that Malayalam branched from classical Tamil that over time gained a large amount of Sanskrit vocabulary and lost the personal terminations of verbs.Karintamil (3100 BCE – 100 BCE): Malayalam from this period is represented by the works of Kulashekara Alvar and Pakkanar. There is a strong Tamil element, and Sanskrit has not yet made an influence on the language.Kulasekhara Alwar who wrote Perumal Thirumozhi, a Tamil Alwar saint, founder of the Later Chera Dynasty lived at 800 AD.

    Reply
  • palli
    palli

    இப்படிதான் சிலரை கனடாவுக்கு என ஏத்தி விடுவார்கள்; ஆனால் சிலர் மாறி லண்டன், பரிஸ்; ஜேர்மன் என விமானம் தங்கி நின்று செல்லும் இடங்களில் இறங்கி சரி வந்திட்டோம் இங்கேயே அகதி விண்ணப்பத்தை போட்டு விடுவோம் என வாழ்பவர்கள் உண்டு, அப்படிதான் ஈழ பேச்சில் தொடங்கி சாதி தெரிவால் நடந்து தேர்தல் என்னும் தேனீர் கடையில் ஏதோ சாப்பிட்டுவிட்டு பொழுது போக்காய் தோழரின் விடயத்தை தெரிந்து கொள்ள புறப்பட்டவர்கள் அதை விட்டு கேரளாவில் அச்சுவெல்லம் காச்சுகிறார்கள். புலிகள் வளர்வதுக்கு காரணம் இந்த மாற்று கருத்தாளர் செய்யும் ஆராட்ச்சியும் ஒரு காரனமே; உழைப்பாளிகளுக்கு என்னொரு பெயர் மளையாளி; அதை நாமும் செய்யலாம் என செயல்வடிவத்தில் காட்டியவர்கள் எமது தீவுபகுதி மக்கள், மலையாளியும் தீவுபகுதி மக்களுமே வரும்காலத்தில் யூதருக்கு சமனாக வருவார்கள், காரனம் அவர்கள் உழைப்பை மட்டுமே நம்புவார்கள்;

    அமைதிபடை காலத்தில் பல அமைதிபடைக்கு பிறந்த குழந்தைகளை எந்த முறையில் சொல்லபோறியள்; அதேபோல் இன்று ராணுவத்தின் பசியை போக்கவேண்டிய கட்டாயம் இதுக்கு என்ன ஆய்வு செய்ய போறியள்; எத்தனையோ இயக்க போராளிகள் இந்தியாவில் வாழ வழி தெரியாமல் தவித்த போது பலருக்கு இதே கேரள பெண்கள் வாழ்வு கொடுத்தனர், (இன்று நின்மதியாய் வாழ்கிறர்கள்) உங்கள் வசதியை வைத்து ஆராட்ச்சி செய்யாதீர்கள்; நாம் அனைவரும் குரங்கின் உறவுகள் என்பது மட்டுமே நிஜம்;

    Reply
  • NANTHA
    NANTHA

    democracy:
    உங்களின் அந்த ஆங்கில மொழியிலான கருத்துக்களை “wikipidiya” வில் படித்துள்ளேன் என்று நினைக்கிறேன்.

    எனக்கும் இந்த “செந்தமிழ்” போன்ற கோஷங்களோடு உடன்பாடு கிடையாது. அதன் மூலம் அரசியல் செய்து சிலர் வாழலாமே ஒழிய அந்த மொழி பேசுபவர்கள் பலரும் வாழ முடியாது.

    //“திராவிடம்” என்பது, காலனித்துவ நிர்வாகத்துக்கு வசதியாக, தமிழர் மீது மட்டும் புகுத்தப்பட்ட சாக்கடை//

    இது உண்மை. இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிரான கருத்துக்கள் பலப்பட்ட பொழுது வட இந்தியாவில் இந்து-முஸ்லிம் என்று பிரிவினை செய்து இந்திய மக்களின் “விடுதலைப்” போரை சிறிது காலத்துக்கு திசை திருப்ப பிரிட்டிஷாரால் முடிந்தது. தென் மாநிலங்களில் இந்து-முஸ்லிம் என்று பிரச்சனை கிளப்ப முடியாது என்று கண்ட பொது அவர்கள் இந்த “திராவிட” என்ற தகராறை கிளப்பி விட்டனர். தமிழர்களைத் தவிர வேறு யாரும் அதனைச் “சீரியஸாக” எடுக்கவில்லை. அதன் பாதிப்புக்கள் இலங்கையிலும் காண நேர்ந்தது.

    இலங்கையிலும் ஆரிய-சிங்கள என்ற கூச்சல் இப்போதும் உண்டு.

    இந்த ஆரியர்களும், திராவிடர்களும் என்ன தோற்றத்தில் இருப்பார்கள் என்று ஒருவரும் கூறவில்லை. இனியாகிலும் “மாயைகளை” விட்டு நிஜங்களை நோக்கி இலங்கயிலுள்ளவர்கள் போக வேண்டும் என்பதே என் கருத்து.

    Reply
  • NANTHA
    NANTHA

    பல்லி:
    இந்த ஈழம், தமிழ் எல்லாம் என் கருத்துப்படி “தேநீர்” கடை சமாச்சாரங்களே. அதனை வைத்து கொலை, கொள்ளை நடத்த வேண்டிய தேவையில்லை.

    பல்லிக்கு இன்னொரு தகவல்: கேரளாவில் “மலையாளி கொலையாளி” என்றும் ஒரு பழஞ் சொல் உண்டு. பிரபாகரனுக்கு நல்ல பொருத்தம்.

    இலங்கையில் யாரும் “அச்சு வெல்லம்” காச்சுவதில்லை. ஏனென்றால் கரும்பு கிடையாது. ஆனால் தமிழ் ஈழம் என்று அச்சு வெல்லம் காச்சியவர்கள் இப்போது காணாமல் போயிருக்கிறார்கள். தமிழர்கள் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று “அச்சு வெல்லம்” காச்சியவர்களை” என்ன செய்வது?

    கேரளா போய் செட்டில் ஆகிய இலங்கை தமிழர்கள் பலர் “புலம் பெயர் புலிகளின்” ஏஜன்டுகளாக உள்ளனர். ஆனால் புலிகளை எதிர்த்த வரதராஜபெருமாளும் அவரது சகபாடிகளும் “தமிழே” இல்லாத’ ஒரிஸ்ஸாவில் இருக்கின்றனர்.

    தீவு பகுதியினர் வெளிநாடுகளில் “புலிகளின்” உண்டியல் ஏஜண்டுகள். நயினாதீவைச் சேர்ந்த மொட்டை ரஞ்சன்தான் கனடாவில் “புலிகளுக்கு” எதிராக வந்த ‘தாயகம் பத்திரிகையை விற்பனை செய்த கடைகளின் கண்ணாடிகளை உடைத்த ஆசாமி. தடை செய்யப்பட்ட ‘உலகத் தமிழர்” இயக்கத்து பிரமுகனாகவும் இருந்த இந்த ரஞ்சன் கோஷ்டி நயினாதீவு “புத்த பிக்குவுக்கு” மிகவும் வேண்டப்பட்டவர்கள் என்பது இன்னொரு தகவல்.

    புங்குடுதீவு சுரேஷிலிருந்து மொட்டை ரஞ்சன் வரை உள்ள தீவு கூட்டங்கள் வெளிநாடுகளில் “புலி”. தீவு பகுதிகளில் டக்லஸ் தேவானந்தா. இந்த இரட்டை வேஷம் யாருக்கும் உபயோகம் இல்லை. ஆனால் உபத்திரவம் மட்டும் நிச்சயம். தீவுப்பகுதியினர் “உழைப்பை” நம்புபவர்கள் என்றால் “கண்டிப்பாக” போயிலை வியாபாரம் செய்யவோ ஆள் கடத்தலிலோ ஈடுபட்டிருக்க மாட்டார்கள். தவிர புலிகளுக்காக “உண்டியல்” தூக்கியிருக்கவும் மாட்டார்கள்.

    //அமைதிபடை காலத்தில் பல அமைதிபடைக்கு பிறந்த குழந்தைகளை எந்த முறையில் சொல்லபோறியள்//
    இது எனக்கு புதிய தகவல். “அந்த தாய்மாரும், குழந்தைகளும் இன்னமும் உயிரோடு இருக்கின்றனரா? இந்திய இராணுவத்துக்கு மொழி பெயர்ப்பாளர்களாக இருந்தவர்களையே “போட்டுத்தள்ளிய’ புலிகள் இந்திய படைக்கு பிறந்த குழந்தைகளை விட்டு வைத்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.

    Reply
  • BC
    BC

    //நந்தா – இனியாகிலும் “மாயைகளை” விட்டு நிஜங்களை நோக்கி இலங்கயிலுள்ளவர்கள் போக வேண்டும் என்பதே என் கருத்து.//

    காலத்தின் தேவையும் அது தான்.

    Reply
  • palli
    palli

    //இந்த ஈழம், தமிழ் எல்லாம் என் கருத்துப்படி “தேநீர்” கடை சமாச்சாரங்களே//
    இருக்கலாம் அதே போல் இந்த ஆய்வுகளில் சகோதர இனத்தை அசிங்க படுத்துவதுக்கும் தேனீர்கடைக்கும் என்ன வேறுபாடு, ரஜீவை புலிகள் குண்டால் கொன்றதுக்கும் நீங்கள் கேரள மக்களை எழுத்தால் கொல்வதுக்கும் எனக்கு வேறுபாடு தெரியவில்லை, அவர்கள் நேசத்தை நாம் இழப்போம் என்பது மட்டுமே புரிகிறது;

    //பல்லிக்கு இன்னொரு தகவல்: கேரளாவில் “மலையாளி கொலையாளி” என்றும் ஒரு பழஞ் சொல் உண்டு. பிரபாகரனுக்கு நல்ல பொருத்தம். அதைவிட புது சொல்கள் நான் எமது ஊரில் சொல்வேன் (அமைப்புகள் ஆரம்பிக்க முன்) ஆனால் அது நாகரிகமல்ல,

    //இலங்கையில் யாரும் “அச்சு வெல்லம்” காச்சுவதில்லை.// அப்படியா?? கருப்பணீரிலும் அதை காச்சலாம் காச்சினோம்; உங்க குடும்ப பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    //கேரளா போய் செட்டில் ஆகிய இலங்கை தமிழர்கள் பலர் “புலம் பெயர் புலிகளின்” ஏஜன்டுகளாக உள்ளனர்.//
    அவர்களை எனக்கு தெரியாது; கழககாரர்தான் பலர் நான் நேரிலேயே பார்த்தேன்; மிகவும் கஸ்ரமான தொழிலைகூட தனது குடும்பத்துக்காய் செய்து மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்; சிலருக்கு 18;20 வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள் மிக படிப்பாளராகவும் இருக்கிறார்கள்; அவர்களிடம் எனக்கு ஈழத்தையோ அல்லது கேரளத்தையோ பார்க்க முடியவில்லை அன்பான மனிதர்களாகதான் பார்க்க முடிந்தது,

    //வரதராஜபெருமாளும் அவரது சகபாடிகளும் “தமிழே” இல்லாத’ ஒரிஸ்ஸாவில் இருக்கின்றனர்.//
    கேள்விபட்டேன் அவரது மகள் ஒருவர் கேரளபடம் ஒன்றின் நாயகியாக அறிமுகமென வரவேற்ப்போம்;

    //தீவு பகுதியினர் வெளிநாடுகளில் “புலிகளின்” உண்டியல் ஏஜண்டுகள். நயினாதீவைச் சேர்ந்த மொட்டை ரஞ்சன்தான் கனடாவில் “புலிகளுக்கு” எதிராக வந்த ‘தாயகம் பத்திரிகையை விற்பனை செய்த கடைகளின் கண்ணாடிகளை உடைத்த ஆசாமி. தடை செய்யப்பட்ட ‘உலகத் தமிழர்” இயக்கத்து பிரமுகனாகவும் இருந்த இந்த ரஞ்சன் கோஷ்டி நயினாதீவு “புத்த பிக்குவுக்கு” மிகவும் வேண்டப்பட்டவர்கள் என்பது இன்னொரு தகவல்.//
    நான் உழைப்பாழிகள் பலரை சொன்னால் நீங்க பிழைப்பாழிகள் சிலரை திட்டுறியள்; உங்கள் பழிவாங்கல் இங்கேதான் ஆரம்பம்;

    // தீவுப்பகுதியினர் “உழைப்பை” நம்புபவர்கள் என்றால் //
    அதுக்கு எடுத்துகாட்டு புலம்பெயர் தேசம், புலிக்கு உதவியவர்கள் என்ற குற்றசாட்டு இவர்கள் மேல் இருக்கலாம் ஆனால் புலியால் பிழைப்பவர்கள் என அவர்கள் உழைப்பை கேவலபடுத்தாதீர்கள்,

    //இது எனக்கு புதிய தகவல். // அதுதான் தெரியுமே எது தேவையோ அதைபற்றி சிந்திப்பதில்லை; ஆனால் மதம் இனம் சாதி இவைகளை மட்டும் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆய்வுகள் செய்வியள்;

    //அந்த தாய்மாரும், குழந்தைகளும் இன்னமும் உயிரோடு இருக்கின்றனரா?//நந்தா நாட்டை விட்டுவந்து ஆண்டு பல ஆச்சோ??

    //பெயர்ப்பாளர்களாக இருந்தவர்களையே “போட்டுத்தள்ளிய’ புலிகள் இந்திய படைக்கு பிறந்த குழந்தைகளை விட்டு வைத்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.// என்ன இது வாதம்; உங்கள் கருத்துபடி புலிகள் மலையாளி (தலமை) அமைதிபடையிலும்;; அதானால் சிலவேளை தமது வருங்காலங்களை விட்டிருக்கலாமோ??

    Reply