பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் முற்பகுதியில்! தமிழ் பகுதிகளிலும் விறுவிறுப்பான தேர்தல் இடம்பெறும்!!

இலங்கைப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் மற்பகுதியில் பெரும்பாலும் ஏப்ரல் 9ல் நடைபெறும் என தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது. இது தொடர்பான அறிவித்தல்கள் பெப்ரவரி 5 அல்லது 9ம் திகதிகளில் வெளியாகலாம் எனவும் தெரியவருகின்றது.

உலகின் மிகப்பெரும் அமைச்சரவையைக் கொண்ட சிறிய நாடுகளில் ஒன்றான இலங்கையின் தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையவுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலுக்கான பொது வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கட்சிகள் ஏற்கனவே தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.

இத்தேர்தல்கள் தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க அரசியல் தீர்வு எதனையும் முன்வைக்கமாட்டாது போனாலும் தமிழ் அரசியல் தலைமைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற தேர்தலாக இது அமைய உள்ளது. அதனால் இத்தேர்தல் தமிழ் பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாகவே அமைய உள்ளது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • suman
    suman

    பென்சனுக்காக பதவியில் இருப்பவர்கள் விறுவிறுப்பாக இயங்குவார்கள் தானே

    Reply
  • NANTHA
    NANTHA

    சம்பந்தன் கோஷ்டி கஷ்டப்பட்டதே இந்த தேர்தலுக்காகவேதான். பொது வேட்பாளர்கள் என்று யாரும் இனி வரமாட்டார்கள். இனி எல்லோரும் “தமிழ்” என்று கத்துவோருக்கு வாக்களிக்க வேண்டும் என்பார்கள். அவர்கள் பதிலுக்கு ” நாங்கள்” கொழும்புக்கு” போய் உங்கள் பிரச்சனை தீர்ப்போம் என்று செல்வநாயகம் காலத்து கதை விடுவார்கள்.

    தமிழர்களுக்கு தரகர்கள் தேவையா அல்லது அரசியல் தேவையா என்பது பற்றி தீர்மானிக்கட்டும்.

    Reply
  • Rohan
    Rohan

    மக்கள் தமது விருப்பப்படி யாருக்காவது வாக்களிப்பர். அது எமது விருப்பமாகவும் இருந்துவிட்டால் ஒரு குத்தாட்டம் போடுவோம் –

    Reply
  • BC
    BC

    தமிழ் மக்கள் நேர்மையற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பர்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    BC,
    உண்மையில் தாயகத்தில் இந்த தமிழ்க் கூத்தமைப்பிற்கு மாற்றாக வலுவான ஒரு தமிழ்க்கட்சி இல்லாததாலேயே சம்மந்தர் இந்த ஆட்டம் ஆடுகின்றார். என்று தாயக மக்களிடம் ஒரு வலுவான மக்களை நேசிக்கின்ற கட்சி உருவாகின்றதோ அன்றுவரை கூத்தமைப்பின் காட்டில் மழை தான்.

    Reply
  • rasaththi
    rasaththi

    நாங்கள் கூட்மைப்புக்காக சரத்துக்குத்தான் வோட் போட்டோம். யாழ்ப்பாணத்து புத்திஜவிகளும் கூட்மைப்போடுதான் நிற்கிறார்கள். நேற்றும் மற்றப்பாட்டி பஸ் ஒண்டைக் கொழுத்தினாங்கள்.

    Reply