கிறிஸ்தவர் களின் தலைமை பீடமான வத்திக்கானில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி போப் ஆண்டவர் சிறப்பு பிரார்த்தனை வந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் இளம் பெண் ஒருவர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தார். பிறகு அதேவேகத்தில் போப் ஆண்டவர் மீதி மோதி அவர் அணிந்திருந்த அங்கியை பிடித்துக் கொண்டார். இதில் போப் ஆண்டவர் பெனடிக்ட் நிலை குலைந்து கீழே விழுந்தார்.
கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் புனிதபீட்டர் ஆலயத்துக்குள் பரபரப்பு எற்பட்டது. பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை பிடித்துச் சென்றனர். கீழே விழுந்து கிடந்த போப் ஆண்டவரை தூக்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த சில மணிநேரங்களில், பாப்பரசர் தமது வருடாந்த கிறிஸ்துமஸ் செய்தியை வழமை போல் வாசித்தார். போப் ஆண்டவர் மீது மோதிய பெண் சிவப்பு நிற மேலாடை அணிந்திருந்தார். அவரிடம் வத்திக்கான் சிட்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண் யார் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை. தற்போது அந்த பெண்மணியின் மனநலம் குறித்து மருத்துவ ஆய்வுகள் செய்யப்படுகின்றன.
bjm
சுய நினைவுடனேயே போப்பை தள்ளி விழுத்த ஆயிரம் காரணம் இருக்கு, இதற்கு ஏன் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தேவை??
பல்லி
என்ன கொடுமை இது எமது கஸ்ற்றத்தை சொல்ல கடவுளிடம் போனால் கடவுளின் காப்பாளரை தாக்க ஒரு பெண்ணா?? என்னதான் நடக்குது இந்த உலகில்; ஏதோ ஒரு வழியில் பாப்பரசர் இந்த பெண்ணின் மனதில் கஸ்ற்றத்தை ஏற்படுத்தி விட்டார் என்பது புரிகிறது, ஆனாலும் விசாரனை பெண்ணுக்கு எதிராகவே இருக்கும் அதுதானே சமத்துவம்;
மாயா
//bjm on December 26, 2009 10:56 am சுய நினைவுடனேயே போப்பை தள்ளி விழுத்த ஆயிரம் காரணம் இருக்கு, இதற்கு ஏன் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தேவை??//
மேலத்தேசங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தை காட்டி விடுவிப்பது வழக்கம். அதில் இருபகுதிக்கும் பிரச்சனை வராது. நம்ம நாட்டு மனநலம் பாதித்தவர்கள் கொடுக்கும் தண்டனை மரண தண்டனை. அதைத்தானே தொடர்ந்து வந்தார்கள்.
Kusumpu
இதே பெண்தான் சென்ற முறையும் போப் மேல் பாய்ந்தவர். மனநிலக்குறைவு என்பதை விட போப்பிலோ போப் அமைப்பிலோ பெண்ணுக்கு விரத்தி இருக்கலாம். இந்தப்போப் ஆனவர் நாசிப்படைக்கு உதவனார் என்பதைப் பலர் அறிந்திருப்பர்.
chandran.raja
மேலுலகத்தை நலிந்தவருக்களுக்கு காட்டிவிட்டு இந்த உலகத்தை தாங்கள் சுவீகரிப்பதின் நோக்கம் போப்புக்கு இருப்பதை இந்த பெண் உணர்ந்ததாலேயே குப்பறத் தள்ளி வீழ்த்தப்பட்டார். பிராத்தனைக்கு வந்த ஒட்டுமொத்த மக்கள் செய்யவேண்டிய வேலையை இப் பெண் தனித்து நின்று செய்தது முட்டாள் தனமே!.
Karamy
கிறிஸ்தவத்தின் புனிதராக மதிக்கப்படடுவரும் பாப்பரசருக்கே இந்தநிலை என்றால் யேசு கிறிஸ்துவின் பேரில் மத்ச்சடங்குகளை செய்து ஏமாற்றிப் பிழைக்கும் போலி பாதர்கள்மார்களின் நிலையினை என்னவென்று சொல்வது? கடவுளான பாப்பரசருக்கே தன்னை ஒருபெண் தாக்கப் பொவது தெரியாது என்றால் இயேசுவின் பெயரால் தீராத நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறும் மதகுருமார்களின் பொய்களை யார்தான் நம்பலாம்?
மாயா
//கடவுளான பாப்பரசருக்கே தன்னை ஒருபெண் தாக்கப் பொவது தெரியாது என்றால்…//
Karamy, பாப்பரசர் தன்னை கடவுள் என சொன்னதில்லை. புனிதர் என்பது ஒருவர் , இறந்த பின்பு அவரது கடந்த காலத்தை வைத்து ஒரு குழு தீர்மானிப்பதேயாகும்.
கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சமயத்துக்கும் , ஆளாளுக்கு பைபிளை தூக்கிக் கொண்டு மக்களை மந்தைகளாக்கும் கூட்டமும் சுயநலக் கூட்டமும் ஓன்றல்ல. கடலோடு , கூவத்தை ஒப்பீடு செய்வது போன்றது.