தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றதும் உடனடியாக ஆரம்பிக்கப்படுமென இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் வியாழக்கிழமை உறுதியளித்திருக்கிறது. அத்துடன் அரசியல் தீர்வுக்கு தேவையான அரசியலமைப்பு திருத்தங்களுக்குரிய சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுமென டில்லிக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரடங்கிய உயர் மட்டக்குழுவே இந்திய அரசுக்கு இந்த உறுதி மொழிகளை வழங்கியிருப்பதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை நேற்று வியாழக்கிழமை மாலை தெரிவித்தது.
அதேசமயம், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள சகல தமிழரும் ஜனவரி 10இல் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் இலங்கைத் தூதுக்குழு உறுதியளித்திருக்கிறது. இலங்கைத் தூதுக் குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்கள் இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தை சிறப்பாகவும் சுமுகமாகவும் இடம்பெற்றதாக இச்சந்திப்பின் பின்னர் நிருபர்களிடம் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
முகாம்களிலுள்ள தமிழர்கள் சகல ஜனநாயக உரிமைகளையும் கொண்டிருப்பதாகவும் அவர்கள் வாக்களிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தொடர்பாக கேட்கப்பட்டபோது பதிலளித்த பசில் ராஜபக்ஷ, “நாம் மிகவும் உறுதியான புரிந்துணர்வுடன் உள்ளோம். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இந்த இலக்கு குறித்து கவனத்தில் எடுப்பதாக உறுதியளிக்கிறோம். அரசியல் தீர்வுக்குத் தேவையான சகல அரசியலமைப்பு ரீதியான திருத்தங்களும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இந்திய அரசின் நலன் சார்ந்த சகல விடயங்களிலும் இலங்கை இந்தியாவுடனேயே நிற்கும். இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளிலும் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே இலங்கை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, அதேசமயம் இச்சந்திப்பின்போது, தனது பாதுகாப்பு தொடர்பான கவலைகள், அக்கறைகள் தொடர்பான விடயங்கள் எதனையும் இந்திய அரசாங்கம் எழுப்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
Appu hammy
It may be Dutumanung or Periyasami of present day. WE have to listen and obey “LOKU AIYA” of neighbour land.
Murukan
பசில் குடுகுடுப்பைகாரன் போலாகிவிட்டார். பேசாமல் கூத்தமைப்போடு சேரலாம்
Appu Hammy
சிங்கள பேரினவாத தென்னிலங்கை கட்சிகளை பொறுத்தவரை தமிழர்களுக்கு எந்தவிதமான அரசியல் தீர்வையும் வழங்கப் போவதுமில்லை. வழங்கத் தேவையுமில்லை ஏன்என்றால் வடகிழக்கு தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு பதவியும், பாதுகாப்பும், பணமும் கொடுத்து அவர்களுக்குரிய சுதந்திர நடமாட்டத்துக்கு உத்தரவாதமும் கொடுத்தால் தமிழர்களுக்கு உரிமை கொடுத்த மாதிரி தானே..
Menike.P
was very clear that the present government having no idea of resolving this current Tamil political crisis. They had made the same promise before the last election and made Tamils in a very vulnerable state. This time also they are making the same promise with India. So far in the history India never did any good to Sri Lankan Tamils. So Tamils has to think wisely before make their vote.
The delegation clearly shows either it lacks political power to negotiate the issue or it is an exercise to further promote the brothers to the limelight or to groom one of them to succeed the incumbent president.
the real reason behind this sudden “sibling” visit is different. they expect assistance from india on security in case MR wins.
WILL THESE PEOPLE BE THERE TO GIVE A SOLUTION AFTER THE ELECTIONS “FAT HOPES”