ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 26 ஆம் திகதி – தேர்தல்கள் ஆணையாளர் இன்று அறிவிப்பு

dayananda_disanayake.jpgஇலங் கையின் 6ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

வேட்பு மனுக்கள் டிசம்பர் 17 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிய இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply to jalpani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • palli
    palli

    இந்த 26; 27; 17; 08 இந்த தேதிகளை விட்டால் வேறு தேதிகளே இல்லையா.? இந்த தேதிகளை கலண்டரில் பார்த்தால் கூட சதுரம் எல்லாம்
    நடுங்குகிறது சாமி,,,

    Reply
  • varathan
    varathan

    இந்த தேர்தலில் மக்கள் மக்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் புளொட், ஈபிஆர்எல்எப் ,ஈபிடிபி போன்றவை இடதுசாரி பாரம்பரியத்தை நம்புபவர்கள் எனில் போட்டியிடும் இடதுசாரிக் கடசிக்கே தமது ஆதரவு என அறிவித்து அதற்காக பிரச்சாரம் செய்ய வேண்டும்.

    Reply
  • varathan
    varathan

    இலங்கையின் 6வது ஜனாதிபதியை தேர்வு செய்யும் 5வது ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷ அவர்களை தமது கட்சி முழுமையாக ஆதரிப்பதாக சிறீ-ரெலோ செயலாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் மேற்படி தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது. சிறீ-ரெலோ கட்சியின் இத் தீர்மானத்தை செவ்வாய் கிழமை (26இ செப். 2009) ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை நேரில் சந்தித்த சிறீ-ரெலோ செயலாளர் உதயராசா தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி தேர்தலில் தொடர்பான தமது தீர்மானத்தை தெரிவித்தனர்.
    ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து சிறீ-ரெலோ கடந்த யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் போட்டியிட்டமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி தொடர்ந்தும் அவ்வாறான ஹகூட்டு வேலைத் திட்டம்ஹ அவசியமென தெரிவித்தார்.

    பாவம் தமிழினம!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    புளொட் சித்தார்த்தன் இத்தேர்தலில் தாம் மஹிந்தாவை ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ளார். முன்னர் வவுனியா நகரசபைத் தேர்தலில் அரசை ஆதரித்திருந்தால் கிடைத்த ஆசனமும் கோவிந்தா ஆகி இருக்கும் என அறிக்கை விட்டவர்.

    Reply
  • jalpani
    jalpani

    வாய்கிழிய மக்கள் நலன் மக்கள் நலன் என பேசித்திரியும் சிறுபான்மை தமிழ் கட்சிகள் பெட்டிக்கும் அதிகாரத்திற்குமாக தமிழ் மக்களை மகிந்தவோடு விலை பேசுவார்கள். அவர்களுடன் சேர்ந்து தமது சொந்த வியாபார முதலீடுகளை கெட்டியாக பற்றிக் கொண்டு வழமை பேல மக்களுக்கு நாமம் போடுவார்கள். இலங்கையில் மூன்றாம் சக்தி வர உதவ மாட்டார்கள்.

    Reply