ஈழக் கொடியை வீழ்த்த உதவியவர்கள் மீண்டும் அதனை உயர்த்த இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். இவர்கள் வெளிநாடுகளில் ஈழக்கொடியினை உயர்த்த முற்படுவார்களேயானால் நாட்டு மக்கள் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பர் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
அரச காணிகளிலுள்ள விஹாரைகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கிவைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அங்கு மேலும் பேசுகையில், இனத்துரோகிகளுக்கு வீரர்களை உருவாக்க முடியாது. தேசப்பற்று உள்ளோரால் மாத்திரமே அது முடியும். நாம் சரியான பாதையை வகுத்துவருகிறோம். எத்தகைய சவால்களை எதிர்கொள்ளவும் நாம் தயாராகவுள்ளோம் என்றார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;
ஈழக் கொடியை வீழ்த்துவதற்கு எம்மோடு உறுதுணையாக பெளத்த மதகுருமார்களுடன் மேலும் பலர் இருந்தனர். அதற்குத் தலைமைத்துவம் வழங்கியும் செயற்பட்டனர். அவர்கள் எவருமே இந்த நாட்டில் ஈழக் கொடியைக் காண விரும்பமாட்டார்கள். எனினும் எவருக்காகவாவது உலகில் எங்காவது ஈழக்கொடி உயர்த்தப்படுமானால் அதற்கு இந்நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பது உறுதி, சர்வதேச சூழச்சிகள் வெற்றி பெறுவதற்கு உதவியாக இந்நாட்டில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு ஆயுள் மிகக் குறைவானது என்பது உறுதி.
எஸ். எம். எஸ். மூலம் ஜனாதிபதியாக முடியாமற்போனது போல இணையத்தளங்கள் மூலம் ஈழக் கொடியை உயர்த்த முற்படுவதும் முடியாத காரியம். அதற்கு இந்நாட்டின் தேசப்பற்றுள்ளவர்கள் இடமளிக்க மாட்டார்கள். எவராவது அவ்வாறு கனவு காண்பார்களானால் அது ஒருபோதும் பலிக்காது.
இனத் துரோகிகளால் வீரர்களை உருவாக்க முடியாது. வரலாற்றில் தொடர்ச்சியாக தேசப்பற்றாளர்களே நாட்டை நேசிக்கும் மனிதர்களை உருவாக்கியுள்ளனர். நாட்டிற்கான புதிய பாதையை நாம் வகுத்துள்ளோம். அன்று போலவே என்றும் பயமின்றி சவால்களை வெல்வோம் என ஜனாதிபதி அங்கு கூறினார்.
பெளத்த மத விஹாரைகள் கடந்த காலங்களில் சந்தித்த அவலங்கள் சம்பந்தமாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி; கிழக்கில் பெளத்த மதத்தவர்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியாதிருந்த காலகட்டத்தைக் குறிப்பிட்டதுடன், திருகோணமலையில் புத்தர் சிலை முட்கம்பிகளால் வளைக்கப்பட்டு அதனருகே பெளத்த மதத்தவர்கள் சென்று வழிபடமுடியாமலிருந்த சம்பவத்தையும் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் பெளத்த தேரர்கள் கஷ்டமான வாழ்க்கையை அனுபவித்தனர். வெளியில் நடமாட முடியாதிருந்தனர். அதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கவில்லை. அரந்தலாவையில் பிக்குமார் கொலை செய்யப்பட்ட போதும், அவர்கள் அப்பிரதேசத்தைக் கைவிட்டு ஓடவில்லை. விஹாரைகளைப் பாதுகாத்தனர்.
இதனால் நாம் பெளத்த விஹாரைகளை புனரமைக்க நடவடிக்கை எடுத்தோம். இப்போதும் சூழ்ச்சிகள் உள்ளன. எனினும் மீண்டும் இந்த நாட்டில் விஹாரைகள் முள்வேலிகளுக்குள் அடைக்கப்படும் யுகம் உருவாக இடமளிக்கப் போவதில்லை. இது எமது பொறுப்பு மட்டுமல்ல எமது உரிமையுமாகும்.
thamby
எங்களுக்கு தெரியும் இனிமேல் நீர் அரசியல்தீர்வு பற்றி கதைக்க மாட்டீர் என்று இத்தனை மக்கள் முகாம்களில் இருக்க நீங்கள் உங்கள் கொண்டாட்டங்களை நடாத்தும் போதே தெரியும் நீர் ஒரு இனவாதி என்று பாழாய்ப்போன புலி எல்லாத்தையும் தொலைச்சுப் போட்டுப்போனதை இன்னும் தான் புண்ணாக்குகள் புரியவில்லையே
palli
தம்பி இப்படிதான் புலிகளும் மற்றவயை மிரட்டி முழங்கினவை; இது மகிந்தாவின் நேரம் அவரும் சிலகாலம் மிரட்டட்டுமே, பொன்சேகரா வந்தால் சிலவேளை சிங்க கொடியைகூட இவர் தொடமுடியாமல் போகலாம்; அடக்கி ஆழ்பவன் எவனும் அடக்கி ஆழபடுவான் என்பதை நாம் பல இடங்களில் பார்த்து விட்டோம்; ஆக இது மகிந்தாவுக்கு புதிது புதிது;
Thaksan
தீர்வொன்றை வைத்துவிட்டு இதனைச் சொல்லும் தைரியம் மகிந்தவுக்கு வந்திருந்தால் அதை நம்பலாம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கெளவும்:தர்மம் மறுபடியும் வெல்லுமெனும் மருமத்தை உலகம் கற்கும். தமிழர்களின் தரப்பில் அதர்மம் விஞ்சியிருந்தது மெய். ஆனால் அதனுள்ளும் ஒரு தர்மயுத்தம் நடந்துகொண்டுதானிருக்கிறது என்பதை கண்களை மூடி பால்குடிக்கும் பூனையாக கனவு கண்டால் வலி இறுதியில் பூனைக்கு தான்.
Milan
“Don’t count the chickens before the eggs are hatched!” Let’s wait and see …
shan
Gothabaya Rajapaksa said present situation is not suitable for an election.Still LTTE not completely wipe out. So should be Army rule.
பார்த்திபன்
தமிழ் மக்களின் பிரைச்சினைகளுக்கு, மகிந்த அரசு ஒரு சரியான நியாமான தீர்வை முன் வைத்தால், எவரும் ஈழக் கொடியை உயர்த்த வேண்டிய தேவை வராது. அதையும் மீறி ஈழக் கொடியை உயர்த்த யாராவது நினைத்தாலும், அவர்களாகவே மீண்டும் அதனை கீழே போட வேண்டிய நிலையே தோன்றும். எனவே தற்போதைய தேவை வீர வசனங்களில்லை, புத்திசாலித்தனமான தீர்வு மட்டுமே….