என்னை தேசம்நெற் வாசகர்களுக்கு பெரிசா தெரியாது. ஆனால் லண்டன் குரல் வாசகர்களுக்கு நீண்ட காலமாகத் தெரிந்திருக்கும். லண்டன் குரல் துவங்கினதில இருந்து அங்க எழுதி வாறன். தேசம்நெற்றிலயும் சர்வதேச வாசகர்களுக்காக லண்டன் குரலை பிரசுரிக்கினம். அதால என்ர விசயத்தையும் தராதரம் பார்க்காம பிரசுரிக்கினம் போல கிடக்கு. : பேராசிரியர் பெக்கோ.
._._._._._.
புலித் தமிழ் தேசிய ஊடகங்களான ஜிரிவி, ஐபிசி, ஈழமுரசு, ஒரு பேப்பர் போன்றவற்றின் அரசியல் ஆய்வுகளும் தீர்க்க தரிசனங்களும் ‘கிடாய் வெட்டிப் படையால் செய்தால் மழைவரும்’ என்ற கணக்கில் வன்னி மக்களை முள்ளிவாய்கால் வேள்வியில் பலிகொடுத்து தமிழீழம் எடுக்க முற்பட்டது. அதற்கு அவர்களுக்கு கொசோவோ என்றொரு உதாரணமும் கிடைக்கவே ஆய்வுகளுக்கும் தீர்க்க தரிசனங்களுக்கும் எல்லையில்லாமல் போய்விட்டது. இன்னமும் போதையில் உள்ள இவர்களுடைய புத்தம் புதிய! புத்தம் புதிய!!! காட்சிகளை, ஒலிபரப்புக்களை, ஆய்வுகளை காணக் கேட்க படிக்கத் தவறாதீர்கள். தலைவரை இவர்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தி முருங்கை மரத்தில் ஏற்றிவிட்டு இவர்கள் அடித்த கூத்தில் தலைவர் அடி முடி காணப் போய்விட்டாராம். அது கிடக்க….
தலை போனாப் பிறகு புலி மிடியாக்களின்ர பிசினஸ் படுத்திட்டுது கண்டியளோ. தலை இருந்தால் தானே ‘உள்ளுக்கு விட்டு அடிப்பார்’, ‘தேள் வியூகம் வகுப்பார்’, ‘மொக்குச் சிங்களவனுக்கு பாடம் படிப்பிப்பார்’, ‘டக்ளஸ் க்கு வெடி விழும்’, ‘ராஜேசுக் கிழவிக்கு இடி விழும்’ என்று ‘பரபரப்பு’க்கு ஏதாவது நதிமூலம் ரிஸி மூலம் எழுதலாம். இப்ப என்னத்தை எழுதுறது. அதால தான் ஈழமுரசுக்காரர் தலை உயிரோட வந்தால் என்ன நடக்கும் என்று அரசியல் ஆய்வுகளை வலு சீரியஸ எழுதிக் கிழிக்கினம். சீனிச்சம்பல் பொல்சம்பல் வாங்காதேங்கோ, ஏயர்லங்காவில போகாதேங்கோ எண்டும் சொல்லவும் ஏலாது. சொல்றது விளங்குதோ ஐபிசி க்கு காசு போட்டவர் எயர்லங்கா ரிக்கற் வித்துத்தான் அதை ஓட்டுறார். எயர்லங்காவில போகாட்டி ஐபிசி கேட்கேலாது பாருங்கோ.
இன்னொரு விசயம் பாருங்கோ மலையகத்து தமிழரை நாங்கள் இப்ப இந்தியாக்காரர் என்று சொல்லேலுமோ? அது நியாயமோ? பிரஜாவுரிமையைப் பறித்து ஆப்படிக்கலாமோ? ஆனா அடிச்சிட்டாங்கள் ஐயா! அடிச்சிட்டாங்கள்! எங்கட ஐபிசி எஸ்கே ராஜன் அண்ணைக்கெல்லோ ஆப்படிச்சிட்டாங்கள். அந்தால் மலையகத் தமிழர் இந்தியாவில இருந்து வந்த மாதிரி ஈபி யில இருந்து தான் புலிபிசியில சேர்ந்தவர். அதுக்குப் பிறகு அந்தால் மலையகத் தமிழர் முதுகெலும்பு முறிய உழைச்ச மாதிரி நீங்கள் எழுதிக் குடுக்கிறத எழுத்துப் பிழை விடாமல வாசிக்கிறது. உங்களுக்கு அட்வேட் அது இதுவென்று உழைச்சுத் தந்தது. ஆனால் இத்தினை வருசத்துக்குப் பிறகு அந்தாலுக்கு வேர்க்பெமிற் எடுத்துக் குடுக்காமல் காய் வெட்டி பிரஜாவுரிமையை பறிச்சுவிட்டியல். அது கூடப் பரவாயில்லை அந்தால் காசோட கம்பி நீட்டிவிட்டது என்று ரெக்ஸ்டும் எஸ்எம்எஸ் ம் வேற அனுப்பிறியல். கூட இருந்தே குழிபறிக்கிறதுக்கு உங்களைக் கேட்டுத்தான் பாருங்கோ.
உந்தப் பயத்தில தான் அருணாச்சலம் அண்ணை கொஞ்சம் ஊண்டி ஊண்டி வாசிக்கிறார் போல. எங்க தன்ர பழைய கதையழை உதுக்குள்ள ஆராவது கிழறிவிட்டாலும் என்று அந்தால் தான் அம்மாவின்ர வயித்திலயே உறுமிக்கொண்டு இருந்தவராம் என்ற மாதிரி கதையளக்கிறார். அருணாச்சலம் அண்ணை பழசுகள விடுங்கோ. நீங்கள் தான் அண்ணை ஒரிஜினல் புலி. உந்த கோபி காடர் எல்லாம் கவுன்சில் சீட்டுக்காக புலியில நிக்கினம். நீங்கள் அப்படியில்ல அம்மாவின்ர வயித்திலயே உறுமின ஆள். என்ன கொஞ்சக் காலம் வயசுக் கோளாறால அப்பிடி இப்பிடி நான் ஒன்றும் தப்பா இல்ல பொலிட்டிக்ஸில அப்பிடி இப்பிடி இருந்த நீங்கள் அவ்வளவுதான். அது கிடக்கட்டும்.
இப்ப புலி மீடியாக்களின்ர பிசினஸ் சரியாப்படுத்திட்டுது. இரண்டு மாசம் சம்பளம் வரேல்லை என்றவுடனை ஐபிசியை விட்டு கனபேர் ஓடிவிட்டின. ஜிரிவி யிலயும் என்ன வாழுது. மூன்று நாலு மாசமா சிலருக்கு சம்பளம் இல்லையாம். அவையும் சிலபேர் ஓடிவிட்டின. அதால சில கோயில் மேளங்களை வைச்சு கச்சேரி நடக்குதாம். சில பேருக்கு வானலைகளில தங்கட ஒலி, ஒளி யைப் பரவவிடுறதில உள்ள பிரியத்தால தாக்குப் பிடிக்கினமாம். இதுக்குள்ள பகிடி என்னென்றால் ஐபிசியில சம்பளம் இல்லை என்று ஜிரிவி க்கு தாவின என் ரி ஜெகன் அண்ணைக்கு அங்கயும் அதே பிரச்சினையாம். ஆனால் ரிவி யில வாறன் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்றாராம்.
சம்பளம் இல்லாமல் வேலை செய்ய முடியாது தான். ஆனால் இரண்டு மாசம் சம்பளம் இல்லாததுக்கே ஓட்டம் எடுக்கிற நீங்கள் அவ்வளவு குண்டுகளும் விழுகிற இடத்திலை அந்தச் சனத்தை பூர்விக நிலத்தில நில்லூங்கோ என்று சம்பளத்தை வாங்கிக் கொண்டு கொக்கரிச்ச நீங்கள் தானே. வன்னியன்கள் என்றா உங்களுக்கு அவ்வளவு இழப்பமா போச்சு. ஒரு கட்டு வைக்கோலோட வன்னி மாடுகளைச் சமாளிப்பன் என்று சொன்ன அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின் பரம்பரையெல்லோ நீங்கள்.
உந்தச் சில்லெடுப்புகளுக்கு ஆளுக்காள் பத்த வைக்கிற வேலை அமோகமா நடக்குது. எங்க கசியவிட்டா எங்க வரும் என்றதெல்லாம் தெரிஞ்சு கொண்டு ஆளையால் காட்டிக் கொடுப்பு. எவன் துரோகி எவன் தன்ரையாள் என்று ஒன்றும் புரியாமல் வாள்வீச்சு நடக்குது. கே பியை துரோகி என்று தொடங்கி திருமாவளவனும் துரோகியாகிவிட்டார். சிவாஜிலிங்கம் துரோகி என்று கன பேர் கதைக்கீனமாம் என்று என் ரி ஜெகன் அண்ணை ஜீரிவி யில புலம்பிறார், மருத்துவர் புவி அம்சாவை சந்தித்து துரோகியாகி விட்டார் கூட்டமைப்பும் துரோகி ஆகிவிட்டது என்று அருணாச்சலம் அண்ணை புலம்புகிறார்.
எனக்குத் தெரிய துரோகி ஆகாதவை இரண்டு பேர். அருணாச்சலம் அண்ணையும் கோபி அண்ணையும் தான். முன்னவர் பிறப்பிலெயே புலி பின்னையவர் வளர்ப்புப் புலி. மற்றும்படி எல்லாத் துரோகிகளும் நாசமாய்ப் போக்க கடவது. துரோகிகள் எல்லாம் அழிஞ்ச சமூதாயத்தில மீண்டும் சந்திப்பம். அடகடவுளே துரோகிகள் அழிஞ்ச சமூதாயத்தில நான் எப்பிடி சீவிக்கிறது. அப்ப குட் பாய்.

மாயா
இன்னமும் தமிழருக்கு நாடு ஏன் கேட்கிறாங்கள். இனி துரோகிகளுக்காக நாடு கேளுங்கோ, அதுதான் சரி. தமிழர் எல்லாருமே, புலி கோட்பாட்டில துரோகிகள்தானே? புலிகளின் தாகம் துரோகிகளின் தாயகம்.
Thirumalai Vasan
என்னதான் இயக்க ரேடியோவாக இனம்காணப்பட்டாலும் அதை ஓரளவுக்காவது இயக்கம் சாராதவர்கள் கேட்டு ரசிக்கும்வகையில் வெளியாரையும் இணைத்து கடின உழைப்பை வழங்கிய எஸ் கெ ராஜனை வெளியெ அனுப்பியது ஐபீ.சீ.செய்த மடத்தனமான வேலை. சின்ன வயசு முதலே ஒலிபரப்பில் இயங்கி அனுபவம் சேர்த்த ஒருவரை லேசாகத் துக்கி எறிந்துவிடலாம். ஆனால் அந்த அளவு அனுபவம் மிக்க ஒருவரை- தாங்கள் துரோகியாக எண்ணாத ஒருவரை மீண்டும் ஐபீசீக்குள் கொண்டுவந்து சேர்ப்பது கடினமான காரியம். சிலவெளை மீண்டும் ஆளனுப்பிக் கூப்பிடுவினம். பொறுத்திருந்து பார்க்கலாம்.
பார்த்திபன்
உந்த அருணாச்சலத்தார் ஐபிசி ஆரம்பித்த சில காலங்களிலேயே, அங்கு சங்கீத ஞானத்துடனிருந்த ஒரு பெண் அறிவிப்பாளரை “பழகலாம் வாங்க” என்று தொடர்ந்து தொல்லை பண்ண, பல வருடங்களாக ஓரம் கட்டுப்பட்டு பின் எச்சரிக்கையுடன் இணைத்துக் கொள்ளப்பட்டவர். இவரது சேவை மனப்பாண்மையே தனியானது தானுங்க………..
Kandaswamy
பாவம் சிவரஞ்சித். இவர்களுக்காக சரியாக கஸ்டப்பட்டு, இப்ப மிகப்பெரிய கடனாளியாக, இரத்தம் முழுவதும் உறிஞ்சப்பட்டு, சரியாக கஷ்டபடுகிறார்.
பார்த்திபன்
கந்தசுவாமி,
உங்கள் செய்தி மிகவும் தவறானது. காரணம் தனியார் வசமிருந்தபோது ஒரு உன்னத வானொலியாக இருந்த ஐ.பி.சி, சிவரஞ்சித்தின் திட்டமிட்ட நுழைவின் பின்னால்த் தான் அபகரிக்கப்பட்டது. அதன் பின் புலி ஊடகம் என்ற முத்திரையால் பல்லாயிரம் விளம்பரங்களினால் பல இலட்சம் பவுண்டுகள் மாத வருமானமாகக் கிடைத்தன. அதை சிவரஞ்சித் உட்பட உள்ளிருந்தவர்களே பொய்யான செலவுக் கணக்குகளைகப் காட்டி அபகரித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது சிவரஞ்சித் கடனாளியாக உள்ளாரென்றால், அது நிச்சயம் மற்றவர்களை ஏமாற்ற ஆடும் நாடகம்.
santhanam
புலிவாலை பிடித்தவனிற்கு எப்பவும் ஆபத்து வாலைபிடித்து சுற்றி சுற்றி வரவேண்டும் விட்டால் முன்னாலும் ஆபத்து பின்னாலும் ஆபத்து.
Kandaswamy
பார்த்திபன், சும்மா எழுந்தமானத்திற்கு விழுந்த மாட்டிற்க்கு குறி சுட கூடாது. எனக்கு அவர் காசு விளையாடினாறோ இல்லயோ என்பதை விட இப்ப சரியாக கஷ்டபடுகிறார் என்று மட்டும் தெரியும்.
palli
சரி சரி ஜீவரத்தினத்தாரிடம் சொல்லி ஒரு இரண்டு லட்ச்சம் பவுண்ஸ்களை வேண்டி அந்த மனிதனுக்கு கொடுங்கோ; இல்லாவிட்டால் கடந்த
கால சதிராட்டம் (லண்டனில்) பற்றி கருனாபோல் ;;;;;;;;; மிரட்டவேண்டியதுதானே, இதெல்லாம் அவைக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்; எல்லாமே சிரிப்புதான், முள்ளிவாய்க்காலில் போட்ட குண்டுகள் லண்டன் வரைக்கும் வெடிக்குது,
பார்த்திபன்
கந்தசுவாமி,
நான் ஐ.பி.சியின் ஆரம்பகாலம் தொட்டு அதனுடன் இணைந்திருந்த ஒருவன் என்ற முறையிலேயே உண்மையை எழுதினேன். ஆனால் ஆரம்பத்தில் “பாவம் சிவரஞ்சித். இவர்களுக்காக சரியாக கஸ்டப்பட்டு, இப்ப மிகப்பெரிய கடனாளியாக, இரத்தம் முழுவதும் உறிஞ்சப்பட்டு, சரியாக கஷ்டபடுகிறார்”. என்றெழுதிய நீங்கள் தான் தற்போது “எனக்கு அவர் காசு விளையாடினாறோ இல்லயோ என்பதை விட இப்ப சரியாக கஷ்டபடுகிறார் என்று மட்டும் தெரியும்”. என்று சமாளிப்பாக எழுதுகின்றீர்கள். ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், நாம் எதை விதைக்கின்றோமோ அதைத்தான் அறுவடையும் செய்கின்றோம். ஐ.பி.சி வானொலி சிவரஞ்சித்தால் எந்தவித இழப்பீடும் வழங்கப்படாமல், அதன் உரிமையாளர்களிடமிருந்து வஞ்சகமாகப் பறிக்கப்பட்ட போது, அவர்கள் அடைந்த வேதனை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரியும்…..