இனி புலம்பெயர் தமிழர் பொறுப்பில் தமிழீழ போராட்டம் : தமிழீழ விடுதலைப் புலிகள் & பிரித்தானிய தமிழர் பேரவை

09-tamil-protester.jpgசுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழமே தமிழரின் விருப்பம் என்றும் அதற்கான போராட்டத்தை இனி முன்னெடுத்து தலைமையேற்று நடத்தும் பெரும் பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதே போன்றதொரு அறிக்கையை பிரித்தானிய தமிழர் பேரவையும் அதே காலப்பகுதியில் வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
09.11.2009

சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள வரலாற்று ரீதியான பழிவாங்கும் மனப்பான்மையும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துச் செல்வது வரலாற்றின் உண்மையாகும்.

காலத்திற்குக் காலம் ஆட்சி பீடம் ஏறுகின்ற சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாது அவர்களது உரிமைகளைப் பறித்து தமிழ் தேசிய இனத்தைச் சிதைவடையச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் தொடர்ச்சியாக தமது அரசியல் உரிமைகளை இழந்த தமிழ் பேசும் மக்கள் அவ் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய வரலாற்றுத் தேவை தோற்றுவிக்கப்பட்டது.

அதன் ஆரம்ப வடிவமாக அகிம்சை வழியிலும் அரசியல் முறையிலும் நடைபெற்ற போராட்டத்தை வன்முறை  மூலம் அடக்க முற்பட்டதாலேயே தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாகப் பரிமாணம் பெற்றது. ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல ஆண்டுகளாக தொடர்ந்துவரும் விஷயம் என்பதுடன் அதை அடையும் வரை தமிழ் மக்கள் ஒய்ந்துவிடப் போவதுமில்லை.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் தாங்கிய வீரமிகு போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரவலத்தினைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. அத்தகைய இன்றைய சூழலில் இப்போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடத்த வேண்டிய பெரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக்கூறி, நியாயமானதும் ஈழத் தமிழரின் மிக நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன.

உண்மைக்குப் புறம்பான மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பரவலடையச் செய்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்குடனும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஆகவே, இன்றைய நிலையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்திற்கான தமது விருப்பையும், தாம் அதற்கான தாயகமும் தேசியமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்பதையும் முழு உலகிற்கும் ஆணித்தரமாகச் சொல்ல வேண்டியதும், விடுதலைக்கான அரசியற் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும், ஈழத் தமிழ் மக்களின் உடனடியான வரலாற்றுக் சடமையாகிறது.

இவ்வகையில், ஆயுதப் போராட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாசையை மக்களாணை மூலம் வெளிப்படுத்தியமையும், முழுமையான சுதந்திர விருப்பைப் பிரகடனப்படுத்தியதுமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது, ஐயத்துக்கிடமின்றி இன்றைய மக்களின் விருப்பும் அதுவே என்பது உலகிற்குத் தெளிவாகப் பறைசாற்றும் நிகழ்வாக அமையும்.

இந்த வழிமொழிவு இன்று ஈழத் தமிழரின் தேசிய அரசியற் போக்கைத் தீர்மானிக்கும் முதல் கட்டமாகும்.

அதேநேரத்தில் பன்னாட்டுப் பரிமாணம் பெற்றுவிட்ட இலங்கைத் தீவின் அரசியற் சூழலிலும் ஈழத்தமிழரின் தற்போதைய நிலையிலும் அவர்களது அரசியற் கட்டமைப்பாக ஜனநாயக வழியில் தெரியப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேசரீதியில் தமிழ் மக்களது உரிமைகளை நியாயப்படுத்தி தனியரசு அமைய பாடுபடுவது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது.

அதேவேளை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமைவதானது மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும், இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு உதவக்கூடியதாகவும் அமையும்.

மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும்.

இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல்  உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாங்கள் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களையும், அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

._._._._._.

பிரித்தானிய தமிழர் பேரவையின் அறிக்கை:

BTF Bannerஈழத்தமிழர் போராட்டம், புலம் பெயர் தமிழ்மக்களின் கரங்களுக்கு வந்தடைந்துள்ள நிலையில், அரசியல் மயப்படுத்தப்பட்ட தாயகம் நோக்கிய இந்த புனிதப் பணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்து வருகின்ற இந்த முக்கிய காலப்பகுதியில் இதனை சிதைக்கும் பல நடவடிக்கைகளும், சதிகளும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

எமது மக்களின் ஒற்றுமையை எம்மவர்களையே வைத்து பிளவுகளை ஏற்படுத்தி போராட்டத்தை குலைக்கும் முயற்சியில் இலங்கை அரசும் அதனோடு சேர்ந்தியங்குபவர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆறுமாதத்துக்குள் எமது மன உறுதியை குலைப்பதற்கும் போராட்டத்தினை பலவீனப்படுத்துவதற்காகவும் யாரும் எதிர்பாராத அளவிலான ஒரு பாரிய சதி உருவாக்கப்படுகின்றது.

மிகவும் அவதானமாக இலங்கை அரசியலை கவனித்து, சதிவலைக்குள் எமது விடுதலைப்போராட்டம் சிக்கிவிடாது பாதுகாப்பது, புலம்பெயர் மக்களது கடமையாகும் இற்றைக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழீழம் அதன் இறையாண்மையை இழந்தது. தொடர்ந்து வந்த காலனித்துவ ஆட்சிகளுக்கு அடிமைகளாக தமிழினம் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் சிங்கள அரசினால் எமது தேசிய இறையாண்மை, சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்டது.

முப்பது வருட அறவழிப் போராட்டமும், முப்பது வருட ஆயுதப்போராட்டமும் மீண்டும் எமது தாயகத்தின் விடுதலைக்கும் அதன் மீதான நம்பிக்கைக்கும் அத்திவாரமிட்டது. ஆனால் இப்போது சர்வதேசத்தின் கூட்டுச் சதியினால் எமது தேசக்கட்டுமானம் சிதைக்கப்பட்டது மட்டுமல்லாமல் விடுதலை மீதான நம்பிக்கையையும் சிதைத்துள்ளது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நம்பிக்கைச் சிதைவின் வெளிப்பாடாகத்தான் பலர் பல தீர்வுத்திட்டங்களோடு செயற்பட ஆரம்பித்துள்ளனர். பல்லாயிரக் கணக்கான உயிர்த்தியாகத்தின் மூலம் கட்டப்பட்ட, காப்பாற்றப்பட்ட எமது தேசத்தின் இறையாண்மையை சமரசப்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேவேளையில் எமது மக்களின் இன்றைய துயரைத் தீர்ப்பதற்க்கு பல தளங்களிலும் வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மறுப்பதற்க்கில்லை.

தாயகம். தேசியம். இறமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை எனும் விழுமியங்களோடு பணியாற்றும் அனைவரோடும் பிரித்தானிய தமிழர் பேரவை இணைந்து பணியாற்றி வருகின்றது. ஆனால் அதேவேளை தமிழ்த் தேசியத்தை பலவீனப் படுத்தும் தரப்பினரோடோ அல்லது தமிழ்த்தேசியத்தை சமரசப்படுத்தும் தரப்பினரோடோ பேரவை ஒரு பொழுதும் சேர்ந்தியங்காது என்பதனைத் மீண்டும் தரிவித்துக் கொள்கின்றது.

பேரவை, பிரித்தானிய சட்டங்களுக்குட்பட்டு மிகவும் வெளிப்படையாக இயங்குகின்றது. எமது பிராந்திய கிளைகளின் ஊடாகவோ அல்லது தலைமையகத்துக்கோ தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். சமகாலத்தில் பேரவையின் சார்பாக பேசவல்லவர்கள் சர்வதேச ஊடகங்கள், தமிழ் ஊடகங்கள் ஆகியவற்றில் கிரமமான முறையில் தோன்றி பேரவையின் செயற்பாடுகள் குறித்தான விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.

அத்தோடு ஊடக தர்மத்தோடு இயங்கும் சகல ஊடகங்களோடும் தமிழர் பேரவை செயற்படுகின்றது. மக்கள் கட்டமைப்பை உருவாக்குதல், இதுவே எமது அரசியல் வேலைத் திட்டத்தின் அடித்தளமாகும். தற்போது பேரவைஇ மக்கள் அனைவரையும் உள்வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அது பேரவைக்கு ஓர் ஜனநாயக அடிப்படையிலான கட்டமைப்பை உருவாக்க உதவும்.

அத்தோடு மக்களே தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த இலக்குகளை முன்வைத்து பேரவையானது பல்வேறு செயல்த்திட்டங்களை முன்னெடுக்கின்றது. அத்தோடு எம் முன்னே காத்திருக்கும் பாரிய வேலைத்திட்டத்திற்கான ஆட்பலம் மற்றும் அனைத்து வளங்களையும் சீர் செய்ய உதவிடும். எம் அங்கத்தவர்கள் உங்கள் அனைவரினதும் வாசல் தேடி வருகின்றார்கள்.

எமது பணியில் நீங்களும் முழுமையாக இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அத்தோடு பின்வரும் செயற்திட்டங்களையும் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுக்கின்றது. திறப்பு போராட்டம், மனித உரிமை கவுன்சிலுடனான பரப்புரை, இலங்கைக்கான ஐரோப்பிய வரிச் சலுகைக்கு எதிரான போராட்டம், இலங்கை உற்பத்தியையும் இலங்கையில் முதலீடுகளையும் எதிர்த்துப் போராடுதல். போரால் பாதிக்கப்பட்டோர் பதிவு, போர்க்குற்றத்தை நிருபித்தல், இனப்படுகொலையை வெளிக்கொணரல்.

எமது போராட்டம் சர்வதேச அங்கீகாரத்தை பெறவேண்டும். அதற்கு நாம் சர்வதேசத்தின் ஆட்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சர்வதேச சமூகத்தினர் ஆகியோரின் மனங்களை வெல்லவேண்டும் . அதேவேளை ஈழத்தில் பெரும் துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் இயல்பு நிலைவாழ்க்கைக்கு திரும்ப வேண்டும், இந்த இலக்குகளை அடைய வேண்டிய பெரும் பணி நம் முன்னே இருக்கின்றது இதற்க்காக தமிழ் தேசிய தளத்தில் இயங்கும் அனைத்து அமைப்புக்களும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இதேவேளையில் மக்களின்முன் வெளிப்படையாக அரசியல் பணிகளை முன்னெடுக்காது இரட்டைக் கொள்கையுடன் இயங்கும் அமைப்புக்கள், தனி நபர்களை மக்கள் உடனே இனங்கான வேண்டும் என பிரித்தானியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.

நன்றி

பிரித்தானியத் தமிழர் பேரவை

Show More
Leave a Reply to sumithra Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

49 Comments

  • jimmy
    jimmy

    புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுத்தானே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலை கவிண்டது முள்ளிவாய்க்காலில். இப்ப என்ன இந்த அறிக்கை புதிதாய்ச் சொல்ல இருக்குது. எது எப்பிடியோ ஆனந்சங்கரி ஜயாவுக்கு செம போட்டி இருக்குதென்பது மட்டும் தெரியுது. ஒரு வித்தியாசம். அந்தாளுக்கு அட்றஸ் இருக்குது. இவர்களுக்கு அட்றஸ் பெயர் என்று ஏதும் போடமுடியாது. காரணம் போட்டால் விடிஞ்சதும் வாசலில் சிஜடி நிக்கும்.

    மாவீரர் தினத்துக்கு முன்பாக சத்தமாக ஏதாவது கிலுகிலுக்கத்தானே வேணும். அப்பத்தானே சனம் வரும். சனம் வந்தால் பணம்வரும். ஆதலால் இனி இப்பிடி மெயில்கள் பறக்கும்.

    Reply
  • மாவீரர்
    மாவீரர்

    “அடப்பாவிகளா”!?!

    Reply
  • aat
    aat

    வாழ்க தமிழ். வளர்க உங்கள் தொந்தி.

    Reply
  • BC
    BC

    இது புலி தானா வெளியிட்து என்று புலி ஆதரவாளர்களே சந்தேகப்படுகிறார்கள்.
    பிறந்த தினம் நெருங்க இது மாதிரி இன்னும் எதிர்பார்க்கலாம்.

    Reply
  • பேரவை
    பேரவை

    சகோதரங்களே!
    விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டத்தில் தோற்றாலும் விடுதலைப்புலிகளின் போராட்டம் தோல்வியுறவில்லை என்பதையும் அவர்கள்தான் எதிர்வரும் காலங்களில் தமிழரைப் பிரதிபலிக்கப் போகின்றார்கள் என்பதையும் இந்த ஆறுமாத காலம் தெட்டத் தெளிவாகக் காட்டிவிட்டது.

    தமிழ் மக்களை ஒழுங்குபடுத்தி ஊர்வலமோ ஆர்ப்பாட்டமோ நாம் ஒழுங்குசெய்தாலேயொழிய வேறுயாராலும் முடியாதென்பதை இந்த ஆறுமாதகாலம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

    மாற்றுக்கருத்துச் சகோதரங்களே நீங்கள் இந்த ஆறுமாதமும் என்ன செய்தீர்கள் என்பதை ( உள்நாட்டில் என்றால் காரணம் பொறுக்குவீர்கள். வெளிநாட்டில் என்ன செய்தீர்கள் என்பதை) நிரைப்படுத்துங்கள் பார்க்கலாம். யோசிக்கிறீர்களா. நானே சொல்கிறேன். நான்கு சுவருக்குள் கொம்பியூட்டருக்கு முன்னால் இருந்து கட்டுரை வரைந்தீர்கள். அதில்கூட பலருக்கு முகத்தைக் காட்டமுடியாது(பிறகு உங்கள் பூர்வீகம் வாசித்து விடுவார்கள்) புனைபெயரில் அளவுகோல்களுடன் உலாவுகிறீர்கள். இந்த லட்சணத்தில் பெயர் தொலைபேசி இலக்கம் கொடுத்து மக்களோடு தொடர்பில் இருக்கும் எம்மைப்பார்த்து இவர்களை அம்பலப்படுத்துவோம் வெளிச்சம்போட்டுக் காட்டுவோம் என்று வெத்து வேட்டுத் தீர்க்கக்கூட உங்களுக்கு உரிமையில்லை.

    Reply
  • palli
    palli

    //தலைமைச் செயலகம்,
    தமிழீழ விடுதலைப் புலிகள்,
    தமிழீழம்//.
    எட பாவிங்களா இதை சொல்லிதானே அங்கே பல எம்மின இளசுகளையும் பெண் பிள்ளைகளும் தடுப்பு முகாமில் போட்டு தட்டி எடுக்கிறார்கள், உலகமே வரிந்து கட்டிகொண்டு ஈழத்தில் புலிகள் இல்லை என சொல்ல அரசோ இருந்தாலும் அது எங்கள் கையில் சிறையில்தான் என சொல்ல இல்லை தவறி இருக்கிறோம் என கணனியை உதவிக்கு அழைத்து அந்த குழந்தைகளை ஏந்தான் காவு கொடுக்கிறியள், அதுதான் நாடு கடந்த தவறிய ஈழம் என உங்கள் பிழைப்புக்கு ஒன்றை எடுத்து போட்டியளே, பிறகுமேன் இந்த நாத்தம் பிடித்த பல்லவியை பாடுகிறியள்; பொறுக்கி தின்ன எத்தனையோ வழிஇருக்க ஏந்தான் இந்த கொடூர குணமோ; என்வீட்டு கதவை புலியென பேசும் இவர்கள் தட்டினால் செ;;;;;; சிவாஜிலிங்கம் உங்கடை மிச்ச சொச்ச வட்டவாளங்களையும் ஜந்து நட்செத்திர தங்குவிடுதியில் இருந்து அமைதியாய் சொல்லுகிறாராம்; இதில் பல புலம் பெயர் புண்ணாக்குகளுக்கு ஆப்பு உறுதி,

    Reply
  • santhanam
    santhanam

    கொம்பியூட்டருக்கு முன்னால் இருந்து கட்டுரை வரைந்தீர்கள்//பேரவை
    நாங்கள் சொந்ததலையை வைத்துதான் கட்டுரை வரைகிறோம் ஆனால் நீங்கள் முகம் தெரியாத மனிதர்களின் சங்கிலி தொடராகவிருந்தல்லவா வேலைசெய்கிறீர். பத்தாவது; பதினொன்றாக நீரிருந்து ஏவல் வேலைசெய்துவிட்டு எமக்குகதை அளக்கவேண்டாம் யானை மாதிரி உங்கள் தலைக்கே நீங்கள் மண் அள்ளி போடுகிறீர்கள்.

    Reply
  • palli
    palli

    //(பிறகு உங்கள் பூர்வீகம் வாசித்து விடுவார்கள்)//
    அதுக்குதான் பொட்டர் இல்லையே ;;பலரது பூர்வீகம் வாசித்த பலரை குடும்பத்துடன் அல்லவா மகிந்தா குடும்பம் புதுராகம் பாடுகிறது,

    //தமிழ் மக்களை ஒழுங்குபடுத்தி ஊர்வலமோ ஆர்ப்பாட்டமோ நாம் ஒழுங்குசெய்தாலேயொழிய வேறுயாராலும் முடியாதென்பதை இந்த ஆறுமாதகாலம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.//
    உலகமே முள்ளிவாய்க்காலை வேடிக்கை பார்க்க காரணமே இந்த ஊர்கோலம் தானே, படிச்சு படிச்சு சர்வதேசம் சொல்லிச்சே முட்டாள் பயலுகளே பயங்கரவாதிகளின் கொடியை தூக்காதீர்கள் என கேட்டீர்களா, ?? சர்வதேசத்திடம் கூட கபடியாட நினைத்த ஊர்கோலம் அதுவே உங்கள் தலைக்கு வீண்கோலமாய் போய் விட்டது;

    //மாற்றுக்கருத்துச் சகோதரங்களே நீங்கள் இந்த ஆறுமாதமும் என்ன செய்தீர்கள் //
    புலி கொடி தூக்கவில்லை,
    கொடி கம்பு வியாபாரம் செய்யவில்லை,
    மக்களின் பணத்தில் தின்னவில்லை,
    உண்ணா விரதத்தின் புகழை கெடுக்கவில்லை;
    புலி தொடரும் என நம்பவில்லை,
    வணங்கா மண் என கத்தவில்லை;
    போகாத கப்பலில் ஏறவில்லை;
    புதினத்தில் புதினம் எழுதவில்லை;
    பரபரப்பாய் பரபரப்பில் கிறுக்கவில்லை;
    மொத்தத்தில் உங்களை போல் மிருகமாய் வாழவில்லை:
    மிகுதியை நண்பர்கள் வீசுவார்கள் மறைந்திருந்து கவ்வவும்;
    வந்திட்டார் முள் இல்லாத கடிகாரத்தில் நேரம் பார்க்க;
    தாய் வலியில் துடிக்க தடியன் எதுக்கோ அழுதானாம் என அன்று சிலர் சொன்னது இன்றய இவர்களை எண்ணிதானோ;

    Reply
  • senthil
    senthil

    தமிழீழ விடுதலை புலிகளின் அறிக்கை மின்னேரியாவில் இருந்து வெளியிடப்பட்டதா? அல்லது மலேசியாவிலிருந்து வெளிவந்ததா?

    பிரித்தானிய தமிழ் போரத்தின் அறிக்கை சுரேன் சுரேந்திரனுடையதா? சென்.கந்தையாவினுடையதா? இந்த பிரிவுகளுக்கும் சதிகளுக்கும் உலகவல்லரசா காரணம்??

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    வன்னிப் போருக்குப் பின் இராணுவப் பகுதிக்கு வந்து, பின்னர் தடை முகாம்களில் இருந்து வெளியேறி வவுனியாவில் தங்கியிருக்கும் சிலரது குரல்களை இங்கே கேட்கலாம்.

    வன்னிப் போர் குறித்தும், அவர்கள் முகம் கொடுத்த இன்னல்களையும், இன்றைய நிலையில் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை எதுவித அழுத்தமும் இல்லாமல் பேசுகிறார்கள். வானொலி நிகழ்ச்சியை கேளுங்கள்:

    http://www.radio.ajeevan.com/
    அல்லது
    http://www.zshare.net/audio/68213950a796d0b7/
    அல்லது
    http://www.esnips.com/doc/776a86df-d508-4e8f-9607-87f864d384a9/jeevan4U_8_11_2009_Vavunia_interview/?widget=flash_player_esnips_blue

    Reply
  • Rohan
    Rohan

    “கேக்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்”

    தலைவன் பிரபாகரன் கடைசிக்காலத்திலும் ஏரோப்பிளேன் ஓட்டித்தானே படங்காட்டினவர்

    Reply
  • Naveen
    Naveen

    பேரவை on November 9, 2009 12:14 pm
    தமிழ் மக்களை ஒழுங்குபடுத்தி ஊர்வலமோ ஆர்ப்பாட்டமோ நாம் ஒழுங்குசெய்தாலேயொழிய வேறுயாராலும் முடியாதென்பதை இந்த ஆறுமாதகாலம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது//

    ஊர்வலத்தை வைத்து என்னத்தை சாதித்த நீங்கள் அப்பாவி மக்களை கொல்லத் துணை போனது மட்டுமல்ல கடைசியில் உங்கள் தலைவர்களை கூட காப்பாற்ற முடியவில்லை.

    அவன் அவன் தலை மறைவாக ஆவது இருந்து எழுத புலிகள் அனுமதித்திருந்தால் மக்களும் எப்பவோ தெளிவடைந்து இருந்திருப்பார்கள் அத்தோடு, முப்பது வருடமாக நடந்த அழிவில் அரைவாசிக்கும் மேல தடுத்தும் இருக்கலாம்.

    மந்தை கூட்டங்களாக வாழாமல் இனியாவது சிந்தித்து மனிதர்களாக வாழ முயற்சித்து அங்கு இருக்கும் மக்களையும் நிம்மதியாக வாழ விடுங்கள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி,
    ’மாற்றுக் கருத்தாளர்கள்’ என்ன செய்தீர்கள் என கேட்டால் என்ன செய்யவில்லை என லிஸ்ற் போடுகிறீர்கள். அதுக்கு உங்களை ஏன் குறை சொல்ல வேணும் அறிஞ்ச விசயம் தானே.

    மேலும் கொடிதூக்கியவர்களால் இன்ரனசனல் கண்ணை மூடினது என்கிறியள். அங்கால குலனோ உலகமயமாக்கலில ஈழம் தலையை சொறிஞ்சது என்கிறார். அந்த விவாதததில வந்து கொடிக்காரரால தான் கவிண்டது உலகமயமாக்கலால இல்லை எண்டு சொல்லி இருக்கலாமெல்லோ!

    வந்திட்டார் கேள்விகேக்க எண்டு அப்பா, அம்மா தனமாக பதில் சொல்லக்கூடாது. அது உங்கள் மீது என்போன்ற பின்னூட்டக்காரர் வைத்திருக்கும் மதிப்பைக் குறைக்கும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    அத்துடன் ஏன் மாற்றுக்கருத்து தோழர்கள் தேசத்திலும் தேனியிலும் மற்றும் ‘சந்திப்புகள்’போன்றவற்ரில் மட்டுமே வந்து கருத்த்ச் சொல்கின்றனர். ஏன் அவர்களால் ஒரு வலுவான ஒரு மாற்று அமைப்பை ஏற்படுத்த முடியாதிருக்கிறது. அதற்கான அத்திவாரத்தையாவது இட்டுள்ளார்களா என்றால் இல்லை என்பதே எனது அவதானிப்பாக இருக்கிறது. இவர்களிடம் உள்ள முக்கிய குறைபாடு பரந்துபட்ட சமுக/பொருளாதார நிலகளில் வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளை அடையாளம் காணமுடியாதிருப்பதே. அவ்வாறு காண்போரும் அவர்களை அமைப்புரீதியாக ஒன்று படுத்த தமது ஆங்கில/மேற்கத்தேய கல்வி அடிப்படையில் முயல்கின்றனர்.

    பல்லாயிரம் மைல்களுக்கப்பாலுள்ள மக்களில் தமது உறவுகளும், இழந்துபோன உடமைகளும் எல்லாவற்றுக்கும் மேலாக கனவுகலையும் சுமந்து கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தினை அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்த இவ்வகையான கல்வி/சிந்தனையால் முடியாது என்கின்ற உண்மையையும் இவர்கள் உணர மறுக்கின்றனர். இதற்கு நல்ல உதாரணம் யூதமக்களின் இஸ்ரேல் வருகை. இஸ்ரேலிய அகதிகள் உலகேங்கும் பரவி வாழ்ந்த போதிலும் அவர்கள் இஸ்ரேல் சென்று தமக்கு ஒரு நாட்டை அமைப்பதிலே அக்கறை காட்டினர். நியாயமாகப் பார்த்தால் 2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இஸ்ரேலையும் விட 200 வருடங்களாக செல்வச்செழிப்புடன் வாழ்ந்த வாழ்க்கையை சீரழித்த ஜேர்மனியிலேயே நாடமைத்திருக்க வேண்டும். இஸ்ரேலில் இருக்கும் யூதமக்களை விட அதிகமான யூதர்கள் அமெரிகாவில் வாழ்கின்றனர்.இன்றும் அனேக கிழக்கு ஐரோப்பிய யூத ‘அகதிகள்’ இஸ்ரேல் செல்லாமல் அமெரிக்கா செல்கின்றனர். அவர்களைபோல் அரசியல்/பொருளாதார செல்வாக்குள்ளவர்கள் வேறெவரும் இல்லை எனக்கூடச் சொல்லாம். ஆனால் அவர்கள் யூத அகதிகளாக வந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எந்த முடிவையும் எடுப்பார்கள். அதே போல புலம்பெயர்ந்து வாழும் யூதமக்களிடையே பல அரசியல் / சமூக அமைப்புகள், அரசியல் அழுத்தக் குழுக்கள் உள்ளன. ஒரே நாட்டிலேயே பல்வேறு குழுக்கள் உள்ளன. ஆனால் அவர்கள் யாரும் இஸ்ரேலிய மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதில்லை. புலம் பெயர் இஸ்ரேலியர்களை நோக்க்கி ‘புலன்பெயர்’, ‘புண்ணாக்குகள்’ போன்ற வசை பாடுவதில்லை. வேதனைகளைச் சுமந்து வாழும் மக்கள் கூட்டத்தினை தலைமை தாங்க அந்த மக்களையே வசைபாடுதல் தகுதி ஆகாது என்பதனை மாற்றுக்கருத்து தோழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

    Reply
  • ஜீவா
    ஜீவா

    //மாற்றுக்கருத்துச் சகோதரங்களே நீங்கள் இந்த ஆறுமாதமும் என்ன செய்தீர்கள் //
    என ‘பேரவை’ கேட்ட கேள்விக்கு பல்லி சொன்ன ஆன்சர் மணியான பொருத்தம்….

    //வந்திட்டார் முள் இல்லாத கடிகாரத்தில் நேரம் பார்க்க//
    டோன்ற் வொரி பேரவை அவர்கள் தங்களைப்பற்ரி தாங்களே மிகச் சரியாகவும் மணியாகவும் சொல்லி இருக்கிறார்கள்!! யாருமே இதைவிட ஷோட் அன் சுவீற் ஆக சொல்ல முடியாது!!

    Reply
  • para
    para

    //புலி கொடி தூக்கவில்லை,
    கொடி கம்பு வியாபாரம் செய்யவில்லை,
    மக்களின் பணத்தில் தின்னவில்லை,…………………………//-palli

    Welldone palli

    Reply
  • kavi
    kavi

    செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில்
    வெற்றிபுரி யும்வாளே வீரவாள்; – மற்றையவாள்
    போவாள், வருவாள், புகுவாள்; புறப்படுவாள்;
    ஆவாள்; இது அதுவாம்.

    Reply
  • விசுவன் 1
    விசுவன் 1

    பேரவை / தமிழ் மக்களை ஒழுங்குபடுத்தி ஊர்வலமோ ஆர்ப்பாட்டமோ நாம் ஒழுங்குசெய்தாலேயொழிய வேறுயாராலும் முடியாதென்பதை இந்த ஆறுமாதகாலம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது//
    பின்னால் போனவர்கள் இன்று சின்னா பின்னமாகிவிட்டார்கள்! கோபத்தில் கொதிக்கிறார்கள் விட்டு விடுங்கள். தாமே எல்லாம் செய்ய வேண்டும் என்று மற்றவர்களை அடியோடு அடித்து கலைத்து விட்டு வந்த சந்தர்ப்பங்களையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு இப்ப வந்து ஆறு மாதத்தில் என்ன புடுங்கினோம் என்று கேட்க உமக்கு உரிமை கிடையாது! மற்றும் இங்கிருந்து ஒன்றும் புடுங்க முடியாது. சிறு சிறு உதவிகளை தவிர! அதை அவர் அவர் தமக்கேற்ற முறையில் செய்யாமல் இல்லை. பல கட்டமைப்புகளை கலைத்து விட்டு இன்று நீங்களும் கவுட்டுக் கொட்டிப்போட்டு பழியை மற்றவர்கள் மீது சுமத்தாதீர்கள்.

    Reply
  • சுண்டெலி
    சுண்டெலி

    //மாற்றுக்கருத்துச் சகோதரங்களே நீங்கள் இந்த ஆறுமாதமும் என்ன செய்தீர்கள் //
    யாரைக் கேக்கிறீர்கள், எங்களை யாரென்று நினைத்தீர்கள்
    கூட்டம் வைத்தீர்களா அல்லது கூட்டம் வைத்தவர்களை அம்பலப்படுதிநீர்களா
    அல்லது அம்பலப் படுத்தியவர்களை மீண்டும் அம்பலப் படுத்திநீர்களா.
    மஹிந்தவை ஆதரித்தீர்களா அல்லது எதிர்த்தீர்களா அல்லது எதிர்த்தவர்களை ஆதரித்தீர்களா அல்லது பாதுகாத்தீர்களா அல்லது எதிர்பிட்குள் ஒரு உடன்பாடைக் கண்டீர்களா.
    ……. எங்களை கேட்கின்றீகள என்ன செய்தோம் என்று
    மழை பெய்கின்றது ஜனநாயகம் தளைக்கின்றது நமது தேசம் கிளர்கின்றது யாக்கிரதை.

    Reply
  • மாயா
    மாயா

    //ஏன் மாற்றுக்கருத்து தோழர்கள் தேசத்திலும் தேனியிலும் மற்றும் ‘சந்திப்புகள்’போன்றவற்ரில் மட்டுமே வந்து கருத்த்ச் சொல்கின்றனர். ஏன் அவர்களால் ஒரு வலுவான ஒரு மாற்று அமைப்பை ஏற்படுத்த முடியாதிருக்கிறது. //

    உண்மைதான். 30 வருடங்களாக தம்மை விட வேறு எந்த தமிழனுக்கும் எதுவும் செய்ய முடியாமல் தடை விதித்த ஏகாதிபத்திய கொடுங்கோல் ஆட்சியினால் தனியே பயணித்தவர்கள் உடனடியாக சேர்வதென்பது, முட்டாள்தனமாக வீதியில் இறங்கி கத்துவது போல இலகுவல்ல. அத்தோடு கண்டவர்களை கொடி, தடி என வறுகி , கடத்தி காசு சேர்த்தால் அமைப்பென்ன , அம்பாளையும் உருவாக்கலாம்?

    //அதற்கான அத்திவாரத்தையாவது இட்டுள்ளார்களா என்றால் இல்லை என்பதே எனது அவதானிப்பாக இருக்கிறது.
    இவர்களிடம் உள்ள முக்கிய குறைபாடு பரந்துபட்ட சமுக/பொருளாதார நிலகளில் வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளை அடையாளம் காணமுடியாதிருப்பதே. அவ்வாறு காண்போரும் அவர்களை அமைப்புரீதியாக ஒன்று படுத்த தமது ஆங்கில/மேற்கத்தேய கல்வி அடிப்படையில் முயல்கின்றனர்//

    போட்ட அத்திவாரங்கள் , கடைசியில் வெள்ளை முள்ளி வாய்க்காலில் யாருக்கும் பிரயோசனமற்று போனது போல் , இன்னொரு அமைப்பு தேவையில்லை. நடக்கிறதை செய்ய வேணும். தமிழ் கட்சிகள் போட்ட துவேச கோஸத்துக்கு அனைத்து மக்களையும் இரையாக்க உருவாகியதே புலிகள் எனும் மாபியா குழு. அதே போல் இன்னொரு குழு வேண்டவே வேண்டாம். அது தானாக கனியும்.

    //அவர்கள் யாரும் இஸ்ரேலிய மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதில்லை. புலம் பெயர் இஸ்ரேலியர்களை நோக்கி ‘புலன்பெயர்’, ‘புண்ணாக்குகள்’ போன்ற வசை பாடுவதில்லை. வேதனைகளைச் சுமந்து வாழும் மக்கள் கூட்டத்தினை தலைமை தாங்க அந்த மக்களையே வசைபாடுதல் தகுதி ஆகாது என்பதனை மாற்றுக்கருத்து தோழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்..//

    இஸ்ரேலியர்கள் , தமிழீழ புண்ணாக்குகள் போல் அவனது இனத்தையே கொன்று சுய இன்பம் கண்டவனல்ல. தன்னை நம்பி இருந்த மக்களையே கடைசியில் புதைத்து தாமும் புதையுண்டவர்கள் புலிகள். தான் போகும் போது , தன்னோடு இருந்தவர்களையும் சேர்த்தே கொண்டு போன தீர்க்க தரிசனம் கொண்ட தலைவர் பிரபாகரன்.

    Reply
  • மாவீரர்
    மாவீரர்

    /இஸ்ரேலியர்கள், தமிழீழ புண்ணாக்குகள் போல் அவனது இனத்தையே கொன்று சுய இன்பம் கண்டவனல்ல. தன்னை நம்பி இருந்த மக்களையே கடைசியில் புதைத்து தாமும் புதையுண்டவர்கள் புலிகள். தான் போகும் போது, தன்னோடு இருந்தவர்களையும் சேர்த்தே கொண்டு போன தீர்க்க தரிசனம் கொண்ட தலைவர் பிரபாகரன்./

    “இது உண்மையாக இருந்தால்??!!”,”மாயா!!”,..”புலம் பெயர் புண்ணாக்குகள், மூடர்கள்!”.””.ஆனால், பிரபாகரனை அறிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன்!, “ஓமர் முக்தார்” மற்றும் “கட்ட பொம்மு நாயக்கர்” தலைவிதிகளை நன்கு அறிந்தவர் அவர், அவர்களைவிட “தோல்வியை” தவிர்ப்பதற்கான சந்தர்ப்பங்களை அதிகம் கைவசம் கொண்டிருந்தவர்!. “மாவீரரை” கசக்கிப் பிழிந்து, தவறாக வழிநடத்தி, “தொப்பையை” வளர்த்தவர்கள் பேச்சையும், புலம்பெயர் சொந்தகாரர்களை நம்பி மட்டும், தனக்கு கீழ் இருந்தவர்களை, “புல்லடிப்போட்டு” சப்பிட வைத்தவர்களை மட்டுமே நம்பி மண்ணைக் கவ்வியவர் அவர்!. ஏன் அவர் அதை செய்தார் புரியவில்லை!!?.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘..உண்மைதான். 30 வருடங்களாக தம்மை விட வேறு எந்த தமிழனுக்கும் எதுவும் செய்ய முடியாமல் தடை விதித்த ஏகாதிபத்திய கொடுங்கோல் ஆட்சியினால் தனியே பயணித்தவர்கள் உடனடியாக சேர்வதென்பது,…”

    ஒரு கொடுங்கோலனுக்கெதிராக 30 வருடங்களாக ஒன்றுபடாமல் தனித்தனியாக, வெவ்வேறாக பயணித்தவர்கள் கொடுங்கோல் ஆட்சி முடிந்தவுடம் ஒன்றாக பயணிப்பார்கள் அதற்கு கொஞ்ச நாட்கள் எடுக்கும் என்பது உண்மைதான்.

    ’…இஸ்ரேலியர்கள் , தமிழீழ புண்ணாக்குகள் போல் அவனது இனத்தையே கொன்று சுய இன்பம் கண்டவனல்ல…..’
    நீங்கள் மொசாட்டின் ‘விளையாட்டுகள்’ அறியவில்லை போலும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நான் அழுவதில்லை. என் கண்ணீர் எங்கோ கட்டிபட்டி இறுகிவிட்டது. ஆனால் அழுதேன் கண்ணில் நீர் வந்தது அஜீவகன் இணையத்தள ரேடியோவில் ஒரு பாடலை கேட்டு. அந்தப் பாடல் எமது இனத்தின் அவலநிலையை அதாவது வன்னிமக்களின் அவலநிலையை ஒப்பிடும் படி ஒலிபரப்பியிருந்தார்கள். ஒரு நின்மதி பெருமூச்சு.
    இந்த பாடலின் முதல் இருவரிகள்.
    கண்ணில் பார்வை போன போதும் கண்ணில் நீர் ததும்பும் ததும்பும்.
    கண்னிலாத பேரைக் கண்டால் கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
    ஆசை தீரா நிறையவே கண்ணில் நீர் வந்தது.
    இதே உணர்வை பல்லியின் கவிதையில்லா கவிதை தந்தது.
    கொடிக் கம்பு….
    மக்களின் பணத்தில்…
    புதினத்தில் புதினம்….
    பரபரப்பாய் பரபரப்பில் கிறுக்கவில்லை.
    காசிஆனந்தன் புதுவை இரத்தினதுரை எல்லோரையும் குதிக்காலில் போட்டு நசித்துவிட்டார். பல்லிக்கு எனது மனம்கனிந்த பாராட்டுக்கள்.

    Reply
  • சுண்டெலி
    சுண்டெலி

    //மாற்றுக்கருத்துச் சகோதரங்களே நீங்கள் இந்த ஆறுமாதமும் என்ன செய்தீர்கள் //
    //ஏன் மாற்றுக்கருத்து தோழர்கள் தேசத்திலும் தேனியிலும் மற்றும் ‘சந்திப்புகள்’போன்றவற்ரில் மட்டுமே வந்து கருத்த்ச் சொல்கின்றனர். ஏன் அவர்களால் ஒரு வலுவான ஒரு மாற்று அமைப்பை ஏற்படுத்த முடியாதிருக்கிறது. //

    உங்களது துணிவை மேட்சுகினறோம். எங்களது தேசத்தில் நுழைந்து கேள்வி கேட்கின்றீர்கள் நாங்கள் பயப்படவில்லை. உங்களைபோல் உறுமவில்லை. எங்களது ஜனநாயக பாரம்பரியத்தில் நின்று உங்களுக்கு முகம் கொடுக்கிறோம். முழு உலகுக்குமே தெரியும் நாங்கள் உங்களை அம்பலப்படுத்தினோம் என்பதை. அதுவும் முடிவில்லாத அம்பலப்படுத்தல். வானத்திற்கு முடிவை காணலாம் அனால் உங்களை அம்பலப்படுதுவதட்கு முடிவே இல்லை.
    நீங்கள் இருக்கும் வரை நாங்களும் இருப்போம். எங்கள் இருப்பு உங்கள் இருப்பு. நீங்கள் முழுமையாய் அழிந்தாலும் உங்களை உயிர்பிப்போம். குருவிட்சையின் வரழ்வு அது வளரும் மரத்தில் தங்கிய்ருக்கின்றது என்பதை தெரியாத மடையர்களா நாங்கள்.

    Stuttgart நகரில் சந்தித்த 21 பேருக்கும் உங்கள் தலைவரை பற்றி 21 கருத்துக்கள் இருப்பதாய் அறிந்தோம். இந்த 21 பேரும் 21 விதத்தில் மகிந்தவினை எதிர்ப்பதை, ஆதரிப்பதை, இரண்டுக்கும் நடுவில் ஒரு உடன்பாடை காண்பதை கண்டுகொண்டோம். வேறு என்ன நாங்கள் செய்ய வேண்டும்.
    நாங்கள் காம்பில் இருக்கின்றோமா அல்லது கொடி பிடித்தொமா அல்லது அவரசகால நிதி வழங்கிநோமா அல்லாவிடில் நாங்கள் மடையர்களா?
    வானம் பொழிகின்றது, பூமி விளைகின்றது, மகிந்தவின் கருணை பொங்குகின்றது நாங்கள் ஜனநாயகத்தை வளர்கின்றோம். கவனம்.

    Reply
  • Saambanaar Sugumugam
    Saambanaar Sugumugam

    These are not real Tigers!
    They are Paper Tigers!

    Reply
  • Thaksan
    Thaksan

    ஏனப்பா உங்கநிண்டு குத்திமுறியுறியள்? இங்க வந்து உங்கட தமிழீழ நாடகத்தை திரும்பவும் ஒருக்கா இந்த வன்னிச் சனத்திட்ட போட்டுப் பாருங்களன். அப்ப தெரியும் உங்கட வண்டவாளம் என்னவெண்டு. ஏனப்பா கட்டியிருக்கிற கோவணத்தைகூட கழட்டுறன் எண்டு நிக்கிறியள்? தான் தப்ப சனத்தையும் இழுத்துக்கொண்டுபோய் பலி எடுத்து> முப்படையுங் காட்டின முடிசூடா மன்னனே முள்ளிவாய்க்காலில் அமெரிக்கா கனவில கோடாரி கொத்து வாங்கினார். அதுவரைக்கும் உங்கட பேர்+அவை புலத்தில காசு புடுங்க அவதியில தலைவனைக்கூட காவாந்து பண்ண நினைக்கேலை. இப்ப வயிறு வளக்க புலத்தில தமிழீழ அரசு. காமெடி கீமெடி பண்ணுறதுக்கும் அளவுகணக்கு இல்லையா???

    Reply
  • palli
    palli

    //நான் அழுவதில்லை. என் கண்ணீர் எங்கோ கட்டிபட்டி இறுகிவிட்டது. //
    சந்திரா இது உனக்குமட்டுமல்ல (ஒருமயாய்தான் பேச தோன்றுகிறது தவராயின் மன்னித்துகொள்) பலருக்கு நீ சொல்லிவிட்டாய் நாம் சொல்லாமலே தொடர்கிறோம்; நாமும் மனிதர்தானே;

    Reply
  • palli
    palli

    சாந்தன் தாங்களும் எனது நண்பந்தான்; அதில் சந்தேகமே வேண்டாம், ஆனால் கருத்தில் நான் பல்லியையே விமர்சனம் செய்வேன், உதாரனத்துக்கு
    பல்லியை சந்திரா போல் யாரும் விமர்சிக்க முடியாது; ஆனாலும் இன்று எனது பின்னோட்டத்தையே கவிதையாய் மாத்தி என் எழுத்துக்கு ஒரு சான்றிதழ் ததிருக்கிறார் எனில் நான் எனது பாதையில் போவதை யாரும் தடுக்கவில்லை எனதான் நான் பார்க்கிறேன்,

    //மேலும் கொடிதூக்கியவர்களால் இன்ரனசனல் கண்ணை மூடினது என்கிறியள். அங்கால குலனோ உலகமயமாக்கலில ஈழம் தலையை சொறிஞ்சது என்கிறார்//
    அது குலன் இது பல்லி; ஆனாலும் நாம் இருவரும் சேரும் இடம் மக்கள் வாழ்வில்தானே தவிர எமது தனிபட்ட கருத்தில் அல்ல,

    //வந்திட்டார் கேள்விகேக்க எண்டு அப்பா, அம்மா தனமாக பதில் சொல்லக்கூடாது. அது உங்கள் மீது என்போன்ற பின்னூட்டக்காரர் வைத்திருக்கும் மதிப்பைக் குறைக்கும்.//
    கேள்வி கேப்பதை நான் என்றுமே நையாண்டி பண்ணியதில்லை, காரனம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்னை கடுப்பேத்துவது, ஆகையால் திரும்பவும் எனது பின்னோட்டத்தை கவனிக்கவும்;

    //’மாற்றுக் கருத்தாளர்கள்’ என்ன செய்தீர்கள் என கேட்டால் என்ன செய்யவில்லை என லிஸ்ற் போடுகிறீர்கள். அதுக்கு உங்களை ஏன் குறை சொல்ல வேணும் அறிஞ்ச விசயம் தானே:://
    சாந்தன் நாம் தயிரையே பாலாக்க முடியுமா என யோசிப்பவர்கள், ஆனால் நீங்களோ பாலை தயிராக்க முடியுமா என எம்மிடம் வம்புக்கு நிற்க்கிறியள்;
    அன்று நண்பனின் வீட்டுசுவரில் தொங்கிய வாசகம்,, நன்மை செய்ய பிறந்த நீ நன்மை செய்யாவிட்டாலும் ;தீமையாவது செய்யாதிரு;

    இதைதான் நான் எழுதியுள்ளேன், உங்கள் கேள்விக்கான பதில் நாம் உங்களுடன் சேராமல் இருந்ததே இந்த மக்களுக்கு நாம் செய்த
    பேருதவியாக நான் நினைக்கிறேன்; என்ன சந்திரா நான் சொல்வது சரிதானே,

    Reply
  • palli
    palli

    சாந்தன் நாம் என்ன செய்தோம் என்பதை விட நாம் என்ன செய்யவிட்டீர்கள்??
    கடை;;;
    தொலைக்காட்ச்சி;;;
    ரேடியோ;; கோவில்;;
    மண்டபம்,,
    வீடியோ,,
    போட்டோ;;
    ரெலிகாட் கடை;;
    சமையல்;;
    சாப்பாட்டுகடை;;
    கேக் கடை;;
    ஊடகம்;;
    இப்படி எதை ஒரு தனிமனிதன் தொடங்கினாலும் அதை பறித்து உங்கள் சொந்தமாக்கியதுதானே உங்கள் கலை; இதில் ஏதாவது ஒன்றை உங்கள் அமைப்பே ஆரம்பித்ததை சுட்டி காட்டுங்கள், நான் யாரிடமெல்லாம் இவைகளை புலி பறித்ததென உங்கள் பதில் கண்டு எழுதுகிறேன்,

    Reply
  • pandiyan
    pandiyan

    ஆரம்ப காலங்களில் தமிழ் மக்களின் போராட்டத்தில் நல்ல சக்திகளாய் இருந்தவர்கள் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் புலிகளின் போராட்டம் போகும் பாதை பிழையானது என்றும் அது அழிவுக்கே இட்டுச் செல்லும் என்றும் எதிர்வு கூறினார்கள். அது போல இன்றும் புலிகள் அழிந்த பின் இலங்கையின் அரசியல் போக்கு போகும் பாதை நம்பிக்கை தருவதாக இல்லை என எழுதியும் பேசியும் வருகின்றனர். எனவே நண்பர்களே சற்று ஜாக்கிரதையாக இருந்து இலங்கை நிலவரங்களை சரியான பாதையில் இட்டுசெல்ல முயற்சிப்போம்.

    பாண்டியன்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வீரம் இங்குதான் விளைகிறது. கவலையை விடுங்கள். குறைகளை மறந்து கை கோர்போம். எமக்கு மட்டுமல்ல இனிவருவோரோருக்கும். உண்டியைப் பறிக்க மாட்டோம் பறிப்பவர்களின் வாயிலை தடுத்து நிற்ப்போம். அது தான் வாழ்வெனப் பெருமைப்படுவோம் பல்லி. முடிவல்ல இது தொடக்கம்.

    Reply
  • BC
    BC

    //பல்லி- நாம் உங்களுடன் சேராமல் இருந்ததே இந்த மக்களுக்கு நாம் செய்த பேருதவியாக நான் நினைக்கிறேன்;//
    நீங்கள் கூறுவது முழுக்க சரி. அந்த மக்களுக்கு நாம் செய்த பெரிய உதவியே. கொடிய பாவத்தில் பங்கேற்க்கவில்லை.

    //சுண்டெலி – அவரசகால நிதி வழங்கிநோமா அல்லாவிடில் நாங்கள் மடையர்களா?//
    நீங்கள் தனிப்பட்ட முதலீடு செய்தவற்க்கு நிதி வழங்கி முழு மடையர்களா புலம் பெயர் தமிழர்கள் இருப்பதையே விரும்புகிறீர்கள் என்பது தெரியும்.

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    தவிர்க்க முடியாதபடி பிரபாகரன், முகுந்தன், சிறிசபாரத்தினம், அமிர்தலிங்கம் உட்பட பல பவரான ஆட்களுடன் நெருக்கமாக பழகியதில் இருந்து சொல்கிறேன் இவர்களுக்கெல்லாம் பவர் கூடகூட அதிகாரம் கையில் கூடிவர அறிவு கூடவேயில்லை ஆனால் ஆணவமும் செருக்கும் திமிரும் கூடியதைத்தான் கண்கூடாக கண்டேன்

    Reply
  • மேளம்
    மேளம்

    //ஈழத்தமிழர் போராட்டம் புலம் பெயர் தமிழ்மக்களின் கரங்களுக்கு வந்தடைந்துள்ள நிலையில் அரசியல் மயப்படுத்தப்பட்ட தாயகம் நோக்கிய இந்த புனிதப் பணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்து வருகின்ற இந்த முக்கிய காலப்பகுதியில் இதனை சிதைக்கும் பல நடவடிக்கைகளும் சதிகளும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.//

    மேளத்துக்கு ஒரு முஸ்லிம் சகோதரனின் கவிதை ஞாபகத்துக்கு வருகிது.

    “இந்தப் போராட்டங்களுக்கு முன்பெல்லாம்
    வடக்கு.கிழக்கு பிரிந்திருந்தது – அப்போது
    தமிழ் – முஸ்லிம் உறவு நிலைத்திருந்தது.
    ஒருவருக்குள் ஒருவர் கலந்து
    நேசத்தில் பிணைந்திருந்தோம்
    பவளத்தின் தலையில் உம்மா பேன் பார்ப்பதும்
    தங்கமலரின் வீட்டில் தங்கச்சி பாடம் படிப்பதும்
    தங்கத்துரையோடு வாப்பா காட்டுக்கு கொள்ளிக்குப் போவதும்
    கண்ணணோடு காக்கா ஒரு சைக்கிளில் ஊர் சுற்றுவதும்
    ஒரு வீட்டுக் கறி மறுவீட்டில் கொதிப்பதுமாய்
    பகிர்ந்து கொண்ட புனிதமான உறவு அது.”
    (கவிஞர் எம். நவாஸ் செளபி)

    அங்கதான் எல்லாத்தையும் கெடுத்தானுகள்….. இஞ்சயும் எதை எதையெல்லாம் கெடுத்தானுகள்….. எல்லாம் போச்சு எண்டுபாத்தா தொடங்கித்தானுகள் ஐயா தொடங்கித்தானுகள்.

    மேளம்

    Reply
  • suban
    suban

    மாற்றுக்கருத்து என்பது இப்படித்தான் இருக்கும். இதுக்கும் மாற்றுக்கருத்து இருக்கும். மாற்றுக்கருத்து கொடிபிடிக்காது. கட்சிகட்டாது. ஆனால் சாந்தன் போன்றவர்களை பதில் தேடவைக்கும். மாற்றுக்கருத்து தளத்தில் எழுதவைக்கும்.

    புலம்பெயர்ந்த தமிழரை புலன்பெயர்ந்த தமிழரென்ற அழைப்பது ஒன்றும் மிகையான கூற்றல்ல. நம்பிக்கை விசுவாசம் என்று வைத்துவிட்டால் எதை எப்படிச் சொன்னாலும் நம்பிவிடுவார்கள். சிந்திக்க அறவே முடியாதவர்கள். இன்று முள்ளிவாய்க்கலோடு எல்லாம் முடிந்து சித்தப்பிரமை பிடித்துப்போய் இருக்கிறார்கள்.

    புலம்பெயர் நாட்டில் திண்டுகொழுத்து கொழுப்பேறிப் போயிருப்போர் திரும்பவும் மக்கள்மக்கள் என்ற ஆர்ப்பரிப்பது அவர்களை இன்றும் அவஸ்தைக்குள்ளாக்கவே. முகாம்களிலிருந்து மக்கள் வெளியேறுவதை விரும்பாத மனிதாபிமானிகளும் இருக்கவே செய்கிறார்கள். ஏனெனில் தாம் கண்ணீர்விட காரணம்தேவை!

    Reply
  • மாயா
    மாயா

    / சாந்தன் on November 9, 2009 8:55 pm
    நீங்கள் மொசாட்டின் ‘விளையாட்டுகள்’ அறியவில்லை போலும்.//

    இப்போதுதான் விளங்குகிறது. தமிழர்களை ஏன் இஸ்ரேலியரோடு நீங்கள் ஒப்பிட்டு பேசினீர்கள் என்று இப்போது புரிகிறது. மொஸாட் போன்ற மாபியா கொலைகார கும்பல்தான் புலிகள் என்று சொல்லாமல் சொன்னதை உணர்ந்தே சொல்லியிருக்கிறீர்கள்? அதனால்தான் அனைத்து அறிவு ஜீவிகளையும் சுட்டுக் கொன்று விட்டு, உங்களுக்கு முன் சப்பானி போட்டு மணியடித்தவர்களை மட்டும் உயிரோடு விட்டு வைத்தீர்கள். சமாதான் காலத்திலும் பேசக் கூடிய அனைவரையும் கொல்ல உங்கள் புத்தியை தீட்டினீர்களே தவிர , மக்களின் விமோசனத்துக்காக எதையும் மண்டைக்குள் ஏற்றவேயில்லை. உங்களோடு ஜால்ரா போட்டு பழகிய கூட்டத்தை மட்டும் விட்டு வைத்தீர்கள்? இப்போது நடப்பது என்ன? இவர்கள் மகிந்தவுக்கு அல்லது இராணுவத்தோடு சேர்ந்து ஜால்ரா போட்டு உங்களையே காட்டிக் கொடுத்து, தம்மை வாழ வைக்கத் தொடங்கியுள்ளார்கள்? நீங்களும் மாறுவீர்கள்? இதில் சந்தேகம் இல்லை. இதில் உடனடியாக தெரிபவர்கள் கூத்தமைப்பினர். மற்றும் புலிகளைக் காட்டிக் கொடுக்கும் அன்று வன்னியில் இருந்த முக்கிய புலிகள்.

    Reply
  • Rajmohan
    Rajmohan

    புலம் பெயர்ந்த மக்களிடம் தமிழர் போராட்டத்தை ஒப்படைக்க முன்பு, அவர்களிடம் கொள்ளை அடித்த பணங்களை எங்கே வைத்திருகிறிகள் என்பதை புதினத்தில் போட முடியுமா?

    1983 முன்பா பின்பா அழிவு கூட என்றால் நிட்சியமாக பின்பு தான். வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்ட அழிவுகளுக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளி எறியதட்க்கும் புலிகளின் அராஜகமே முக்கிய காரணம்.

    புலம் பெயர்ந்த மக்களிடம் தமிழர் போராட்டத்தை ஒப்படைப்பு என்பது புலம் பெயர்ந்த அரசியல் அறிவற்ற அப்பாவி இளையர்களிடம் மீண்டும் நவம்பர் 27 தேதி சூரியதேவன் விட்டுச் சென்ற அராஜகத்தை ஒப்படைக்கும் முயற்சி என்பது அர்த்தமாகும்.

    வாழ்க தமிழ்
    வளர்க ஜனநாயகம்
    ஒழிந்தது புலிகளின் அராயகம்

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘…இப்போதுதான் விளங்குகிறது. தமிழர்களை ஏன் இஸ்ரேலியரோடு நீங்கள் ஒப்பிட்டு பேசினீர்கள் என்று இப்போது புரிகிறது. மொஸாட் போன்ற மாபியா கொலைகார கும்பல்தான் புலிகள் என்று சொல்லாமல் சொன்னதை உணர்ந்தே சொல்லியிருக்கிறீர்கள்?…’

    நியாயமாகப் பார்த்தால் நாம் தான் பாலஸ்தீனம், கியூபா, நவசீனம் என அவர்களின் பின்னால் திரிந்தோம். ஆனால் ஸ்ரீலங்காவோ இஸ்ரேலுடன் கைகோர்த்து (எந்தப் பேயுடனும் கைகோர்ப்பேன்- ஜே.ஆர்) இஸ்ரேலிய நலன்புரி அலுவலகம் கொழும்பில் திறந்து சாதாரண ரவையில் இருந்து கிஃபிர் வரையும் வாங்கி சாதாரண பொலிஸில் இருந்து சிறப்பு அதிரடிப்படை வரையிலும் பயிற்சி பெற்று அலுவலை நடத்தி விட்டது. இதில் பலஸ்தீனம், கியூபா வேறு நல்லுறவு.

    என்னைக்கேட்டால் இனிமேலாவது யூதர்களைப் பின்பற்ற வேண்டும்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    இலண்டனில் புலியாதரவாளராக இருந்த ஒருவர் நடாத்திய கோவிலை, பிரித்தானிய புலிப்பினாமிகள் அபகரிக்க எடுத்த காரியங்கள் கொஞ்ச நஞ்சமா?? வன்னிக்கு அழைத்து விசாரணை என்ற பெயரிலே அவரை கொலை செய்யவே திட்டம் போட்டார்கள். விடயங்கள் வெளியே கசிந்ததால், பிரித்தானிய அரசும் அழுத்தம் கொடுக்க, ஆளை வெளியே விட்டார்கள். திரும்ப பிரித்தானியா வந்தவர் புலிகளின் அட்டகாசங்களை அம்பலப்படுத்தியதுடன், தனது கோவிலை புலிப்பினாமிகள் அபகரித்து வைத்திருந்ததால், நீதிமன்றத்தை அணுகி மீண்டும் கோவிலை மீட்டார். இது பொறுக்க முடியாத புலிப்பினாமிகள் கோவில் என்றும் பார்க்காது, மீன் பொரித்த எண்ணெய்யை சாமத்தில் கோவிலில் வந்து ஊற்றி விட்டுப் போனார்கள். இதைத் தான் நீங்கள் ஒருங்கமைந்த வேலைப்பாடு என்று கருதுகின்றீர்கள் போல??

    Reply
  • மாயா
    மாயா

    //என்னைக்கேட்டால் இனிமேலாவது யூதர்களைப் பின்பற்ற வேண்டும்!//

    யூதர்களிடம் , ஏற்கனவே இலங்கை அரசு உதவி பெற்று வருவதால் , அதுவும் சாத்தியப்படாது? எல்லோரையும் நம்பின மாதிரி நடித்தீர்கள். யாரையும் நம்பவில்லை. அதனால் புலிகளையும் யாரும் கடைசியில் நம்பவேயில்லை. கடற்கரையில் செத்து , கடலில் மிதந்தது அல்லது அஸ்தியானதுதான் நாம் கண்டது. இனியாவது சிந்தியுங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலிப்பினாமிகள் சிந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள், எப்படி மக்களை முட்டாள்களாக்கி தொடர்ந்தும் பணம் சுருட்டுவது என்று…..

    Reply
  • sumithra
    sumithra

    “அழகான அந்த பணம் மரம் அடிக்கடி நினைவில் வரும்.
    அதை தறிக்க எவருக்கு மனம் வரும்.”-வாழ்க டம்மில் ஈலம்-

    Reply
  • palli
    palli

    //கொழும்பில் திறந்து சாதாரண ரவையில் இருந்து கிஃபிர் வரையும் வாங்கி சாதாரண பொலிஸில் இருந்து சிறப்பு அதிரடிப்படை வரையிலும் பயிற்சி பெற்று அலுவலை நடத்தி விட்டது.://
    சாந்தன் நீங்கள் சொல்வது சரியென வைத்து கொண்டாலும்; நாம் எதிரியின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பீடு செய்தால் சதாம்போல் ஒரு சதத்துக்கு பிரயோசனம் இல்லாமல் தொங்கவேண்டியதுதான்; எமது குறைபாடு என்ன அதை ஏன் நீங்கள் சிந்திக்க மறுக்கிறியள்; தவறை தவறென உணராதவரை எந்த எதிரியையும் நாம் வெல்லவோ செயலிளக்கவோ முடியாது, கருனாவிடம் ஆயுதத்தை வேண்டுங்கள் என புலி சர்வதேச சபையில் அரசிடம் மண்டி இடுகிறது; ஆனால் அதே கருனா தனது உயிரையும் தன்னை நம்பியவர்களையும் காக்க அரசை கவசமாக எடுத்தவுடன் புலிக்கு கருனா ஒட்டுகுழு, ஒருதனி மனிதனை வெல்லமுடியாத புலியா ஒரு அரசுடன் போர் செய்து நாட்டை பிடிக்கும், இதெல்லாம் என்னவென 23ம் புலிகேசியில் சங்கர் மிக அளகாக தெளிவு படித்திவிட்டார்,

    Reply
  • Anonymous
    Anonymous

    அப்போ எல்லோரும் புலியை வைச்சுத்தான் பிழைக்கிறீங்க. இப்பவும் புலியைச் சுத்தித்தான் காவடி எடுக்கிறீங்க.
    எனக்கே விளங்கல. புலி இருக்குதா இல்லையா? பிரபாகரன் அவுட்டா இன்னா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘…சாந்தன் நீங்கள் சொல்வது சரியென வைத்து கொண்டாலும்; …’

    ஏன் ‘வைத்துக்கொண்டாலும்’ என ஐயப்பாடு கொள்கிறீர்கள். இஸ்ரேலிடம் ராணுவ உபகரண/பயிற்சி/திட்டங்கள் ஸ்ரீலங்கா பெற்றதனையோ அன்றி நடைமுறைபடுத்தியதையோ யாரும் மறுக்கவில்லை, ஸ்ரீலங்கா உட்பட! இது வரிக்கு வரி நிகழ்த்தப்பட்டது கிழக்கு மாகாணத்தில்!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சிறீலங்கா இராணுவத்திற்கு ஒரு முகாமிலும் போராட்டக் குழுக்களுக்கு இன்னொரு முகாம்மிலும் இஸ்ரேல் மொசாத் உளவுப்பிரிவு பயிற்சியளித்தாக நாட்டை விட்டு வெளியேறி கனடாவில் புகளிடம்தேடிய இஸ்ரேலிய இராணுவஅதிகாரி பேட்டி கொடுத்தாரே?.
    இதை எப்படிச்சொல்வது “புத்திமான் பலவான்யாவான்”என்பதா? அல்லது இலங்கை மக்கள் உலகஅறிவில் பின்தங்கி நிற்கிறார்கள் என்பதா? நாம் எதையுமே! புதிதாக கற்றுக்கொள்ள மாட்டோம் என்பதா?.

    Reply
  • மாயா
    மாயா

    இஸ்ரேலில் மட்டுமல்ல இந்தியா மற்றும் லெபனானில் கூட ஒரு பக்கம் போராளிகளும் அடுத்த பக்கம் அரச படைகளும் பயிற்சி எடுத்தன. காசு கொடுத்தால் பொருள் வாங்கலாம் என்பது போல பணம் கொடுத்தால் எவரும் பயிற்சியளிப்பார்கள். ஆயுதங்களும் அப்படியேதான் வாங்கப்பட்டன.

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட , அரசோடு புலிகளை அழிப்பதற்கு ஒத்துழைப்பு நல்கிக் கொண்டு , புலிகளுக்கும் உதவியே வந்தன. இதை தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

    ரணிலிடம் உதவிகளை பெற்றுக் கொண்டு , ரணிலுக்கே தமிழரை வாக்களிக்க விடாமல் தடுத்த பிரபாகரனை துரோகியென்று ரணில் சொல்லவில்லை. ஆனால் இப்படி அடுத்தவர் செய்தால் உடனே துரோகி பட்டம். இப்படிப் பார்த்தால் புலிகளது துரோகப் பட்டியலில் பிரபாகரன் கூட துரோகிதான். தனது மக்களை உலையில் வேக வைத்து செத்துப் போன ஈனப்பிறவி. புலிகளது பார்வையில் உலகத்தில் அனைவரும் துரோகிதான். புனிதர்கள் என்று யாருமே இல்லை. ஈழ வரலாற்று யுத்தத்துக்கு முன் செத்தவர்களும் இருக்க மாட்டார்கள்?

    Reply
  • Puma
    Puma

    ‘வணங்கா மண்’ கப்பல் மூலமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் சிக்கல்களுக்கு மத்தியில் கடந்த மாதம் வவுனியாவுக்கு வந்து சேர்ந்த நிவாரணப் பொருட்களின் விநியோகத்தை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது.

    இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த நிவாரணப் பொருட்கள், வேறு கப்பல் மூலமாகவே அனுப்பி வைக்கப்பட்டன.

    சுமார் இரண்டு மாதத் தாமதத்தின் பின்னர் கடந்த மாதம் 24 ஆம் திகதி இந்தப் பொருட்கள் 27 கொள்கலன்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளைக் களஞ்சியத்திற்கு வந்து சேர்ந்தன என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பரப்புரை இணைப்பாளர் றுக்சான் ஒஸ்வெல்ட் தெரிவித்தார்.

    Reply
  • kan
    kan

    புலி என்று ஒரு பகுதி; மாற்றுக்கருத்து என்று ஒரு பகுதி; எனியென்றாளும் சிந்தியுங்கள். அந்த மக்களின் அழிவில்தான் நீங்கள் எல்லோரும் எழுதி எழுதி வாழ்க்கை நடத்துகின்றிர்கள் எண்பதை மறக்காதிர்

    Reply