‘அனுமான் வால் போல் நீளும் துரோகப் பட்டியல்’ புலிகளின் புலம்பல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்தம் துரோகிகளை மட்டுமே உருவாக்கியது. தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளை வாடகைக்கு அமர்த்தியே தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் அரசியலை நகர்த்தினர். அந்த வாடகைத் தலைவர்களை புலம்பெயர் நாடுகளுக்கு அழைத்து போர் முழக்கம் இடவும் புலம்பெயர் தமிழர்கள் பின்நிற்கவில்லை. இன்று அந்த வாடகைத் தலைவர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்திகள் துரோகிப்பட்டியலில் இணைத்துள்ளனர். இத்துரோகப் பட்டியல் இன்னும் நீள்கின்றது என்றும் மிகவும் புலம்புகின்றனர். இது புலத்து புலி ஆதரவு சக்திகளின் புதிய துரோகப் பட்டியல் (புலி ஆதரவுத் தள இணையமொன்றில் இருந்து பெறப்பட்டது.):

1. கருணாநிதி
2. ஜெயலலிதா
3. திருமாவளவன்
4. ராமதாஸ்
5. விஜயகாந்த்
6. சிதம்பரம்
7. ஜெகத் கஸ்பர்
8. தினமலர்
9. ரஜினிகாந்த், கமல், விஜய் Etc நடிகர்கள்
10. வைரமுத்து
11. வீரமணி
12. ஜெகத்ரட்சகன்
13. சுப. வீரபாண்டியன்
14. காங்கிரஸ் பன்னிகள்
15. நக்கீரன்

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    முன்பு அடுத்தவர்களுக்கு சேறடித்தார்கள். இப்போது தங்களுக்குத் தாங்களே சேறடிக்கின்றார்கள். வினை விதைத்தவன் தினையையா அறுவடை செய்ய முடியும்??

    Reply
  • BC
    BC

    நக்கீரன் தான் அவர்களுக்கு பொருத்தமானவர். அவரை ஏன் துரோகிகள் பட்டியலில் சேர்த்தார்கள்!!

    Reply
  • santhanam
    santhanam

    இதில் என்ன வேடிக்கையென்றால் பிரபாகரன் கொலை செய்யபட்டு விட்டார் என்று யார் சொல்லுகிறர்களோ அவர்கள் அனைவரும் கஷ்ரோ பிரிவு புலிகளால் துரோகியக்காடுகிறர்கள் இதுதான் யதார்த்தம். இவர்கள் அடுத்தவனை பார்த்து துரோகியென்று சொல்ல இவர்கள் யார்.

    Reply
  • Naane
    Naane

    எனக்கு உண்மையில் இங்கு நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்க ஒருவரும் உண்மையான விடுதலைக்கோ அல்லது நாட்டில் இருக்கும் மக்களின் விடிவிற்கோ உழைக்கவில்லை போலிருக்கு. கொஞ்சநாள் படுத்துக்கிடந்து விட்டு இப்ப திரும்ப தலைவர் வருவார் என‌ ஒரு ஆட்டம் போட ஆயத்தமாகின்றார்கள். நான் உண்மையில் நினைத்தனான் விள‌க்கமில்லாதவர்கள் மற்றவன்ரை சொல்லைக் கேட்டு காசையும் வீணாக்கி, நேரத்தையும் விணாக்குகிறார்கள் என்று. தலைவர் செத்து விட்டார் என்று இந்த முழுகூட்டத்துக்கும் தெரியும். இப்ப ஏன் இந்த நாடகம். முந்தியும் அப்ப நாடகம் தான் போட்டதா இந்த கூட்டம்?
    நாங்கள்தான் விளக்கமில்லாதவர்கள் போலிருக்கு. அதுதான் நிண்டவன் போனவனை எல்லாம் துரோகி என்று முத்திரை குத்திதான் தப்பிக்க வழி பார்த்தார்களா? புலியில் சேருவத‌‌ற்கு இனியும் முடியுமா? அல்லது லேற்ரா?

    Reply
  • மாயா
    மாயா

    இது தனி மெயிலில் எனக்கு வந்தது. நிலமை இப்படியா?
    _________

    கருப்புஆடு திருமா=கருணா

    தந்தைப் பெரியாரை தலைவராக ஏற்று நடப்பவர்கள் நாங்கள், ஆனால் பெரியார் ஒருபோதும் தன்னை தலைவன் என கூறிக்கொண்டதில்லை. எப்பொழுதும் தன்னை தோழர் என்றே அறிவித்துக் கொண்டிருந்தார் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆகையால்தான் அவர் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் தலைவனாக உள்ளார் என்பது வரலாற்றுண்மை. அப்படிபட்ட தலைவன் வழியிலேதான் நாங்கள் நேர்மையுடன் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கின்றோம். தந்தை பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்ட எங்களால் வேறு எவரையும் ஏற்றுக்கொள்ள எங்கள் மனதில் இடமில்லை, ஆனாலும் தந்தைப் பெரியாருக்கு அடுத்த இடத்தில் “மாவீரன்” பிரபாகரனுக்கு நிறந்தர இடம் கொடுத்துள்ளோம். பெரியாரைத்தான் எல்லோரும் சுவரொட்டி, துண்டறிக்கை மற்றும் அனைத்து பிரச்சார ஊடகங்களிலும் அச்சிட்டு சுயவிளம்பரம் தேடி தங்களை தமிழர் என்றும் காண்பித்துக் கொள்கிறார்கள். அந்த நிலைமையை “மாவீரன்” பிரபாகரனுக்கு யாரும் கொண்டுவந்து விடவேண்டாம் என்று தங்களை அருள்கூர்ந்து வேண்டிக் கொள்கின்றோம். தங்களைப்போன்ற ஆட்களால் “மாவீரன்” பிரபாகரனுக்கு விளம்பரம் தேவையில்லை, அதனை “மாவீரன்” பிரபாகரனும் ஒருபொதும் விரும்ப போவதுமில்லை. என்றைக்கும் விளம்பரத்தை நாடாதவன் “மாவீரன்” பிரபாகரன்.

    வியாபாரிக்குத்தான் விளம்பரம் தேவை !
    போராளிக்கு விளம்பரம் தேவையில்லை ! என முழங்கியவன் “மாவீரன்” பிரபாகரன்.
    ஆனால் தங்களோ தென்னகத்து பிரபாகரன் என்று வெட்கமில்லாமல் பட்டம் சூட்டிக்கொள்கிறீர்கள். “மாவீரன்” பிரபாகரனின் கால்தூசுக்கு நீங்கள் சமம் என்று உங்களால் ஆணித்தரமாக அடித்துக் கூற முடியுமா?
    அன்று மேடையிலே கொக்கறீத்தீர்களே! திருடன் எங்கே? திருடன் எங்கே? என்று தேடிக்கொண்டிருந்தோம், இதோ நம் கூட்டத்திலேதான் இருக்கிறான் என அன்று “துரோகி” கருணாநிதியை பார்த்து கூறினீர்கள். கொலைக்காரன் ராஜபட்சேவையும் அவரது சகோதரர்களையும் போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என முழங்கினீர்கள். (தங்களுடைய சாகும்வரை பட்டினிப் போரட்டத்தையும் கொட்டும் பனியில் வந்து பார்த்து சென்றோமே… அதெல்லாம் வீண்தானே திருமா). ஈழத்தமிழர்களின் குரல்வளையை நெருக்கி சாகடித்த காங்கிரசையும் சோனியாவையும் நாம் அழித்தொழிக்க வேண்டுமென கொக்கறீத்தீர்களே ஆனால் இன்றோ அதே போர் குற்றவாளியோடு சேர்ந்து கைகுலுக்கி வந்து விட்டு, அந்த கொலைகாரன் (எம் தமிழ் உறவுகளை ரத்தம் தோய்ந்த கைகளிலெ) பரிசுப்பொருளையும் வாங்கிவந்து விட்டு. இங்கு வந்து அவை அடக்கம், நாவடக்கம் என்று பிதற்றுகிறீர்களே!
    ச்சீ… இந்த பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகாலாம்…
    ஆனால் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் !

    “மாவீரன்” பிரபாகரனிடம் பகைவரின் கணக்கு மட்டுமில்லை, துரோகிகளின் கணக்கு பட்டியலும் கூடிக்கொண்டே இருக்கின்றது என்பதனை யாரும் மறந்திடவேண்டாம்…தமிழரின் பண்பாட்டை நாங்கள் அறியாதவர்கள் அல்ல, யாரிடம் அவையடக்கம் தேவை, நம் இனத்தை கொன்றோழித்த பகைவனிடமா அவையடக்கம் காக்கவேண்டும் திருமா? சங்க இலக்கியத்தில் புலியை முறத்தால் அடித்தாலாம் வீரத்தமிழ்ப்பெண், ஆனால் கொலைகாரன் ராஜபட்சே “மாவீரன்” பிரபாகரனை கேளி செய்து இருக்கிறான், தாங்களும் வாய்முடிக் கேட்டுக்கொண்டு வந்து இருக்கிறீர்களே (தங்களை நாங்கள் பாராட்டவேண்டுமென்று எண்ணுகிறீர்களா) நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே! என்று கொக்கறீத்தால் போதாதுமா? மீசையை முறுக்கிவிட்டால் போதாது திருமா, மீசைக்கேற்ற வீரம் நெஞ்சில் இருக்கவேண்டும். தயவுசெய்து புலிகளைப் பற்றி பேசுவதை இனியாவது விட்டுவிடுங்கள். கர்மவீரர் காமராசுக்கு வேண்டுமென்றால் வீரவணக்க சுவரொட்டி ஒட்டி மகிழ்ந்து கொள்ளுங்கள், வேண்டுமானால் நேரு, இந்திரா, ராஜீவ்க்கும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்க்கு மட்டும்தான் தங்களுக்கு தகுதியுள்ளது.

    கொலைகாரன் ராஜபட்சேவை சந்தித்தபொழுது ஏன் தாங்கள், எல்லோர் முன்பும் அவன் செய்த குற்றங்களை கூறவில்லை. உயிர் பயமா? அல்லது பதவி பயமா? அப்படி தாங்கள் கூறியிருந்தால் இன்று உலக அரங்கில் உங்களுடைய குரல் ஒலித்திருக்குமே, ஈழத்தமிழரின்களின் அவலங்களும், குரல்களும் பதிவாகிருக்குமே! செய்திருக்களாமே திருமா? செய்யவில்லையே திருமா? நாங்களும் எதிர்பார்த்து ஏமாந்துபோனோமே திருமா? பின்பு வேண்டுமானால் “துரோகி” கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்டிருக்கலாமே திருமா?
    மன்னித்துவிடுங்கள் தமிழீனனனனனத்தலைவரே, நான் ரத்தகொதிப்பில் அப்படி ராஜபட்சேவிடம் நடந்துகொண்டேன் என கூறியிருக்கலாமே? அப்படிகூட நீங்கள் செய்யவில்லையே திருமா? அதைவிட்டு கூட்டு அரசியல், வெங்காய அரசியல் என்று பிதற்றி கொண்டிருக்கிறீர்கள், எங்கே “துரோகி” கருணாநிதியை பகைத்துகொண்டால் தங்களுடைய வடபழனி அலுவலகம் அதன் உரிமையாளரிடம் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம், எங்கு அடுத்துவரும் தேர்தலுக்கு தலைக்கு 1000 ரூபாய் கொடுக்கமுடியாமல் போய்விடும், தங்களும் ஒரு தொ(ல்)லைகாட்சி தொடங்கமுடியாமல் போய்விடும் இன்னும் சொல்லிகொண்டே போகலாம், பாவம் இந்த கட்டுரையை படிப்பவருக்குதான் நீண்ட பொறுமைவேண்டும் என்ற காரணாத்தால் நிறுத்திக் கொள்கிறேன். தங்கள் குழு ஈழத்துக்கு உல்லாசப்பயணம் சென்றப்பொழுது கொலைகாரன் ராஜபட்சே எந்த கட்டுபாடும் விதிக்கவில்லையாம், அப்படி என்றால் தாங்கள் 11,000 இளைஞர்களை புலிகள் என்று முத்திரை குத்தப்பட்ட முகாமிற்கல்வா முதலில் சென்றிருக்க வேண்டும். கேட்டால் கதை சொல்கிறீர்கள் அது schedule லில் இல்லை என்று, இதை எல்லாம் கேட்க நாங்கள் என்ன வடிகட்டிய முட்டாளா? இப்படிப்பட்ட முரன்பட்ட கருத்துளை தங்களுடைய வாக்காளர்களுக்கு சொல்லுங்கள் அல்லது வி.சி சகோதரர்களுக்கு அவர்கள் நம்புவார்கள். தங்கள் இலங்கை சென்று வந்ததற்க்கு வி.சி சகோதரர்கள் வரவேற்பு சுவரொட்டி ஒட்டினார்கள், அந்த சுவரொட்டியைப் பார்க்க உடம்பே கூசியது என்ன கேவலமான பிழைப்பு இது. “துரோகி” கருணாநிதி 4 நாட்களில் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை வாங்கிதந்துவிட்டாறாம் அதற்கு நன்றி அறிவிப்பு சுவரொட்டி தென்சென்னை தி.மு.காவால் நகரேங்கும் ஒட்டப்பட்டுள்ளது. எந்த ஒரு விடுதலையும் 4 நாட்களில் பெற்றுதரமுடியாதென்பதனை தி.மு.க சகோதரர்கள் அறியாதது அல்ல. நேற்றுக்கூட முகாமில் பிரபாகரன் என்ற ஆசிரியர் தீக்குளித்ததை செய்திதாள்களில் பார்கின்றோம், இதற்க்கு பெயர்தான் விடுதலையா? தி.மு.க சகோதரர்களே உங்களுடைய தலைவர்தான் தமிழினத்துரோகியாகிவிட்டார், நீங்களுமா? கழகத்துக்கு அன்பளிப்பாய் வந்த பொருட்களை அனைவரும் கருவூலத்தில் ஒப்படைத்துவிடுங்கள் என்ற அறிக்கைவிட்ட “துரோகி” கருணாநிதி அவர்களே ! தங்களுடைய சொத்துகளையெல்லாம் எப்பொழுது கருவூலத்திற்க்கு ஒப்படைக்க போகிறீர்கள், தாங்கள் என்ன பெரியாரைப் போல பரம்பரை பணக்கார குடும்பத்தில் பிறந்தவரா? எல்லாம் இந்த பதவியில் ஊழல் செய்து சேர்த்த சொத்துத்தானே!

    தலைவன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி முதலில் நீங்கள் தொண்டர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும், அருள்கூர்ந்து கோபாலபுரம், C.I.T நகர், கலைஞர் டி.வி மற்ற அனைத்தையும் கருவூலத்தில் ஒப்படையுங்கள். இப்படிப்பட்ட குள்ளநரிகுணம் படைத்த துரோகியின் பின்னால் உங்களால் எப்படி நிற்க முடிகிறது திருமா ? மே மாதம் இறுதியில் நடந்த போரை நிறுதத தாங்கள் என்ன முயற்சி செய்தீர்கள். உங்களுக்கு தமிழர்களின் உயிரைவிட தங்களுடைய தேர்தல் வெற்றிதான் பிரதானமாக இருந்தது. நீங்கள் நினைத்து இருந்தால் 1 லட்சம் உணர்வாளர்களை எளிதாக திரட்டி மிகப்பெரிய சாலை மறியல் செய்து அறவழியில் போராடி இருக்கலாமே ? ஏன் செய்யவில்லை…

    மற்றவரை குறை சொல்வதைவிட்டு நிறுத்திவிட்டு இனியாவது ஆக்கபூர்வமான சிந்தனையுடன் செயல்பட முயற்சித்தால் உங்களை தமிழினம் ஏற்றுக்கொள்ளும், இல்லையெல் தாங்கள் உலகம் முழுக்க புலிகளின் பெயரைச்சொல்லி பிரச்சாரம் செய்தபொழுது கையிலே, கழுத்திலே, மூக்கிலே அணிந்திருந்ததை கழட்டி கொடுத்த ஈழ்த்தமிழர்களேல்லாம் காறி உம் முகத்தில் உமிழும் நாள் விரைவில் வரும் மேலும் “துரோகி” கருணாநிதியின் பெயர் எப்படி உலகத்தமிழர்களால் துரோகப்பட்டியலில் சேர்க்கப்பட்டதோ தங்களுடைய பெயரும் விரைவில் சேர்க்கப்படுமென்பதனை கூறிக்கொள்கின்றோம். கொலைகாரன் ராஜபட்சே அளித்த விருந்தை எப்படி சாப்பிட மனம் வந்தது, அந்த உணவிலே தமிழர்களின் உடல் உறுப்புகள் தெரியவில்லையா? அவன் கொடுத்தது தண்ணீர் அல்ல ஈழத்தமிழனின் ரத்தம் என தோன்றவில்லையா? உல்லாசப்பயணம் சென்ற தங்களுக்கு அந்த உணர்வு எப்படி வரும், சிங்களப்பகுதியில் கனிமொழிவாங்கிய தேயிலை தோட்டத்தை பார்க்க சென்றீர்களா? அல்லது சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் ‘வடக்கில் வசந்தம்’ போல் ‘வாழ்வில் வசந்தம்’ திட்டத்தை தொடங்கப் போனீர்களா? என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. திருமா அவர்களே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் உலகத்திலே புலிகள் இயக்கத்தை சாராத இரண்டு பேருக்கு மட்டும்தான் புலிகள் தங்களுடைய ராணுவ உடையை போட்டு அழகுபடுத்தி ரசித்தார்கள். தமிழீழத் தேசியத்தலைவருக்குத் தெரியும் யார் யாரை எங்கே வைப்பது என்று இனியாவது அந்த மீசையை முறுக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது நாங்கள்….
    நன்றி

    கு.கண்ணன்
    பெரியார் திராவிடர்கழகம்
    “தமிழ்க் குடில்”
    6/28, புதுத்தெரு
    கண்ணம்மாப்பேட்டை
    தியாகராயர் நகர்
    சென்னை – 6000 017

    “ஓடாத மானும், போராடாத மனித இனமும் வென்றதாக வராலாறு இல்லை”

    ________________
    கட்டுரையை படித்தால் தலை சுத்துகிறது. இந்தியாவில் தனித் தமிழகத்துக்காக ஆயுதம் ஏந்துங்கள். மேடையேறி பேசவும், எழுதவும் நாங்கள் தயார். பின்னர் துரோகிகளாக பெயர் பெறவும் தயார். இலங்கை தமிழரை விட்டு விடுங்கள். அவர்களுக்கு இழக்க இனி ஒன்றுமில்லை கண்ணா?

    Reply
  • பல்லி
    பல்லி

    அப்பாடா நிம்மதியாக உள்ளது;
    பல்லியையும் சிலர் துரோகி என சொன்னார்கள்; (புலி உட்பட) ஆனால் துரோகி பட்டியலில் இவர்களே இருக்கும்போது பல்லிக்கும் அந்த அந்த(அவர்களது)
    விடுங்கப்பா வெக்கமாய் இருக்கு; ஆனாலும் இதமாக இருக்கு;

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    தமிழ்ஈழம் பெற்றுத்தான் தீருவேன் என்று சொன்ன ஜெயலலிதா – திருமாவளவன் இவர்களுக்கும் துரோகிப்பட்டம் என்றால் புலிக்கு பிறப்பிலிருந்து இறப்புவரை யாரைப் பார்த்தாலும் துரோகி என்று சொல்லி ,திட்டி ,கொன்று தானம் அந்த துரோகிப்பட்டியலில் வீழ்வது தான் போராட்டம் என்று விளங்கிக் கொண்டார்களோ? என்ன நோக்கமாக இருந்தது?

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //புலிக்கு பிறப்பிலிருந்து இறப்புவரை யாரைப் பார்த்தாலும் துரோகி என்று சொல்லி ,திட்டி ,கொன்று தானம் அந்த துரோகிப்பட்டியலில் வீழ்வது தான் போராட்டம் என்று விளங்கிக் கொண்டார்களோ? என்ன நோக்கமாக இருந்தது? -T Sothilingam //

    நோக்கம் : எல்லா தமிழரையும் துரோகியாக்கி , துரோகிகள் ஈழம் காண்பது. துரோகிகள் என்றால் அவர்கள் ஈழத் தமிழர் என அர்த்தம் கொள்ளலாம். அல்லது ஈழ ஆதரவாளர்கள் எனவும் அர்த்தம் கொள்ளலாம். புலிகளின் தாகம் தமிழரல்லாத தாயகம் / புலிகளின் தாகம் துரோகிகளின் தாயகம்.

    Reply
  • மாயா
    மாயா

    இதோ மின் அஞ்சலில் நீண்ட மற்றொரு வால்……
    ____
    அதிர்வு இணையம் மீது கஸ்பர் அடிகளார் கடும் கோபம்

    நக்கீரன் இதழிலும், இணையம் ஊடாகவும் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் அதிர்வு குறித்து பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பலர் இவர் எழுதுவதைப் இப்போது படிப்பது இல்லை என்றாலும், பொறுப்புள்ள இணையம் என்றவகையில் அதைப் படித்த சிலருக்கு நாம் விளக்கம் கூறியாகவேண்டும்.
    அதிர்வு இணையத்தளம் நடத்துபவர் விடுதலைப் புலிகளின் முன்நாள் உறுப்பினர் எனவும், பின்னர் பொட்டு அம்மானால் இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டதாகவும் கஸ்பர் புணைந்துள்ளார் ஒரு சிறுகதை. அத்துடன் அதிர்வு இணைய நிர்வாகி இலங்கை புலனாய்வுப் பிரிவினருடன் சேர்ந்து பலகாலமாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள கஸ்பர் அடிகளார் , பின்னர் போர் உக்கிரமடைந்தக் காலத்தில் தேசியத்தலைவர் அதிர்வு நிர்வாகியை
    அழைத்ததாகவும் அவர் நாட்டிற்கு திரும்பிச் செல்ல மறுத்ததாகவும் கூறியுள்ளார்.

    இலங்கை புலனாய்வுத் துறையுடன் நீண்டகாலமாக சேர்ந்தியங்கும் ஒருவரை தேசியதலைவர் ஈழத்திற்கு வருமாறு அழைப்பாரா ? அடிமுட்டாளான கஸ்பர் இப்போது இவ்வுலகில் இல்லை, கனவு லோகத்தில் சஞ்சாரம் செய்கிறார். யாரிடமோ விசாரித்துவிட்டு அதனை அப்படியே சிறு பிள்ளைத் தனமாக எழுதுகிறார். அதற்குப் பிரபல நாளிதழ் ஒன்று களம் அமைத்துக் கொடுக்கிறது. ஈழ விடுதலைப் போராட்டம் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ள இவ் வேளையில், அரசியல் போராட்டத்தில் எமது சுய நிர்ணய உரிமைகளை வென்றெடுக்க நாம் அரும்பாடுபடும் வேளையில், இந்திய மத்திய அரசின் உதவியுடன் அடிகளார் அதனைத் கவுக்கப் பார்க்கிறார்.

    ஈழ விடுதலைப் போராட்டத்தை அதன் உன்னதத்தை விற்கவேண்டாம் என அதிர்வு வேண்டிக்கொண்டது, தமிழ் மக்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் என அது அவர்களைக் கேட்டுக்கொண்டது. அதில் பிழை எதுவும் இருப்பதாக நாம் கருதவில்லை. முன்னுக்குப் பின் பல முரணான தகவல்களுடன் மெகா சீரியல் எழுதுவதும், அதனை பரபரப்பாக்கி விற்றுச் சம்பாதிப்பதையும் நாம் நாளாந்தம் பார்க்கிறோம். அதிர்வு இணையத்தில் எழுதப்பட்ட கருத்துக்களால் ஆடிப்போயுள்ள கஸ்பர் அவர்கள் தற்போது புலம் பெயர் தமிழர்களின் இணையமான அதிர்வை நேரடியாகத் தாக்க முனைவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

    தடைப்பட்டுள்ள எங்கள் போராட்டங்களை முன்னெடுத்தல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க போராடுதல் என அதிர்வு இணையத்திற்கு பல பொறுப்புகள் இருக்கிறது, இவரைப் போன்ற விமர்சகர்களின் விமர்சனத்திற்கு நாம் முகம் கொடுத்து எமது காலத்தையும் நேரத்தையும், வீணடிக்க விரும்பவில்லை. யார் நல்லவர் ? யார் கெட்டவர் ? என்பதை இனி வரும் காலம் சொல்லும், கஸ்பரின் முகத்திரை கிழிக்கும் … தெரு நாய் குரைக்கிறது என்று நாமும் குரைக்க முடியுமா ?
    ==============

    தமிழர்களே சிங்களன் எதிர்பார்ப்பதுபோலவே நமக்குள் சண்டை போட்டுகொண்டிருக்கிறோம். இணையதளம் – இன்றைக்கு இதுதான் சிங்களவனுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது. அதை மறந்து இலட்சியங்களில் இருந்து விலகி செல்வது யாருக்கும் பயனளிக்காது. சிங்களவனுக்குதான் கொண்டாட்டம். சிங்களவனுக்குதான் கொண்டாட்டம். யாரயிருந்தாலும் தயவுசெய்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

    முத்தமிழ்வேந்தன்
    சென்னை

    Reply
  • பல்லி
    பல்லி

    சரி அப்படியாயின் துரோகி ஒட்டுகுழு எல்லாம் தமிழிலக்கிய பதிவேடுகளா??
    தெருநாய் குலைப்பதால் நாம் குலைக்க வேண்டியதில்லை; ஆனால் தெரு நாய் குலைப்பது தனக்கு ஆபத்தென அல்ல; மக்களுக்கு ஏதோ ஒரு ஆபத்து எனதானே; அந்த நாய்யின் குலைப்பை ஒரு அறிகுறியாய் நாம் சிந்தித்தால் எமக்கு வரும் ஆபததை தடுக்கலாம்; இல்லை தெரினாய்தானே என கேவலமாய் நினைத்தால் நாய்க்கல்ல தீங்கு நமக்குதான், (தெருநாய் என பல்லி சொல்லியது யதார்த்தமான விமர்சனங்களை) அவர் சொன்னது யாரை என்பது அவருக்கே தெரியாமல் இருக்கட்டும்;

    Reply
  • thurai
    thurai

    அறிவாளிகள் நண்பர்களை தேடுவார்கள்.
    மூடர்கள் பகைவர்களை வளர்ப்பார்கள்.
    சிங்களவர்களை எதிரியாகக் காட்டி வளர்ந்ததே புலிகள்.
    மூடர்களை நம்பி பின்னே சென்றவர்கள் இன்று முட்கம்பி வேலிக்குள்.

    நம்பியார் எம்ஜியாரிடம் அடிவாங்கும் போது ரசிகர் கைதட்டல்.
    அடிவாங்கியவரும் பிழைத்தார், அடித்தவனும் பிழைத்தான்.
    கைதட்டியவர்கள் பணத்தை இழந்தார்கள்.

    புலிக்காக பேசுபவர்களே முட்கம்பி வேலியையும், இழந்த தமிழர்களின் சொத்துக்களையும அறிவீரா? புலியினால் பிழைப்பு நடத்தி வாழ்பவர்களை முதலில் அடியாளம் கண்டுகொள்ழுங்கள்.

    துரை

    Reply
  • BC
    BC

    //மூடர்கள் பகைவர்களை வளர்ப்பார்கள். சிங்களவர்களை எதிரியாகக் காட்டி வளர்ந்ததே புலிகள்.
    புலிக்காக பேசுபவர்களே முட்கம்பி வேலியையும் இழந்த தமிழர்களின் சொத்துக்களையும அறிவீரா? புலியினால் பிழைப்பு நடத்தி வாழ்பவர்களை முதலில் அடயாளம் கண்டுகொள்ழுங்கள்.//

    துரை உங்கள் கருத்து உண்மையானது

    Reply