புலிகளுடனான தொடர்பைக் கண்டறிய கைதான அமெரிக்க செல்வந்தரிடம் விசாரணை!

3333raj-rajaratnam.jpgஅமெரிக் காவில் மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட பாரிய நிதி நிறுவன உரிமையாளர் ராஜ்ராஜரத்னம் என்பவருக்கு புலிகளுடன் தொடர்பு உண்டா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கெலியோன் கு×ப் எனப்படும் நிதி நிறுவன ஸ்தாபகரான ராஜ் ராஜரத்னம்  மேரிலாந்திலிருந்து இயங்கும் தரும நிறுவனம் ஒன்றுக்கு அமெரிக்காவிலுள்ள செல்வந்தர்களான இலங்கையர்கள் பலர் அன்பளிப்பு செய்யும் பணம்; புலிகளுக்கு போய் சேர்வதற்கு ஆதாரமான பல ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னொரு போதும் இல்லாத அளவிலான இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக 52 வயதான ராஜரத்னம் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய புலன் விசாரணை பணியகம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.. ராஜரத்னமும் அவரது சகாக்களும் தகாத வழியில் 20 மில்லியன் டொலரை சம்பாதித்தனர் என்று வழக்குத் தொடுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜரத்தினத்தின் நியூயோர்க் கேலியொன் நிதி நிறுவனம் 37 பில்லியன் டொலர் முதலீட்டை கொண்டுள்ளது. ராஜரத்னத்தின் சட்டத்தரணி ஜிம் வோல்டன் தமது கட்சிக்காரர் நிரபராதி என்றும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்த்து வாதாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply to Thaksan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • மாத்தையா
    மாத்தையா

    இவர் புலியல்ல. இவர் புனர் வாழ்வு.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    அருட்செல்வன்,
    சும்மா அதிகாரிகள் என்று போடாமல் எந்த நாட்டு அதிகாரிகள், எந்த அமைப்பின் அதிகாரிகள் என்று போடுங்கள். கொஞ்சம் உதவியாகப்போகும். சும்மா ”தற்ஸ்தமிழ்.கொம்” இல் வரும் செய்திகள் மாதிரி போடுவதென்றால் நான் அங்கேயே வாசிப்பேனே?

    நான் அறிந்தவரை மேரிலாண்டில் இருப்பது ரீ.ஆர்.ஓ. (தமிழ் அமைப்பு). வ்வமைப்புக்கும் ராஜ் ராஜரட்னத்துக்கும் தொடர்பு உண்டு. அவர் ரீ.ஆர்.ஓ வுக்கு பணம் நிறைய கொடுத்தவர். அமெரிக்காவில் ரீ.ஆர்.ஓ வை தடை செய்தபோது ராஜ் ராஜரட்ணம் அப்பணம் புலிகளுக்கு என அறிந்தே கொடுத்தாரா என்பது பற்றி விசாரணை நடந்தது. அவரின் வீட்டுக்கு எஃப்.பி.ஐ என்று விசாரித்தது. அத்துடன விடயம் முடிந்தது. ஆனால் இப்போது வரும் ரி.ஆர்.ஓ செய்திகள் ($20 மில்லியன் இன்சைடர்-ரேடிங்) துணைச்செய்திகள் அன்றி வேறில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    எஃப்.பி.ஐ தமது விசாரணை அறிக்கைகளை தமது தலைமைக்கு அனுப்ப முதல், சாந்தனுக்குத் தான் அனுப்புகின்றது போல. அல்லது சாந்தன் என்ற பெயரில் இங்கு வருவது ரீஆர்ஓவின் முக்கியமான முன்னாள் ஒருவரோ??

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    எஃப்.பி.ஐ எனக்கு அனுப்பிறாங்களோ இல்லையோ அருட்செல்வனுக்கு அனுப்புறாங்கள் போல கிடக்கு!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    செத்துக்கிடக்கிற பிணத்தைப் பார்தல்ல பந்தலிலே தொங்குகிற பாவைக்காயைக்குதான் மாரடிக்கிறார் சாந்தன். இதையும் புரிந்து கொள்ளாவிட்டால் நாம் என்ன? மனுஷா ஜாதி.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘…செத்துக்கிடக்கிற பிணத்தைப் பார்தல்ல பந்தலிலே தொங்குகிற பாவைக்காயைக்குதான் மாரடிக்கிறார் சாந்தன்….’

    ஆமாம், தெரிகிறதே இப்போது. 21பேர் கூட்டம், மாற்றுக்கருத்து..என மாரடித்தவ்ர்களின் நிலை. இப்போ ஸ்பெசலாக ‘யாழ்ப்பாண தூள்’ போட்டு பாவைக்காய் கறி வைக்கிறார்களாம்!! மனுஷ ஜாதிபற்றி நீங்கள் கதைத்து தேசத்தில் நிறையப்பேர் வாசிக்கிறார்கள்!!

    சந்திரன் ராஜா, நீங்கள் ஒரு வேளை ஸ்ரீலங்கா அரசு $1மில்லியனுக்கு பல்லை இளிச்சதை சொல்கிறியளோ? நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

    Reply
  • EX DIPLOMATIC
    EX DIPLOMATIC

    http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=18427

    ராஜரட்னம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை : இலங்கை மத்திய வங்கி

    வீரகேசரி இணையம் 10/20/2009 5:26:32 PM – பிரபல கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்க நிதி உதவி வழங்கியமை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ஏசியன் ட்ரிபியூன் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

    அந்தச் செய்தியில்,;”பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு 52 வயதான ராஜ்ராஜரட்னம் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.; அவர் ‘டீ ஆர் ஓ’ எனப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

    எனினும் அவர் இந்தக் கழகத்துக்கு நிதியாடலை மேற்கொள்ளும் போது, அது இலங்கையிலோ அல்லது அமெரிக்காவிலோ தடை செய்யப் பட்டிருக்கவில்லை என மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பி. கே. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

    இலங்கை மத்திய வங்கியே, நிதி மோசடி தொடர்பிலான புலானாய்வுகளை மேற்கொள்ளும் பிரதான புலனாய்வு பிரிவாகக் காணப்படுகிறது. இந்த நிலையில் மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் அடிப்படையில் ராஜ் ராஜரட்னம் எந்த குற்றச் செயலுடனும் தொடர்புடையவர் அல்லர் என அவர் தெரிவித்துள்ளார்.

    ராஜ் ராஜரட்னம் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின்னரான கட்டுமானப் பணிகளுக்காக தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு நிதி வழங்கியுள்ளார். எனினும் அந்த அமைப்பு இலங்கையிலும் அமெரிக்காவிலும் 2007ஆம் அண்டு நவம்பருக்கு பின்னரே தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் அதற்கு அவர் நிதி வழங்கவில்லை என விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

    அதேவேளை ராஜ் ராஜரட்னத்தின் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இலங்கையின் பங்குகள் தொடர்பிலும் ஆராய்வதற்கான தேவை இல்லை எனவும் பங்கு பரிமாற்று ஆணையகத்தின் பணிப்பாளர் சன்னா டீ சில்வா தெரிவித்துள்ளார். ; ராஜ் ராஜரட்னம் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஏற்ப சந்தேகத்துக்கு இடமானமுறையில் செயற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜ் ராஜரட்னத்தின் கைதைத் தொடர்ந்து இலங்கையின் பங்கு சந்தை நேற்று 3.1 சதவீத வீழ்ச்சியடைந்தது.

    உலகின் 559ஆவது கோடீஸ்வரராகத் திகழும் அவருக்கு, விடுதலைப் புலி உறுப்பினர்களின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கியமைக்காக கடந்த மாதம் இலங்கையின் நீதி அமைச்சு நன்றி தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Reply
  • mahintha
    mahintha

    ராஜரத்தினம் உண்மையை சொல்லிப் போட்டாராம் லண்டனில் உள்ள பலர் இப்போ பிடிபடப் போகினமாம்.

    Reply
  • Thaksan
    Thaksan

    மில்லியனும் பில்லியனும் எப்பிடி வந்துசேர்ந்துதோ தெரியேல்லை. பிறக்கும்போது எல்லாரும் “குவா>குவா” சத்தத்துடன் மட்டுந்தான் பிறக்கினம். சீ.. ஒரு பத்து லட்சம் ரூபாயை ஒண்டா சேர்துக்கண்டிராத பிறவியாய் பிறந்த பல கோடி மாந்தருள் அமுங்கிப் போனேனே…

    Reply
  • muthu
    muthu

    புலிகளின் தரைப்படை வான்படை கடற்படை தற்கொலைப்படை ஆயிரமாயிரமான போராளிகள் இந்தியாவை அடிச்சுக்கலைச்ச படை உலகைக் கலக்கிய படை சர்வதேச ரிதியில் நெற்வேர்க் கொண்ட படை என்றகதை முடிஞ்சு கடைசியாய் 21பேர் 21பேர் என்று காய்வதே தொழிலாகிவிட்டது. புலி தானும் ஒரு 21 பேரை அரசியல் கதைக்க வைச்சிருந்தால் ஏன் இந்தபெருமூச்சு. இனி என்ன நடக்குமோ அதைப்பார்த்துக் கொண்டிருப்பதுதான் வாழ்வாகும் போலுள்ளது

    Reply
  • thenaale
    thenaale

    ராஜரட்னத்திற்கு இலங்கை அரசு நற்சான்றிதழ் வழங்கும். கருணா பிள்ளையானுக்கும் அவ்வாறே. மக்களுக்காக உழைத்தவர்களையும் மக்களை நேசித்தவர்களையும் தான் துரத்தி துரத்தி தண்டனை கொடுக்கும்.

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    பிரித்தானியாவில் மட்டுமல்ல அமெரிக்காவில் கூட எமது மானம் அந்த மாதிரி கொடி கட்டி பறக்குது. கடந்த முப்பது வருடத்தில் இலங்கையில் இருந்த ஏராளமான ஏமாற்று வித்தைகாரர்கள் வெளி நாட்டுக்கு வந்து விட்டார்கள். இப்போ எல்லா கேடிகளும் அம்மணமாகி நாறுகிறார்கள்

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    Easy Come – Easy Go? Not quite!
    Dirty News has Hit the Fan and the Investors have started the Dollar Diarrhea Run.
    As history has shown, when the doo-run-run starts, with the CEO out on bail with a $100 million tag, its bad news. Too bad the man has invested in the Top 10 companies in Sri Lanka. Lets now see Who is Who underneath the Sheets! There must a few who are now suffering from diarrhea, clutching onto a bottle of whisky between the loo and the drawing room. There must be a few nervous souls from both political parties in power as well as other key persons from military and the government, hoping that tomorrow never comes. Whatever one might say about the American Dream, the judicial circus plays its role quite well. Of course there are American jails and jails. Where the cream of the criminals get a better deal than the rif-raf.

    If at the end of the day Raja has to forego his $10 million condo in New York, he might spend a few years, not the entire life in a reasonably comfortable in jail, taken care of pretty well. Not like the slum at Welikada Jail in Colombo. Like many of the Ponzi players, Raja has certainly melted a few $100 millions of moolah under fictitious names in the Bahamas, Malaysia, Cyprus, Singapore, Norway etc to warm his toes on a chilly day. Wonder what role Erik Solheim has played in this game?
    Would KP know something? Of course KP knows a lot. He did the Forex deals. I would not be surprised if KP just happened to commit suicide one of these days! Also accidents do happen. This will be the Raja-Gate of 2009. So much to look forward to!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    குகப்பிரசாதம், /‘…பிரித்தானியாவில் மட்டுமல்ல அமெரிக்காவில் கூட எமது மானம் அந்த மாதிரி கொடி கட்டி பறக்குது. ….’
    உங்கட மானத்தை ராஜ் ராஜரட்னத்தின் முதுகில் வைத்து சவாரிசெய்ய ஏன் நினைத்தீர்கள்? ராஜ் ராஜரட்னம் உங்களைக் கேட்டாரா ?

    Reply