அரசுக்கும் சரத் பொன்சேகாவுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய் பிரசாரம்: வதந்தி பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – இராணுவப் பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpg ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் அரசுக்கும் இடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக பிரசாரங்கள் செய்வதை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையேல் இவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பிரதம பாதுகாப்பு அதிகாரியான ஜெனரல் சரத் பொன் சேகா இன்னமும் இலங்கை இராணுவத்தின் உயர்பதவியை வகித்து வருகிறார். அவருக்கும் அரசுக்கும் இடையே முரண்பாடுகளும், பிளவுகளும் ஏற்பட்டுவருவதாக ஆதாரமற்ற பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் பொய்யான பிரசாரங்களே.

சிலரது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இவ்வாறான பிரசாரங்களை செய்வதுடன், மக்களையும் குழப்ப முயற்சிக்கின்றனர். இவற்றை அவர்கள் நிறுத்த வேண்டும். சில ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும், போஸ்டர்கள் மூலமாகவும் செய்யப்பட்டுவரும் பிரசாரங்கள் யாவும் உண்மைக்கு புறம்பானவை. இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை நிறுத்த வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக சில ஊடகங்கள் இவ்வாறான பிரசாரங்களை செய்து வருவதை முன்னிட்டே பிரிகேடியர் உதய நாணயக்கார மேற்கண்ட அறிவித்தலை விடுத்தார்.

அரசியலில் ஈடுபடுமாறு யாரும் இதுவரை அழைக்கவில்லை: சரத் பொன்சேகா

அரசியலில் ஈடுபடுமாறு இதுவரையில் எவரும் தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளராக சரத் பொன்சேகா போட்டியிடுவார் என வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தம்மைப்பற்றி ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி வருவதாகவும் அது பற்றி தம்மால் கருத்து கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்திலும் இவ்வாறு ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியானதாகவும், தாம் இது குறித்து கவலைப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் குறித்து இதுவரையில் எவரும் தம்முடன் பேசவில்லை எனவும், இதனால் அரசியல் விவகாரங்களைப் பற்றி கருத்து தெரிவிப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Show More
Leave a Reply to mano Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • பல்லி
    பல்லி

    //ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் அரசுக்கும் இடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக பிரசாரங்கள் செய்வதை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையேல் இவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்//
    ……………மாதிரி அறிக்கைவிடும் நாணயகாரா இங்கேயும் சொதப்ப தவறவில்லை, முதலில் பொன்சேகா தற்ப்போது ராணுவ தளபதியல்ல என்பது நாணயகாராவுக்கு தெரியாதா; அவர் ஒரு இளைபாறிய முப்படை தளபதி அல்லது பதவி பறிக்கபட்ட முன்னாள் தளபதி ஆக இவருக்கும் ராணுவத்துக்கும் தற்ப்போது சம்பந்தம் இல்லாதபோது அவர் பற்றி ராணுவ ஏச்சாளர் கருத்து வெளியிட யார் அவருக்கு அதிகாரம் கொடுத்தது, ராணுவ வெற்றி விழாவில் நாயகனாகிய பொன்சேகரா இல்லாமல் குனசித்திர நடிகரான மகிந்தாவின் தம்பி சமூகம் அளித்ததுக்கான காரணத்தை அறியுமுன் இவரது அவசர அறிக்கை பொன்சேகரா மகிந்தா குடும்பத்தை விட்டு ஒதுங்கி விட்டார் என்பது உறுதியாகிறது,

    ஆக ஒதுக்கபட்ட ஒருவருக்கு மாற்று அமைப்புகள் நாட்டின் தலமை பதவியே தருவதாக சொன்னால் பொன்சேகா என்ன நாணயகாராகூட அரசுக்கு எதிராக செயல்படுவார் என கடந்த காலங்கள் சொல்லுகிறது; அதையும்விட பொன்சேகரா சந்திரிகாவின் மிக நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் என்பதையும் கவனிக்கபட வேண்டும், பிரபாகரனுக்கு ஒருகருனா; மகிந்தாவுக்கு ஒரு பொன்சேகா இருவருமே மதிக்கபாடாததால் எதிரியானவர்கள்:

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    நீங்கள் தான் குளம்பிப் போயுள்ளீர்கள். சரத் பொன்சேகா தற்போது இராணுவத்தளபதி இல்லை. ஆனால் முப்படைகளின் கூட்டுத் தளபதியாக தொடர்வதை தாங்கள் மறந்தது வியப்பளிக்கின்றது.

    Reply
  • பல்லி
    பல்லி

    //சரத் பொன்சேகா தற்போது இராணுவத்தளபதி இல்லை. ஆனால் முப்படைகளின் கூட்டுத் தளபதியாக தொடர்வதை தாங்கள் மறந்தது வியப்பளிக்கின்றது.//
    பல்லிக்கும்தான் பார்த்திபன் காரனம் ஒரு ராணுவ மரியாதை பாராட்டு விழாவில் முப்படை தளபதியான பொன்சேகா இடம் பெறாமல் அவருக்கு பதிலாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கலந்து கொண்டது, பல்லிக்கு மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்த்யில்கூட பொன்சேகா முப்படை தளபதியா? அல்லது மூத்த ராணுவ சிப்பாயா? என கேள்வி எழும்பிஉள்ளதாமே, பார்த்திபன் உங்கள் பின்னோட்டத்தை கவனித்த நண்பர் ஒருவர் எனக்கு தொல்லைபேசியில் தொடர்பு கொண்டு முப்படை தளபதி என்பவர் இளைப்பாறிய பின்பும் அரச மரியாதைக்கு உள்படுபவராகதான் இருப்பார், ஆனால் நம்ம சேகாவுக்கோ கருனாவுக்கு உள்ள மதிப்பு கூட இல்லை என்பது கூடவா? பார்த்திபனுக்கு தெரியவில்லை என கேட்டார், இருப்பினும் எனது பார்வை வேறு, அதை திருத்திய பார்த்திபனுக்கு நன்றி, இனிமேல் ஒப்புக்காக பொன்சேகராவை முப்படை தளபதி என வர்னிக்கிறேன்;

    Reply
  • santhanam
    santhanam

    இதை நீங்கள் ஆப்ரேசன் செய்யவேண்டாம் மனித உரிமை மீறல் சம்பவங்களிருந்து தங்களை காப்பாற்ற நடக்கும் அரசியல் நாடகம்.

    Reply
  • mano
    mano

    எதிர்பாராத இந்த யுத்த வெற்றியை எப்படி தமக்கு சாதகமாக்கிக் கொள்வது என்று உலகமே அங்கலாய்த்துக் கிடக்கையில்> இந்த சரத் பொன்சேகாவுக்கே முழுப் பொறுப்பையும் மக்கள் ஒப்படைத்துவிட்டால் என்னாவது? அவர் ஒரு பிரபாகரனாகிவிடமாட்டாரா? நாங்கள் கூட யோசிக்க வேண்டும்.
    இருந்தாலும்>
    சரத் அரசியலுக்கு வருவதில் பெரும்பாலான சிங்கள மக்களுக்கு விருப்பமில்லை> அவரை ஜனாதிபதி பதவிக்கு மேலான கெளரவ நிலையில் பார்கிறார்கள். இருந்தாலும் தேர்தலில் இறங்கிளால் வாக்குப் போடாமல் விடுவார்களா? இப்படி சில கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

    எப்படியானாலும் யுத்த வெற்றிக்கான கூட்டுப் பொறுப்பில்> அந்தத் தளபதி முதன்மையானவர். முதற்காரணம் பிரபாகரன் ஏவிய குண்டிலிருந்து தப்பி எழுந்து போரை நடத்தியவர். மனித இயல்பு ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு மறு கன்னத்தைக் காட்டுவது அல்ல.

    (இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவு கண்காட்சியை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கும்போது> தற்போதைய இராணுவத் தளபதியும்> படைகளின் பிரதானி சரத் பொன்சேகாவும் கலந்துகொண்டனர்)

    Reply
  • மாயா
    மாயா

    எதிர்வரும் 2009 டிசம்பர் மாதம் சரத் பொண்சேகா ஓய்வு எடுக்க முடிவெடுத்துள்ளார்.கடந்த 2005 டிசம்பரில் அவர் ஓய்வில் செல்ல வேண்டிய காலம் ஆகும். ஆனாலும் அதன் பின்னர் நான்கு முறை அவரது சேவைக் காலம் நீடிக்கப்பட்டது. கடந்த 12ம் திகதி, இராணுவத்தினருக்கான பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, இராணுவ விழா ஒன்றில், மேடையில் பேசும் இறுதி நிகழ்வாக இது இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தமை அவரது வெளியேற்றத்தை உறுதி செய்கிறது.

    சரத் பொண்சேகா குறித்து பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு மத்தியில், முப்படைத் தளபதியான சரத் பொண்சேகா, சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து, புலிகளுக்கான இராணுவ தாக்குதல் குறித்த இறுதிப் போர் கண்காட்சியை கண்டு ரசிப்பதையும், கண்காட்காட்சியின் சில படங்களையும் லங்கா தீப, இன்று வெளியிட்டுள்ளது.
    http://www.lankadeepa.lk/2009/10/18/front_news/03.html

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    Speaking to a felicitation ceremony at Aluvihara, Matale organized to honour elements of war that led to the crushing of the Liberation Tigers of Tamil Eelam after nearly three decades Mahinda Rajapaksa said some people who question today what did the government do for the soldiers forget they are the very people who insulted the army and said that Sri Lanka’s army chief is more suitable to lead the Salvation Army.
    Rajapaksa said, “There was no limit to these insults. One said the man who planned the capture of Thoppigala is a man who does not know how to read maps. The other man said any fool could go to war.”
    The President said that the very people who insulted in that manner are pretending they were highly worried about welfare of the soldiers.More than the LTTE, the President said , it was these elements who were prepared to run down the army at the drop of a hat.
    While those people are conspiring to take the Army leaders to war crimes tribunals , the President said it was he , who said they could take the President and not the soldiers to those tribunals as he was ready to climb any gallows as the soldiers carried out only his commands. “I said so because I wanted to protect the war heroes. I am proud to have done that,” the President said.
    The President was addressing a ceremony organised by the people of the Central Province to pay tribute to the war heroes who shouldered the task of achieving the national victory. It was organised at Aluvihare in Matale. The people of the Central Province honoured the President, Gothabaya Rajapaksa, Gen. Sarath Fonseka, Former Chief of Defence Staff Air Chief Marshal Donald Perera, Air Force Commander Air Chief Marshal Roshan Gunatilake, Former Navy Commander Admiral Wasantha Karannagoda, IGP Jayantha Wickramaratne and Director General of the Civil Defence Force Sarath Weerasekera. Donald Perera accepted the award on behalf of the Defence Secretary.

    Reply