டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி தொடர்பாக அண்மைக் காலங்களில் புலிகளின் ஊடகங்களாலும், புலிகளின் ஊதுகுழல்களாக செயற்பட்டுவரும் சில தனிநபர்களாலும் தவறான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அதுவே மக்கள் மனதில் பதிந்து விடுகின்றது. அதனாலேயே அதனை பொய் என்று தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது.
டான் தமிழ்ஒளி 2007ம் ஆண்டு முதல் தனது ஒளிபரப்பை கொழும்பிலிருந்து நடாத்திவருகின்றது. அதனை கொழும்பில் நடாத்திவரும் ஆஸ்க் மீடியா என்ற நிறுவனம் முழுக்க முழுக்க 100 வீதமும் குகநாதன் என்ற தனி நபருக்கும் அவரது குடும்பத்திற்கும் சொந்தமானது. அதில் வேறு எவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதே உண்மையானது.
‘தமிழ்த் தேசியத்தை ஐரோப்பிய மண்ணில் சிதைப்பதற்காக சிங்கள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குகநாதன்’ என்று சில அனாமதேயங்கள் தொடர்ந்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு வருகின்றன.
தமிழ்த் தேசியத்தை தமிழ் மண்ணில் சிதைத்தவர்கள் யார் என்பது தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிந்த விடயம். தமிழ்த் தேசயத்தை தமிழ் மண்ணில் அழித்தவர்களாலேயே ஐரோப்பிய மண்ணிலும் சிதைக்க முடியும். அதற்கெல்லாம் குகநாதன் போன்றவர்கள் தேவையே இல்லை. இப்போது தமிழ்த் தேசியத்தை காப்பாற்றப் போகின்றோம் என்று புறப்பட்டிருக்கும் சில புல்லுரிவிகளே போதும்.
நல்லூரில் குண்டு வெடித்தால், யாழ்.நகரத்தில் இருப்பவனுக்கே நல்லூரில் என்ன நடந்தது என்பது சரியாகத் தெரிவதில்லை. இப்படியிருக்கையில் தாயகத்தில் என்ன நடக்கின்றது என்பதை 13 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கூறிக் கொண்டிருப்பதை விடுத்து, நேரே நல்லூரிலிருந்தே கூறுவோம் என்று டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி தாயகத்தை நோக்கி வந்தது. அது உண்மையைக் கூறுவது சிலருக்கு கசப்பானதாக இருக்கலாம். அதற்காக உண்மையைக் கூறுவதற்கு பெயர் துரோகத் தனம் என்றால் அந்த துரோகத்தனத்தை செய்வதற்கு டான் தமிழ்ஒளி தயங்கப் போவதில்லை.
முதல் முதலில் நமது மண்ணில் நடந்த படுகொலை அல்பிரட் துரையப்பா வினுடையது. அப்போது, துரோகிகளுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என்று அதனை நியாயப்படுத்தியவர் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள். பின்னர் அதே தண்டயையை அவரும் பெறவேண்டிவந்தது. இன்னுமொரு வரைப் பார்த்து துரோகி என்று கை நீட்டியவ்hகள் பலர் பின்னர் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட வரலாறுகள் அதிகம். எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லியே தீரும்.
எஸ்.எஸ். குகநாதன்
தலைவர், டான் தொலைக்காட்சி
nm
இன்னுமொரு வரைப் பார்த்து துரோகி என்று கை நீட்டியவ்hகள் பலர் பின்னர் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட வரலாறுகள் அதிகம். எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லியே தீரும்.
பல்லி
// டான் தமிழொளி 2007ம் ஆண்டு முதல் தனது ஒளிபரப்பை கொழும்பிலிருந்து நடாத்திவருகின்றது. அதனை கொழும்பில் நடாத்திவரும் ஆஸ்க் மீடியா என்ற நிறுவனம் முழுக்க முழுக்க 100 வீதமும் குகநாதன் என்ற தனி நபருக்கும் அவரது குடும்பத்திற்கும் சொந்தமானது. அதில் வேறு எவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதே உண்மையானது//
இந்த வாக்கியமே தாங்கள் அரசின் பினாமியல்ல எடுபிடி என பலர் உறுதிபடுத்த காரணம்; முதலில் முடிந்தால் இதுக்கான நிதி எப்படி வந்ததுஎன சொல்லுங்கள், அதன்பின் எழுத்தோ அல்லது ஒலியோ பற்றி பலமாகவோ அல்லது உங்கள் நலன் (உடல்) கருதியோ பேசுவோம்; பரிஸில் மிக கடனில் மூழ்கிபோன குகநாதனுக்கு எப்படி இந்த பரிசு தொகை கிடைத்தது என கேப்பது பல்லியல்ல, சக அறிவிப்பாளர்கள்;
இந்த கேள்வி சங்கரியின் சகாவான உதயாவை விட பலருக்கும் உண்டு, ஒரு வானொலியையே நடத்த முடியாமல் அதை பங்குக்கு அல்லோலயாவுக்கு விட்ட குகனாதனுக்கு ஒரு தொலைகாட்ச்சி நடத்த பணம் ஏது, இவரை யார் மகிந்தா குடும்பத்துக்கு அறிமுகம் செய்தது, இவர் இப்போது கூட சில ஊடகங்களுக்கு தொல்லை பேசியில் தொடர்பு கொண்டு ஏன்ராப்பா என்னை கேவலமாய் எழுதுகிறியள் என அங்கலாய்ப்பது முதல் ஜயாவின் பனபட்டுவாடா முதல் எமக்கும் தெரியும், உங்கள் தவற நீங்கள் நியாயபடுத்தினால் அது தவறென எழுதுவது எமது கடமை; இது பல்லியின் ஆரம்பமே;
thambi
இன்று இல்போட்டில் உள்ள ஒரு கோயிலில் ஜிரிவி ஒரு பொதுவான நிகழ்ச்சியை நடாத்தியது யாரும் வந்து கலந்து கொள்ளலாம் சுதந்திரமாக கருத்துப் பரிமாறலாம் என்றெல்லாம் கூறப்பட்டது
கூட்டத்திற்கு போனேன் கூட்டத்தில் இன்று தமிழீழம் நோக்கி செயற்ப்படும் விதத்தில் செயற்ப்பட்டால் தமிழீழத்தை அடையலாமா? இதுதான் தலைப்பு – இப்ப விளங்கியிருக்கும் தமிழர்களின் நிலை என்ன நிலைஎன! -நன்றி.
குகநாதனா வேணும் அரசுக்கு வேலை செய்ய?
senthil
இன்னுமொரு வரைப் பார்த்து துரோகி என்று கை நீட்டியவ்க்கள் பலர் பின்னர் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட வரலாறுகள் அதிகம். எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லியே தீரும்.,]….. திருமாவளவன்,ஜெகத்கஸ்பராஜ்,சுபவீ, இனி நெடுமாறன்,சீமான் இந்த கன்னத்தால் பாலம்,இதயம்(சந்திரங்களும்) லிஸ்ரில் சேரலாம். மறுவளமாக கேபி துரோகியாக்கப்பட்டது போல் இன்னும் சில வருடத்தில் பிரபாகரனும் துரோகியாகிவிடுவார். இதைதான் காலம் என்பது. அரசன் அன்று தெய்வம் நின்று அறுக்குது.
mano
பல்லி! உங்கள் கேள்விகள் மிகச் சரியானது. இங்கேயிருப்பவர்கள் ஒரு வானொலியைக் கூட நடத்தமுடியாமல் திண்டாடுகிறார்கள். டான் ரி.வி. என்றால் சும்மாவா? அரச தொலைக்காட்சியிலேயே அதற்கு விளம்பரம் இருக்கு.
தமிழினத்தை மாத்திரமல்ல> சிங்கள இனத்தையும் அழிக்க வந்த இந்த “துரோகி” பட்டம் பற்றி நான் விமர்சனம் செய்யவில்லை. அது எல்லோருக்கும் தெரிந்த விடயம். டான் யாரைப் பிடித்து இங்கே வந்தாலும்> நீங்கள் செய்யப்போவதும் இங்கே இருக்கும் சக்தி> வெற்றி ரி.வி. செய்யப்போவதும் ஒன்றுதான். தமிழர்களின் இரசனையை சாக்கடைகள் என்று கருதி> குத்துப் பாட்டுகளையும்> தரம்கெட்ட தமிழ்நாட்டு நாடகங்களையும் சினிமாப் படங்களையும்தான் கொடுக்கப் போகிறீர்கள். இது ஒரு வகையில் தமிழ்த்தேசிய சிதைப்புதான். அப்படியென்றால் தமிழ்நாடே சிதைக்கிறது. அதை விடுங்கோ> மனித கலாசாரத்தை வளர்க்கும் நிகழ்ச்சிகளை உங்கள் ரி.வி.யில் ஒளிபரப்ப உங்களால் முடியுமா? முடியாவிட்டால்………
thurai
தமிழ்தேசியத்தை சிதைப்பதல்ல தமிழ் ஊடகங்கள். புலத்துத் தமிழர்களின் எதிர்காலத்தையே சிதைக்கின்றன. இவர்களிற்கு ஆதரவு கொடுப்பவர்களால் பயனடைவது வியாபாரிகளேயாகும். இதில் தமிழீழ வியாபாரமும் அடங்கும்.
புலத்துத் தமிழர்களின் தமிழ்த்தேசியம் ஈழத்தமிழர்களின் வாழ்வை கெடுப்பது மட்டுமல்ல புலத்தில் வாழும் தமிழர்களையும் தவறாக வழிநடத்துகின்றது.
தமிழரிற்காக வாழ்பவர்களைவிட தமிழர்களால் வாழ்பவர்களே புலத்தில் அதிகம். இதில் டன் டிவியும் ஜிரிவி யும் ஒன்றுதான்.
துரை
thiyagaumesh
டான் தொலைக்காட்சியில் நடத்தப்படும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் “பார்வைகள்” என்ற நிகழ்ச்சி மட்டுமே போதும் இது அரசால் நடத்தப்படும் தொலைக்காட்சி என்பதை நிரூபிக்க…. உள்ளங்கை நெல்லிக்கனிக்கு பூதக்கண்ணாடி தேவையில்லை குகநாதன்!
பல்லி
நன்றி துரை GTV உடன் டன்னும் ஒன்றுதான் என்பதை சொல்லியதுக்கு:
KUHANATHAN
நண்பர்களே உங்கள் விமர்சனங்களுக்கு நன்றி.
டான் தொலைக்காட்சியை நடாத்துவதற்கு எப்படி பணம் வருகின்றது என்று கேட்கும் நண்பர்கள் முதலில் ரிஆர்ரி தொலைக்காட்சியை நடாத்திய றேடியோ ஆசியா நிறுவனத்தில் நான் முதலிட்ட 50 லட்சம் பிராங்குகளையும் புலிகள் பிடுங்கிச் சென்றபோது அது எப்படி வந்தது என்றும் கேட்டிருந்தால் நான் என்கடன் விபரத்தை பட்டியலிட்டிருக்கலாம். அது போகட்டும்,
எனது நண்பர் ஒருவர் பாரிஸில் பகுதிநேரம் கிளினிங் வேலை செய்கின்றார். ஆனால் இந்த சமூகத்தின் மீது அவருக்கு இருக்கும் பற்ருறுதியின் காரணமாக ஒரு இணையத்தளத்தை நடாத்தி வருகின்றார். அதனை நடாத்தவதற்கு சில நூறு யரோக்கள் என்றாலும் வேண்டுமே உன்னால் எப்படி முடிகின்றது என்று கேட்டால் அவர் எவ்வளவு வேதனைப்படுவார் என்பது எனக்குத் தெரியும். அதுபோலத்தான் நான் தொலைக்காட்சி நடாத்துவதும்.
எப்படி எங்கிருந்து பணம் வருகின்றது என்பது குறித்து நான் வருடா வருடம் பிரான்ஸ் வருமானவரி திணைக்களத்திற்கு கணக்குக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றேன். இருந்தாலும் இந்த நண்பர் பல்லி கேட்பதால் இங்கும் குறிப்பிட வேண்டியிருக்கின்றது.
நண்பர் பல்லி ஏற்கனவே ஒரு தடவை ரிஆர்ரி பற்றி ஒரு பின்னூட்டம் எழுதியபோது, தான் தவறாக எழுதிய தகவல் ஒன்றை சரி என்று நிரூபிப்பதற்காக குகநாதன் தனது நண்பர் என்று வேறு ஒரு பொய்யைச் சொல்லியிருந்தார். ஏனெனில் அவர் எனது நண்பராக இருந்திருந்தால் இந்த நிறுவனத்தில் 14 பேர் பங்குதாரர்களாக இருந்தார்கள் என்ற சாதாரணமான விடயத்தைக் கூட தெரியாதவராக இருந்திருக்க மாட்டார். இருந்தாலும் நான் நண்பராகவே அவரைக் கருதிக்கொண்டு அவருக்கு பதில் சொல்ல விரும்புகின்றேன்.
2007ம் ஆண்டு முதல் கடந்த 2009 பெப்ரவரி வரை டான் ரிவி யரோ பேர்ட் (eurobird) என்ற சட்டலைற்றில் ஒளிபரப்பானது. அதனை ஒளிபரப்பியவர்கள் ஸ்பைஸ் என்ற நிறுவனத்தினர். அதற்காக நான் ஒரு யரோ(Euro) கூட கட்டணமாகச் செலுத்தவில்லை. இந்தச் செய்தியை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் அதனை நடாத்தியபோது அதன் பொறுப்பாளராக இருந்த எனது நண்பர் ஒருவரின் தொலைபேசியை பல்லி என்றுடன் தொடர்புகொண்டால் நிச்சயம் கொடுப்தற்கு தயாராக இருக்கின்றேன். இதற்குப் பின்னரான காலப்குதியில் நான் சட்டலைற் நிறுவனத்திற்கு கட்டவேண்டியிருக்கும் பாக்கித் தொகை எவ்வளவு என்பதை பல்லிக்கு இதயம் உறுதியனதாக இருந்தால் சொல்லி விடுகின்றேன். என்னுடைய ஈமெயில் முகவரியுடன் தொடர்பு கொண்டால் நிச்சயம் அவருக்கு அனுப்பி வைக்கின்றேன்.
அது மட்டுமல்ல கொழும்பிலிருந்து இரண்டு சிங்களத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகின்றன. அவற்றிற்கு நானே இடைத்தரகராக இருந்தேன். அதற்காக எனக்குக் கிடைக்கும் தொகையை வர்த்தக தர்மம் கருதி நான் வெளியிட விரும்பவில்லை. அதனையும் நண்பர் பல்லி விரும்பினால் தனிப்பட்ட முறையில் காட்டத் தயாராகவே இருக்கின்றேன். அதற்காக எனக்கு அரசிடமிருந்து வருமானம் வரவில்லை என்றும் நான் வாதிடப்போவதில்லை. இப்போது டான் ரிவி இலங்கையில் உள்ளுர் சேவையை ஆரம்பித்த பின்னர் சில அரச நிறுவனங்கள் விளம்பரங்களை தருகின்றன. அது டான் ரிவிக்கான பிரத்தியேகமான சலுகை அல்ல. அரசிற்கு எதிராக செய்படுவதாக நம்பப்படும் மகாராஜாவின் சக்தி ரிவிக்கும்தான் அந்த விளம்பரங்கள் வழங்கப்படுகின்றன.
– எஸ்.எஸ். குகநாதன்
tvtamil@hotmail.com
பார்த்திபன்
இன்று ஐரோப்பாவில புலிகளைச் சாட்டி பிழைப்பு நடாத்தும் பல ஊடகங்களுக்கு வயிற்றில் புளியைக் கரைப்பது, டண் தொலைக்காட்சி ஒன்றுதான் என்பதில் ஐயமில்லை.