20 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு மற்றுமொரு சர்வதேச ஊடக விருது வழங்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் பாதுகாப்புப் பேரவையினால் திஸ்ஸநாயகம் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சோமாலியா, டுயுனிசியா, அஸர்பய்ஜான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளது ஊடகவியலாளர்களுக்கு 2009ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஊடக சுதந்திர விருது வழங்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள விருது வழங்கும் வைபவத்தில் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தங்களது உயிரைப் பணயமாக வைத்து கருத்துக்களை வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அச்சமின்றி கருத்துக்களை வெளியிட்ட இந்த ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு முன்னுதாரணமாக அமைந்துள்ளதென ஊடகவியலாளர் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் போல் ஸ்டிகர் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள், அடக்குமுறைகள் போன்றவற்றினால் குறித்த ஊடகவியலாளர்களின் கருத்து சுதந்திரத்தை தடுத்து நிறுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு உடந்தையாகச் செயற்பட்ட்டர் என்று குற்றஞ்சாட்டி ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவருக்கு இருபதாண்டு கால கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
palli
அச்சம் இன்றி நாமும் அவரை வாழ்த்தி பாராட்டுவோம்; பரிசும் பதவியும் திறமை இருப்பின் தேடிவரும் என்பார்களே; அது இதுதானா;
jeeva
ஆனால் திசைநாயகத்தைப் பொறுத்தவரை பரிசும் பதவியும் இவரை 20 வருடம் ஜெயிலுக்கு அனுப்பியபோது தான் ‘தேடி’ வந்திருக்கிறது என்பது தான் உண்மை!
இரண்டு நாட்களின் முன்னர் நியூயோர்க் ஏசியா சொசைற்றியில் நடந்த சந்திப்பில் ஸ்ரீலங்காவின் பிரதமர் ‘ஸ்ரீலங்காவில் முற்று முழுதான பத்திரிகைச் சுதந்திரம் உள்லது’ எனச் சொன்னபோது பார்வையாளர்களில் ஒருவர் மறுத்து திசைநாயகத்தின் சிறைவைப்பை குரல் எழுப்பியதை கீழே உள்ல லிங்கில் பார்க்கலாம்…கடைசியில் நடுவருக்கே தாங்கமுடியாமல் ஸ்ரீலங்கா பத்திரிகயாலர்களைப் பொறுத்தவரை மிக ஆபத்தான இடம் எனச் சொல்லவேண்டி வந்தது.
http://www.asiasociety.org/video/policy-politics/ratnasiri-wickramanayake-complete
அந்தப் பார்வையாளர் தனது அனுபவத்தை இவ்வாறு பதிந்திருக்கிறார்.
It was unbearable to sit and watch this man lie and lie and lie. When he said that the Sri lankan army did not commit any crimes. I yelled out ‘ You lie”.. when he said there was freedom of the press in Sri lanka. I yelled out ” not when you jail a man for 20 years hard labor?” This earned me the embassy photographer taking 10 more photos of me.
It was unreal!. the audience listening to the know-nothing moderator asking him bland questions, none of the audience’s questions asked as we were censored, and this man claiming that the IDps were not even a speck of a problem and everyone should ” forget about the past. and invest in Sri lanka for the future”
palli
ஜீவா தகவலுக்கு நன்றி;
jeeva
இங்கே இன்னொரு விடயத்தைக் குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கிறேன். நியூயோர்க்கில் ஐ.நா சபையிம் பொதுக்கூட்டம் நிகழ்ந்தது. இதில் உரையாற்ற வந்த தேசத்தலைவர்களில் ‘பயங்கரவாத்ததை வென்ற’ ஒரே ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்.
பிரதமரை அனுப்பி ‘போர்க்குற்றம் இல்லை’ ‘பத்திரிகைச்சுதந்திரம்’ 100% என சொல்ல வைக்கவேண்டிய நிலையில் இருக்கிறார். கையோடு நியூஜேர்சியில் 20 அடி புத்தர் சிலையையும் திறந்து வைக்கிறார்!!!!
மேலும் அன்று ஐ.நா சபை முன்னால் பல நாடுகளைச் சேர்ந்தோர் தமது கவன ஈர்ப்பு, எதிர்ப்பு போராட்டங்களை நடாத்தினர். இதில் திபெத், மியன்மார்(பர்மா), ஸ்ரீலங்கா, சீனா, ஈரான், ஈராக், கமரூன், இந்தியா போன்ற பல நாடுகளுக்கு எதிராக மனிதவுரிமை, போர்க்குற்றம், ஜனநாயகமீறல், அரசியல் உரிமை, வழிபாட்டுரிமை, சுதந்திரம் போன்ற பல காரணங்களை முன்வைத்து நடாத்தப்பட்ட போராட்டங்கள் காணப்பட்டன.
ஆனால் ஒரே ஒரு போராட்டம்(??) மட்டுமே அரச ஆதரவான போராட்டமாக இருந்தது. அது யார் என ஊகித்திருப்பீர்களே? ஸ்ரீலங்காவை ஆதரித்து 10-15 பேரும் ( இரண்டு பிக்குகள் உட்பட) ஆர்ப்பாட்டம் 9??) நடாத்தினர். சரித்திரத்தில் இடம்பெற வேண்டியது!
appu hammy
Abraham Lincoln (attributed): You can fool some of the people all of the time, and all of the people some of the time, but you can not fool all of the people all of the time.
Manemperuma
how come that Wara, Lanke Banda and co. take it for granted that only the SL media telling the absolute truth. And who is not pro GoSL is liar?
Mr. Vipula, please read the comments about the Sri Lankan judiciary in the following article “P.B gets relief from Supreme Court to resume office”
Gourge Master and Daya Masters, hard-core LTTE leaders, were released on bail. Thissanayagam was sent to jail for 20-year for articles he wrote justifying LTTE’s acts. ehema wenne ai?? i don’t know why!!!