மலேசியாவில் 6வது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை தொடங்குகிறது. 28ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் மற்றும் மாநாட்டு வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் இலக்குவனார் திருவள்ளுவர், செம்பை சேவியர், தேவதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் திருச்சி, சென்னை, ஜெர்மனி, பாங்காக், மதுரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன. 6-வது மாநாடு மலேசியாவில் 4 நாட்கள் நடத்தப்படுகிறது.சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளில் இருந்து தமிழறிஞர்கள் 60 பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து , அமெரிக்கா , கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து பெருந்திரளாக தமிழ் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25-ந் தேதி மாநாட்டின் முதல் நாளில் பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் வா.மு.சேதுராமன் வரவேற்புரை நிகழ்த்துவார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசியா பிரதமர் அலுவலக அமைச்சர் சூ கூன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பேசுவார்கள்.
2-ம் நாளில் தமிழ் மற்றும் தமிழர் பற்றி பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். ஈழத் தமிழர்கள் உள்பட உலகின் பல இடங்களில் வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பற்றியும் இந்த மாநாட்டில் பேசப்படும். இந்தத் தலைப்பில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி உரையாற்றுவார்.
இந்த மாநாட்டில் அண்ணா நூற்றாண்டு கவியரங்கம் நடத்தப்பட உள்ளது. அண்ணா பற்றிய கவிதைகளை கவிஞர்கள் பாட உள்ளனர். நிறைவு விழாவில் பன்னாட்டு தமிழுறவு தகவல் தொடர்பு நூல் வெளியிடப்படுகிறது. இதை இ.சி.ஐ. திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட, முதல் பிரதியை சக்கர இந்து புத்த தர்ம தேரோ சாமிகள் பெற்றுக் கொள்வார். உலகில் உள்ள அனைத்து தமிழறிஞர்களின் இ.மெயில் முகவரிகள் இந்தப் புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டு உள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராஜேந்திரன் மாநாட்டு நிறைவுரை ஆற்றுவார்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதும், உலகத் தமிழர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டும் என்பதும்தான் இந்த மாநாட்டின் நோக்கம் என்று தெரிவித்தனர்.
Kusumbo
பலநாடுகளில் இருந்து வந்து வசதியான கொட்டல்களில் திண்டு குடித்துப் போனதுதானே இவ்வளவு காலமாக தமிழாராச்சி மகாநாடும் உலகத்தமிழர் ஒற்றுமை மகாநாடும் செய்த விடயம். எங்கே தமிழ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது? திருத்தப்பட்டது. ஒளவையாருக்காகவே :ஒள: என்பதை வைத்திருக்கிறது தமிழ். திருத்தப்படாத: மாற்றத்துக்குள்ளாகாத மொழிகள் அழிந்து போகும். உலகத்தமிழர்கள் ஒற்றுமை என்ன ஆனது இலங்கைத்தமிழன் சின்னாபின்னமாய் தசைத் துண்டுகளாய் சிதறும் போது ஒற்றுமை பேசுவோர் எங்கிருந்தீர்கள். தமிழன் என்பதால் ஒரு இனமே அழிக்கப்பட்டபோது வாழாதிருந்த இனம் வாழ்ந்தென்ன இருந்தென்ன? மனிதம் வாழ்வதற்காக இலங்கைத் தமிர்கள் சிங்களவர்களாக மாறட்டும் கருணாநிதியே முடிந்தால் தமிழ் தமிழ் என்று கத்தினீங்களே அந்தத் தமிழை முடிந்தால் காப்பாற்றுங்கள்.
palli
குசும்பு அடியுங்கள் சிலரது மனம் வலிக்க அடியுங்கள்; உங்கள் எழுத்தால் எத்தனை பிரச்சனை வந்தாலும் தடி(கரு) எடுத்து தர பல்லி தயார்;
anpu
ஒளவையாருக்காகவே :ஒள: என்பதை வைத்திருக்கிறது//
தவறு குசும்பு இன்னும் சில சொற்களுண்டு.
ஒளடதம் Medicine
ஒளரகம் (உரகம்) Snake
ஒளவியம் Envy
ஒளதகம் (உதகம்) Earth
Thirumalai vasan
தனிநாயகம் அடிகளோடு தமிழாராய்ச்சி மாநாடு களைகெட்டுப் போய்விட்டது. அதை கருணாநிதி எப்போது கையிலெடுத்தாரோ அப்பவே அது அரசியல்மயமாகிவிட்டது. அதன்பின் பல தமிழுறவு மாநாடுகள் தமிழர் பண்பாட்டு மாநாடுகள் செம்மொழி மாநாடுகள் என்று பலவாக உருவாகி திசைக்கொன்றாகிப் போயின. தமிழ் இனம் ஒரு நாட்டில் அடிமைப்பட்டுப் போயிருக்கையில் இன்னொருநாட்டில் தமிழுக்காக விழாவெடுப்பது சரியா என்பது அமைப்பாளர்களின் காதில் ஏறாது. காரணம் இந்த விழாவே மலேசிய தமிழ் முதலைகளின் தற்பெருமைக்காக எடுக்கப்படும் பணச்சடங்கு தான். விழாவின் பதிவுக்கும்> செலவுக்கும் எனச் சேரும் காசை செலவுபோக பங்குபோட்டுக்கொண்டு அடுத்த சில ஆண்டுகளை இந்த முதலைகள் அம்மிக்கொண்டு இருப்பார்கள். இந்த ஒற்றுமை மாநாட்டில் எங்கே ஈழத்தமிழன் இன அழிப்புப் பற்றி ஒரு கருத்தும் வந்துவிடுமோ என்று பயந்து பயந்து சுயதணிக்கை செய்வதிலேயே இந்த அமைப்பாளர்கள் அதிகம் அக்கறை காட்டுவார்கள். பொறுத்திருந்து பாருங்கள். தமிழ் செம்மொழிதான். ஆம்- ஈழத்தமிழனின் செந்நீர் அதில் கலந்ததால்.
முன்னாள் பொரளி
குசும்பு நன்று நன்று இப்படியநா கருதாடல் ஆரொகியமானவை நன்றி.
Anonymous
இந்தக் “கோனான்கள்” தொல்லை தாங்க முடியலையப்பா, வா.மு.சேதுராமனும், அவர் மகன் திருவள்ளுவனும்?, பேரன் இலக்குவனாரும், தி.க.தலைவர் கி.வீரமணியின் “கோனார்” சாதியை சேர்ந்தவர்கள்!. வட இந்தியாவில் இவர்கள் சென்றால், தங்களை “யாதவர்கள் (லல்லு பிரசாத் யாதவ்)” என்று சலுகை அனுபவிப்பார்கள்!. கிருஷ்ண் பரமாத்வாவின் சாதி!!? என்பார்கள். கத்தோலிக்க (தயாநிதி,கலாநிதி மாறன்களின் லயோல கல்லூரி), “யஸ்ரா சற்குணம்” என்றாலே, அது “கலைஞர் கருணாநிதியின்” மணியோசை என்று அர்த்தம்!. அட பாவிகளா!, தறிகெட்டு ஓடும் “தமிழை” இன்னும் நீங்கள் விடவில்லையா!. தங்கத் தலைவன் தளதளக்கிறான், தானைத் தளபதி தகதகக்கிறான், தமிச்சூரியனே!, ரஷியப் புரட்சி நாயகனே!, தனாவுக்கு, தானா, “தமிழன் தலைநிமிரப் போகிறான்”, உலகத் தமிழ் மாநாட்டுக்கு எழுச்சியுடன் வா!! தமிழர்களே, என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன், என்பதில் தானாவுக்கு தானா வருவதையும் ஒரு உடல் எப்படி கட்டுமரமாக மிதக்க முடியும் என்பதனையும் கேள்வி கேட்காதவர்கள் இதையும் கேள்விகேட்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்!.