இலங்கையில் போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன – சந்திரிகா

chandrika.jpgஇலங் கையில் உள்நாட்டு போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இவர் ஒரு வார பயணமாக கேரளா வந்தார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின்னர் திருவனந்தபுரம் வந்த அவர், தலைமை செயலகத்தில் முதல்வர் அச்சுதானந்தனை சந்தித்து பேசினார். பின்னர் சந்திரிகா குமாரதுங்க நிருபர்களைச் சந்தித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கேரளாவுக்கு வர நான் பலமுறை திட்டமிட்டிருந்தேன். ஆனால், இப்போது தான் வர முடிந்தது. இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  அங்கு எனது கட்சி தான் ஆட்சியில் உள்ளது. ஆனாலும் இன்னும் அங்கு முழு அமைதி திரும்பவில்லை. இலங்கையில் மக்கள் பீதியுடன் தான் வழ்ந்து வருகின்றனர். அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியாத நிலை காணப்படுகின்றது என்றார். 

Show More
Leave a Reply to santhanam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • sintha
    sintha

    இலங்கையில் யார் என்ன கதைப்பது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டது. உங்களுடைய காலத்தில் நடக்காததா நடந்து விட்டது. சந்திரிக்காவே.

    Reply
  • sothi
    sothi

    why don’t you talk about what happens in your rulling period and how many tamils killed? how many journalist killed?

    Reply
  • sumita
    sumita

    இந்த அம்மணி செம்மணியை மறந்து விட்டார் போல் தெரிகிறதே.

    Reply
  • muthu
    muthu

    எல்லாம் அடுத்த தேர்தலுக்கான முஸ்தீப்புத்தான்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஒருவேளை சந்திரிகாவிற்கு; முன்பு ஜெயலிதா, அத்வாணிக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட ஞாபகமறதி நோய் வந்து விட்டதோ என்னவோ?? அதனால்த் தான் தனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பல விடயங்களை அவர் மறந்து விட்டார் போலும்??

    Reply
  • santhanam
    santhanam

    அம்மனிக்கும் செம்மணிக்கும் சம்பந்தம்மில்லை எல்லாம் அரசியல் சித்து விலையாட்டு தமிழர்மேல் ஏன் ஐனகபெரேரா மேலை போனவர் அவரின் விலையாட்டுதான் அம்மணியை உலகநற்பெயரை கெடுக்க யூ.என்.பியின் இராணுவ அணிசெய்த சித்துவிலையாட்டுதான் செம்மணி தமிழா நீ சிந்தி.

    Reply
  • தனஞ்சேயன்
    தனஞ்சேயன்

    முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு 80 இற்கும் அதிகமான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டிருந்தும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் பொய் பேசித் திரிகிறார்

    தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், மனித உரிமைகள் மீறப்படும் ஒரு பயப்பீதி நிலவுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கேரளாவில் கூறியுள்ளமை, அவருடைய தராதரத்திற்கும் பொருத்தமற்ற செயல

    ஒரு பொலிஸ் அத்தியட்சகர், மூன்று பிரதம இன்ஸ்பெக்டர்கள், மூன்று இன்ஸ்பெக்டர்கள், 9 சப் இன்ஸ்பெக்டர்கள், 18 பொலிஸ் சார்ஜன்ட்கள், 27 கான்ஸ்ட பிள்கள், ஒரு பெண் பொலிஸ் உத்தியோக த்தர், எட்டு பொலிஸ் சாரதிகள் என 70 பொலிஸ் உத்தியோகத்தர்களும், ஒரு கெப்டன், 12 வீரர்கள் எனப் 13 பேரும் 12 வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன

    Reply