தங்கத்தை விற்று நிதி தேடும் அவசியம் அரசுக்கு கிடையாது – ரணிலுக்கு அமைச்சர் யாப்பா பதில்

anura_priyadarshana_yapa.jpg
எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதைப் போல், மத்திய வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்று நிதி தேட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்குக் கிடையாதென்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

அரசியல் லாபம் கருதி, நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் முயற்சிப்பது கவலைக்குரியதாகுமெனத் தெரிவித்துள்ள அமைச்சர் யாப்பா, அவர் வகிக்கும் பொறுப்பான பதவிக்கும் பொருத்தமில்லாத செயலாகுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்று நிதியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் செயற்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கூற்றுக்குப் பதில் அளித்து, விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :-

மத்திய வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்று நிதி தேடவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்குக் கிடையாது. அவ்வாறான தீர்மானமொன்றை அரசாங்கமோ, மத்திய வங்கியோ மேற்கொள்ளவில்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவரின் தகவல் முற்றிலும் பொய்யானதாகும். இது வரை அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ள நிதியின் பெறுமதி நான்காயிரம் அமெரிக்க டொலர்களையும் தாண்டியுள்ளது.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத் தித் திட்டங்களுக்கும் எந்தக் குறைபாடும் இல்லாமல் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கும் பயன்படுத்து வதற்குத் தேவையான நிதி அரசாங்கத்திடம் உண்டு.

பெற்ற கடனை உரிய காலத்தில் செலுத்தும் நாடு என்ற பெருமையை இல ங்கை தக்க வைத்துக்கொண்டுள்ளது- உண்மையிலேயே நாட்டின் தங்கக் கையிருப்பை விற்றுப் பணம் தேடியது எப்போதென்றால் ஓர் அபிவிருத்தியைக் கூட மேற்கொள்ளப் படாத, ஒருவருக்குக் கூட தொழில் வழங் காத 2003 – 2004 ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் என்பதை அவருக்கு ஞாபகமூட்ட விரும்புகின்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • தனஞ்சேயன்
    தனஞ்சேயன்

    சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி என்று ஒரு முதுமொழி உண்டு. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கதையும் இப்படியாகவே இருக்கின்றது. முன்பின் யோசிக்காமல் எதையாவது கூறி மாட்டிக்கொள்ளும் வழக்கத்திலிருந்து இன்னும் அவர் விடுபடவில்லை.

    ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்ற போது தேர்தல் கூட்டமொன்றில் தேர்தலுக்கான திகதியைப் பிழையாகக் கூறி மாட்டிக் கொண்டார். தேர்தல் திகதி கூடத் தெரியாத அளவுக்கு அக்கறை இல்லாதிருப்பவர் எப்படிக் கட்சித் தலைவராகச் செயலாற்ற முடியும் என்ற கேள்வியை ஊவா மக்கள் அப்போது எழுப்பினார்கள். ஊவாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் படுதோல்விக்கு இதுவும் பங்களிப்புச் செய்திருக்கலாம்.

    இப்போது புதிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டிருக்கின்றார். அரசாங்கம் அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் மத்திய வங்கியின் கையிருப்பிலிருந்த தங்கத்தின் ஒரு பகுதியை விற்றுவிட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இது இப்போது அவரையே திருப்பி அடிக்கின்றது.

    முதலில் ரணிலின் குற்றச்சாட்டு பற்றிப் பார்ப்போம். ரணில் கூறியதை அரசாங்கம் அறவே மறுக்கின்றது. அரசாங்கத்திடம் போதுமான அந்நியச் செலாவணிக் கையிருப்பு இருக்கும் போது தங்கத்தை விற்க வேண்டிய தேவை எதுவும் இல்லை என்றும் அரசியல் வாசிக்காக ஆதாரமற்ற குற்றச் சாட்டை ரணில் முன்வைக்கின்றார் என்றும் அரசாங்கம் வெளியிட்ட மறுப்பு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிர்வினை எதுவும் ரணில் தரப்பிலிருந்து இதுவரை இல்லை.

    ரணிலின் ஆட்சிக் காலத்திலேயே தங்கம் முறைகேடாக விற்கப்பட்டது என்ற தக வலை இந்த முறைப்பாடு வெளிக் கொணர் ந்திருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்ஹ பிரதமராகப் பதவி வகித்த இரண்டு வருட அரசாங்க காலத்தில் அவருக்கு வேண்டியவர்களுக்கு மத்திய வங்கியிலிருந்து தங்கம் விற்கப்பட்டதாக அன்றைய அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தவரான அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறினார். ஒரு ட்ரொய் அவுன்ஸ் தங்கத்தின் உண்மையான விலை ஆயிரம் அமெரிக்க டொலராக இருந்த போது தனக்கு வேண்டியவர்களுக்கு முந்நூறு அமெரிக்க டொலர் வீதம் ரணில் தங்கம் விற்றதாக அமைச்சர் அபேவர்தன கூறியுள்ளார்.

    அரசாங்கத்துக்கு எதிராகக் குற்றச்சாட்டுச் சுமத்திய ரணில் இப்போது தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க வேண் டியவராக இருக்கின்றார். மத்திய வங்கியின் கையிருப்பிலுள்ள தங்கம் தேசத்தின் சொத்து. அரசியல்வாதிகள் இதை மனம் போனபடி கையாள முடியாது. ரணிலின் ஆட்சிக் காலத்தில் அவருக்கு வேண்டியவ ர்களுக்குக் கொள்ளை மலிவில் தங்கம் விற்கப்பட்டுள்ளதென்றால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த துரோகம். அது பற்றி மக்களுக்குப் பதில் கூறவேண்டிய கடப்பாடு ரணிலுக்கு உண்டு.

    இன்றைய அரசாங்கத்துக்கு உள்ள செலவினங்களைப் போல ரணிலின் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. இன்றைய அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்தது. சகல மாவட்டங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அரசாங்க சேவைக்கு புதிதாக ஆட்களைச் சேர்க்கின்றது. எனவே இன்றைய அரசாங்கத்துக்குக் கூடுதலான செலவு.

    ரணிலின் இரண்டு வருட அரசாங்கத்துக்கு இதுபோன்ற செலவுகள் இருக்க வில்லை. இராணுவ நடவடிக்கை மேற் கொள்ளப்படவில்லை. அபிவிருத்தி இடம் பெறவில்லை. அரசாங்க சேவைக்குப் புதிதாக எவரையும் சேர்க்கவில்லை. அப்படியிருந்தும் தேசத்தின் சொத்தான தங்கம் மலிவு விலையில் தனிப்பட்டவர்களுக்கு விற்கப்பட்டதென்றால் அது பகற் கொள்ளை.

    Reply
  • மாயா
    மாயா

    ரணில் , பொலன்னறுவையில் வைத்து பராக்கிரமபாகு குறித்து ஒரு கூட்டத்தில் ஏதோ சொல்ல , ரணில் எந்த பராக்கிரமபாகு குறித்து பேசினார்? என்று ஒரு பெளத்த தேரர் நையாண்டி பண்ணியது போன்ற விடயங்களில் மாட்டிக் கொள்வார்? பாவம்?

    Reply
  • jeeva
    jeeva

    ரனில் விக்கிரமசிங்கா ஒன்றும் சுற்றவாளிகிடையாது!
    ஆனாலும் ரனில் பிரதமராக இருந்த காலத்தில் 1000 டொலர தங்கத்தை 300க்கு விற்றார் என்கின்ற குற்றச்சாட்டு கொஞ்சம் இடிக்கிறது!

    ரனில் பிரதமராக இருந்த காலங்கள்
    1993-1994, 2001-2004.
    இக்காலத்தில் தங்கத்தின் விலை ஒருபோதும் 1000 ஆக இல்லை!

    1993-1994 இல $350 – $400
    2001-2004 இல் $275 – $425

    2001 இல் 275 அலவில் இருந்த தங்கம் 2002 நடுப்பகுதியிலேதான் 300 ஐ அடைந்தது!
    தங்கம் 1000 ஐ அடைந்தது இம்மாதம் 15ம் திகதி அளவில்!
    அமைச்சர் யாப்ப்பா ஊடகத்துறை அமைச்ச்ர் தானென்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

    Reply
  • palli
    palli

    யப்பா சொல்லுவதில் உன்மை இருக்குதானே; அவர்கள் தற்போது அகதிகளை விற்றுதான் நிதி வேண்டுகிறார்கள்; அது முடியாத வேளை நகையை விக்கலாம் அடைவு வைக்கலாம் ஏன் திருடலாம் கூட;

    Reply