வெற்றி நமதே …- யாழ். குடாநாட்டின் உயர்ச்சியை வெளிப்படுத்தும் திரைப்படம்

cinema.jpgசிங்கள மற்றும் தென்னிந்திய தமிழ் கலைஞர்கள் நடிக்கும் வீடியோ கலாமினியின் வெற்றி நமதே திரைப்படம் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் சகோதரத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்படவிருக்கும் வெற்றி நமதே திரைப்பட ஆரம்ப விழா அச்சுவேலி இராஜமாணிக்கம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் 4 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்படவுள்ள வீடியோ கலாமினி அச்சுவேலியூர் மாணிக்கம் சிவமூர்த்தியின் இயக்கத்திலும், கதை, வசனம், பாடல்களுடன் வெற்றி நமதே திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.

விஜய அபயசேகரவின் தயாரிப்பில் கோண்டாவில் புலவர் வீடியோ ரமேஸின் படப்பிடிப்புடன் வெற்றி நமதே திரைப்படம் தயாரிக்கப்படுவதுடன் உலக சாதனையை நிலைநாட்டும் வகையில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில் இத் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.

வெற்றி நமதே திரைப்படம் ஊடாக சுமார் 6 கோடி ரூபா வசூலை எதிர்பார்ப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்தார். சமூக, சமய, இனங்களிடையிலான பேதங்களை எடுத்துக் காட்டும் வகையில் யாழ்.

குடாநாட்டு நாயகன் ஒருவரையும் தென்னிலங்கை நாயகி ஒருவரையும் மையமாகக் கொண்டு காதல் உவப்புடன் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டினை வெளிப்படுத்தும் வகையிலும் யாழ். குடாநாட்டின் கல்வி மேம்பாடு, விவசாய உயர்ச்சி என்பவற்றினை பிரதிபலிக்கும் வகையில் இத்திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.

உள்நாட்டிலும், கனடா, லண்டன் உட்பட வெளிநாடுகளில் படமாக்கப்படும் இத் திரைப்படம் யாழ். குடாநாட்டின் திரைப்பட சாதனையை சர்வதேசம் ஈறாக பறைசாற்ற சிறந்த திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது.

வரவேற்பு பாடல் மற்றும் நடனத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் நீதிபதி ஏ. பிரேம்சங்கர், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வேதநாயகம், ஈ. பி. டி. பி. யாழ். மாவட்ட பிரதி அமைப்பாளர் அலெக்சாண்டர் சாள்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இந்த வீடியோ கலாமினி புலிகளிருக்கும் வரை அவர்களின் ஆட்களாக வலம் வந்தவர்கள். இன்று அரசை எப்படி கைக்குள் போடுவதென்பதற்கு இந்தச் செயற்பாடு. பிழைக்கத் தெரிந்தவர்கள்???

    Reply
  • Jeeva
    Jeeva

    யாழ் குடா நாட்டின் உணர்ச்சியை தேர்தல் வெளிப்படுத்தி விட்டதே? திரைப்படம் எதற்கு? இதில் நல்ல ஜோக் என்னவென்றால் ஈ.பி.டீ.பியின் இணையத்தளம் இச்செய்தியை வெளியிட்ட விதம்….

    உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக மிகப் பிரமாண்டமான பொருட் செலவுடன் தமிழ் சிங்கள தென்னிந்திய கலைஞர்கள் நடிக்கும் வீடியோ கலாமினியின் வெற்றி நமதே திரைப்படம் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

    சுப்பர் ! படங்கள் வேறு போட்டிருக்கிறார்கள். வாசித்து சிரிக்கலாம்.
    கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் விதமாக வேறு எடுக்கிறார்களாம்!!!!

    Reply
  • மகுடி
    மகுடி

    ஜால்ராக்களால் யாரையும் கைக்குள் போடவும் முடியும் , கவுந்து கிடக்கவும் முடியும் என்பதற்கு இது உதாரணம். வாழத் தெரிந்தவர்கள்?

    Reply
  • palli
    palli

    இந்த படத்தை பார்ப்பதில் தேசமும் மிக அக்கறை கொண்டுள்ளது போல் உள்ளது, அதனாலேயே பல்லியின் பின்னோடம் ஒன்று காணாமல் போய் விட்டது, நன்றி தேசம்;

    Reply
  • palli
    palli

    இந்த படத்தில்;;;
    சிறப்பு நடிகனாய் மகிந்தாவும்:
    குணசித்திர நடிகனாய் பஸில் பட்ச்சாவும்;
    அதிரடி நடிகனாய் பாதுகாப்பு அமைச்சரும்;
    கடமைக்காய் பொன்சேக்காவும்;
    நட்ப்புக்காய் அம்மானும்;
    கருணையுடன் பிள்ளையும்;
    வேண்டா வெறுப்பாய் சங்கரியரும்:
    தோழமை வேண்டி சித்தரும்;
    கவலை இன்றி சுவிஸ் பிரபாவும்;
    சிறுவனாய் உதயாவும்;
    வில்லனாய் கூடமைப்பும்;
    ஆவியாய் புலியமைப்பும்;
    இவர்களுடன் ஆடம்பர நாயகியாய் பரிதவிக்கும் தமிழ் மக்களும் நடிக்க
    தோழரின் மேல்பார்வையில் புலம்பெயர் புத்திகளின் உள்வாங்கலுடன் இந்த படம் தயாரிக்கபட இருப்பதால் நடிப்புகலை (அரசியல்) தெரிந்தவர்கள் உடனடியாய் இலங்கை வெளியுறவு அமைச்சரை தொடர்பு கொள்ளுங்கள், மிகுதி விளம்பர இடைவேளைக்கு பின்;
    தொடரும் பல்லி;

    Reply
  • santhanam
    santhanam

    நாங்கள் 81க்கு முதல் இப்படிதானே வாழ்ந்தனாங்கள் கடத்தல்மன்னர்களால் வந்த வினைதான் நாங்கள் இந்தநிலைக்குவர காரணம் அது சரி டக்ளஷ் ஆயுதம் எடுக்கமுன் சிந்தித்து இருந்தால் ……….

    Reply