‘உறவினர்கள் பொறுப்பேற்க முன்வந்தால் முகாம்வாசிகள் விடுதலை’- இலங்கை அரசு அறிவிப்பு

idp tamils in vanniஇலங்கை வவுனியாவில் அமைந்திருக்கும் நிவாரண முகாம்களில் இருக்கும் இடம்பெயர்ந்தோரின் உறவினர்கள் அவர்களுக்கு பொறுப்பேற்று பராமரிக்க முன்வந்தால், அவர்களை விடுவிக்க அரசு தயாராக இருப்பதாக இலங்கை அரசு உள்ளூர் ஊடங்களில் விளம்பரம் செய்துள்ளது.

இது குறித்த மாதிரி விண்ணப்பப் படிவம் ஒன்றும் இந்த விளம்பரத்தில் பிரசுரமாகியிருக்கிறது.

விண்ணப்பங்களில் பல அதிகாரிகள் கையெழுத்திடவேண்டும். குறிப்பாக ஒருவர் விடுவிக்கப்படும் முன்பு இராணுவத்தின், வவுனியா கட்டளையதிகாரி கையெழுத்திட வேண்டும் என்று மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் BBC தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்.

Show More
Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Anonymous
    Anonymous

    அடப் பாவிங்களா?

    சொந்த ஊரிலே Family Class Sponsorship.

    இதார் வெளிநாட்டுத் தமிழன் மகிந்தாவிற்கு ஆலோசனை சொல்லுறது?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    அப்ப 30 நாள், 60 நாள், 90 நாள், 180 நாள் மீழ்குடியேற்ற கதையள் எல்லாம் அவுட்டோ?

    Reply
  • palli
    palli

    உறவினர்களே இல்லாதவர்கள் நிலை???

    Reply
  • mano
    mano

    அப்படியாயின் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வெளியே வரமுடியும். சிறையில் இருப்பவர்களைப் பிணையில் எடுப்பதை விட அதிகளவான உறுதிப்படுத்தல்கள் கோரப்படுகிறது. விண்ணப்பபப் பத்திரத்தை பூர்த்தி செய்து (உறுதிப்படுத்தல் ஒப்பங்கள்) முடிப்பதற்கிடையில் 3 அல்லது 4 மாதங்கள் தேவைப்படலாம். அதைவிட இந்த கையொப்பங்களுக்காக இலட்சங்கள் கைமாறப்படலாம்.
    இன்றைய நிலைக்கும் இனியுள்ள நிலைக்கும் பெரிதாக மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடாது. எல்லாம் அழுத்தங்களைக் குறைப்பதற்குப் போடும் நாடகம்.

    Reply