இன்று புகழாரம் பாடுபவர்கள் நாளை அரசியல் அநாதைகளாகவும் அரசியல் கோமாளிகளாகவுமே மாறப் போகின்றனர் – ஜே.வி.பி.

777anura_kumara_dissanayake.jpgஆரம்பக் கொள்கைகளை மறந்து தமது சுய இலாபத்திற்காக அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு புகழாரம் பாடுபவர்கள் உண்மையிலேயே பஸ்களில் ஏறி சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பிச்சை எடுப்பவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று ஜே. வி. பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று புகழாரம் பாடுபவர்கள் நாளை அரசியல் அநாதைகளாகவும் அரசியல் கோமாளிகளாகவுமே மாறப் போகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி.யின் விசேட செய்தியாளர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை பத்ரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    எல்லாம் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஆதரித்து வாக்களித்தும் அச்சட்டத்தையே பயன்படுத்தி அடுத்தவனின் காணிக்குள் ‘அத்துமீறி’ நுழைந்த ‘குற்றத்தில்’ கட்சி பேப்பர்காரர் 3 பேரை உள்ளே போட்டதால் வந்த நடுக்கம்! ஆரம்பக்கொள்கைகள் என்ன என்று சொன்னால் எங்களுக்கும் அறிந்து கொள்ள வசதியாய் இருக்கும்?

    Reply
  • palli
    palli

    இததை தான் பல்லி பலநாள்களாக (ஜே வி பி யையும் சேர்த்து) பலனாக சொல்லி வருகிறேன்; யாரும் நம்பவில்லை, ஆனால் அனுபவத்துடன் இவர் சொல்லி இருப்பது எம்மவர்க்கு ஒரு பாடமாக அமையுமா? இன்று தாம் அரசியல் கோமாளி ஆக்கபட்டு விட்டோம் என்பதை அனுபவத்துடன் சொல்லுகிறது ஜே வி பி; சிந்திப்பார்களா நம்ம கோமாளிகள்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இந்த ஜே.வீ.பி புரட்சிக்காரருக்கு ஆப்பு வைக்கப்படுவது முதல் தடவையல்ல. முன்னர் பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவந்த போது (1977 இல் என நினைக்கிறேன்)அச்சட்டம் மனித குலத்துக்கே ஆபத்தானது என கூறினர் கூட்டணியினர். அதற்கு சமாளிப்பு சொன்ன ஜே.ஆர் அரசு வெறும் 6 மாதங்களுக்கே அச்சட்டம் அமுலில் இருக்கும் என கூறினார். ஆனால் இச்சட்டம் ஸ்ரீலங்காவில் நிலையான சட்டங்களில் ஒன்றாகும் என எதிர்வு கூறிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் எதிர்த்து வாக்களித்தது மட்டுமல்லாது இதே சட்டம் சிங்களவர்களுக்கு எதிராக ஒருநாள் பாயும் எனவும் கூறினர். தொடர்ந்த வருடங்களில் தமிழ் இளைஞர்களை (எல்லா இயக்ககாரரையும்) வேட்டையாட பயன்பட்ட இச்சட்டம் 10 வருடங்களின் பின்னர் ஜே.வி.பி யையும் ‘தொலைத்துக்கட்டமே பயன்பட்டது. பின்னர் பாராளுமன்றம் வந்த அரசுடன் ‘கைகோர்த்து’ இச்சட்டத்துக்கு ஆதரவாக குழலூதியவர்களுள் இந்த ஜே.வீ.பீ இனருடன் எங்கள் பழைய புரட்சிக்கார இயக்கமும் ஒன்று!

    Reply
  • இளங்கோ
    இளங்கோ

    சுனாமியின் போது தமிழ் மக்களுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்காமல் வழக்கு போட்டு வென்ற ஆசான்மாரான ஜே.வி.பிக்கே ஆப்பா? தனிய தேர்த்தலில் நின்று தோற்ற போதே மகிந்த இவர்களுக்கு ஆப்பு வைக்க முடிவு எடுத்து விட்டார்.

    Reply