நானும் கருணாவும் வெளியேறியமையே புலிகள் பலவீனமடையக் காரணம் : சந்திரகாந்தன்

karuna-pilliyan.jpgதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனமடைந்து அரச படைகளால் தோற்கடிக்கப்பட்டமைக்கு அந்த அமைப்பிலிருந்து தாங்கள் வெளியேறியமையே பிரதான காரணம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெவித்தார்.

தான் மற்றும் கருணா அம்மான் போன்ற முக்கிய போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியமை விடுதலைப் புலிகள் இயக்கத்தை நேரடியாகவே பலவீனப்படுத்தியது எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு வந்திருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் வீரகேசரி வார வெளியீட்டுக்கு அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிக்கையில்,

“யுத்த நிறுத்த காலத்தில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் கலந்து கொண்டிருந்தாலும் தமிழீழக் கோரிக்கையை அவர்கள் கைவிடவில்லை.

இதன் காரணமாக அந்த அமைப்பின் போக்கில் அதிருப்தியுற்ற நாம் வெளியேறினோம். இதனை ஒரு பிளவு என்றே கூறலாம். இதன் பிளவானது புலிகள் அமைப்பில் ஆட்கள் சேருவதனை அல்லது சேர்க்கப்படுவதனை வெகுவாகப் பாதித்தது.

நாம் இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் கிழக்கு மாகாணத்திலிருந்து எவரும் புலிகள் அமைப்பில் சேரவில்லை. இது புலிகள் அமைப்பை ஆட்பலரீதியாக கடுமையாகப் பாதித்தது.

இதனை நன்கறிந்து கொண்ட அரசாங்கம் சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி புலிகளை அழித்து இலகுவாக அவர்களை வெற்றி கொண்டது” என்றார் 

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • anpumaaran
    anpumaaran

    கருணா பிரியும் போது ரமேஷ், கௌசள்யன், ரமணன், நாகேஷ், கீர்த்தி, ஜனார்த்தன், ஆகிய தளபதிகள் புலிகளுடன் சோரம் போக, ஜிம்கொலி தாத்தா, ராபட், துரை, திருமால், மற்றும் 17 முக்கிய தளபதிகள் பொட்டனின் சூழ்ச்சிக்கு இரையாக, காஸ்ட்ரோ, குகநேஷன், ஆர்ப்பரன் ஆகிய பொறுப்பாளர்கள் பொட்டனின் மற்றும் கீர்த்தி, சூழ்ச்சியால் விஷம் கலந்து கொல்லப்பட ,,,,,. மண் லொறிகளுக்கு வரி வசூலிச்ச பிள்ளயான், கப்புல கடாவெட்டி, பொட்டனின் ரகுவுடன் சேர்ந்து கருணாக்கும் கடாவெட்டி கிழக்கு மாகாணத்தின் கௌரவ முதலமைச்சர் கதிரைய பிடிச்ச பிள்ளயான்

    Reply
  • aavee
    aavee

    Both are remnants of LTTE. When Karuna was expelled from the LTTE, Karuna begged Pirabaharan to reinstate him. If Pirabaharan accepted the appeal by Karuna, you and Karuna would have died in the Nanthikadal. It was Pirabaharan helped you all to live.
    Anyone knows that the LTTE will be dead and gone. If Karuna and you wanted peace, then why Karuna forcefully took school children for arms training after the cease fire agreement. ………. You and Karuna are …….. people of Batticaloa. Both need rehabilitation and appropriate job not political leader post. Have Pillaiyan and Karuna ever worked in their life. Both are enjoying life since joining the LTTE until now from the suffering of the innocent people. Did Karuna earn a rupee to buy a tie? .Did pillaiyan earn a rupee to buy a Pattu Vetti. Both are product of Pirbaharan not the product of Tamil people in the Eastern province. Both are trained to live without any work.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    anpumaaran,
    ஆக மொத்தத்தில் புலிகள் அடுத்தவருக்கு குழி பறிப்பதில் வல்லவர்கள் என்கின்றீர்கள். ஆனால் என்னத்தைச் சொல்ல புலிகள் அவர்களையுமறியாமல் அடுத்தவர்களுக்கு வெட்டிய குழியில், அவர்களேயல்லவா இறுதியில் விழுந்து விட்டார்கள்.

    Reply
  • palli
    palli

    பிள்ளையான் யார்?? இவருக்கு இந்த பதவி எப்படி கிடைத்தது; பிரபாவின் பலவீனத்தை எப்படி தனக்கு சாதகமாக மகிந்தா பாவித்தாரோ; அதே போல் கருனாவின் பலவீனத்தை குழந்தயை வைத்து சிலர் வெற்றி பெற்றனர், ஆனால் கருனா திரும்பி வர மாட்டார் என எண்ணி செயல்பட்ட (புலம் பெயர் புத்திகள்) இன்று உயிரை கையில் பிடித்த வண்ணம் புலம் பெயர் தேசத்தில் வாழ்வது கொடுமைதான்; இருப்பினும் இந்த பிள்ளையான் கருனாவுடன் தன்னை ஒப்பிடுவது சற்று கூடத்தான்; இவர் கருனாவின் சாரதி மட்டுமே, ஆனால் கருனாவின் நம்பிக்கைக்கு உரியவர், அதனால்தான் இவரிடமும் ரகுவிடமும் தனது சொத்துக்களையும் ; அது;இது; எல்லாத்தையும் கொடுத்துவிட்டு மாயவனின் சொல் கேட்டு லொண்டனுக்கு பரிஸால் கப்பல் ஏறி மாட்டி மானிட மனிதனாய் குணப்பட்டு திரும்பவும் தனது சொந்த கமமான கிழக்குக்கு போனார்; ஆனால் இதுக்கிடையில் நாரதர் வேலையையே தமது சுயதொழிலாக செய்யும் வாத்தியும் ;டென்மார்க்கும் குழந்தைக்கு கட்டிபால் கொடுத்து வளர்த்துவிட அதுவே வளர்ச்சி இல்லா வளர்ச்சியாக பிள்ளை வளர்ந்து இன்று தட்டு தடுமாறி ஏதோவெல்லாம் புலம்புகிறர்; இதுவரை பிள்ளையான் என்னும் பெயர் புலியில் (அவர்கள் இயங்கும் போது) வெளிவரவில்லை என்பது பிள்ளையானுக்கே தெரியாத உன்மை;

    Reply
  • இளங்கோ
    இளங்கோ

    ஒரு சிலரால் புலிகளுக்கு அவப்பெயர் வந்தது மட்டுமிலாமல் தம் இனத்தையே காட்டி கொடுத்தவர்களை மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள்.

    Reply