தமிழ் பெண் ஒருவர் வீஸா அனுமதியின்றி லண்டன் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
40 வயதான அங்கயற்கண்ணி கிருஸ்ணபிள்ளை என்ற பெண்ணே இவ்வாறு வீஸா இன்றி லண்டன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமானம் மூலமாக குறித்த பெண் லண்டன் சென்றுள்ளதாகவும், அவருக்கு உரிய வீஸா அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த பெண்ணுக்கு எந்த அடிப்படையில் வீஸா வழங்கப்பட்டதென்பது தமக்கு தெரியாது என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான தகவல்களை திரட்டியதன் பின்னர் விளக்கமளிக்க உள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பீட்டர் ஹேஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் வீஸா அனுமதிக்காலம் காலாவதியாகியுள்ள நிலையில், வீஸா இன்றியே குறித்த பெண் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பார்த்திபன்
குறிப்பிட்ட அப்பெண்மணியின் வீஸா காலாவதியானதின் பின் அவருக்கு வீஸாவை புதுப்பித்து முறைப்படி அனுப்பாமல் வீஸா இன்றியே அனுப்பி வைத்ததன் நோக்கம் என்ன?? அதுவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கே தெரியாமல் பிரித்தானிய தூதரக ஊழியரொருவரே இந்த விடயத்தை இரகசியமாக கையாள வேண்டிய அவசியமென்ன??
Azan
கருணா அங்கயற்கண்ணி போன்ற புலிகளில் இருந்தவர்களுக்கு இதுபோன்ற ஸ்பெஷல் சலுகைகள் அரசாங்கம் மூலம் கிடைப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்த ஒப்பந்த உறவுகள்தான் தமிழர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவியது.
பார்த்திபன்
Azan,
நீங்கள் செய்தியை தவறாக விளங்கியுள்ளீர்கள். இங்கே அங்கயற்கண்ணியை விசேடமாக கவனித்து வீஸா இல்லாமல் அனுப்பியது பிரித்தானிய தூதுவராலய ஊழியரொருவர். அதுவும் இவ்விடயம் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கே தெரியாமல் நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரே தெரிவித்துள்ளார்.
சாந்தன்
ஒருவேளை ஸ்ரீலங்காவில் வேண்டப்பட்ட கே.பியை மலேசியாவில் வைத்து ஸ்ரீலங்கா விசா இல்லாமல் பிளேனில் ஏத்தினது மாதிரி அங்கயற்கண்ணி இங்கிலாண்டில் வேண்டப்படுபவரோ? அதனால் தூதரகமே தலையிட்டு……
மாயா
கேபீ இலங்கை செல்ல அல்லது இலங்கைக்கு கொண்டு செல்ல வீஸா தேவையில்லை. காரணம் அவர் சிறீலங்காவைச் சேர்ந்தவர். இலங்கை குடியுரிமையுள்ளவர். அடுத்து கேபீயை தனி விமானத்தில்தான் கொண்டு சென்றுள்ளார்கள்.
அங்கயற்கன்னி வீஸா இல்லாமல் , சிறீலங்கன் விமானித்தில் பயணித்துள்ளார்.