வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு கொலராடோ கப்பல் மூலம் அனுப்பப்பட்ட பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியிலெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்தவாரம் முற்பகுதியில் அவற்றை வெளியில் கொண்டுவருவதற்கான சாத்தியமுள்ளதாக நம்பிக்கை இலங்கை செ.சங்கம் தெரிவித்தது. இது தொடர்பில் அச்சங்கத்தின் தேசிய செயலாளர் நிமால் குமார் கருத்துத் தெரிவிக்கையில்;
இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ளவர்களுக்கு விநியோகிக்குமுகமாக எமது சங்கத்துக்கு 650 தொன் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டிருந்தன. இப்பொருட்கள் கொலராடோ கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இன்னும் துறைமுகத்திலிருந்து வெளியிலெடுக்கப்படவில்லை.
சங்கம் இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியிலெடுப்பதற்கு அனுமதிப்பதற்குத் தேவையான நடைமுறை செயற்பாடு பூர்த்தியாகாததன் காரணமாகவே வெளியிலெடுக்க முடியாதுள்ளது. இப்பொருட்களை வெளியிலெடுப்பதற்கு நாம் தொடர்ந்து நடவடிக்கையெடுத்து வருகிறோம்.
அநேகமாக வார முற்பகுதியில் இப்பொருட்கள் வெளியிலெடுக்கக் கூடியதாகவிருக்குமென நினைக்கிறேன். இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுடன் தொடர்புகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.
கொலராடோ கப்பல் மூலம் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் இப்பொருட்கள் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டன. வன்னி அகதிகளுக்கென புலம்பெயர் சமூகத்திடம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் ஐரோப்பாவிலிருந்து கடந்த ஏப்ரலில் கப்டன் அலி கப்பல் (வணங்காமண்) நிவாரணப் பொருட்கள் தொடர்ந்தும் கொழும்புத் துறைமுகத்தில் மூலம் கொண்டுவரப்பட்டது. இலங்கை கடல் எல்லைக்குள் கப்பல் அனுமதிக்கப்படாத நிலையில் திருப்பி அனுப்பப்பட்டு இக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு சென்று கொலராடோ கப்பலுக்கு பொருட்கள் மாற்றப்பட்டு கொழும்புக்கு பொருட்கள் கொண்டுவரப்பட்டன.
பார்த்திபன்
இப்பொருட்களை தொல்பொருள் காட்சியகத்தில் “புலம் பெயர் சில புண்ணாக்குகளின் சாதனை” என பெயர் பொறித்து வைத்து விடலாம்.
chandran.raja
ஆயுதம் வெடிமருந்துகளுக்கு தான் புலிகள் தமது பணத்தை செலவழிப்பார்கள். அதுmசுனாமியால் வந்தால்லென்ன? கொழும்பில்லிருந்து யாழ்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பிளாஸ்ரிக் இடியப்பத்தட்டாக இருந்தால் என்ன? முகமாலையில் வரியறவிட்டே காலத்தை ஓட்டினார்கள். வெடிகுண்டு புகைக்யூடாக மக்களை அனுப்பிகொண்டே இருந்தார்கள்.
மக்கள் சமூகத்திற்கு பயன்யுள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அர்த்தம் அவர்கள் அகராதியிலேயே கிடையாது. தமிழ்ழீழம் என்பது புலம்பெயர்மக்களால் கோட்டா முறையில் வழங்கப்பட்டது. அதில் அவர்களுக்கு கமிசன் உண்டு. கணக்கு வழக்கு இல்லாததொன்று. இப்படியான சலுகைகள் அடிப்படையிலே கப்பல் ஓடவிடப்பட்டது. அதில்லுள்ள பொருள் போகுமா? போகாதா? யாருக்கெண்ன அக்கறை. கல்கத்தாவில் கரைகட்டி கப்பலை விட்டது போலவே அதில்லுள்ள பொருள்களுக்கும்.புலிகள் யாருக்கும் பயன்யுள்ளவர்களாக இருந்ததுதென்று வரலாறு இல்லை. நாளை தேசம்நெற்றில் செய்திவரும் எதிர்திரியாவுக்கும் புலிகள் ஆப்பு வைத்துவிட்டார்கள் என்று. எதிர்திரியாவும் நாளை வன்னிமக்கள் வணங்காமண் வரிசையில். பணம்மய்யா பணம். எல்லாம் பணம்.
மாயா
இவங்கட போராட்ட அறிவு எப்படியென்றதுக்கு , இந்த வாயில மண் கப்பலே உதாரணம்.