ஓட்டப் போட்டியில் தமிழ் அரசியல் தலைமைகள் : த ஜெயபாலன்

Election_Campaign_in_Jaffnaதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் சடுதியான அழிவு தமிழ் மக்களுடைய அரசியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்திய புலிகளின் ஒற்றைப் பரிமாண அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இது பன்மைத்துவ அரசியலுக்கு வித்திட்ட போதிலும் மூன்று சகாப்தங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருந்த புலிகள் மே 18ல் ஒரு சில மணிநேரத்திலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது சர்வதேசத்திற்குமே அதிர்ச்சியாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு வலிந்து நிறுவிய ஏகதலைமைத்துவமும் இத்தலைமைத்துவத்தின் துதிபாடிகளும் தமிழ் மக்கள் மத்தியில் காத்திரமான அரசியல் உரையாடலைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்தன. காத்திரமான அரசியல் தலைமைகள் உருவாகிவிடக் கூடாது என்பதிலும் இவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இதன் விளைவு தற்போது தமிழ் மக்களுடைய அரசியலை முன்னெடுப்பதற்கான அரசியல் தலைமைத்துவம் வெற்றிடமாக்கப்பட்டு உள்ளது. இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கான மரதன் ஓட்டங்களில் பல்வேறு அரசியல் சக்திகளும் ஈடுபட்டு உள்ளன. இவை பெரும்பாலும் இலங்கை அரசு வரைந்துள்ள எல்லைக் கோட்டுக்கு உள்ளேயே தங்கள் ஓட்டங்களை ஓடக் கூடியனவாக உள்ளன.

மே 18ல் இலங்கை அரச படைகள் வெற்றி கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகளையே அன்றி தமிழ் மக்களையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளோ அதன் காலம்சென்ற தலைவர் வே பிரபாகரனோ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் எப்போதும் பிரதிநிதித்துவப்படுத்தியதில்லை. தங்கள் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை பயன்படுத்திக் கொண்டனர். தங்கள் இருப்புக்கு தமிழ் மக்களை பணயம் வைக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது அவர்கள் அதற்கும் தயங்கவில்லை. எல்லாவற்றினதும் உச்சகட்டமாக ஒட்டு மொத்த வன்னி மக்களையும் இலங்கை அரசபடைகளின் போர் இயந்திரங்களுக்கு முன் நிறுத்தி அம்மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்படுவதற்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஊனமாவதற்கும் இரண்டு லட்சத்து எண்பதிணாயிரம் மக்கள் முகாம்களில் அடைக்கப்படுவதற்கும் வழிவகுத்து உள்ளனர்.

இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகதலைமை மட்டுமல்ல அதற்கு துதிபாடிய பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்காவில் இயங்கும் பேர்ள் அமைப்பு, பிரான்ஸில் உள்ள புலிகளின் மனித உரிமை அமைப்பு, கனடாவில் உள்ள உலகத் தமிழர் இயக்கம் இப்படி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பல்வேறு அமைப்புகளும் ஐபிசி, ஒரு பேப்பர், ஈழமுரசு, ஜிரிவி, தீபம் போன்ற ஊடகங்களும் அவற்றில் அரசியல் அவியல் படையல் செய்தவர்களும் பொறுப்பானவர்கள்.

அரசியல் தந்திரோபாயம் என்ற பெயரில் அல்லது மக்களை விடுவிக்கும்படி புலிகளைக் கோருவது தத்துவார்த்த ரீதியில் பொருத்தமற்றது அது இலங்கை அரசுக்கே உதவும் என்று மௌனமாக சில அரசியல் ஆர்வலர்கள் அமைப்புகள் இருந்துள்ளன. குறிப்பாக கனடாவில் உள்ள தேடகம் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இனம்காணப்படாத அமைப்புகளின் அரசியல் பலவீனமும் குறிப்பிடத்தக்கது. அதே போன்று புலி எதிர்ப்பு என்ற ஒரே காரணத்திற்காக வன்னியில் நிகழ்ந்த அவலத்தில் இலங்கை அரசின் பாத்திரம் பற்றி புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள பல குழுக்கள் மௌனம் சாதித்தன. இவர்களது மௌனமும் ஆபத்தானதே.

தற்போது தமிழ் சூழலில் அரசியல் மரதன் ஓடுபவர்களுக்கு குறைவில்லை. புலிகளின் புதிய தலைவர் கே பி ஓரடி வைக்கு முன்னரேயே கவிழ்ந்துவிட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, அவரோடு கூட்டுச் சேர்ந்த ஈபிஆர்எல்எப் தலைவர் சுகு, புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் முதல் சுற்றிலேயே தடக்கி வீழ்ந்துவிட்டனர். இவர்கள் மீண்டும் தங்களைச் சுதாகரித்துக் கொண்டு ஓடுவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்கள்’இன் நிலையே இப்படி இருக்க சிறிரெலோ, ஈரோஸ் என்று தத்தித் தத்தி மரதன் ஓடத் தொடங்கியவர்கள் பற்றி என்ன சொல்ல. கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன், அமைச்சர் கருணா, அமைச்சர் டக்ளஸ் இவர்களும் தமிழ் மக்களுக்காகவே ஓடுவதாகக் கூறினாலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக ஓடுகிறார்களா என்ற சந்தேகம் வலுவாகவே உள்ளது. இவர்களைவிடவும் இத்தலைவர்களுக்கப் பின்னால் பெரும் கூட்டம் ஒன்று புலம்பெயர்நாடுகளிலும் ஓடுகின்றனர். அதைவிட புலிகளின் தலைமையைப் பிடிப்பதற்கு புலிகளுக்குள்ளும் சில இடையோட்டங்கள் நடக்கின்றது.

இவ்வாறான பல்வேறு ஓட்டங்களுக்கு இடையே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கையிலெடுத்து ஓடுவதற்கான அவசியமும் அவசரமும் தற்போது ஏற்பட்டு உள்ளது. தனித்து சுயநலன்களுடன் ஓடும் மரதனோட்டக்காரர்களை பின்னடித்து இவர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ் சமூகமும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கையிலெடுத்து ஓடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களை பலப்படுத்துவதே இன்றைய தேவையாக உள்ளது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • SAM PERERA
    SAM PERERA

    1. SEEMS SRI LANKAN PEOPLE NOW JUST SLAVES TO POWER HOLDING CROOKS.

    2. The UPFA won only a single seat in Jaffna MC and did not win a single seat in Vavuniya.

    3. This proves that the Tamils are ungreatful for the sake of this country been saved from the clutches of terrorists. Maybe it is time that the GOSL concentrate more on the Majority as only this section of the citizens really care for the Country.

    4. If real democracy ever existed in SL, the people of TE would have achieved independence peacefully long ago. Time is ripe for international action.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ஓட்டப்போட்டிக்குப் பதிலாக ‘குதிரையோட்டம்’ எனப் போட்டிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்.
    O/L, A/L க்கு மட்டும் தான் முன்னர் குதிரை ஓடினார்கள் இந்தியன் ஆமி வந்து இலக்சனிலும் குதிரை ஓட்டத்தை புகுத்திவிட்டனர்!

    Reply
  • abeywickrema
    abeywickrema

    While people in the Uva province who are majority Sinhalese voted overwhelmingly for the ruling UPFA, electing a member of the Rajapaksa family as the chief minister in the provincial elections held on August 8, the majority of the Tamils living in the municipal council area in Jaffna as well as the urban council area in Vavuniya, either voted against the ruling party, or abstained from voting at the mini polls on the same day.

    Abstention
    “The scale of abstention in the Jaffna Municipal Council (JMC) elections has sent an unambiguous message. The people of Jaffna have rejected the UPFA controlled Sinhala State and its procedures and practices, have rebuffed the war victory, and distanced themselves from the jubilation in the South.
    The offer of reconstruction and investment, the peace dividend, as an alternative to the recognition of Tamil identity and crafting of a political solution to the national question, has been rejected” adds Kumar.
    “The difference between the behavior of the Sinhalese and Tamil electorates is astounding; it is as if they were living on two different planets” he opines.
    The question has been raised as to whether the government, having sensed the pulse of the people in the north, would go ahead and hold the provincial election in the Northern Province.

    Reply
  • visuvan
    visuvan

    ஆறு சிறிய பந்திகளுடன் மரதனை ஒரு நூறு மீட்டர் கணக்கில் ஓடி ஜெயபாலன் இந்த அரசியல் வாதிகளை வென்று விட்டார்! இப்ப மரதன் ஓட வெளிக்கிட்ட கட்சிகளை பற்றியும் ஓட வெளிக்கிட இருக்கிற கட்சி மற்றும் கட்சியமைக்க திட்டமிட்டுள்ளவை பற்றியும் ஓடுவதா வேண்டாமா என மதில் பேல் உள்ளவர்கள் பற்றயுமே ஒரு 25 பந்தி கட்டுரை வரையலாம்! முந்தி 32 இயக்கங்களில் இருந்து பாய்ஞ்ச பலர் பல உதிரிகளாக அல்லது கூட்டாக குதிப்பதற்கு கூட திட்டமிடுகிறார்கள்! இன்னுமொரு 3 மாதம் பொறுங்கோ! நவம்பர் 27முடிய முருகபிரான் எங்கள் தேசிய தலை மீண்டும் உயிர்தெழுவார் என்ற பயத்துடன் வாழும் பல அரசியல்வாதிகள் 27இற்கு பின் குறைந்த பட்சம் ஒரு 30 தமிழ் தலைமைகள் உருவாகும்! இது உடைந்து ஒரு 64ஆகும். பிறகென்ன ஒரு மெகா சீரியலே எடுக்கலாம்!

    Reply
  • abeywickrema
    abeywickrema

    வவுனியாவில் கடந்த சில நாள்களாக பெய்த மழைகாரணமாக மெனிக்பார்ம் முகாமின், வலயம் 4ல் 17ஆயிரத்து 539பேர் தங்குமிடம் எதுவுமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. மெனிக்பார்ம் முகாமில் உள்ள அகதிகளுக்கான உணவு விநியோகமும் மழையினால் தடைப்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. தமது வாராந்தக் கூட்டறிக்கையில் இந்த விடயங்களை தெரிவித்துள்ள இலங்கையில் செயற்படும் மனிதாபிமான அமைப்புகள் இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு, ஓகஸ்ட் 14ம் திகதி ஆரம்பமான கடும்மழை மற்றும் காற்று காரணமாக மெனிக்பார்மில் சகல வலயங்களும் பாதிக்கப்பட்டன. ஓகஸ்ட் 16ம் திகதி 4வது வலயமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இங்குள்ள 36ஆயிரத்து 785பேரில் 17ஆயிரத்து 539பேர் கூடாரங்கள் எதுவுமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சேதமடைந்த கால்வாய்களிலிருந்து வெளியேறிய மனிதக்கழிவுகள், திரவக் கழிவுகள் காரணமாக நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. தங்களுடைய கூடாரங்களை வேறு எங்காவது எடுத்துச் செல்வதற்குப் பதில் இடம்பெயர்ந்த மக்களை தற்காலிகமாகக் கல்வி நிலையங்களில் தங்குமாறு கேட்டுள்ளோம். இடம்பெயர்ந்த மக்கள் இறுதிகட்டமாகவே பொதுக்கட்டடங்களில் தங்கவைக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Reply
  • abeywickrema
    abeywickrema

    The elections results innorth and east indicates thatGovernment has a long way to go to win the hearts of tamils.But at present government does not have a solid plan and they tried to do the same in North and east too as what they usd to do in south .

    Reply