பிலியர்ட்ஸ் போட்டியில் கொழும்பு மாவட்ட சாம்பியன் பட்டம் ரவூப் ஹக்கீம் வசம்

akime-2.jpgஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், கொழும்பு மூவர்ஸ் விளையாட்டுக் கழக உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் எம்.பி. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிலியர்ட்ஸ் ஆட்டத் தொடரின் கொழும்பு மாவட்ட சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டார்.

கொழும்பு 7, ரீட் அவனியுவில் அமைந்துள்ள பிலியர்ட்ஸ், ஸ்னூகர் சம்மேளனத்தில் நடைபெற்ற இப்போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ரவூப் ஹக்கீம் எம்.பி. மூவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏ.எச். மனூர்ஜனை 176க்கு 153 புள்ளிகளால் வீழ்த்தினார். இந்த வெற்றியை தொடர்ந்து அகில இலங்கை மட்டத்திலான போட்டியில் விளையாட ரவூப் ஹக்கீம் எம்.பி. தகுதிபெற்றார்.

தனது ஓய்வு நேரத்தின்போது பிலியர்ட்ஸ் விளையாட்டில் நீண்ட காலமாக அதிக அக்கறை காட்டிவந்த ரவூப் ஹக்கீம் கொழும்பு மட்ட பிலியர்ட்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும். இதன்போது அவர் தனது காலிறுதி போட்டியில் வை.எம்.பி.ஏ.கழக வீரர் ஏ.டபிள்யூ.ஏ. ரட்ணசிறியை வீழ்த்தியதோடு, அரையிறுதியில் ஆர்.எஸ்.எஸ். கழக வீரர் என்.எம். ஷாமிலை வெளியேற்றினார்.

கொழும்பு மாவட்ட இறுதிச் சுற்றை தொடர்ந்து கண்டி, காலி மாவட்டங்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. இம் மாவட்டங்களுக்கான சாம்பியன் தெரிவுகளை தொடர்ந்து இன்று தொடக்கம் 25 ஆம் திகதி வரை பிலியர்ட்ஸ் ஸ்னூகர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை மட்டத்திலான போட்டிகள் நடைபெறவுள்ளன.

அகில இலங்கை மட்டத்திலான போட்டிகளுக்கு மொத்தம் 38 வீரர்கள் பங்கு பற்ற உள்ளனர். இவர்களில் 16 பேர் கொழும்பு மாவட்டத்தில் இருந்தும், மேலும் 16 பேர் கண்டி, காலி மாவட்டங்களில் இருந்தும், மிகுதி 6 வீரர்கள் கடந்த வருட சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றியவர்களில் இருந்தும் தெரிவுசெய்யப்படுவார்கள்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • சட்டம் பிள்ளை.
    சட்டம் பிள்ளை.

    வெல்டன் ஹக்கீம் – இனி முஸ்லிம்களின் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்த மாதிரி தான்.

    Reply
  • சூரிய கிரகணம்
    சூரிய கிரகணம்

    மதிப்புக்குரிய ரவூப் ஹக்கிமுக்கு எமது வாழ்த்துக்கள் – தங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எமது டக்லஸ் அண்ணனுக்கும், கருணா தம்பிக்கும் கொஞ்சம் டிரேனிங் கொடுத்திடுங்களேன்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    ரவூப் ஹக்கிமுக்கு வாழ்த்துக்கள். அரசியல்வாதி ஒரு விளையாட்டு வீரராகவும் இருப்பதில் மகிழ்ச்சி. விளையாட்டு வெற்றி தோல்வியில் தளராத மனதை மனிதனுக்கு வழங்குகிறது. வெல் டண்.

    Reply